தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வீரம் விளைந்த மண்ணில் - மாவீரர் நாள் கவிதை - பகலவன்

வீரம் விளைந்த மண்ணில்  - மாவீரர் நாள் கவிதை  - பகலவன்


வீரம் விளைந்த மண்ணில்

விதையாகி போனவர்களின் சரித்திரத்தை

ஒரு நிமிடம் மரியாதையை செலுத்த வந்திருக்கும்

நாளைய விழுதுகளுக்கு எனது வணக்கம்!

 

அண்டை நாட்டு அகதிகளாயினும்

எம்நாட்டு வீரத்தை பாருக்கு

உரக்க சொல்பவர்கள் நாம்,

 

வீழ்ந்தது ஆலமரம் ,நொறுங்கியது அதன் வேர்!

என கூறும் அனைவருக்கும் உரக்க சொல்வோம்!

அங்கே நடபட்டிருப்பது பல ஆயிரம் விழுதுகள் என!

 

எமக்கும் உரிமை உண்டு என கூறும்

நம் நாக்கை அவன் அறுப்பாயின்

உனக்கு உரிமையே இல்லை என

அவன் நாக்கை நாம் அறுப்போம் !

 

எத்தனை எத்தனை தியாகம்

எம் இன சரித்திரத்தில் !

தோழர்களே நாம் மண்ணாகி போகவில்லை!

நாளைய சரித்திரம் ஆக போகிறோம்!

ஜாதி ,மதம் என் கடந்து  நாம் இங்கே கூடி உள்ளோம்!

தமிழனின் குருதியில் கலந்து போன கட்சியையும்

கடந்து நாம் இங்கே கூடி உள்ளோம் !

ஒரு இனத்தின் விடியலை

பல தியகங்களோடு தொடங்கி உள்ளோம்!

 

சூதும் வாதும் எம் இனத்தை சுழ்ந்திருக்கலாம்

பகைமையும் முள்வேலியும் எம் மக்களை சுழந்திருக்கலாம்

எவை எவை யாயினும் நமக்கு பயம் கூடாது!

மூன்று லட்சம் சிங்களவனை

வெறும் நாற்ப்பதாயிரம் போராளிகளோடு

கட்டி ஆண்டவர்கள்தான் நாம் !

 

தமிழ் நாட்டு கவிஞன் கொஞ்சம்

சன்மானத்துக்கு அடிமை பட்டவன் தான் !

இதற்கு ஒன்றும் நான் விதி விலக்கல்ல!

என்றாலும் உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்!

எம் இனத்தை அழிக்க தந்தி அடித்தவனின்

தலைக்கு உங்கள் கவிதை மகுடத்தை சூட்டாதிர்கள்!

நம் இனத்தின் வீரத்தை இவ்வுலகுக்கு எடுத்துரைத்த

மாவிரர்களுக்கு அந்த மகுடத்தை சூட்டுங்கள்!


வீரத்தோடும் தன்மானத்தோடும்

வாழ நினைப்பவன் என் ஈழ தமிழன்

இங்கே பகுத்தறிவோடும் சுய மதிப்போடும்

வாழ மறுப்பவன் என் மீதி தமிழன்

 

காலங்கள் உருண்டோடி போகிறது

எமது எழுச்சியும் மங்கிதான் போகிறது!

அங்கே சாட்சிகளும் அழிக்கபடுகிறது

எழுச்சிகளும் நொறுக்கபடுகிறது!

 

உலக தமிழினமே விழித்து கொள்

நாம் பிரிவினைவாதிகள் இல்லை!

நமக்கான உரிமைகளை பெற நினைப்பவர்கள்!

நமக்கான பூமியை பெற நினைப்பவர்கள்

 

கழனிகளையும் நிலபுலன்களையும் எங்கோ விட்டு விட்டு

ஓடித்திரிகிறார்கள் அகதியாய்!

உன் சக தமிழன் அடிமை என்றால்

நாம் என்ன எஜமானிகளா!

 

என் வீரமிக்க இனமே இவ்வுலகத்தை

அசைத்து பார்க்க விரும்புவர்கள் இல்லை நாம்!

நாம் பிறந்து வளர்ந்த மண்ணில் உறவுகளோடு

ஆசையாய் பழகி வாழ விரும்புவர்கள் நாம்!

 

எம் மாவிரர்களே எமக்காக போர்வாளை

தூக்கியவர்கள் நீங்கள்

எத்தனை எத்தனை சூழ்ச்சிகள்

எம்மை கட்டுபடுத்த நினைத்தாலும்

பாடம் புகட்டியவ்ர்கள் நீங்கள்!

 

பயமும் தயக்கமும் இன்றி பயணிக்கிறோம்

எம் இனத்தின் விடியலை நோக்கி

நீங்கள் காட்டிய பாதையில்

வீரமும் தியாகமும் மிக்க பூமியை மீட்டெடுப்போம்!

 

உங்கள் தியாகம் அளவற்றது

உங்கள் வீரம் பெரு மதிப்பு மிக்கது

தமிழன் தன்மானத்தோடு வாழ

கற்று கொடுத்தவர்கள் நீங்கள்!

 

 

பயணிக்கிறோம் எம் இனத்தின் விடியலை எடுத்துரைக்க !

பயணிக்கிறோம் வீரமிக்க சரித்திரத்தை உருவாக்க !

 

பொருத்து போதும் தமிழா !

வீழ்ந்தாலும் மாய்ந்தாலும்

எம் பூமியை நாம் இழக்க மாட்டோம்

 

இம் மாவீரர்களின் தியாகம் நமக்கு துணை நிற்கும்!

வஞ்சகம் நம்மை கண்டு பயம் கொள்ளட்டும்!

 

வீரத்தோடும் தன்மானத்தோடும்

எம் இனத்தை கட்டி எழுப்பிய

எம் தலைவனுக்கும் மாவீரர்களுக்கும்

தலை வணங்கி விடை பெறுகிறான் இந்த பகலவன்......

 

நன்றி

வணக்கம்

பகலவன்

ஈழத்தில் இறுதி யுத்த நாளில் - ஊடுருப்பு போர் நடந்தது எப்படி ?

மாவீரர் வாரத்தில் படிக்க வேண்டிய தியாக செயல்கள் :

ஈழ மண் ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கிக் கொண்டிருந்த சமயம் எதிரிக்கு ஆப்பு வைக்குமாற் போல் பேரதிர்ச்சி மிக்க தாக்குதல் ஒன்றை செய்வதற்காக எமது தலைமைப்பீடம் தயாராகிக்கொண்டிருந்தது. போர்மேகம் கவிந்து வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் படைகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது.

 

தமிழர்களின் ஆட்சிப் பரப்பெல்லை சுருங்கிக்கொண்டிருந்தது. தொடர் இரசாயன குண்டுவீச்சுக்கள், பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சன்னங்கள் என்று வன்னி அதிர்ந்துகொண்டிருந்தது. புதுக்குடியிருப்புப் பிரதேச எல்லையைக் கடக்க சிங்களம் தொடர் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தது.

 

சிறிய பகுதிக்குள் மக்கள் அனைவரும் குவிந்திருந்தமையால் இழப்புக்களும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. உணவு, குடிநீர், மருத்துவம் கிடைப்பதே பெரும் சிரமமாக இருந்தது. சிங்களத்தின் படைகளின் எண்ணிக்கையும், உலக நாடுகளின் பலத்த ஆதரவும், எதிரியின் புதுத் தொழில்நுட்பமும் எமக்குப் பாதகமாக அமைந்து, கடுமையான இழப்புக்களை எமது தரப்பு சந்தித்த போதும் போராளிகளின் மனஉறுதியும், வீரமும் எதிரியை எதிர்த்து போரிட வைத்ததோடு, அவனை முன்னே நகரவிடாது தடுத்தும் வைத்திருந்தது.

 

இந்நிலை தொடருமானால் நாம் இன்னும் பலத்த இழப்புக்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாதவொன்றாகிவிடும் என்பதை உணர்ந்த தலைமை களத்திற்கேற்ப முடிவெடுத்துச் செயற்பட முனைந்தது.

 

முன்னேறி வரும் எதிரியை சற்றே பின்தள்ள வேண்டிய தேவை தலைமைக்கு ஏற்பட்டது. இதற்காக களமுனையின் நிலையை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்த தலைமை குறைந்த ஆளணியுடன் எதிரிக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தக் கூடியவாறான தாக்குதல் ஒன்றை நடாத்தி, வன்னியின் களமுனையின் போக்கையும் தமிழரின் விதியையும் மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டு, அனைத்துத் திட்டங்களும் தயாரானது.

 

மீண்டும் சிங்களத்தையும் அதற்கு உதவி புரியும் உலக வல்லரசுகளையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குவதற்காக தாக்குதல் திட்டம் இரண்டாக வகுக்கப்பட்டது.

 

1. முன்னேறி வரும் எதிரிக்கு ஊடறுப்புத்தாக்குதல் மூலம் பெரும் இழப்பைக் கொடுத்து, படையணிகள் பல கோணங்களில் முன்னேறுதல்.

2. சிங்களத்தின் குகைக்குள் சென்று கரும்புலிகளின் சிறப்புப் பிரிவு பெரும் அழித்தொழிப்பு நடவடிக்கையைச் செய்ய வேண்டும்.

 

ஊடறுப்புப் தாக்குதலுக்கான பொறுப்பை எமது மூத்த தளபதிகளில் ஒருவரான 55 இடம் ஒப்படைக்கப்பட்டது. அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான பொறுப்பை விசேட தாக்குதல் தளபதி ஒருவர் பொறுப்பெடுத்தார்.

 

அதற்காக கொமாண்டோ கரும்புலிகள் அணியிலிருந்து 26 பேர் கொண்ட குழுவொன்று தெரிவு செய்யப்பட்டு, அணித்தலைமையாக பெண்போராளி ஒருவர் நியமிக்கப்பட்டார்.

 

முதலாவதாக ஊடறுப்பு அணி தாக்குதலைத் தொடங்க வேண்டும். சண்டை குறித்த இலக்கினை அடைந்ததும் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான அணியை தாக்குதல் இலக்கு நோக்கி நகர்த்துதல். இதுதான் திட்டம்.

 

ஊடறுப்பு தாக்குதலுக்கான நடவடிக்கையினை 55 உடன் தளபதி லோரன்ஸ் அவர்களும் களத்தில் இறக்கப்பட்டார். இவர்களுடன் இணைந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல களமுனைத் தளபதிகள் ஒன்றுகூடி அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். தமிழ் இனத்தின் எதிர்காலத்தினை தீர்மானிப்பதாக அமையப்போகும் இந்த முதல் கட்டத் தாக்குதலுக்காக சுமார் ஆயிரம் பேர் கொண்ட தாக்குதல் அணி தயார் செய்யப்பட்டது. தாக்குதலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கென அணிகள், தமது நகர்விற்காகக் காத்திருந்தனர்;.

 

மார்ச் மாதத்தின் மாலைப் பொழுதொன்றில் தொடர் விமானத் தாக்குதலுக்கும், எதிரியின் சற்றலைட் கண்காணிப்புக்கும் மண்ணைத் தூவிவிட்டு புலிகளின் தாக்குதல்அணிகளும், முதன்மைத் தளபதிகளும் சாலைப்பகுதியிலிருந்த சிறப்புப் பாசறையில் ஒன்றுகூடினர். தாக்குதலுக்கு பொறுப்பாகவிருந்த தளபதி 55 தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்தத் தொடங்கினார்;.

 

"இந்தச் சண்டைதான் எங்கட தலைவிதியை மாற்றி எதிரிக்கு தலையிடி கொடுக்கிறதாய் இருக்கும்;. எனவே அதற்கான திட்டமும் கடுமையான பயிற்சியும் உங்களுக்கு தரப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் உறுதியோட உங்களுக்கு தரப்பட்டிருக்கிற இலக்கைத் தாக்கியழிக்கிறதில உறுதியோட செயற்படவேணும். மற்றது நாங்கள் இப்ப செய்யப் போற ஊடறுப்புத் தாக்குதல் தான் சிறப்புக் கொமோண்டோக்காரரை அவையின்ர இலக்கை நோக்கிச் செல்ல பாதையெடுத்துக் கொடுக்கப் போகுது. எனவே எல்லாருடைய முழுப்பங்களிப்பும்தான் எமது வெற்றியைத் தீர்மானிக்கப்போகுது. இரவு குறித்த நேரத்தில நகர்வை மேற்கொள்ளக் கூடியவாறு ஆயத்தமாகுங்கோ. அதற்கான ஒழுங்கை தளபதி லோறன்ஸ் மேற்கொள்வார். இனி நீங்கள் உங்களுக்குரிய இடங்களுக்குப் போங்கோ."

 

என்றவாறு ஏனைய தளபதிகளுடன் அவர் பின்கள வேலைகளை நகர்தச் சென்ற பின், போராளிகள் ஒவ்வொருவரும் தமது சக தோழர்களுடன் கதைத்தபடி இரவு நகர்வதற்கு தேவையான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர்;.

