தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

லூகேமியா எனும் நோயால் தவித்து வரும் சிறுமி

லூகேமியாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற போதிய நிதி வசதி இல்லாததால் சென்னையைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியின் தந்தை தவிப்புக்குள்ளாகியுள்ளார்.


சென்னை ராமாபுரம், பாலாம்பிகாசாலை, முதலாவது மெயின்ரோட்டில் வசித்து வருபவர் பி. கருப்பையா. டிரைவராக பணியாற்றி வரும் இவரது இரண்டரை வயது மகள் சத்யா.


சத்யாவுக்கு Acute Lymphoblastic Leukemia (pre-B cell type) என்ற லூகேமியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி அனுமதிக்கப்பட்டாள். கடந்த ஒரு வருடமாக கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள். தற்போது நிலைமை தேறி வருகிறது.


இருப்பினும் மேலும் 2 ஆண்டுகளுக்கு சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கான சிகிச்சை செலவு ரூ. 3 லட்சமாகும் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கருப்பையா டிரைவராக இருப்பதால் இந்த பெரிய தொகையை தாங்க முடியாத நிலையில் உள்ளார்.


மாதந்தோறும் மருத்துவமனைக்குச் சென்று 2 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்ப வேண்டியுள்ளது. அறை வாடகை மற்றும் படுக்கைக்கான கட்டணத்தை மட்டுமே அவர்களால் செலுத்த முடிகிறது. இதுதவிர மருத்துவருக்கான கட்டணம், மருந்துகளுக்கான செலவும் உள்ளது.


இப்படி செலவுகள் பெரிதாக இருப்பதால் செலுத்த முடியாமல் தவிக்கிறார் கருப்பையா. அவருக்கு உதவ நினைப்போர் கீழ்க்கண்ட தகவல்களின் மூலம் அதைச் செய்யலாம்.


பெயர்: பி.கருப்பையா (B.Karuppiah)
தொலைபேசி எண்: +91 94445 39929
முகவரி: 1/5ஏ, முதலாவது மெயின் ரோடு, பாலாம்பிகா சாலை, ராமாபுரம், சென்னை - 600089 (A 1/5A– 1st Main Road, Balambiga Road, Ramapuram, Chennai – 600089, Tamil Nadu)


வங்கிக் கணக்கு விவரம்:


வங்கி பெயர் - கரூர் வைஸ்யா பாங்க்
கிளை பெயர் - தி.நகர் கிளை, சென்னை
கணக்கு எண் - 123915531808