தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை விபரம்: வி. உருத்ரகுமாரன்


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சபையாக அமையும் அமைச்சரவையினை மக்களுக்கு அறியத் தருவதில் நாம் பெரு மகிழ்வடைகிறோம்.

 

இவ் அமைச்சரவையானது பிரதமர் தலைமையில் மூன்று துணைப்பிரதமர்களையும், ஏழு அமைச்சர்களையும் உள்ளடக்கிய பதினொரு உறுப்பினர்களைக் கொண்டதாக அமைகிறது. பிராந்திய அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று துணைப் பிரதமர்களுக்கும் ஏழு அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு அமைச்சுக்கள்; ஒதுக்கப்பட்டுள்ளன. இதைவிட ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய துணை அமைச்சர்கள் அந்தந்த அமைச்சர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

துணைப்பிரதமர்களையும் அமைச்சர்களையும் தெரிவு செய்யும் பொறுப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு பிரதமரிடமே வழங்கியிருந்தது. இச் சந்தர்ப்பத்தில் இத் தெரிவு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதனை மக்களுக்கு அறியத்தருவது உகந்தது எனக் கருதுகிறேன்.

 

ஏற்கெனவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்காலப் பணிகளுக்கான செயற்குழுக்களைத் தெரிவு செய்த போது கடைப்பிடித்த அதே அணுகுமுறையினைப் பின்பற்றி உறுப்பினர்களிடையே அமைச்சர் பதவியைப் பெற்றுப் பணியாற்றும் திறமையும் தகுதியும் கொண்டவர்களை தாமாக முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்தோம். உறுப்பினர்கள,; குறிப்பிட்ட பொறுப்புகளுக்குத் தாங்கள் எவ்வகையில் தகுதியானவர்களெனக் கருதுகிறார்கள் என்பதனை எழுத்து மூலம் முன்வைக்கும்படி கேட்டு இவ் விருப்பத் தெரிவிப்புப் பத்திரத்தில், அவரவர் கல்விப் பின்னணி, மற்றும் வேலை, பட்டறிவுப் பின்னணி, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக அவர்கள் வழங்கியிருந்த பங்களிப்பு, குறிப்பிட்ட அமைச்சின் ஊடாக முன்னெடுக்க உத்தேசிக்கும் திட்டங்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காக அவர்கள் ஒதுக்கத் தயாராகவுள்ள நேரம் என்ற பல்வேறு விபரங்களை உள்ளடக்கும்படியும் கேட்டிருந்தோம். உற்சாகத்தோடு பலரும் பங்குபற்றி குறிக்கப்பட்ட திகதிக்குள் தமது விபரங்களையும் கருத்துக்களையும் விருப்புக்களையும் அறியத் தந்திருந்தார்கள்.

 

இவர்களிடையேயிருந்து தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள துணைப் பிரதமர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன.


பிரதமர்:

1.திரு விசுவநாதன் ருத்ரகுமாரன்

துணைப் பிரதமர்கள்:

2. பேராசிரியர் செல்வா செல்வநாதன்

நிதி அமைச்சர்

பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன்

அவுஸ்திரேலியாவின் கிரிபித் பல்கலைக்கழகத்தின் பொருளியல் புள்ளிவிபரத்துறையில் பேராசிரியராகக் கடமை புரிகின்றார். இத்துறைகளில் ரோமேனியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் உயர்கல்வி பெற்ற இவர் தமிழ் தேசியப் போராட்டத்தில் நீண்டகால ஈடுபாடு கொண்டவர். அவுஸ்திரேலியாவில் வுசுழுஇ யுகுவுயுஇ நுவுழுஞ உட்பட்ட பல்வேறு நிறுவனங்களில் மூத்த பொறுப்புக்களை ஆற்றிவருகின்றார்.

3. திரு உருத்திராபதி சேகர்

மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணல் அமைச்சர்

உருத்திராபதி சேகர் அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கான புலம்பெயர் கட்டமைப்புக்களைக் கட்டியமைத்த முன்னோடிகளில் ஒருவர். 1985 இல் அயர்லாந்தில் உயர்கல்வி கற்றுக் கொண்டிருந்தவேளை போராட்டச் செயற்பாடுகளுக்காகத் தமது கல்வியைத் துறந்து முழுநேரப்பணியாளராகத் தன்னை இணைத்துக் கொண்டவர்;. தற்போதும் அடுத்த தலைமுறைக்கு தமிழ்மொழி அறிவூட்டும் பணிகளில் ஈடுபட்டு வருபவர். மிக நீண்டகாலம் தேசிய, சமூகப்பணிகளில் செயற்பட்டு வரும் இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக தமிழீழ விடுதலை வென்றடையும் உறுதிப்பாட்டுடன் தன்னை இப் பணியில் இணைத்துள்ளார். தற்போது தகவல்-தொழில்நுட்பத்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

4. கலாநிதி ராம் சிவலிங்கம்

கல்வி, பண்பாடு, உடல்நலத்துறை அமைச்சர்

கலாநிதி ராம் சிவலிங்கம் பொறியியல் துறையில் பேராசிரியராகவும், பீடத்தலைவராகவும் கடமையாற்றியவர். இவர் 40 வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்திலும் கனடாவிலும் பல அமைப்புக்களில் பொறுப்பான பதவிகளை வகித்தவர். ஈழத் தமிழர் அமைப்பு, உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் என்பனவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர்.

அமைச்சரவை உறுப்பினர்கள்:

5. திரு நாகலிங்கம் பாலச்சந்திரன்

உள்ளக விவகார அமைச்சர்

இலங்கையில் அரசசேவையிலும் சமூகசேவையிலும் நீண்ட அனுபவம் பெற்ற பாலச்சந்திரன் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாகத் தமிழீழ விடுதலைப் பேராட்டத்தின் பல்வேறு அம்சங்களில் முக்கிய பங்காளியாகக் கடமையாற்றியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என்பற்றில் தலைமைப் பொறுப்பாற்றியதோடு தாயகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்துக்கும் பிரான்ஸ் அரசியல் தலைவர்களோடு இணைந்து உழைத்துள்ளார்.

6. திரு சாம் சங்கரசிவம்

தகவல்துறை அமைச்சர்

திரு சாம் சங்கரசிவம் அவர்கள் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலும், முகாமைத்துவத் துறையிலும், ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகளின் பல்வேறு பாரிய வர்த்தக நிறுவனங்களின் மூத்த முகாமையாளர் பொறுப்பில் இயங்கியவர். கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தினிடையே உதவி வழங்கும் நிறுவனங்களை உருவாக்கியும் ரொறன்ரோ நகர தமிழர் கூட்டுறவு வீட்டு;த்திட்டம், கால்பந்து விளையாட்டுத்துறையெனப் பல்வேறு முனைகளில் இயங்கியும் வந்தவர்.

7. திரு தணிகாசலம் தயாபரன்

அரசியல் அனைத்துலக விவகார அமைச்சர்

கடந்த 28 வருடங்களாக தயாபரனின் வாழ்கையில் அரசியல் பெரும் பங்கு வகித்துள்ளது. தமிழ் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக சமூகப் பணிகளிலும் ஆசிரியர் ஆகவும் பணி செய்கிறார்.

8. திருமதி பாலாம்பிகை முருகதாஸ்

பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணல் அமைச்சர்

தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளராகவும் தமிழ் ஈழப்பெண்களின் நலன், உரிமை, விடுதலைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுப்பவர். தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்தும் செயற்படுபவர்.

9. திருமதி கற்பனா நாகேந்திரா

பொருண்மிய விவகாரங்கள், சூழல் அபிவிருத்திக்கான அமைச்சர்

கற்பனா நாகேந்திரா நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளைய தலைமுறைத் தலைவர்களில் ஒருவர். ஆஉஆயளவநச பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேண்தகு மேம்பாட்டுத் துறைகளில் உயர் கல்வியினையும் பெற்று வருகிறார். இவர் தற்போது கணக்கியல்துறை பணிப்பளாராகப் பணியாற்றி வருகிறார்.

10. திரு டிலக்சன் மொறிஸ் - இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்றவிசாரணைக்கும் தடுப்புக்குமான அமைச்சர்

வர்த்தகத் துறையில் பட்டம் பெற்ற திரு மொறிஸ் அவர்கள் பிரித்தானியாவின் தேசிய மாணவர் அவையின் தலைசிறந்த விருதுகளைப் பெற்றவர். தமிழரின் இன ஒழிப்புக்கு எதிரான மாணவர் அமைப்பினை உருவாக்கியவர் என்ற வகையிலும் மாணவர் சமூகத்துக்கும் அப்பால் உலகளாவிய ரீதியில் இனஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர் என்ற வகையிலும் இவரது பணிகள் தொடர்கின்றன.

11. திரு இரத்தினா முத்துக்குமாரசாமி

போர்க்கைதிகள், இடம் பெயர்ந்தோர், ஏதிலிகள் விவகார அமைச்சர்

சாந்தன் என அழைக்கப்படும் முத்துக்குமாரசுவாமி இரத்தினா அவர்கள் குடிசார் பொறியியல் துறைப் பட்டதாரியும், பிரித்தானியா கனடா நாடுகளில் 25 ஆண்டுகட்கு மேலாக துறைசார் வேலை அநுபவம் பெற்றவருமாவார். பிரித்தானியாவில் வாழ்ந்த காலத்தில் தமிழ் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட இவர், நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினராக இன்று வேற்று நாடுகளில் தஞ்சம் கோரும் ஈழத் தமிழ் உறவுகளின் தேவைகளைக் கண்டறிந்து செயற்பட்டு வருகிறார்.

துணை அமைச்சர்கள்:

திரு நடராஜா இராஜேந்திரா

துணை நிதி அமைச்சர்

தொழில்நுட்பத் துறையில் பயிற்சிபெற்ற திரு இராஜேந்திரா அவர்கள் ஜேர்மனிய நாட்டுத் தமிழ்ச் சமூகத்தினிடையே மொழிபெயர்ப்பாளராகவும் சமூகப்பணியாளராகவும் இயங்கிவருகிறார். கொம்பேர்க் நகரக் கல்லூரி நிறுவனத்தின் கணக்காளராகவும், அந்நகரத் தேர்தல் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திருமதி சுபா சுந்தரலிங்கம்

மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணல் துணை அமைச்சர்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பட்டதாரியாகிய சுபா சுந்தரலிங்கம் அவர்கள் தற்போது மருத்துவ ஆய்வுக்கூட நோயாய்வுக்குழுவின் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவியாக 1980களில் இருந்த போது விடுதலை அரசியல் உணர்வினுள் உள்வாங்கப்பட்ட இவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த காலத்தில் இருந்து விடுதலைக்கான தனது பங்களிப்பை ஆற்றி வருபவர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வின் ஒருங்கிணைப்புக் குழுவிலும் பின்னர் அரசியலமைப்புக் குழுவிலும் பணிபுரிந்துள்ளார்.

திரு இராஜரட்ணம் ஜெயச்சந்திரன்

கல்வி, பண்பாடு, உடல்நலத்துறை துணை அமைச்சர்

இலங்கைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான திரு ஜெயச்சந்திரன் அவர்கள் இலங்கைச் சட்டக்கல்லூரி முன்னாள் மாணவரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தயாரிப்பாளரும், அறிவிப்பாளரும் ஆவார். யேர்மனியின் தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் வடமாநிலச் செயற்பாட்டாளராகவும் அதில் 20 வருட பணியாளராகவும் இருந்து வருகிறார்.

திரு சுமுகன் சோதிநாதன்

உள்ளக விவகார துணை அமைச்சர்

இளவயதில் சிங்கள அட்டூழியத்தில் பட்ட அனுபவமும் போராட்டத்தின் மத்தியில் வளர்ந்த அனுபவமும் சுமுகனின் மனதில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய ஈடுபாட்டினைப் பெருக்கியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி பெற்ற இவர் இப்போது மோட்டார் வாகனத்துறையில் தனது வரத்;தகத்தினை நிறுவியுள்ளார். அல்பேற்றா மாகாணத்தில் பல மட்டங்களில் அரசியல் வேலையில் ஈடுபட்டுள்ள இவர், தமிழர்களிடம் எஞ்சியுள்ள ஒரே வழி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனவும் அதை சரியான திசையில் வழி நடத்துவதற்குத் திறந்த மனமும், ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர்கள் தேவையெனவும் நம்புகின்றார்.

திரு சிவகுருநாதன் சுதர்சன்

தகவல்துறை துணை அமைச்சர்

ஊடகத் துறையின் பல்வேறு அம்சங்களான பத்திரிகை வானொலி தொலைக்காட்சி உட்பட நாடக திரைத் துறையிலும் 17 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சுதன்ராஜ் அவர்கள் மூத்த தமிழ் ஊடகவியலாளர்களால் ஊடகப்பண்பாடு உட்படத் தொலைக்காட்சித் தயாரிப்பிலும் பயிற்றப்பட்டவர். தமிழ்ச் சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு தொடர்ச்சியாக 275 வாரங்கட்கு நிகழ்ந்தேறிய முதல் தமிழ்த் தொலைக்காட்சித் தொடரையும் தற்போது முதன்முதலாக தமிழ்; இணையத் தொலைக்காட்சியாக வளரி தொலைக்காட்சியையும் உருவாக்கிய சாதனை சுதன்ராஜ் அவர்கட்குரியது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை ஊடகப்பொறுப்புக்களை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

