இன படுகொலை - அவசர வேண்டு கோள்
(மின் அஞ்சலில் நமக்கு வந்தது)
(மின் அஞ்சலில் நமக்கு வந்தது)
இந்திய எழுத்தாளரும், மனித உரிமைச்செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் அவர்கள் ஏப்ரல் 2009இலேயே சரியாக இனங்கண்டு கூறியதுபோல் இலங்கையில் நடந்தது "எல்லாத் தமிழர்களுக்கும் எதிரான இனவெறிப்போர்" ஆகும்.அப்போது இடம்பெற்ற தமிழின அழிப்பு,போர்க்குற்றங்கள்,மனிதத்ற்கு எதிரான குற்றங்கள் எல்லாம் ஐ.நா. அமைப்புகளாலும் ஆதிக்கசக்திகளாலும் மூடிமறைக்கப்பட்டு,புறக்கணிக்கப்படுகின்றன. இத்தகைய நிலையில் மெல்லிய ஓர் ஒளிக்கீற்றாகத் தென்படுவதுதான் ஐ.நா.செயலாளர் நியமித்துள்ள மூவர் கொண்ட நிபுணர்குழு.அதன் தலைவரான Marzuki தருச்மன் [இந்தோனேசியாவின் சட்டவாளர்நாயகம்] முன்பு இலங்கைக்கான International இண்டேபெண்டேன்ட் Group of Eminent Persons [ IIGEP ] உறுப்பினராக இருந்தவர்.இலங்கையில் நீதிநியாயம் இல்லை, மனிதஉரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்பதையெல்லாம் அப்போதே தெரிந்துகொண்டவர்.இப்போது அக்குழுவினர் நமது சாட்சியங்களை எதிர்வரும் டிசெம்பர் 15ந்திகதிக்கு முன்பாக அனுப்பும்படி அறிவித்திருக்கிறார்கள்.
இவர்கள் ஆலோசனைகூறும் குழுவினரேயொழிய விசாரணைநடத்தும் குழுவினர் அல்ல. எனவே இப்போது நாம் செய்யக்கூடியது இவர்களிடம் சுதந்திரமான சர்வதேசவிசாரணைக்குழுவை ஐ.நா. அமைத்து பூரணமானவிசாரணையை மேற்கொள்ளவேண்டுமென வற்புறுத்தவேண்டும்.அதற்கான ஆலோசனையை இவர்கள் வழங்கவேண்டுமெனவற்புறுத்தவேண்டும்.அப்படிச்செய்யத் தூண்டுவதற்கு தமிழர்களாகிய நாம் பெரும்பெரும் எண்ணிக்கையான மின்னஞ்சல்களை அனுப்பவேண்டும்.சர்வதேசவிசாரணைக்கானவற்புறுத்தல்கள் பலபலஆயிரங்களாக அமையின் அதற்கான ஆலோசனைவழங்கும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படும்.உலகில் எட்டுக்கோடி தமிழர்கள் இருப்பதாகக்கூறப்படுகிறது.அதில் சிறுபகுதியினர் செயற்பட்டாலேயே அது நிறைவேறிவிடும்.
இந்தப் பெருமுயற்சியில் இளைஞர்கள்,முதியவர்கள் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும். மின்னஞ்சல் வசதியுள்ள புலம்பெயர்தமிழர்கள்,மேற்குநாடுகளில் வாழ்வோர்,தமிழ்நாடு, மலேசியா,சிங்கப்பூர்,தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்வோர் எல்லாரும் பங்குகொள்ளலாம்.எமது துன்பங்களைத்தெரிந்த தமிழரல்லாத வேற்றினமக்களும் இந்த வேண்டுகோளை முன்வைக்கலாம்.ஏனெனில் பொருத்தமான விசாரணை மேற்கொள்வதுஐ.நா.வின் அடிப்படையான ஆரம்பக்கடமை; அதை எவரும் வற்புறுத்தலாம்.மேலும் நமது கருத்துகளை ஆங்கிலத்தில்மட்டுமல்லாது பிரெஞ்சு,யேர்மன் போன்ற முக்கிய ஐரோப்பிய மொழிகளில் அனுப்பினால் அவர்கள் அதனை மொழிபெயர்த்து அறிந்து கொள்வார்கள்;அது அவர்களின் கடமை.
