தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பகலவன் குழும அண்மை செய்திகள்

இலங்கை தமிழர்களை இரண்டாம் குடிகளாக நடத்துகிறது - தி எள்டேர்ஸ்.


2007ம் ஆண்டு  பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

 

இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்கா வின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர்  லக்தர் பிராஹிமி, தென்னாப்பிரிக்க ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 

குழுவின் தலைவராக டெஸ்மான்ட் டுடு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு இலங்கை அரசின் இனவெறியைக் கடுமையாக கண்டித்துள்ளது.

 

இதுகுறித்து பிபிசிக்கு டுடு அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் சரமாரியாக கொல்லப்பட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகின்றனர். அரசுக்கு எதிர்ப்பானவர்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் பயங்கரமாக உள்ளது என்றார்.

 

இலங்கையைக் கண்டித்து உலகப் பெருந்தலைவர்கள் குழு ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

 

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

 

போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது கவலை தருகிறது. போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை உருப்படியான நடவடிக்கை  எதையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.

 

இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் செவிடுகள் போல இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நல்லாட்சி அங்கு இல்லை, நம்பிக்கை இல்லை, நம்பகத்தன்மை என எதுவுமே இல்லை இலங்கையில். இதைப் பார்த்து பிற நாடுகளும் கெட்டுப் போகும் அவலமே மேலோங்கியுள்ளது .

 

பின்லாந்து நாட்டின முன்னாள் அதிபரான மர்ட்டி அதிசாரி கூறுகையில், அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. எந்தவித முன்னேற்றத்தையும் அது காட்டவில்லை. மீடியாக்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. அவற்றின் கண்களை மூடி வைத்துள்ளது. மீடியாக்களை சுதந்திரமாக செயல்பட விட்டால்தான் உண்மை தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த செய்திக்கு பிபிசியின் பதிவு அப்படியே இங்கே :

மூத்தோர்கள் சபை என்ற முன்னாள் தலைவர்களின் அமைப்பான, தெ எல்டர்ஸ், என்ற அமைப்பு, இலங்கை அரசு மனித உரிமைகள் விஷயத்தில் ஒரு அவமதிக்கும் மனோபாவத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறது.

இது நெல்சன் மண்டேலாவால் ஆரம்பத்தில் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட அமைப்பு.

 

இலங்கை அரசு மனித உரிமைகளை புறந்தள்ளும் மனோபாவத்தையும், உள்நாட்டில் இருக்கும் விமர்சகர்களையும், மாற்றுக் கருத்து கொண்டோர்களையும் அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதைப் பற்றி சர்வதேச சமுதாயம் மேலும் கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகளின் மூத்த முன்னாள் தலைவர்கள் அமைப்பான, தெ எல்டர்ஸ் அமைப்பு கூறியிருக்கிறது.

 

இலங்கை நிலவரம் குறித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், இந்த அமைப்பு, சர்வதேச சமூகம் இது வரை இலங்கை குறித்து காட்டிவரும் " காதைச் செவிடாக்கும் மௌனம்" மற்ற நாடுகளையும் இலங்கை வழியில் செல்ல வைக்கும் என்று கூறியிருக்கிறது.

 

நெல்சன் மண்டேலாவால் உருவாக்கப்பட்ட இந்த எல்டர்ஸ் அமைப்பில், பேராயர் டெஸ்மண்ட் ட்டு, முன்னாள் பின்லாந்து அதிபர் மார்ட்டி அஹ்திசாரி, ஐ.நா மன்ற முன்னாள் தலைமை செயலர் கோபி அன்னான், முன்னாள் ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையர் மேரி ராபின்சன், முன்னாள் ஐ.நா மன்ற தூதர் லக்தார் பிரஹிமி போன்றோர் உறுப்பினர்களாக உள்ளனர்

 

போருக்கு பிந்தைய இலங்கையில் சில முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடும் இந்த அமைப்பு, வடக்கில் மேலும் அதிகரித்த அளவில் பொருளாதார நடவடிக்கைகள் நிகழ்ந்திருக்கின்றன, சுமார் 26000 இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தத்தம் இடங்களுக்கு திரும்பியிருக்கிறார்கள் என்பனவற்றை உதாரணமாகக் குறிப்பிடுகிறது.

 

ஆனால், இந்த முன்னேற்றகரமான விஷயங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் அம்சங்களாக, கருத்து மாறுபடுவோர்களை சகித்துக் கொள்ளாமல் ஒடுக்குவது, அரசுக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிப்பது போன்றவை நிகழ்வதாக அது சுட்டிக்காட்டுகிறது.

 

சர்வதேச சமூகம் குறிப்பாக, இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கை அரசு அமலில் வைத்திருக்கும் அவசரகால சட்டங்களை விலக்கிக்கொண்டு, இனச்சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களது மனித உரிமைகளையும் பாதுகாக்க வெளிப்படையான உறுதிமொழியை வழங்கவைக்க வேண்டும் என்று இந்த அமைப்பு கோருகிறது.

 

தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்களை சந்திக்க செஞ்சிலுவை சங்கத்துக்கு அனுமதி வழங்குதல், ஐ.நா மன்ற தலைமைச்செயலர் உருவாக்கியிருக்கும் நிபுணர்கள் குழுவுடன் இலங்கை அரசு ஒத்துழைத்தல், நீதித்துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தன்னார்வ இயக்கங்கங்கள் இலங்கையில் தங்களது பணிகளை அச்சுறுத்தல் அல்லது தேவையற்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யும் சூழலை உருவாக்குதல், இலங்கையில் இனச்சிறுபான்மை மக்கள் நீண்ட காலமாக அரசியல் தளத்தில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நிலையை சரிசெய்யத் தேவைப்படும் அரசியல் சட்ட சீர்திருத்தங்களை கொண்டுவருவது ஆகிய விஷயங்களையும் பன்னாட்டு சமூகமும் இந்தியா, அமெரிக்கா , சீனா , ஜப்பான் போன்ற நாடுகளும் இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்று இந்த தலைவர்கள் அமைப்பு கூறியிருக்கிறது.

 

'ஆணையங்களால் பலன் இல்லை'

இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள பின்லாந்து முன்னாள் அதிபர் மார்டி அஹ்திசாரி, பிபிசியிடம் வெளியிட்ட கருத்துக்களில், தேசிய நல்லிணக்கம் மற்றும் படிப்பினைகளுக்கான ஆணையத்திலிருந்து பெரிய அளவில் ஏதும் பலனை நாம் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். கடந்த முப்பதாண்டு வரலாற்றை நீங்கள் பார்த்தால், இது போன்ற ஆணையங்களால் எந்த பலனும் விளையவில்லை என்பது தெரியும். அந்த ஆணையங்களின் அறிக்கைகள் கூட வெளியிடப்படவில்லை. எனவே இந்த முயற்சி ஒன்றும் விரும்பும் அளவுக்கு இல்லை என்றார்.

 

'எளிமைப்படுத்தும் முன்னாள் தலைவர்கள்'

இந்த செய்தி குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர், ராஜிவ் விஜெசிங்க, இந்த ஓய்வு பெற்ற தலவர்கள் , நடந்துள்ள ஆக்கபூர்வமான மாற்றங்களை எப்படி மேலும் கட்டியமைப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்காமல், பிரச்சினையை எளிமைப்படுத்தி, உபதேசிக்கிறார்கள் என்றார்.

 

மாற்றுக்கருத்துக்கள் வெளிவருவதற்கோ அல்லது விமர்சனங்களுக்கோ இலங்கையில் பஞ்சமில்லை இதை தினசரிப் பத்திரிகைகளிலும், நாடாளுமன்றத்திலும் பார்க்கலாம் என்றார் அவர்.

 


இனி 5 கி மீ தூர இடைவெளிகளில் உயர்நிலை பள்ளி .


தமிழகத்தில் 5 கி.மீ. தூரத்துக்குள் ஒரு உயர்நிலைப் பள்ளி இருக்கும் வகையில், மத்திய அரசின் நிதியில் புதிய பள்ளிகள் அமையவுள்ளன.

அதற்காக, எந்தெந்த பகுதிகளுக்கு உயர்நிலைப் பள்ளிகள் தேவை என்பதை ஆய்வு செய்யும் பணி இப்போது முனைப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்தில் அதன் இறுதி முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமத்திலும் கல்வித் தேவை உள்ள இடங்களில் புதிய பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

அதன்படி, ஒரு கி.மீ. தூரத்துக்குள் தொடக்கப் பள்ளிகள், 3 கி.மீ. தூரத்துக்குள் நடுநிலைப் பள்ளிகள், 5 கி.மீ. தூரத்துக்குள் உயர்நிலைப் பள்ளிகள், 8 கி.மீ. தூரத்துக்குள் மேல்நிலைப் பள்ளிகள் படிப்படியாக அமைக்கப்படவுள்ளன. முதல் கட்டமாக உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி கூறியது: தமிழகத்தில் உள்ள சுமார் 63,000 கிராமங்களில் 5 கி.மீ. தூரத்துக்குள் எங்கெல்லாம் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன என்பது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.


ஓடிப்போன கோவிந்தசாமி - மார்சிஸ்ட் கட்சியின் விளக்கம் திருப்பூரில் .


தொண்டர்களையும், தலைவர்களையும் சம தளத்தில் நிறுத்துவதும், தியாகத்தைப் போற்றுவதுமே கம்யூனிஸ்ட் பண்பாடு. அதனை இழந்தவர்களால் கம்யூனிஸ்ட் அரசியலில் நிலைத்து செயல்பட முடியாது. என்று திருப்பூரில் நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் கே.பாலபாரதி பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது:

கம்யூனிஸ்ட் கட்சிக்கென்று மிகச் சிறந்த பண்பாடு இருக்கிறது. கட்சி என்றுமே தனி நபர்களை சார்ந்து இயங்குவதில்லை. ஒரு கூட்டு தலைமையையும், கூட்டுத்தலைமையின் முடிவுகளில் அமல்படுத்துவதுதான் கம்யூனிஸ்டுகளின் தனிச்சிறப்பு. உலக அளவில், மார்க்சியம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே இதுதான் நமது நடைமுறை.

மார்க்சிஸ்டுகளின் பண்பாட்டை மாற்றுக் கட்சியினர் கூட வியந்து பாராட்டுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். அந்தக் கட்சிகளில் உழைக்கும் தொண்டர்களுக்கு மதிப்பு இருக்கிறதா?. அங்கே தேர்தல்களில் வேட்பாளர்களாக சாதாரண தொண்டர்களால் நிற்க முடியுமா?. தன்னை முன்நிறுத்த வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்ப்பாரானால் அது முதலாளித்துவக் கலாச்சாரம். அப்படிப்பட்டவர்களால் கட்சியில் நீடித்திருக்க முடியாது.

ஏனெனில், மார்க்சியம் என்பது அரசியல் கருத்து மட்டுமல்ல. அது ஒரு விஞ்ஞானம். எடிசன் மின்சாரத்தைக் கண்டறிந்தார். அது இன்று உலகம் முழுவதும் ஒளி பாய்ச்சுகிறது. அதைப்போல, மார்க்சியமும் உலகம் முழுவதும் சமத்துவம் என்ற வெளிச்சத்தை பாச்சுகிறது. இந்த விஞ்ஞானம், மக்களின் சிந்தனையைக் கவ்விப்பிடிக்கும்போதுதான் நடைமுறை சாத்தியம். எனவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும், சாதாரண தொண்டர் அல்ல, சமூக விஞ்ஞானிகள். பதவியையும், புகழையும் எதிர்பார்ப்பபவர்கள் இந்தக் கட்சியிலே நிலைத்திருக்க முடியாது.

திருப்பூரில் இன்று மாதம் 2 முறைதான் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. மின்வெட்டு, சாயக்கழிவுப் பிரச்சனை, நூல் விலை உயர்வு என எந்தப் பிரச்சனைதான் தீர்ந்திருக்கிறது?. தமிழக அரசு பல திட்டங்களை மிக விளம்பரமாக அறிவிக்கிறது. ஆனால் அவை நடைமுறைக்கு வருவதில்லை.

இந்தத் திட்டங்களெல்லாம் கால்முளைத்து வீட்டுக்கு வரமுடியவில்லை என்பதால்தான் இடைத்தேர்தல்களை திமுக கண்டறிந்திருக்கிறது. தேர்தல் என்றாலே காசு என்ற முறையில் அரசியல் மாறியுள்ளபோது மக்களின் தேவைகள் எப்படி நிறைவேற்றப்படும்?. எனவே, கண்டுகொள்ளப்படாத மக்களின் பிரச்சனைகளுக்காக மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து போராடவேண்டும். ஏழை, விவசாய, நடுத்தர வர்கத்தினரையும் இணைத்துக்கொண்டு போராடுவோம். மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்துவோம்.



நாடாளுமன்ற தொகுதி நிதி இனி 5 கோடி ரூபாய் .


சோனியா மற்றும் அத்வானி உள்பட 130  அமைச்சர்கள் தொகுதி நிதியில் 5  பைசா கூட செலவழிக்கவில்லை என்று கூறப்படடுல நிலையில் ,தொகுதி மேம்பாட்டு நிதியை இனி 5 கோடி ரூபாய் என உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக தற்போது ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.


இந்தத் தொகையை ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்போது கொஞ்சம் நிதிப் பற்றாக்குறை உள்ளது. இந்தப் பற்றாக்குறை பிரச்னை தீர்ந்தவுடன், எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அதிகரிக்கப்படும். எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், அதில் ஊழல் நிலவுவதாகவும் புகார் கூறப்படுவது உண்மையே. இருந்தாலும், நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் சிறந்த திட்டம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் துவக்கிய பின், 21 ஆயிரத்து 631 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை சொன்னவர் மத்திய புள்ளியியல் துறை அமைச்சர்.

இனி அரசாங்க பணிகள் எல்லாம் அரசியல்வாதிகள் மூலம்தான் செயல்படுத்தப்படவேண்டும் என்பதின் திட்டம் தான் இது.


தொடங்கி விட்டது தொடர் கூட்டங்கள் .


அதிமுக மட்டும் அல்ல திமுகவும் தொடர் பொது கூட்டங்களை அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பு இல்லாத தேர்தல் கூட்டங்கள் நடந்து வருகிறது.

கோவையில் அ.தி.மு.க., சார்பில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  பதிலடி கொடுக்கும் விதமாக, தி.மு.க., சார்பில் முதல்வர் தலைமையில் கடந்த 1ம் தேதி, பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தி.மு.க.,வினர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க., மேலிடம் முடிவெடுத்துள்ளது.

வரும்  20ம் தேதி, அரியானூரில் உள்ள வி.எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் திருமணத்தில், முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். அன்று மாலை, சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடக்கும்  விழாவிலும் கலந்து கொள்கிறார். அன்று, சேலம் போஸ் மைதானத்தில் பொதுக் கூட்டம் நடத்தவும், கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.


அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு  ஆலோசனை கோரும் தகுதி இல்லை - இலங்கை


ஆப்கானிலும் ஈரானிலும் 11 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இலங்கைக்கு ஆலோசனை கூற தகுதியில்லை  இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஜாதிக ஹெல உறுமய கட்சி சார்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரவித்துள்ளார்.

 

இது மட்டும் இல்லாமல் ஐநா அமைப்பில் இந்த இரு நாடுகளிற்கும் எதிராய் ஒரு கூட்டமைப்பை உருவாக்கபோவதாகவும் இவர் கூறியுள்ளார்.