தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஒரு லட்சம் தமிழர்களை கொல்லும் ஒப்பந்தமும் - ஸ்பெக்ட்ரம் ஊழலும் .

தலையங்கம் :



திமுக மற்றும் காங்கிரஸ், இரண்டு கட்சிக்குள்  ஏற்பட்ட ஏதோ ஒரு ஒப்பந்ததிர்க்காகத்தான் சோனியா கூட்டமும் ராஜாவை காப்பாற்ற இப்போது  முயற்சிக்கிறது. அந்த ஒப்பந்தம் ஈழத்தில் தமிழர்களை காங்கிரஸ் கட்சி கொல்வது, அதை கண்டு கொள்ளாமல் தமிழக முதல்வர் இருக்க வேண்டும் முடிந்தால் உதவிகளும் செய்ய வேண்டும்  பதிலுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலை  மத்திய அரசாங்கத்தை
இயக்கும் காங்கிரஸ் கட்சி , நீர்த்து  போக செய்வது என்பதாகத்தான் இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.



இந்த ஒப்பந்த படி முதல்வர் கருணாநிதி, மிக நேர்மையாக,  மத்திய காங்கிரஸ் அரசிற்கு , ஈழத்தில் தமிழர்களை கொல்லுவதற்கு முழு ஆதரவை அளித்தார்.


http://www.watblog.com/wp-content/uploads/2009/12/3g-spectrum1.jpg

அதே ஒப்பந்தத்தை காக்க , காங்கிரஸ் கட்சியை இப்போது மறைமுகமாக இல்லை நேரடியாகவேய முதல்வர் கருணாநிதி  நிர்பந்திக்கிறார்.

http://www.anphoblacht.com/news/images/2008/09/11/world.jpg


இதை  நேரத்திற்கு நேரம்  ஞாபகம் படித்தி கொண்டே இருப்பதுதான் , மீனம்பாக்கத்தில் போய் முதல்வர், சோனியா விடம் ஈழ தமிழர் வாழ்விற்கு ,  கடிதம் கொடுத்தது.,  அந்த கடிதத்திற்கு சோனியா அம்மையார் பதில் கொடுத்தது " எல்லாம் ஞாபகம்  உள்ளது கவலை வேண்டாம் " என்று . 


இந்த ஊழல் மற்றும் இன அழிப்பு ஒப்பந்ததிர்க்காகத்தான், கடித போக்குவரத்துக்கள். சிதம்பரத்தின் கருணாநிதியுடனான சந்திப்பு போன்றவைகள் எல்லாமும்.



அரசியல் நோக்கர்களே,  நன்றாக பாருங்கள், ராசாவை பதவியை விட்டு , மத்திய அரசு ,  நீக்கியே ஆக வேண்டி  சூழ் நிலை வரும் .

 


http://nimg.sulekha.com/others/original700/m-karunanidhi-sonia-gandhi-manmohan-singh-2009-5-20-4-21-56.jpg

 


அப்படி நீக்கப்பட்ட பின்னர் கருணாநிதி முன்பை விட அதிகம் ஈழ தமிழர்கள் பற்றி பேசுவார்.



இப்போதைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை இப்படித்தான் உள்ளது, "ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனபது உண்மை தான் அதற்காக திமுக - காங்கிரஸ் ஒப்பந்தமும் இருக்கிறது. எனவே ,ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டிய
கட்டாயத்திற்கு சூழ் நிலைகளை கடுமையாக்கி , அந்த எதிர் சூழ் நிலையை சாதகமாக்கி பதவி நீக்கம் செய்யலாம்."



http://omiusajpic.org/files/2009/10/19_02_09_01_76812_445.jpg

 


அந்த வேலைகள்தாம் இப்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.


தலையங்கதிர்கான செய்திகள் :


ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைத்து மத்திய அமைச்சர் ஆ.ராசாவை காப்பாற்ற முயற்சி நடக்கிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் இது குறித்து மேலும் கூறியது


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRbiYcvKahdL_Rcj8sEI-bu7-oUz5d27z1_kFZiRcHE7IAILZcNxjaAugYls-Xmq8yasb2gTs9irxsP5U93uHmhm8iNP23ltIybwMfBViF3hpaZRX_HK_YyCeCK7Ec9HnyiNxIwOdQPjft/s1600/Raja.jpg

 


:ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்கவும், ஆ.ராசாவை காப்பாற்றவும் பல்வேறு வழிகளில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் ஆ. ராசாவின் வழக்கறிஞர் அனிதா ஷெனாய், ஊழல் தடுப்பு பிரிவு டிஐஜி பல்சானியா, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி விவேக் பிரியதர்ஷினி, சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக செயல்பட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வதே இந்த சந்திப்பின் நோக்கம் என்பது தெளிவாகிறது. ஸ்பெக்டரம் ஊழலை மூடி மறைக்கும் மத்திய அரசின் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றார் அவர்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBVwlx5TwzWufN85wGoHO_PlzxDf6A-PUOF3u-5VCAeAMliAju7EK7ph079_isWWvXAxsa9d2v1x5qiy4L9Nq6sNWluLpQxnhSbxUvh7wzNvKdTibg5GORma0-VUQGeCYz8k8vdeo29LJG/s1600/Sonia+Gandhi+Rahul+Gandhi.jpg


சோனியா  மவுனம்  கலைக்க வேண்டும்: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அந்த கட்சியினரால் அடுத்த பிரதமர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் காந்தி ஆகியோர் அமைதி  காத்து வருகின்றன.


இந்த பிரச்னையில் தங்களின் நிலை என்ன என்பதை அவர்கள் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.