வீரம் விளைந்த மண்ணில் - மாவீரர் நாள் கவிதை - பகலவன்
வீரம் விளைந்த மண்ணில்
விதையாகி போனவர்களின் சரித்திரத்தை
ஒரு நிமிடம் மரியாதையை செலுத்த வந்திருக்கும்
நாளைய விழுதுகளுக்கு எனது வணக்கம்!
அண்டை நாட்டு அகதிகளாயினும்
எம்நாட்டு வீரத்தை பாருக்கு
உரக்க சொல்பவர்கள் நாம்,
வீழ்ந்தது ஆலமரம் ,நொறுங்கியது அதன் வேர்!
என கூறும் அனைவருக்கும் உரக்க சொல்வோம்!
அங்கே நடபட்டிருப்பது பல ஆயிரம் விழுதுகள் என!
எமக்கும் உரிமை உண்டு என கூறும்
நம் நாக்கை அவன் அறுப்பாயின்
உனக்கு உரிமையே இல்லை என
அவன் நாக்கை நாம் அறுப்போம் !
எத்தனை எத்தனை தியாகம்
எம் இன சரித்திரத்தில் !
தோழர்களே நாம் மண்ணாகி போகவில்லை!
நாளைய சரித்திரம் ஆக போகிறோம்!
ஜாதி ,மதம் என் கடந்து நாம் இங்கே கூடி உள்ளோம்!
தமிழனின் குருதியில் கலந்து போன கட்சியையும்
கடந்து நாம் இங்கே கூடி உள்ளோம் !
ஒரு இனத்தின் விடியலை
பல தியகங்களோடு தொடங்கி உள்ளோம்!
சூதும் வாதும் எம் இனத்தை சுழ்ந்திருக்கலாம்
பகைமையும் முள்வேலியும் எம் மக்களை சுழந்திருக்கலாம்
எவை எவை யாயினும் நமக்கு பயம் கூடாது!
மூன்று லட்சம் சிங்களவனை
வெறும் நாற்ப்பதாயிரம் போராளிகளோடு
கட்டி ஆண்டவர்கள்தான் நாம் !
தமிழ் நாட்டு கவிஞன் கொஞ்சம்
சன்மானத்துக்கு அடிமை பட்டவன் தான் !
இதற்கு ஒன்றும் நான் விதி விலக்கல்ல!
என்றாலும் உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்!
எம் இனத்தை அழிக்க தந்தி அடித்தவனின்
தலைக்கு உங்கள் கவிதை மகுடத்தை சூட்டாதிர்கள்!
நம் இனத்தின் வீரத்தை இவ்வுலகுக்கு எடுத்துரைத்த
மாவிரர்களுக்கு அந்த மகுடத்தை சூட்டுங்கள்!
வீரத்தோடும் தன்மானத்தோடும்
வாழ நினைப்பவன் என் ஈழ தமிழன்
இங்கே பகுத்தறிவோடும் சுய மதிப்போடும்
வாழ மறுப்பவன் என் மீதி தமிழன்
காலங்கள் உருண்டோடி போகிறது
எமது எழுச்சியும் மங்கிதான் போகிறது!
அங்கே சாட்சிகளும் அழிக்கபடுகிறது
எழுச்சிகளும் நொறுக்கபடுகிறது!
உலக தமிழினமே விழித்து கொள்
நாம் பிரிவினைவாதிகள் இல்லை!
நமக்கான உரிமைகளை பெற நினைப்பவர்கள்!
நமக்கான பூமியை பெற நினைப்பவர்கள்
கழனிகளையும் நிலபுலன்களையும் எங்கோ விட்டு விட்டு
ஓடித்திரிகிறார்கள் அகதியாய்!
உன் சக தமிழன் அடிமை என்றால்
நாம் என்ன எஜமானிகளா!
என் வீரமிக்க இனமே இவ்வுலகத்தை
அசைத்து பார்க்க விரும்புவர்கள் இல்லை நாம்!
நாம் பிறந்து வளர்ந்த மண்ணில் உறவுகளோடு
ஆசையாய் பழகி வாழ விரும்புவர்கள் நாம்!
எம் மாவிரர்களே எமக்காக போர்வாளை
தூக்கியவர்கள் நீங்கள்
எத்தனை எத்தனை சூழ்ச்சிகள்
எம்மை கட்டுபடுத்த நினைத்தாலும்
பாடம் புகட்டியவ்ர்கள் நீங்கள்!
பயமும் தயக்கமும் இன்றி பயணிக்கிறோம்
எம் இனத்தின் விடியலை நோக்கி
நீங்கள் காட்டிய பாதையில்
வீரமும் தியாகமும் மிக்க பூமியை மீட்டெடுப்போம்!
உங்கள் தியாகம் அளவற்றது
உங்கள் வீரம் பெரு மதிப்பு மிக்கது
தமிழன் தன்மானத்தோடு வாழ
கற்று கொடுத்தவர்கள் நீங்கள்!
பயணிக்கிறோம் எம் இனத்தின் விடியலை எடுத்துரைக்க !
பயணிக்கிறோம் வீரமிக்க சரித்திரத்தை உருவாக்க !
பொருத்து போதும் தமிழா !
வீழ்ந்தாலும் மாய்ந்தாலும்
எம் பூமியை நாம் இழக்க மாட்டோம்
இம் மாவீரர்களின் தியாகம் நமக்கு துணை நிற்கும்!
வஞ்சகம் நம்மை கண்டு பயம் கொள்ளட்டும்!
வீரத்தோடும் தன்மானத்தோடும்
எம் இனத்தை கட்டி எழுப்பிய
எம் தலைவனுக்கும் மாவீரர்களுக்கும்
தலை வணங்கி விடை பெறுகிறான் இந்த பகலவன்......
நன்றி
வணக்கம்
பகலவன்