இது நடக்காது என்ற தைரியத்தில் இப்படி பேசினாரா ?
அல்லது அதிமுகவும் திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டுவதையே வழக்காமாக கொண்டுள்ளதை இது காட்டுகிறதா ?
அல்லது இப்படி பேசி இப்போதைக்கு இந்த பிரச்சினையை ஒத்தி வைக்க முதல்வர் விரும்புகிறாரா ?
எதுவாக இருந்தாலும் சரி முதல்வர் மீதான நம்பிக்கை ஏற்கனவே வீண் போன சம்பவமும் நமக்கு உள்ளது. இரண்டு ஆண்டுகளிற்கு முன்னர் ஈழத்தில் தமிழர்கள் தினமும் ஆயிரம் பேர்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டு வந்த பொழுது, ஏதேனும் ஒரு அழுத்தம் ஏற்பட்டு போர் நிற்காதா ? என்று அனைவரும் எதிர்பாத்திருந்த பொழுது இதே மாதிரி ஒரு அனைத்து கட்சி ஆதரவை முதல்வர் கருணாநிதி கோரினார். அனைத்து கட்சிகளும் ஆதரவை ஏன் ராஜினாமா கடிதத்ததை கூட கொடுக்க தயார் ஆனார்கள் .
பின்னர் அவர் நடத்திய நாடகம்தான் உலகரியுமே ?
மூல செய்திகள் இங்கே :
சட்டசபையில் முதல்வர் பேசியது :
காவிரி பிரச்னை, 1967-68ல் இருந்து, இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. அண்ணா, அவருக்குப் பின் நான், எம்.ஜி.ஆர்., பின்னர் ஓ.பி.எஸ்., போன்றவர்கள், அதன்பின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அம்மையார் என பலரது காலத்திலும் இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது.நாம் நடத்தும் விவாதமும் தீராமல் இருக்கிறது. இந்த விவகாரத்தில், ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி, பொழுதுபோக்குவது தான் நடக்கிறதே தவிர, பிரச்னைகளை தீர்ப்பதில் ஒன்றாக கலந்து முடிவு செய்யவில்லை என நேற்று இங்கே எடுத்துக் கூறினார்கள்.காவிரி பிரச்னை தொடர்பாக, நாம் அனைவரும் உட்கார்ந்து பேசலாம். இதற்கு, நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அவர்களும், அவர்களுடைய, கட்சித் தலைமையிடம் கேட்டு அனுமதி பெற்று, எனக்கு ஒப்புதல் தந்தால் நன்றாக இருக்கும். அதை, பன்னீர்செல்வம் செய்ய வேண்டும்.இந்த பிரச்னை பற்றி, சட்டசபையிலும், வெளியிலும் ஒருவருக்கொருவர் ஏடாகூடமாக, ஏட்டிக்குப் போட்டியாக பேசி, இது கர்நாடக அரசுக்கு புதிய தெம்பை உருவாக்குவதற்கு மாறாக, நாம் நம்முடைய குறிக்கோளை அடைவதற்கு ஏதுவாக, அனைவரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசலாம்.யார் செய்தது சரி, யார் வழக்கை நடத்தியது சரி, யார் வழக்கை ஒத்தி வைத்தது என்றெல்லாம் விவாதிக்காமல், ஒன்றாக உட்கார்ந்து பேசி, யார் அதற்கு காரணம் என நமக்குள்ளே பேசி, ஒரு முடிவு எடுக்கலாம். அதற்கு, எதிர்க்கட்சி தலைவர் தயாராக இருந்தால், காவிரி பிரச்னை தீர்ந்த மாதிரி தான்.
இதற்க்கு கைபிள்ளை பீட்டர் அல்போன்ஸ் ஆதரவாக பேசியது :
காவிரி பிரச்னையை தீர்க்க, அனைவரும் ஒன்றாக கூடி பேசுவோம் என முதல்வர் அறைகூவல் விடுத்துள்ளார். இதற்கு, அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். நீங்கள் (அ.தி.மு.க.,) தயாரா?
பின்னர் மீண்டும் முதல்வர்: நான் அறைகூவல் விடுக்கவில்லை; அழைப்புக்குரல் விடுத்திருக்கிறேன்.