 

இருள் என்ற கறுப்புப் போர்வை மூடத் தொடங்கிய போது தாக்குதல் அணிகளின் நகர்வும் ஆரம்பித்தது. ஊடறுப்புத் தாக்குதல்களுக்கான அணிகள் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறு சிறு பிளாற்றூன்களாகப் பிரிந்து தாக்குதல் இலக்கை நோக்கி நகர்ந்தன. இதே வேளையில் சிறப்புக் கொமோண்டோ அணியும் நகரத் தொடங்கியது. ஊடறுப்பு அணிகளில் ஒரு பகுதி சிறப்பு அணிக்கான பாதையைத் திறப்பதிலும், அவர்களிற்கான காப்பை வழங்குவதிலும் ஈடுபட்டன. சிறப்பணிகள் எல்லையைக் கடக்க, ஊடறுப்பு அணிகள் விசுவமடுப் பகுதியில் அமைந்திருந்த படைத்தளத்தின் மீது உக்கிர தாக்குதலை மேற்கொண்டன.

 

இத் தாக்குதலின் போது எதிரிக்கு பெருமளவு படைச் சேதத்தை ஏற்படுத்தியதுடன் அங்கிருந்த ஆட்லறிகளைக் கைப்பற்றி, எதிரியின் ஆனையிறவுப் படைத்தளத்தை நோக்கி எம்மவர்கள் எறிகணைத்தாக்குதல்களையும் மேற்கொண்டனர். தாக்குதலின் தீவிரத்தால் எதிரி நிலைகுலைந்த நேரத்தைப் பயன்படுத்தி சிறப்பணிகள் தமது இலக்கை நோக்கி விரையத்தொடங்கினர்.


ஊடறுப்பு அணிகளின் தாக்குதலை முகம் கொடுக்க புதிய படையினர் வருவிக்கப்பட்டு, எமது ஊடறுப்பு அணி பெட்டி வடிவத்தில் முற்றுகையிடப்படுகின்றது. இந்தச் சமயத்தில் தாக்குதலை வழிநடத்திய முன்னணித் தளபதிகள் விழுப்புண் அடைகின்றனர்.

 

எது நடந்த போதும் பின்வாங்க சிறிதளவும் விருப்பம் இன்றிப் போராளிகள் ஓர்மத்துடன் சண்டையிட்டவண்ணம் இருந்தனர். உக்கிரமான சண்டையால் இழப்புகள் அதிகமாகிக் கொண்டிருந்தது. 'இனி அங்கே நின்று அதிகளவான போராளிகளை இழக்க வேண்டாம் முற்றுகையை உடைத்து பின்வாருங்கள்' என்ற தலைமையின் உத்தரவிற்கமைய ஊடறுப்பு அணி தளம் திரும்புகின்றது.
உள்நுழைந்த அழித்தெழிப்பிற்கான சிறப்பு அணிகள் கட்டளைப்பீடத்துடன் தொடர்பினை மேற்கொண்டபடி நகர்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பத்து நாட்களின் பின்னர் அவர்களுக்கும் கட்டளைப்பீடத்திற்குமான தொடர்பு எதிர்பாராத விதமாகத் துண்டிக்கப்பட்டது. நகர்வின் போது இவர்கள் வைத்திருந்த செய்மதித் தொலைபேசி தண்ணீருக்குள் விழுந்தமையால் அதுவும் செயற்படாமல் போய்விட்டது. எனவே இவர்களுடனான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

 

சிறப்பு அணியின் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக கட்டளைப்பீடத்தால் மூன்று முதன்மைப் போராளிகள், அவ்வணி நகர்ந்து சென்ற பாதையூடாக எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் சிறப்பணியின் தொடர்பை எடுப்பதற்கு தேடியலைந்து முடியாது போக, குறிப்பிட்ட நாட்களின் பின்பு பின்தளத்தினை நோக்கி நகர்ந்து வந்து தகவல்களைக் கொடுக்கும்போது ஏற்பட்ட சம்பவமொன்றில் மூவரும் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள நேரிட்டது.

 

சிறப்பு அணியின் தாக்குதல் திட்டமே எமது தலைவிதியை மாற்றியமைக்க வல்லமை மிக்கதாக இருந்தமையால் அதனது தொடர்பை எடுக்கக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே நாட்டுக்கு வெளியேயுள்ள பல வளங்களைப் பயன்படுத்தி அணியுடனான தொடர்பை ஏற்படுத்த பல முயற்;சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

சில தினங்களின் பின்னர் மாற்று ஆதரவு ஆற்றல்களைப் பயன்படுத்தி 'வோக்கி' மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இது சிறப்பு அணியினரை உற்சாகத்துடனும், வேகத்துடனும் நகர உதவியது. நகர்ந்து கொண்டிருந்த சிறப்பணிகள் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில்; தங்களுக்கு நடந்த அனைத்துச் சம்பவங்களையும் கட்டளைப்பீடத்திற்கு தெரிவித்திருந்தனர்.

 

இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் வோக்கியல் இனி தொடர்பு கொள்வது கஸ்ரமாக இருக்கும் நாங்கள் தரப்பட்ட வேலையை முடிப்போம் என்று கூறியபடி அணி நகரத் தொடங்கியது. இதன் பின்னர் அணிக்கும் கட்டளைப்பீடத்திற்குமான தொடர்பு இருக்கவில்லை தமக்குத் தரப்பட்ட இலக்கை அழிக்கவேண்டும் என்று தாக்குதல் அணி ஒருபக்கமும்,
இனி எப்படித் தொடர்பினை மேற்கொள்ளலாம்? எனவும் அதற்கான மாற்று ஒழுங்குகளைச் செய்தபடி கட்டளைப்பீடமும்.

 

26 பேர் கொண்ட சிறப்பு அணியில் ஒரேயொரு பெண்போராளி மட்டுமே மே மாதம் 2ம் நாள் தன்தளத்திற்கு வந்து தனது போராளித் தோழர்களைச் சந்திக்கிறார்…………..

 

அப்படி என்றால் ஏனைய 25 பேரும் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?

 

முற்று முழுதாக உண்மைச்சம்பவங்களுடன் களத்திற்கு திரும்பிய போராளியின் சாட்சியங்களுடன் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டும்.
எத்தனையோ தியாகங்கள்!

 

எத்தனையோ அர்ப்பணிப்புகள்!

இறுதி வரை எமது வாழ்விற்காக இரத்தம் சிந்தியவர்கள்!

தம்மை ஆகுதியாக்கியவர்கள்!

 

இவர்களின் வரலாறுகள் என்றைக்கும் வீணாகப் போகக் கூடாது என்பதற்காகவே இந்த வரலாற்றுப்பதிவை மக்களாகிய உங்களுக்குத் தருகின்றோம்.

இன படுகொலை - அவசர வேண்டு கோள்

இன படுகொலை - அவசர வேண்டு கோள்

(மின் அஞ்சலில் நமக்கு வந்தது)

இந்திய எழுத்தாளரும், மனித உரிமைச்செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் அவர்கள்  ஏப்ரல் 2009இலேயே சரியாக இனங்கண்டு கூறியதுபோல் இலங்கையில் நடந்தது  "எல்லாத் தமிழர்களுக்கும் எதிரான இனவெறிப்போர்" ஆகும்.அப்போது இடம்பெற்ற தமிழின அழிப்பு,போர்க்குற்றங்கள்,மனிதத்ற்கு எதிரான குற்றங்கள் எல்லாம் ஐ.நா. அமைப்புகளாலும் ஆதிக்கசக்திகளாலும் மூடிமறைக்கப்பட்டு,புறக்கணிக்கப்படுகின்றன. இத்தகைய நிலையில் மெல்லிய ஓர் ஒளிக்கீற்றாகத் தென்படுவதுதான் ஐ.நா.செயலாளர்  நியமித்துள்ள மூவர் கொண்ட நிபுணர்குழு.அதன் தலைவரான Marzuki தருச்மன் [இந்தோனேசியாவின் சட்டவாளர்நாயகம்] முன்பு இலங்கைக்கான International இண்டேபெண்டேன்ட்  Group of Eminent Persons [ IIGEP ] உறுப்பினராக இருந்தவர்.இலங்கையில் நீதிநியாயம் இல்லை, மனிதஉரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்பதையெல்லாம் அப்போதே  தெரிந்துகொண்டவர்.இப்போது அக்குழுவினர் நமது சாட்சியங்களை எதிர்வரும் டிசெம்பர்   15ந்திகதிக்கு முன்பாக அனுப்பும்படி அறிவித்திருக்கிறார்கள்.
panelofexpertsregistr y@un.org This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it .


இவர்கள் ