இது எனது தனிப்பட்ட கருத்து. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
இக்குழுமம் ஏன்? எதற்காக தொடங்கப்பட்டது. குழுமத்தில் முகப்பில்,
"இது முழுக்க முழுக்க தமிழுக்காக,தமிழால்,தமிழுடன் காதல் கொண்டவர்களுக்கு மட்டும். தமிழ் மொழியில் தீராத அன்பு கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு மட்டும் உரிய குழுமம் இது. தமிழில் படைப்புகள் இயற்ற விரும்புபவர்களும் தங்கள் படைப்புகளை பிரசுரிக்கவும், படைப்பாளிகளின் ஆக்கங்களை படிக்கவும் , விமர்சிக்கவும், சீர் தூக்கி நிர்ணயிக்கவும் நல்ல தமிழ் ஆர்வலர்களும் ஆர்வமுள்ளவர்களும் ஒன்றிணையத் தகுந்த இல்லம் இது. இக் குழுமம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் மற்றும் பல சுவையான இழைகளை உருவாக்கி சகல தரப்பு சுவைஞர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டுமென்ற ஆவலுடன் உருவாக்கப்பட்டுள்ளது."
இப்படி குறிப்பிட்டு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். நான் சொல்ல கூடியவை யாருக்கு பொருந்தமாக இருக்குமோ அவர்களுக்கு தான். பகலவன் குழுமமானது துவங்கி ஆறரை மாதங்களுக்கு மேல் ஆனா பிறகும், இக்குழுமத்தை பற்றி அரசியல் குழுமம், அந்த கட்சிக்கு ஆதரவான குழுமம், இந்த கட்சிக்கு ஆதரவான குழுமம் என்று பல வீண் விமர்சனங்கள் எழுகின்றன. இது தேவை தானா?
தோழர்களே அந்த அரசியல் மாநாடு நடந்தது, இந்த அரசியல் மாநாடு நடந்தது, இவர் இப்படி சொன்னார், அவற் அப்படி சொன்னார், மாநாடு இங்கு நடக்கும், அங்கு நடக்கும், அரசியல் தலைவர்கள் அவர், இவர் வருகிறார், அவர் அப்படி செய்வது பிடிக்கவில்லை, இவர் செய்வது பிடிக்கவில்லை, இப்படி அரசியல் செய்திகள் எது நீங்கள் அனுப்பினாலும் அவைகள் அனைத்தும் முடுக்கப்படும்.
தயவு செய்து தினசரி செய்திகளை யாரும் வெளியிடவேண்டாம். இக்குழுமம் மூலம் அன்றைய செய்திகளை அனைவருமே பெறுகிறோம். இருப்பினும் அதையே மீண்டும் ஒரு மின்னஞ்சலாக அனுப்புவதை தவிர்க்கவும். வெறுமனே அரசியலை மட்டுமே பேசுவதின் மூலம் மனிதனின் வாழ்வு முன்னேறுமா? அரசியலை பேசுபவர்கள் அதனைப் பற்றி வீண் வாதங்களில் ஈடுபடுபவர்கள் மின்னஞ்சல்கள் தடைசெய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எந்த கட்சிக்கும் ஆதரவு தரக்கூடிய குழுமம் அல்ல இப்பகலவன் குழுமம்.
தமிழோடு, ஒற்றுமை, சமூக விழிப்புணர்வு, வாழ்க்கை முன்னேற்றம், சமூக முன்னேற்றம், உலக தத்துவங்கள், தமிழ் கலைகள், மறக்கப்பட்ட போராளிகள், சமூக முன்னேற்றத்திற்காக போராடிய தலைவர்கள், விழிப்புணர்வு பாடல்கள், கவிதைகள், கதைகள், இப்படி பல விஷயங்கள் நீங்கள் பகிர்ந்துக்கொள்ளலாம்.
அரசியலை பற்றி உங்கள் கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம். அதனால் யாரின் மனமும் நோகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். வீண் வாதங்கள் செய்ய இக்குழுமத்தில் இடமில்லை. வீண் வாதங்கள், வீண் பேச்சுகள் ஏதேனும் நடந்தால் அவர்கள் இக்குழுமத்தில் இருந்து வெளியேற்றப்படுவது உறுதி.
குழுமத்தின் மூலம் அனைவரும் தனக்கு தெரிந்த, தனக்கு பிடித்த ஒன்றை பகிர்ந்துக்கொள்வதினால், பல அறியா தகவல்கள் அனைவரும் அறிய வாய்ப்பு உள்ளது. அதைவிட்டு விட்டு வெறுமனே அரசியலை பற்றி விவாதிப்பது எந்த விதத்தில் நியாயம்?. இதனால் யாருக்கு லாபம், யாரும் நட்டம். ஒன்றுமே இல்லை.
உங்களின் பயணங்கள், பயண அனுபவங்கள், சமீபத்தில் படித்த புத்தகம், கற்றுக்கொன்ற ஒரு தத்துவம், விளையாட்டுக்கள், இப்படி பகிரலாமே. உங்கள் மனம் கவர்ந்த தத்துவ பாடல்கள் ( பழைய திரைப்படங்களின் தத்துவ பாடல்கள்) , விழிப்புணர்வு பாடல்களை பகிரலாமே. தங்களுக்கு பிடித்த குறும்படங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வேற்று மொழி கவிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்கள், இப்படி பகிரலாமே. உங்களுக்கு பிடித்த புரட்சியாளர்கள், உலகம் மறக்காத முக்கிய நிகழ்வுகள், தலைவர்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், இப்படியும் பகிரலாம்.
தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் சிறப்புகள் உங்கள் எழுத்து நடையில் ஏற்ற புகைப்படங்கள் பதித்து அனுப்புவது நன்றாக இருக்குமே. வேற்று மொழிகளுக்கும், தமிழ் மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடு நீங்கள் அறிந்த வகையில் சொல்லலாமே. தமிழ் கலாச்சாரம், வேற்று மாநில, வேற்று நட்டு கலாச்சாரங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே. அறிவியல், வரலாறு, விஞ்ஞானம், பொது அறிவு,ஆன்மீகம், யோகா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இத்துணை விஷயங்கள் இருக்கும் போது வெறுமனே அரசியல் மட்டும் பேசுவது தவறு. அரசியலை பற்றி உங்கள் கருது தெரிவியுங்கள் அதனை வரவேற்கிறோம். ஒற்றுமையோடு வாழ்வோம் மகிழ்வாக
எனவே தோழர்களே,தங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் நன்மை அளிக்கும் ஒன்றாக இருக்குமெனில், யார் மனமும் நோகாத ஒன்றாக இருக்குமெனில், புதுமையாக ஒன்றாக இருக்குமெனில், அதனை வரவேற்கிறோம்.மற்றபடி இம் மின்னஞ்சலானது யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
வாருங்கள் தோழர்களே வீண்வாதங்களை விட்டு, பகுத்தறிவோடு, ஒற்றுமையோடு, தமிழ் உணர்வோடு, அன்பென்னும் மழையில் நனையலாம். காற்றில் ஏறி விண்ணையும் தொடலாம்
நன்றி
வணக்கம்
பகலவன் குழுமம்
இது தமிழ் உணர்வாளர்களின் சங்கமம்
http://pagalavantamil.blogspot.com/
http://www.periyarl.com/
சென்னை
admin@pagalavan.in