தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தவறு மேல் தவறு செய்யும் திமுக இரண்டாம் கட்ட அரசியல்வாதிகள் !

தினசரிகளில் வந்துள்ள செய்திகளை அப்படியே இங்கு பதிகிறேன் . அதன் மூலம் நமது இன்றைய  தலையங்கத்தை  முடிக்கிறேன்.
செய்திகளை அப்படியே பதிவதால் சற்று நீளமாக இருக்கலாம் . இதை ஒரு ஆய்வு பதிவாக செய்துள்ளேன்.


ஒன்று :

ராமேஸ்வரம் திமுக நகராட்சி தலைவர் ஜலீல் கற்பழிப்பு புகாரில் கைது .

ராமேஸ்வரம்ச இளம் பெண் கொடுத்த கற்பழிப்புப் புகாரின் பேரில் நகராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



ராமேஸ்வரம் நகராட்சித் தலைவராக இருப்பவர் ஜலில். திமுகவைச் சேர்ந்த இவர், தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கீழ்க்கரைக்கு சென்றுள்ளார். அங்கு ஜாஸ்மீன் என்ற பெண்ணை கடத்தி வந்துள்ளனர்.



பின்னர் ராமேஸ்வரம் அருகில் உள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில், தனது நண்பர்கள் 5 பேருடன் ஜாஸ்மீனை ஜலில் கற்பழித்துள்ளார். மேலும் செல்போன்களில் இதை படமாகவும் பிடித்துள்ளனர்.


மயக்கம் தெளிந்த ஜாஸ்மீன், ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் ஜலில் உள்பட 6 பேர் மீது கற்பழிப்பு புகாரை கொடுத்துள்ளார். மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. பிரதீப்குமாரை நேரில் சந்தித்து, நடந்த விபரங்களை வாக்குமூலம் கொடுத்துள்ளார்.



இதையடுத்து எஸ்.பி. பிரதீப்குமார் உத்தரவின் பேரில், ஜலில் உள்பட 6 பேரை ராமேஸ்வர போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


ராமேஸ்வரம் திமுக நகராட்சித் தலைவர் ஜலில் கற்பழிப்பு வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது செய்தி :

சென்ற வாரம்  "Horlicks "  திருட்டு !

மதுரை அருகே சரக்கு லாரியில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஹார்லிக்ஸ் பெட்டிகள் கொள்ளை போன புகாரை பெற மறுத்து, வழக்கு பதியாமல் புகார்தாரரை இழுத்தடித்து, ஐகோர்ட்  உத்தரவிடும் வரை போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர்.

 

நாமக்கல் செல்வரத்தினத்தின் "சரண் டிரான்ஸ்போர்ட்' லாரி ஒன்று, ஜூலை 4ல் அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து "கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர்'நிறுவனத் திலிருந்து 17.46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பவுடர் பாக்கெட் கொண்ட 770 பெட்டிகளை ஏற்றிக் கொண்டு, மதுரை மாவட்டம் திருவாலவாயநல்லூர் குடோனுக்கு புறப்பட்டது.  ஜூலை 12 அதிகாலை 2.30 மணிக்கு  குடோனை அடைந்தது லாரி. வாட்ச்மேன் காலையில் சரக்குகளை இறக்கும்படி கூறியதையடுத்து, டிரைவர் மரியபிரகாஷ், சர்வீஸ் ரோட்டில் லாரியை நிறுத்தினார். லாரி கேபினில் படுத்துக் கொண்டார். மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்த டிரைவர், தார்பாய் கயிறு அறுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தார். மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 135 பெட்டிகள் கொள்ளை போயிருந்தன. செல்வரத்தினத்திற்கு டிரைவர் தகவல் கொடுத்தார். பின், சமயநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு காலை 11 மணிக்கு சென்று புகார் கொடுத்தார்.

 

புகாரை பெற மறுத்த போலீசார், சம்பவ இடம் சோழவந்தான் எல்லை என்பதால், அங்கு செல்லும்படி கூறினர். இரவு 8 மணிக்கு சோழவந்தான் ஸ்டேஷன் சென்று இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியனிடம் புகார் கொடுத்தார்.  புகாரை பெற மறுத்த இன்ஸ்பெக்டர், "" நீயே திருடிவிட்டு, பொய் புகார் கொடுக்கிறாயா?'' என, ஆத்திரப்பட்டார். வேறுவழியின்றி டிரைவர் சென்னையிலிருந்த செல்வரத்தினத்திற்கு தகவல் கொடுக்க, அவரும் ஜூலை 15ல் மதுரை வந்தார். பின் அவர்கள், ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., முத்துச்சாமி, நாமக்கல் தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் தியாகராஜனுடன் சென்று, இரவு 7 மணிக்கு புகார் கொடுத்தனர். பொய் புகார் எனக் கருதி, வழக்கு பதிய முடியாது என இன்ஸ்பெக்டர் மறுத்தார்.  சமயநல்லூர் டி.எஸ்.பி., தெரிவித்த யோசனைப்படி, மீண்டும் அவர்கள் சோழவந்தான் ஸ்டேஷனுக்கு ஜூலை 16ல் சென்றனர். இரு நாட்கள் காத்திருந்தும் வழக்கு பதிவு செய்யப்படாததையடுத்து, செல்வரத்தினம் ஐகோர்ட் கிளையில் ஜூலை 19ல் மனு செய்தார்.

