தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

"ராஜா தலித் கதிரவன் " முதல்வரின் பேச்சு , ஒட்டு மொத்த தலித் இனத்தை அசிங்கம் செய்ய முயலும் முயற்சி ?


இந்தியாவின் மிகபெரிய ஊழல் என்று சொல்லப்பட்ட , ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடுகளினால் அரசிற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஒரு சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள் , என்ற குற்றசாட்டை உச்ச நீதிமன்றம் இப்போது விசாரித்து வருகிறது.

 


அரசு அலுவலகங்களில் , சாதாரண நூறு ரூபாய் பயணபடிக்கே, ஐந்தாறு முறை அலசப்பட்டு , மூன்று வகையான சீல் வைக்கப்பட்டு பின்னர்தான் ஒப்புதல் அளிக்கப்படும் நிலையில், மிகபெரிய அரசின் இழப்பை , எதுவும் எனக்கு தெரியாது என்று மத்திய அமைச்சர் ராஜா இது நாள் வரை சொல்லி வந்தார்.

http://www.ndtv.com/news/images/story_page/Karunanidhirajanew.jpg


எதிர்கட்சிகளின் போராட்ட போக்கால், சூழ் நிலை கடுமையாக போவதை உணர்ந்த ,  மற்றும் காங்கிரஸ் கூட்டணி இனி மேலும் ராஜாவை வைத்திருந்தால் அதுவே இந்த அரசின் வீழ்ச்சிக்கு பெறும்  காரணம் ஆகும் என்ற உண்மையை உணர்ந்தும் , ராஜாவை ராஜினாமா செய்ய வைத்துள்ளது.



ஊழல் குற்றம் சாட்டப்பட்ட, கல்மாடி மற்றும் அசோக் சவானை ராஜினாமா செய்ய வைத்து , ராஜாவிற்கு நேரடியாக நெருக்கடி கொடுத்தது காங்கிரஸ் .

http://www.timescontent.com/tss/photos/preview/194939/Suresh%20Kalmadi.jpg


ஆனால் , அப்போதும் வெட்கம் இல்லாமல், பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்று முதல்வரே ராஜாவிற்கு ஆதரவாக அறிக்கை விடுத்தார். ராஜாவும் பதவியை ராஜினா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என்றுதான் சொன்னார்.



ஒட்டு  மொத்த நாடாளுமன்ற அலுவல் பணிகள் ராஜாவின், ஊழல் குற்றசாட்டின்  பொருட்டே இப்போது  நிலை குலைந்து உள்ளது.

http://photo.outlookindia.com/images/gallery/20100331/ashok_chavan_illus_20100412.jpg

இந்த சூழலில் , ராஜாவின் ராஜினாமா, கூட்டணி கட்சி முடிவெடுக்க வேண்டியது என்று சொன்ன காங்கிரஸ் கட்சி பின்னர் அவர்  ராஜினாமா  செய்ய தேவையில்லை, என்று கூட்டணி தர்ம ? வசனத்தையும் பேசியது .


இந்த மாபெரும் ஊழலில் காங்கிரஸ்  கட்சிக்கும் தொடர்பு உள்ளது என்று  நிதின் கத்காரி நேற்று நடந்த டெல்லி பா ஜ க மாநாட்டில் பேசினார்.


ஒட்டு மொத்த எதிர்கட்சிகள் , காங்கிரஸ் கட்சிக்கும் இந்த ஊழலில் தொடர்பு உள்ளது என்ற சொல்ல ஆரம்பித்த சூழலிலும் , இன்று இந்த வலக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள,  உச்ச நீதிமன்றம் மேலும் சாட்டையடியாக ஏதாவது சொல்ல போய், அதுவும் அரசுக்கு நெருக்கடியாகிவிடோமோ என்ற சூழலில்  மத்திய அமைச்சர் ராஜா ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்.



திரைக்கு முன்னரும் பின்னரும் இவ்வளவு வேலைகள் நடைபெற்ற நிலையில், பதவியை ராஜினாமா  செய்த ராஜா வை  ,  தமது கட்சியினரை சமாதனப்படுத்த  முதல்வர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்,  ஆனால்,



"தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான ராசா, தி.மு.க.வுக்கும், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவர் ஏற்றுக்கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமை உணர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து, தலித் இனத்தின் கதிரவனாக விளங்குபவர். 


அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று திட்டமிட்ட முயற்சி பல நாள்களாக நடைபெற்று வந்தது. ஜனநாயகக் கூடங்களில் சந்தைக் கடை இரைச்சல் மேலிட்டது.  நாட்டு மக்களுடைய பிரச்னைகளை விவாதிக்க முடியாத அளவுக்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திடவுமான செயல்கள் தொடர்ந்து ஓராண்டு காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
"

என்று அறிக்கை ஒன்றை விடுத்து அதில் மேற்கண்ட வரிகளை முதல்வர் பயன்படுத்தியுள்ளார்.

 


இதில் ஏன் தேவையே இல்லாமல் "
தலித் இனத்தின் கதிரவனாக விளங்குபவர்" என்று  ஊழல் செய்த ஒரு அமைச்சரை அல்லது ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அமைச்சரை தலித் இனத்தோடு சம்பந்தபடுத்தி ஒட்டு மொத்த தலித் இனத்தையே அசிங்கம் செய்ய முயல்கிறார்.

 

 


ராஜாவை தலித் தலைவராக யாரும் பார்க்கவில்லை, ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஒரு திமுக அமைச்சராகத்தான் சமூகம் பார்க்கிறது. இந்தியாவும் பார்க்கிறது.  இன்னும் சொல்லபோனால் இந்த ஊழலை ராஜாவே , முதல்வர் கருணாநிதி குடும்பதிர்க்காகத்தான் செய்தார் என்ற கிளை குற்றசாட்டும் உள்ள நிலையில்,  அவரை ஏன் சாதி கட்டுக்குள் அமுல்த்த  முதல்வர் முயல்கிறார்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcLJdDD7L3Kifc_tJlgG1I0tgFSqrvg9BlYcDLfEKSzKUXk2vjVu8n83WO2eWHDQbP_qLu-Th3I7pWfGMUNSEeJS6DdxO31ehVRaa2ilKyL6CLvsebDeqGbQ4M6dhj7bKaOMOcqgv4NoOZ/s1600/karuna+cartoonnew.jpg

ஊழல் செய்த ஒவ்வொரு அமைச்சரும் தத்தம் சாதியை அல்லது இனத்தை  குற்றம் சாட்டப்படுகையில்(அதற்க்கு முன்னர் இல்லை) துணைக்கு அழைத்தால் இந்திய சமூகம் என்னாவது அல்லது எந்த அரசாங்கத்தையும்  நடத்த இயலுமா?

 


அப்படியே போனால், ஊழல் செய்த கல்மாடி ஒரு இனத்திற்கு ' நிலா' வாகிவிடுவார் , ஊழல் செய்த அசோக் சவான் ஒரு இனத்திற்கு 'நட்சத்திரம்' ஆகிவிடுவார்.


ஊழல் செய்தவனை ஒரு சாதிக்கு உட்படுத்தி , அவனை காப்பாற்ற நினைப்பது , மக்கள் ஜனநாயகத்திற்கு செய்யும் பெரும் துரோகம் . இது முதல்வருக்கு நன்றாக தெரியும் . இருந்தாலும் அப்படித்தான் பேசுவார் . அதுதான் நமது முதல்வர்.

 




உண்மையில்  தலித் இனத்தை பெருமை படுத்த நினைத்தால், எந்த குற்றசாட்டும் இல்லாத நபரை , மிக நேர்மையான ஒருவரை  , " அவர் தலித் " என்று சொல்லுங்கள் . அதை விட்டு விட்டு ஒட்டு மொத்த இந்தியாவே , ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை , இந்த நேரத்தில் , " தலித் இன கதிரவன் " என்று சொல்லுவது , மற்ற தலித்துகளை அவமானம் செய்வது போல்தான் உள்ளது.

 


முதல்வர் எந்த நோக்கத்தில் இதை சொன்னாரோ தெரியாது ஆனால் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தலித் இனத்தோடு சம்பந்தபடுத்தி பேசியது தவறுதான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXeasZXq51RpkwP7bK1Y4H1SgChFxdUFO7NOjdhWUtGo528clCcvjeuUFWQodcOfIux1RbhbRK9IsVj3EsTlcsEMDbVMxDoWRzdYrN8IOCp2xFxYE9nlrPebKD7tQ1KqWZtyjUMpLnqGI/s1600/uma-shankar-ias.jpg
இதே முதல்வர்  தலித் இனத்தை சேர்ந்த நேர்மையான அதிகாரி உமா ஷங்கரை ஏன் பதவி நீக்கம் செய்தார் ? அப்போது அவர் தலித் என்று தெரியாதா ? அல்லது  நேர்மையான தலித்தை இவருக்கு பிடிக்காதா ?



http://beta.thehindu.com/multimedia/dynamic/00113/MK_113150f.jpg



நேர்மையான அதிகாரி உமா சங்கரை ,  தலித் என்று முதல்வர் சொல்லியிருந்தால் அது தலித்துகளிற்கு பெருமை . அதை விடுத்து ஊழல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட ராஜாவை "தலித் கதிரவன்" என்று சொல்லுவது , முதல்வர் தமது குடும்ப நலனிற்கு தலித்துகளை பலியாக்குகிறார் என்ற கோணத்தையும் சிந்திக்க வைக்கிறது.