தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பாலாற்றில் தமிழகம் வஞ்சிக்கப்படுவது இது முதல் முறையல்ல

தமிழகத்தின் பல மாவட்டங் களை பாலைவனமாக்கும் பணியில் ஆந்திரா மட்டுமல்ல கர்நாடகாவும் ஈடுபட்டுள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை துவக்கிவிட்டது. ஏற்கனவே கர்நாடக மாநிலம், இந்த ஆற்றின் குறுக்கே பல அணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சித்துள்ளது. அத்தோடு பாலாற்றில் நடக்கும் மணல் கொள்ளை, கலக்கும் தோல் கழிவுகளால் கொஞ்சமாக ஓடும் பாலாறு, முற்றிலும் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் நந்திதுர்க்கம் அருகே கன்னங்குடியில் பாலாறு உற்பத்தியாகி, அங்கிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள பேத்தமங்கலம், ஆந்திர மாநிலம் குப்பம் வழியாக தமிழகத்துக்குள் பாலாறு வருகிறது.காவிரியை போன்று வற்றாத ஜீவநதி அல்ல பாலாறு. வடகிழக்கு பருவமழையின் பொழுது பெய்யும் பருவ மழையின் போது மட்டும் பாலாற்றின் வெள்ள பெருக்கு ஏற்படும். பாலாற்று படுகையானது மொத்தம் 18 ஆயிரத்து 300 ச.கி.மீ., பரப்பை உள்ளடக்கியது.தமிழகத்தில் மட்டும் பாலாற்று படுகையின் பரப்பளவு 11 ஆயிரம் ச.கி.மீ., காவிரியை போல் பாலாறுஅகன்று காணப்படுகிறது. தமிழக பாலாற்று படுகை பகுதி நீர் ஆதாரத்தின் மூலம் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னையின் ஒரு பகுதி குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கான தண்ணீரை பூர்த்தி செய்து வருகிறது.

பாலாற்றில் வெட்டப்படும் ஆற்று ஊற்றுக்கால் வாயின் மூலம் பல கிராம பகுதிகளின் தண்ணீர் தேவை கடந்த காலங்களில் பூர்த்தி செய்யப் பட்டது. ஆற்று ஊற்றுக்களில் குறைந்தபட்சம் ஐந்து முதல் எட்டு மாதம் வரை தண்ணீர் தேங்கி விவசாயத்துக்கு பயன் படுத்தப்பட்டு வந்தது. தற்போது, ஊற்றுக்கால் வாய்கள் அனைத்தும் வறண்ட நிலையில் உள்ளது.வட கிழக்கு பருவமழை பெய்யும் போது எல்லாம் 20 ஆண்டுக்கு முன் வரை பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு வந்தது. 20 ஆண்டுகளாக பாலாற்றில் வெள்ள பெருக்கு என்பது அரிதாகிவிட்டது. இதற்கு காரணம், பாலாறு உற்பத்தியாகி பாய்ந்தோடி வரும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு இடையில் கட்டப்பட்டுள்ள சிறு, சிறு அணைகள் தான்.கர்நாடக மாநில அரசு ஆந்திரா வரை பாலாற்றின் குறுக்கே 12 செக் டேம்களை கட்டியுள்ளது. அதே போல ஆந்திரா பகுதிகளில் அம் மாநில அரசு 12 செக் டேம்களை கட்டியுள்ளது.

இந்த செக்டேம்கள் அனைத்தும் நிரம்பினால் மட்டுமே பாலாற் றின் தண்ணீர் பெருக்கெடுக்கும் நிலை உள்ளது.இந்நிலையில், ஆந்திர மாநில அரசு குப்பம் அடுத்த கணேசபுரத்தில் தற்போது, தடுப்பணை கட்டும் பூர்வாங்க பணியில் தீவிரமாக உள்ளது.பாலாற்றின் நீர் ஆதாரமே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், பாலாறு படுகையில் நடக்கும் மணல் கொள்ளை காரணமாக பாலாறு படுகை பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதள, பாதாளத்துக்கு போய் விட்டது.மணல் கொள்ளை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காததால், தமிழக பாலாற்று பகுதி பல இடங்களில் பள்ளத் தாக்காக மாறியுள்ளது.நீர் ஆதாரம், நிலத்தடி நீர் மட்டம் சரிவு, இத்துடன் பாலாறு படுகை பகுதியில் உள்ள 600 சிறிய, பெரிய தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ராசாயன கழிவுகளால் பாலாறு படுகை பகுதி முழுவதும் பாழ்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் இப்படுகை பகுதியில் இருந்த நீர் ஊற்றுக்கால்வாய் இருந்த பூண்டி, சென்னை சமுத்திரம், குடிமல்லூர், வன்னிமேடு ஆகிய பகுதியில் உள்ள கால்வாய்களில் தோல் கழிவுகள் சங்கமிப்பதால் விவசாய நிலம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.பாலாற்று படுகையில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 60 முதல் 65 மில்லியன் லிட்டர் வரை தண்ணீரை உபயோகப் படுத்துவதாகவும், அதே அளவு தண்ணீர் தொழிற்சாலை கழிவுகளாக வெளியேற்றப்பட்டு வருகிறது.ஒரு ஆண்டுக்கு தோல் தொழிற்சாலைகளில் மூலம் 13.5 மில்லியன் கன மீட்டர் கழிவு வெளியேற்றப்படுகிறது. இதனால், பாலாற்று நீரும் மாசு அடைந்து வருகிறது.பாலாற்றின் குறுக்கே கர்நாடகா, ஆந்திரா அரசுகள் கட்டியுள்ள அடுத்தடுத்த தடுப்பணைகள், மணல் கொள்ளை, தோல் கழிவு கலப்பு உள்ளிட்ட காரணங்களால் வரும் காலங்களில் பாலாறு பாய்ந்தோடி வரும் வட தமிழகத்தில் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைக்காமல் பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

நிலத்தடி மணலும் பாலாற்றில் அதிகம் :பாலாற்றில் மட்டும் தான் 10 அடியிலிருந்து 100 அடி ஆழம் வரை மண் உள்ளது. பாலாற்றில் வெள்ளம் வரும் போதெல்லாம் மண் உற்பத்தி அதிகரித்து விடும். மேலும் மணல் பரப்பில் பூமிக்கடியில் பாலாற்று ஊற்று நீர் கிடைத்து வருகிறது. பாலாற்றில் ஒரு நாள் வெள்ளம் வந்தால், ஒரு ஆண்டுக்கு பாலாறு பாயும் மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை இருக்காது.பாலாற்றில் பாலைவனம் போல் இருந்த மணல் படுகையும் 10 ஆண்டுகளில் படிப்படியாக சுரண்டப்பட்டு, பள்ளத்தாக்காக மாறியதோடு, பல இடங்களில் பாறை பகுதி வெளியே தெரிகின்றன.

விவசாயம் பெரும் பாதிப்பு :பாலாற்றில் பல்வேறு காரணத்தினால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால், பாலாறு பகுதியில், 20 ஆண்டுகளில் நெல் சாகுபடி 50 சதவீதம் குறைந்துள்ளது. தோல் கழிவுகளால் நிலம் மாசுபட்டதால், விதைப்பு திறன் குறைந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 40 கிலோ விதை பயன்படுத்தும் நிலை மாறி 100 கிலோ விதை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.பல கிராமங்களில் நீர் துர்நாற்றம் வீசுவதோடு, தண்ணீர் நிறம் மாறி கழிவு நீர் போல் நிலத்தடி நீர் மாறியுள்ளது. மாசுப்பட்ட குடிநீரை குடிக்கும் மக்களுக்கு தோல் சம்பந்தமான நோய், காலரா, பேதி, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கி வருகின்றன.

பாலாற்றில் நீர் பங்கீடு :பாலாற்று நீர் கர்நாடகாவுக்கு 26 சதவீதம், ஆந்திராவுக்கு 14 சதவீதம், தமிழகத்துக்கு 60 சதவீதம் வழங்க வேண்டும். �ஆண்டு தோறும் கிடைக்கும் தண்ணீரை மேற்கண்ட முறையில் பங்கீடு செய்து கொள்ள வேண்டும்� என 1903ம் ஆண்டு சென்னை ராஜதானி கவர்னர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை கர்நாடகா எப்போதும் பின்பற்றவில்லை. தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளும் இதை கண்டு கொள்ளவில்லை. இதனால், பாலாறு வறண்டு போனது. மூன்றாண்டுகளாக கர்நாடக அரசு பேத்தமங்கலம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற 11 நதிகளில் பாலாறும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் 1892ல் உருவான ஒப்பந்தப்படி �ஏ� அட்டவணையில் பாலாறு இடம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தப்படி தமிழக அரசின் அனுமதி பெறாமல் பாலாற்றின் குறுக்கே புதிய அணை, புதிய தடுப்பணைகளை கர்நாடகா, ஆந்திரா அரசுகள் கட்டக் கூடாது.நதிநீர் ஒப்பந்தங்களை மீறி கடந்த காலங்களில் இருந்தே கர்நாடகா, ஆந்திரா அரசு, தமிழகத்திற்கு பாலாற்று தண்ணீர் வழங்குவதில் வஞ்சித்து வரும் நிலையில், கடந்த காலங்களில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் பெருக்கெடுத்து தமிழகத்திற்கு வந்த பாலாற்றின் நீர் மூலம் வடதமிழகத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் செழிப்பாக இருந்தது.தற்போது, ஆந்திரா அரசு குப்பம் கணேசபுரத்தில் தடுப்பணை கட்டினால், தமிழக பாலாற் றில் வரும் தண்ணீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், சென்னை புறநகர் பகுதியில் பாதிப்படையும். இதன் மூலம் 95 லட்சம் ஏக்கர் பாசன வசதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.