திரு கனகேந்திரம் மாணிக்கவாசகர்

அரசியல் அனைத்துலக விவகார துணைஅமைச்சர்

தமிழீழ விடுதலைக்கு ஜனநாயகவழி அரசியல் தீர்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பதனால் அதில் தான் இணைந்து கொள்ள விரும்பியதாக திரு மாணிக்கவாசகர் கூறுகின்றார். இம் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோல்வி காண்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தம்போன்றோர் அவ்வாறு தோல்விகாண எவ்வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் இவர் நம்புகின்றார். குடிசார் பொறியியலாளரான திரு மாணிக்கவாசகர் அவர்கள் அரசியலிலும், சட்டத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்நோக்கி நகர்வதற்கான வாதங்களை எடுத்துரைக்கவும், அவற்றுக்கு உயிர்ப்பூட்டி ஏற்றுக்கொள்ள வைப்பதற்குமான தனது தகமைகள் மூலம் அமைச்சரவைக்குப் பங்களிப்பார்.

திருமதி ரஜனி சின்னத்தம்பி

பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணல் துணை அமைச்சர்

இலங்கையில் தமிழ் மாணவர்களுக்கெதிராக உயர்கல்வித் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட தரப் படுத்தல் முறையை எதிர்த்த காலத்தில் அரசியல் முனைப்புப்பெற்ற திருமதி ரஜனிதேவி அவர்கள் மனிதாபிமானப் பணிகளில் ஆர்வத்தோடு இயங்கி வந்துள்ளார். ஜெனீவா நகர பெண்கள் அமைப்பு மூத்தோர் இல்லம் போன்ற பொது நிறுவனங்களில் இணைந்ததால் பெற்ற அநுபவங்கள், கற்றுக் கொண்ட விடயங்கள் இவரைப் பெண்கள் சிறுவர் முதியோர் நலன் பேணும் துறையில் அதிக அக்கறை கொள்ள வைத்துள்ளது.

கலாநிதி தவேந்திர ராஜா

பொருண்மிய விவகாரங்கள், சூழல் அபிவிருத்திக்கான துணை அமைச்சர்

பௌதீகத்துறையில் பட்டம் பெற்ற கலாநிதி தவேந்திர ராஜா அவர்கள் அத்துறையில் விரிவுரையாளராகவும் மூத்த ஆய்வாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்காலச் செயற்ப்பாடுகளின் போது இயற்கை வளங்கள், அபிவிருத்தி தொடர்பான செயற்குழுவின் ஒருங்குகூட்டுனராகச் செயற்பட்டவர்.

திருமதி தாட்சாயினி தவராஜசிங்கம்

இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்றவிசாரணைக்;கும் தடுப்புக்குமான துணை அமைச்சர்

அரசியல் துறையில் சர்வதேச அரசியல் உறவுகள் தலைப்பில் இத்தாலியின் பலர்மோ பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுள்ள தாட்சாயினி அவர்கள் அந்நாட்டுத் தமிழ்ச் சமூகத்தினிடையே பதினைந்து ஆண்டுகளாக அரசியல், ஊடகத் தொடர்புத் துறைகளுக்குப் பொறுப்பாளராக இயங்கி வருகிறார்.

திரு டொஸ் அலக்ஸ்

போர்க்கைதிகள்,  இடம் பெயர்ந்தோர, ஏதிலிகள் விவகார அமைச்சர்

அமெரிக்கநாட்டு கடற்படையில் பணியாற்றி ஊனமுற்ற முன்னைநாள் தமிழ் அமெரிக்க படைவீரனான அலெக்கஸ் டொஸ் அவர்கள் அரசியல் துறைளில் பட்டம் பெற்றுள்ளதோடு அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலும், மாதிரிப் பாராளுமன்றத்திலும் பயிற்சி அனுபவம் பெற்றவர். 2005 ஆம் ஆண்டு அமெரிக்காத் தமிழ் சமூகத்தினூடாக அரசியல் செயற்பாட்டுக்கு அறிமுகமான இவர் பின்னர் ருளுவுPயுஊ எனப்படும் தமிழ் அமைப்பின் ஆளுநர் அவைக்குத் தெரிவு செய்யப்பட்டார். ஊனமுற்ற முன்னைநாள் படைவீரன் என்ற வகையில் இவரது முயற்சிகளின் முக்கிய குறிக்கோளாக இருக்கப்போவது சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ்ப் போர்க் கைதிகளின் நிலையை உலகறளியச் செய்வதும், அவர்களது விடுதலைக்காகப் போராடுவதுமாகும்.

 

 

இவ் அமைச்சரவை உறுப்பினர்கள் ஒன்றுகூடி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து எடுக்கும் முடிவுகளை மக்களுக்கு உடனுக்குடன் அறியத் தருவோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக்குரிய காலம் மூன்று வருடங்களுக்கு மேற்படாததாக இருக்கும். இக் காலப்பகுதியில் எமது செயற்பாடுகளின் மூலம் சென்றடைய வேண்டிய இலக்குகளாகப் பின்வருவனவற்றைக் குறித்துக் கொள்ள விரும்புகிறோம்.

 

அனைத்துலக அரங்கில் சிறீலங்கா அரசை எதிர் கொள்ளக்கூடிய சமமான ஒரு வலுமையமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவெடுப்பதற்கான அடிப்படைகளை நாம் நிலைநிறுத்துவோம்.


தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் புவிசார் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தவிர்க்கமுடியாததும் திடநிலை தருவதுமான ஒரு அங்கமாக நிலைபெறுவதற்கான சூழலை உருவாக்க முயலுவோம்.

 

ஈழத் தமிழ் மக்கள்மேல் இனவழிப்பு போர்க்குற்றங்களைப் புரிந்தவர்களை அதை;துலக அரங்கிலோ அல்லது நாடுகள் சார்ந்தோ அமைக்கப்படும் விசாரணை மன்றங்களில் நிறுத்துவதற்கான நிலைமைகள் உருவாக்குவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கணிசமான பங்களிப்பை வழங்கும் வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

தமிழர்களது பாரம்பரிய நிரப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும், தமிழர்களை இனக்கபளீகரம் செய்ய முனையும் சிங்கள அரசின் முயற்சிகளை முறியடிப்பதில் முக்கியமான பங்கினை ஆற்றியிருப்போம்.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கைது செய்யப்பட்ட போராளிகள் விடுவிக்கப்பட்டும் இடம் பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட்டும் தமது வாழ்க்கையை முன்னேற்றகரமாகக் கொண்டு நடாத்துவதற்கு எம்மாலான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருவோம்.

 

இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள நமது மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குச் சுதந்திரத் தமிழீழ அரசினை உருவாக்குவதனைத் தவிர வேறுவழியில்லை என்ற கருத்துக்குக் கூடுதலான அனைத்துலக ஆதரவினை நாம் தேடுவதில் வெற்றியடைவோம். சிறீலங்கா அரசின் இனவாதப் போக்கும் தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்காது – சமத்துவமாக நடாத்தாது சிங்கள மேலாதிக்கத்தினை நிலைநிறுத்தும் முயற்சிகளும் எமது தனியரசு நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறோம்

 

தமிழீழத் தனியரசு அமைவது பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகளின் நன்மைகளோடும் ஒத்துப்போகக்கூடியது என்பதனையும் தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் துணைபுரியக்கூடியது என்பதனையும் கருத்துநிiயில் உறுதியாக முன்வைத்து எமது நிலைப்பாட்டுக்குக் கூடுதலான ஆதரவினை வென்றெடுக்கும் வகையில் முன்னேறியிருப்போம்.

 

இவற்றையெல்லாம் நாம் மேற்கொள்வதென்பது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குத் தமிழ் மக்கள் கொடுக்கும் ஆதரவிலும் பங்களிப்பிலுமே பெரிதும் தங்கியுள்ளது. தற்போது பிறந்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தையை உலகத் தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்து நன்றாக வளர்த்தெடுக்கும் போது இக் குழந்தை தான் பிறந்ததன் நோக்கத்தை – அதாவது ஈழத் தமிழ் மக்களுக்கானதும் ஏன் உலகத் தமிழ் மக்களுக்கானதுமான முதலாவது தமிழர் அரசை – சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அடைவதில் வெற்றிகாணும் என நாம் உறுதியாக நம்புகிறோம். இம்முயற்சியில் அனைவருமே ஒன்றிணைந்து ஒருமனதாகச் செயற்படுவோமென்ற உறுதியோடு விடைபெறுகிறேன்.