 

மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜெயபால், புகார் மீது வழக்கு பதியாதது குறித்து கேள்வி எழுப்பினார். இன்ஸ்பெக்டர் ஆஜராகி, விளக்கமளிக்கவும் உத்தரவிட்டார். மறுநாள் ஆஜரான இன்ஸ்பெக்டர், புகார் மீது 17ம் தேதியே வழக்கு பதிவு செய்ததாக குறிப்பிட, குறுக்கிட்ட நீதிபதி, ""அப்படியானால் எப்.ஐ.ஆர்., நகலை மனுதாரருக்கு கொடுக்காதது ஏன்?'' என, கேள்வி எழுப்பினார். ஆவணங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

மறுநாள், ஆவணங்களுடன் இன்ஸ்பெக்டர் ஆஜரானார். 17ம் தேதி போடப்பட்டதாக, எப்.ஐ.ஆர்., நகலைக் காட்டினார்.  ஆனால், "கேஸ் டைரி'யில், ஜூலை 17ம் தேதி வழக்கு பதிவு செய்யப்படாதது தெரிந்தது.  (எப்.ஐ.ஆரில் தேதியை மாற்றி பதிவு செய்ய இயலும். ஆனால் அன்றாட செயல்பாடுகளை பதிவு செய்யும், "கேஸ் டைரி' யில் முன்கூட்டியே எப்.ஐ.ஆர்., பதிவு செய்ததாக மாற்ற இயலாது.) நீதிபதி அடுக்கடுக்காக கேள்வி எழுப்ப, வேறுவழியில்லாமல், தவறான தகவல் தந்ததற்காக கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் வருத்தம் தெரிவித்தார்.  முடிவில், இவ்வழக்கு விசாரணையை திண்டுக்கல் எஸ்.பி.,க்கு மாற்றம் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

 

திருட்டு, கொள்ளை புகார்களை வாங்கும் போலீசார், முதலில் வழக்கு பதிவு செய்யாமல் விசாரிப்பர். வழக்கு பதிந்தால், அதன் மீது நடவடிக்கை எடுத்து பைசல் செய்ய வேண்டும். அதை தவிர்க்க, புகார்தாரர் ஒப்புதலுடன், முடிந்தளவு வழக்குப் பதியாமல் வழக்கை முடிக்க போலீசார் முயல்வர். தமிழகம் முழுவதும் இந்த நடைமுறை உள்ளது. லாரிகளில் டிரைவர், கிளீனர்கள் சரக்குகளை திருடி விட்டு, பெயருக்கு புகார் கொடுப்பது உண்டு. இச்சம்பவத்திலும் டிரைவர், கிளீனர் ஈடுபட்டிருக்கலாம் என கருதி, இன்ஸ்பெக்டர் வழக்கு பதியாமல் இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

 


தின இதழ் :


இந்த செய்திக்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம் ? அதற்க்கு ஜெயலலிதாவின் அறிக்கை ( ஆண்டிபட்டியில் விநியோகிக்கப்பட்டது  இந்த திருட்டு புட்டிகல்தாம் எனபது ). இதை மத்திய அமைச்சர் கண்டிதிருந்தாலும், பொது மக்களிடம் சந்தேகம் விழுந்து விட்டது.


மூன்றாவது செய்தி :

இன்று வந்துள்ளது , பா ம க வின் தலைவர் ராமதாஸ் வழி இந்த செய்தியை பாப்போம். இன்று அவரின் செய்தி இதுதான் .
(இதில் இரண்டு செய்திகள் ஒன்று தமிழக அரசின்  நிர்வாக திறமையின்மை மற்றொன்று உமாசங்கர் விவகாரம்)



ஜாதி சான்றிதழை உமாசங்கர் மாற்றிக் கொடுத்ததாக, அரசின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை. அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்த 400 கோடி ரூபாய், எல்காட் நிறுவனத்தின் எல் நெட்டை இ.டி., என்ற தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு தாரை வார்த்தது போன்றவை குறித்த உமாசங்கரின் குற்றச்சாட்டுகளுக்கு, அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

 


மின் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம், ஆயிரத்து 650 கோடி ரூபாய் மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. பத்தாண்டுகளாக மின் உற்பத்தியைப் பெருக்கவில்லை. வெளிமாநிலங்கள், தனியாரிடமிருந்து அதிக கட்டணத்திற்கு மின்சாரம் வாங்குகின்றனர் என ஒழுங்கு முறை ஆணையம், அரசு மற்றும் மின் வாரியம் மீது குற்றம் சாட்டியது. 2009-2010ல் மாநில மின் தொகுப்பில், 69 ஆயிரத்து 144 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்டது.  விவசாயத்திற்கு மின்சாரம் இலவசம்; இதற்கான மானியம் 5,828 கோடி ரூபாயை அரசு, மின் வாரியத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், 267 கோடி ரூபாய் மட்டும் வழங்கியுள்ளது. முழு தொகையை வழங்கியிருந்தால், கட்டணத்தை உயர்த்தியிருக்க வேண்டாம்.

 


நான்காவது செய்தி :


இந்து இப்போது வந்துள்ள மிக சூடான செய்தி . நெல்லை அண்ணா பல்கலை துணை வேந்தர் காளியப்பனை அடித்து துவைத்து எடுத்துவிட்டார்  அந்த ஊரின் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா எனபது. - இது ஜெயா தொலைக்காட்சியில் நான் இப்போது பார்த்தது.



தின இதழின் செய்தி :

இவை எல்லாம் இந்த ஒரு வார அல்லது பத்து நாட்களின் கால கட்டத்தில் திமுக அரசியல்வாதிகளை அல்லது அரசை பற்றிய செய்திகள்.
ஏற்கனவே ஈரோட்டில் ராஜா என்ற அமைச்சர்  இரண்டாம் மனைவியோடு சேர்ந்து ஒரு அப்பாவி குடும்பத்தை மிரட்டியது போன்ற பழைய செய்திகள் உள்ளன.

ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை ?