தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

12000 வீரர்களோடு பயிற்சியில் பிரபாகரன் உள்ளார் - நெடியவன் தகவல்

கடந்த வருடம், இலங்கையில் நடந்த இறு திக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் பிரபாகரன் தப்பி விட்டதாக வைகோ மற்றும் நெடுமாறன் தரப்பினர் இந்தியாவிலும் நெடியவன் போன்றோர் உலக அளவிலும்  கூறி வந்தனர்.

prabhakaran with his  wife


prabhakaran_marriage_photo

 


prabhakaran_family_photo

prabhakaran_with_children


prabhakaran_with_children1

(மேலே உள்ளவைகள் பழைய படங்கள் )

 

 


இந்த நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு பிரிவினர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறி வெளிநாடுகளில் பிரசாரம் செய்து வருகின்றனர். இலங்கையில் விடுதலைப்புலிகள் போரில் தோற்று விட்டாலும் வெளிநாடுகளில் செயல்பட்டு வந்த அந்த அமைப்பு இன்னும் அப்படியே உள்ளது. ஆனால் அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு சில பிரிவுகளாக செயல் படுகின்றனர்.

 


இதில் ஒரு பிரிவு நெடியவன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இவர் நார்வே நாட்டில் இருந்து அமைப்பை நடத்தி வருகிறார்.

 



இந்த அமைப்பினர் இப்போது விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விடுதலைப்புலிகள் தீவிரமாக செயல்பட்டு வந்த போது வெளிநாடுகளில் வசித்து வந்த இலங்கை தமிழர்கள் தானாக முன் வந்து ஏராமாளமாக நிதி கொடுத்தார்கள்.




விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு நிதி திரட்டுவது நின்று போனது. இப்போது மீண்டும் நிதி திரட்டும் பணி தொடங்கி உள்ளது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என கூறி இலங்கை தமிழரிடம் நிதி கேட்கின்றனர்.

 



நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நெடியவன் பேசும் போது "இறுதி கட்ட போரில் பிரபாகரன் 2 ஆயிரம் வீரர்களுடன் படகில் தப்பி விட்டார். தற்போது அவர் வெளிநாட்டில் ரகசிய இடத்தில் 12 ஆயிரம் விடு தலைப்புலிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்" என்று கூறினார்.