இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று பத்திரிக்கைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் சொல்ல காரணமான CAG (The Comptroller and Auditor General ) அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சொல்லப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன :
ஆங்கிலத்தில் :
- 85 firms suppressed facts, gave fictitious papers to DoT
- DoT kept spectrum pricing issue out of GoM's purview
- A Raja ignored Prime Minister's, FM's and Law Ministry's advice
- Spectrum was rare national asset, should have been auctioned
- 2G spectrum allocated to new players at throwaway prices
- Undue advantage to Swan Telecom in allocation of spectrum
- Email ID of Swan Telecom shown as that of a Reliance ADA group official
- Spectrum allocated beyond contracted quantity to 9 firms including Bharti, Vodafone, Idea, BSNL, Reliance, Aircel
- Idea and Spice not given spectrum on grounds of proposed merger- this was against the rules
- Allocation of 2G spectrum led to loss of Rs. 1.76 lakh crore
- DoT did not follow its own practise of first-come-first-serve in letter and spirit
- Calculation of loss based on 3G auction earlier this year
- Cut-off date for license letters advanced arbitrarily by a week
- This went against time-tested procedures of government functioning
- Entire process lacked transparency
- Undertaken in arbitrary and inequitable manner
தமிழாக்கம் இதோ :
- 85 நிறுவனங்கள் உண்மைகளை மறைத்து , பொய்யான தகவல்களை DoT க்கு அளித்துள்ளது .
- ராஜாவின் அதிகாரத்திற்குள் இருந்த , DoT அலைக்கற்றை ஒதுக்கீது சம்பந்த பண விவரங்களை அமைச்சர்களின் கூட்டு குழுவிற்கு (Group of Ministers) தெரியாமல் மறைத்தது.
- ராஜா,பிரதமர் அலுவலகம், நிதி அலுவலகம் மற்றும் சட்ட அமைச்சகம் என அனைத்து அமைச்சகத்தின் பரிந்துரைகளை நிராகரித்தார்.
- ஸ்பெக்ட்ரம் இந்தியாவின் அரிதான சொத்து இதை , ஏல முறையில்தாம் விற்றிருக்க வேண்டும்.
- 2G spectrum புத்தம் புது நிறுவனங்களிற்கு , கணக்கில் கொள்ள கூட தகுதியில்லாத அளவிற்கு மிக குறைந்த அளவான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
- Swan Telecom எனும் கம்பெனிக்கு தேவை இல்லாத அல்லது நீதிக்கு புறம்பான , முக்கியத்துவம் தரப்பட்டு விற்பனை நடந்துள்ளது.
- Swan Telecom , எனும் நிறுவனம் Reliance ADA எனும் நிறுவனத்தின் ஒரு பகுதி எனபது அதன் இணைய அஞ்சல் முகவரியின் மூலம் தெரிகிறது.
- அலைகற்றை , வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் அல்லது அளவுகளையும் மீறி , Bharti, Vodafone, Idea, BSNL, Reliance, Aircel முதலான ஒன்பது நிருவனகளிற்கு விற்கப்பட்டுள்ளது
- Idea மற்றும் Spice நிறுவனங்கள் தாம்(அலைகற்றைகளை பெற்ற பின்னர்) இணையபோகும் செய்திகளை முன்கூட்டியே அமைச்சகத்திற்கு தெரிவிக்கவில்லை , இது சட்டத்திற்கு புறம்பானது.
- அலைகற்றை ஒதுக்கீட்டில் அரசிற்கு 1,76 லக்ஷம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- DoT நீதிக்கு புறம்பான முறையிலேயே(அல்லது பதிவில்லாத தவறான முறையிலேயே) , அதன் நடைமுறை வழக்கமான , முதல் விண்ணப்பத்திற்கு முதல் ஒதுக்கீடு என்ற ஒழுக்கத்தை , பொய்யாக கடைபிடித்துள்ளது.
- இந்த இழப்பு கணக்கீடானது , 3G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இந்த வருடம் விற்று முதலில் இருந்தே கணக்கிடப்பட்டுள்ளது.
- மொத்தத்தில் இந்த நிகழ்வுகள் அத்தனையும் , ஒளிவு மறைவின்றி நடக்கவில்லை.
கூட்டு கொள்ளை அடித்தார்களோ? :
இவ்வளவு விடயங்களையும் வைத்து கொண்டு , ஒட்டு மொத்த அமைச்சகத்தை ஏமாற்றிய அமைச்சர் ராஜாவை குற்றம் சாட்டும் அமைப்புகளிற்கு "பதில் சொல் " என்று ஒரு பொறுப்பான முதல்வராக சொல்லாமல் , ராஜா தலித் அதனாலேயே அவரை பதவி நீக்க கோருகிறார்கள் என்று கருணாநிதி சொல்லுவதும் , அதற்க்கு ஆதரவு தெரிவித்து ஒரு மடத்தனமான அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டுள்ளதையும் பார்க்கும் பொழுது , இந்த கூட்டு கொள்ளையில் இவர்கள் அனைவருக்கும் பங்கு உண்டோ என்று என்ன தோன்றுகிறது.
இதைவிட கொடுமையாக , இவ்வளவு அசிங்கங்களை செய்த ஊழல் ராஜாவை கண்டிப்பதை விட்டுவிட்டு , "மாண்புமிகு போனாலும் மானமிகு போகவில்லை " என்று மானத்தை விட்டு வீரமணி பாராட்டுவதும்.
அவரை தலித் என்று சொல்லி அவர் செய்த ஊழலை மறைக்க பார்ப்பதும் அல்லது தலித் என்றால் சமூக மோதலுக்கு பயந்து இந்த விடயத்தை அப்படியே அனைவரும் விட்டு விடுவார்கள் என்ற நப்பாசையிலும், மேலுள்ள மூன்று தலைவர்கள் நாளொரு அறிக்கை விடுவதை பார்த்தால் , " காரி உமிழ்ந்து விடு பாப்பா " எனும் பாரதியாரின் வரிகள்தாம் மனதிற்குள் ஓடுகிறது. " தூ தூ " ஊரான் காசை இப்படி அதிகாரமாய் சாப்பிடும் இதுவும் ஒரு பிழைப்பா ?
ஊரை ஏமாற்றும் கூட்டத்திற்கான பதில் இங்கே :
இந்த ஊழலின் கணக்கீடு யூகத்தில் அல்லது காகிதத்தில் இருக்கும் ஒன்றல்ல :
ஊழல் செய்து , பலர் வற்புறுத்த ராஜினாமா செய்த , ராஜா, இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் ஏதோ மிகபெரிய தியாகம் செய்து சென்னை திரும்புவது போல அவருக்கு ஒரு வரவேற்ப்பு .
அண்ணா உருவாக்கிய திமுகவின் அப்பாவி தொண்டர்களை , ஊழல் செய்த ராஜா வை வரவேற்க "பாடம் " செய்து வைத்துள்ளது மிகபெரிய திறமைதான் .