தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கச்சதீவை அடுத்து ராமேஸ்வரம் தீவை குறி வைக்கும் இலங்கை ?

கச்சத்தீவை அடுத்து ராமேஸ்வரம் தீவை குறிவைக்கும் நோக்கில், இலங்கையின் செயல்பாடுகள் நகர்த்தப்படுவதால், இந்திய அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்தியா வசமிருந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட நாள் முதல், இந்திய கடல் எல்லையில் தொடர் பதட்டங்கள் நிலவிவருகிறது. தீவு கைமாறிய நாளிலிருந்து இலங்கை கடற்படையின் கண்காணிப்பு எல்லை மீறி வருகிறது. முன்பெல்லாம் இந்திய கடல் எல்லை வரை படகில் வலம் வந்த இலங்கை கடற்படை, தற்போது இந்திய எல்லைப்பகுதியில் கால்பதிக்கும் அளவுக்கு நெருங்கிவிட்டது.பேரழிவுக்கு பின், நட்டாற்றில் விடப்பட்ட தனுஷ்கோடியில், இலங்கை கடற்படையினர் வந்து, தின்பண்டங்கள் வாங்கிச்சென்ற சம்பவம் இதற்கு உதாரணம். தனுஷ்கோடியில் இந்திய கடற்படையின் கண்காணிப்பையும் மீறி, அப்படையினர் வந்து சென்றது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இந்தியாவுக்கு சவால் விடும் நோக்கில் தான், இலங்கை கடற்படையின் பிரவேசம் நடந்துள்ளது.

 

கச்சத்தீவை தொடர்ந்து ராமேஸ்வரம் தீவையும் தன்வசம் படுத்தும் முயற்சியில், இலங்கை காய் நகர்த்தி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக மீனவர்களின் கச்சத்தீவு பிரவேசத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, ராமேஸ்வரம் தீவை கைப்பற்றுவது பலனளிக்கும் என இலங்கை கருதுவதே இதற்கு காரணம். முன்பு புலிகளுடனான போர் அமலில் இருக்கும் போது, அந்நாட்டு அரசின் கவனம் முழுவதும் அதைப்பற்றியே இருந்தது. புலிகள் அழிவுக்கு பின், இலங்கையின் செயல்பாடுகள் தொலைநோக்கில் அமைந்து வருகிறது.அண்டை நாடான இந்தியாவை முழுக்க குறிவைத்து காய் நகர்த்தப்படுவது நன்றாக தெரிகிறது. சீனாவின் உதவி இலங்கைக்கு மேலும் பலமாகும். இதற்கான வெள்ளோட்டம் தான், இலங்கை கடற்படையின் தனுஷ்கோடி விஜயம். தனிமையில் விடப்பட்ட தனுஷ்கோடியின் சாதகத்தை இலங்கை சாதகமாக்கும் முன், அங்கு பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.