உங்களுடைய கருத்துகளை பக்கம்பக்கமாக எழுதவேண்டும் என்பதல்ல.சில வரிகளில் எழுதியும் அனுப்பலாம்.மொழியறிவு குறைவானவர்களுக்கு கூடிய அறிவுள்ளோர் உதவி செய்யலாம். மாதிரிக் கடிதங்களைத் தயாரித்துக்கொடுக்கலாம்.
நடைபெற்றபோரின்போது தமிழ்மக்கள் பாரியதுன்பங்களையும்,அழிவுகளையும் அனுபவித்தார்கள். அவற்றை விசாரித்து தமிழ்மக்களுக்கு தேவையான நீதியை வழங்க சுதந்திரமான சர்வதேசவிசாரணைக்குழு அவசியம்.இலங்கைஅரசு நியமிக்கும் எந்தக்குழுவும் வழமைபோல் காலத்தை இழுத்தடிக்கும் கண்துடைப்பு வேலையாகவே அமையும். எனவே நீதிவழங்க பக்கச்சார்பற்ற சர்வதேசவிசாரணை அவசியம் என்பதை எல்லோரும் வற்புறுத்தவேண்டும்; அது மிகமுக்கியமானது.
சம்பந்தப்பட்ட சாட்சியமளிப்பதற்கான அறிவித்தலின் ஆங்கில-தமிழ் வடிவத்தை இணைப்பு[Link] 1யும்,அவர்களின் உத்தியோகபூர்வஅறிவிப்பை இணைப்பு 2யும் 'கிளிக்' செய்து பார்க்கலாம்.அவற்றிற்குக்கீழே 'தமிழ்நெற்' இணையத்தளத்திலும்,பிற இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திக்கட்டுரைகளுக்கான இணைப்புகள் தரப்-பட்டுள்ளன. அவற்றைக் 'கிளிக்' செய்து நீங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல்களுக்கான கருத்துகளையும்,மேற்கோள்வாசகங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.மனித உரிமைகள்காப்பகம் [ HRW ], சர்வதேசமன்னிப்புச்சபை [ AI ], சர்வதேச நெருக்கடிக்கான குழு[ ICG ] என்பன பலஅறிக்கைகள் மூலம் சிறப்பான,தெளிவான கருத்துகளை முன்வைத்துள்ளன;அவற்றைப் படித்து நாம் பயன்படுத்தலாம்.
இந்தமின்னஞ்சலின் பிரதிகளை உங்கள் உறவினர்கள்,நண்பர்கள்,அறிமுகமானவர்கள், வேற்றினத்தவர்கள் என எல்லோருக்கும் அனுப்புங்கள்.வேறுநாடுகளில்வாழ்பவர்களுக்கும்அனுப்புங்கள்.நமக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சிறியவாய்ப்பை எல்லோரும் தவறாது பயன்படுத்தும்படி பார்த்துக்கொள்ளுங்கள்! நமது ஈழதேசவிடுதலைக்காக தமது இனிய உயிர்களை ஈகம்செய்த மாவீரச்செல்வங்களை நினைவுகூரும் இந்தமாதத்தில் அவர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியின் ஓர்அம்சமாக இந்தப்பணியை மேற்கொள்வோம். அதற்காக எல்லோரையும் தூண்டுங்கள்! மிக்கநன்றிகள்; வணக்கங்கள்.
Chronology:
04.08.10 The Elders' Statement: Sri Lanka, truely terrifying
24.05.09 Marie Colvin:Tigers begged me to broker surrender
01.04.09 Arundhati Roy: It is a racist war on all Tamils
Photos showing the tragic plight of Tamil civilians
12.05.09 SLA attacks hospital, 47 massacred
15.04.09 HRW:Sri Lanka:Trapped and under fire
Comments