தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஸ்டாலின் முன்னிலையில் கொடுத்த பட்டா, போலி பட்டா?! எல்.ஜி.யின் சொந்த கிராம அதிர்ச்சி






போலி டாக்டர்கள், போலி மருந்துகள், போலி மதிப்பெண் சான்றிதழ் என சமீப காலமாக தமிழகத்தை உலுக்கிய போலிகள், தற்போது இலவச வீட்டு மனைப்பட்டாவிலும் ஊடுருவி விட்டன.

தஞ்சை மாவட்டம் ஒரத்த-நாட்டில்தான் இந்தக் கூத்து. அதுவும் மொழிப்போர் தியாகி எல். கணேசனின் நிர்வாகத்தில் 35 ஆண்டுகளாக இருந்து, இப்போது அவர் மனைவியின் நிர்வாகத்தில் இருக்கும் கண்ணந்தங்குடி கீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண¢டிநத்தம் காடு கிராமத்தில்!

''எங்களுக்கு உண்மையான பட¢டா வழங்கி கலைஞரின் வீட்டு வசதித் திட்டத்தில் வீடுகள் வழங்க வேண¢டும். இல்லையென்றால் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடமே திரும்பக் கொடுப்போம்'' என குரல் எழுப்பிவரும் ஆண்டிநத்தம் காடு கிராமத்துக்கு சென்றோம்.

தங்கராசு, தெய்வானை, ராசேந்திரன் ஆகியோர் கூறுகையில், ÔÔநாங்களெல்லாம் எங்க அப்பா காலத்திலிருந்து இங்கனதான் இருக்கோம். மொத்தம் 107 குடும்பத்துக்கு விவசாயக் கூலி வேலைதான் தொழில். பத்து வருசத்துக்கு முந்தி இலவச வீட்டு மனைப்பட்டா தர்றோம்னு சொல்லி அரசாங்க அதிகாரிகளெல்லாம் விழா நடத்தி பட்டா கொடுத்தாங்க. அப்பறம் 2008-ம் வருசம், தஞ்சாவூர்ல ஸ்டாலின் வந்த நிகழ்ச்சியிலயும் அதே பேர்ல அதே பட்டா கொடுத்தாங்க. எங்களுக்கு படிப்பறிவெல்லாம் கிடையாது. அதனாலே கொடுத்த 2 பட்டாவையும் நாங்க படிச்சுக் கூட பார்க்கலீங¢க.

இப்ப கொஞ்ச நாளைக்கு முந்தி கலைஞர் வீட்டு வசதித் திட்டத்துக்காக விசாரிக்க... ஒரத்தநாடு தாசில்தார் மற்றும் சில அதிகாரிகள் வந்தாங்க. உங்ககிட்ட பட்டா இருக்குதான்னு கேட்டாங்க. எங்ககிட்ட இருந்த இரண்டு பட்டாவையும் கொடுத்தோம். பட்டாவைப் பாத்த அவங்க, 'இது பட்டாவே இல்லை. நீங்க எல்லாம் ஆபீசுக்கு வாங்க'ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. அப்ப ஸ்டாலின் முன்னாடி கொடுத்த பட்டாவெல்லாம் போலி பட்டாவான்னு எங்களுக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு... கண்ணந்தங்குடி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் ராமசாமி, விவசாய தொழ¤லாளர் சங்க ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் கலெக்டரைச் சந்தித்து மனு கொடுத்திருக்கோம். படிக்காதவங்கன்னு சொல்லி அரசாங்கமே எங்களை ஏமாத்துதா?ÕÕ என்றனர் அப்பாவியாய்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமசாமி, விஜயகுமார் ஆகியோரிடம் பேசினோம்.

'' 60 ஆண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருந்து வரும் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு கடந்த 2000 மற்றும் 2008 ஆண்டுகளில் ஒரே நபருக்கு, ஒரே இடத்துக்கு 2 முறை பட்டா வழங்கியுள்ளனர் தாலுகா அதிகாரிகள். இந்த 2 பட்டா குறித்து அப்போதைய டி.ஆர்.ஓ., கருணாகரன் தலைமையில் 21.2.2010 அன்று ஒரத்தநாட்டில் நடைபெற்ற மனுநீதி முகாமில் முறையிட்டோம், அப்போதைய தாசில்தார் பொன்னியின் செல்வன், வி.ஏ.ஓ., கோவிந்தராஜ், ஆகியோர் இந்த பட்டாக்கள் கிராம கணக்கில் வகை மாற்றம் செய்யப்படாமல் இருக்கிறது என தெரிவித்தனர்.

இதையடுத்து ஒரத்தநாடு தாசில்தார் தமிழ்ராஜன¢, கலைஞர் வீட்டு வசதித் திட்டத்துக்காக கண¢ணந்தங்குடி கீழையூர், ஆண்டிநத்தம்காடு பகுதியில் ஆய்வு செய்தபோதுதான், இதெல்லாம் போலி பட்டா என்றும், இதை வைத்து வீட்டு வசதித்திட்டத்தில் இந்த பகுதியை சேர்க்கமுடியாது என்றும் கூறியிருக்கிறார். இதுபற்றி கலெக்டரிடம் முறையிட்டோம். ஒரத்தநாடு தாசில்தாரைப் பார்க்கச் சொல்லி கலெக்டர் அலுவகத்திலிருந்து கடிதம் வந்தது. அதன்படி, ஒரத்தநாடு தாசில்தார் தமிழ்ராஜனை சந்தித்தபோது, 'பட்டா என்றால் நாண்கள், விஸ்தீரனம், புல எண் இருக்க வேண்டும். ஆனால் அந்த பட்டாவில் எதுவுமே இல்லை. அதனால், அவர்கள் குடியிருக்கும் பகுதி முழுவதும் மேய்ச்சல் தரிசு நிலம். அதனால் பட்டா மாற்றம் செய்ய முடியாது' என உறுதியாக கூறிவிட்டார்.

தேர்தல் நேரங்களில் படிப்பறிவில்லாத ஏழை கூலித்தொழிலாளிகளை அதிகாரிகளின் துணையோடு அரசியல்வாதிகள் இதுபோன்ற போலி பட்டாக்களை தயாரித்து வழங்கி ஏமாற்றிவிட்டனர். அதுவும் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே இப்படி போலி பட்டாக்கள் கொடுக்கப்பட்டிருப்பதுதான் கொடுமை. இந்த மக்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்'' என¢றார்.

இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக 35 ஆண்டுகள் இருந்த எல்.கணேசனிடம் இதுபற்றி நாம் கேட்க, ''நான் இப்போ அந்த ஆண்டிநத்தம் ஊரில் இருந்துதான் வருகிறேன். ஒரே பெயரில் ஒரே இடத்துக்கு 2 முறை பட்டா வழங்கியுள்ளார்களா என்று எனக்குத் தெரியவில்லையே... இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் தாசில்தார், வி.ஏ.ஓ.வை நேரில் சந்தித்து, ஆண்டிநத்தம் விவசாய கூலித் தொழிலாளர்கள் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் பயனடைவதற்கான நடவடிக்கை எடுப்பேன்'' என்று பொறுப்பாக பதிலளித்தார்.

இதுகுறித்து கலெக்டர் சண்முகத்திடம் பேசினோம். ÔÔபட்டா விஷயத்தில் சில தவறுகள் நடந்துள்ளது என்பது உண்மைதான். இதுதொடர்பாக பரிசீலனை செய்து கிராமக் கணக்கில் சேர்க்கப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கூலித்தொழிலாளர்களும் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்துக்குத் தகுதி-யானவர்களாக ஆக்கப்-படுவார்கள்ÕÕ என்றார்.

அரசு நிலங்களில் 3 வருடம் குடியிருந்தாலே போதும் பட்டா வழங்கலாம் என்று அரசு சொல்கிறது. இப்படியிருக்க... 60 ஆண்டுகளாக குடியிருந்து வரும் கூலித் தொழிலாளர்களுக்கு பட்டாவும், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் வீடும் கிடையாது என்பது எந்த ஊர் நியாயம்?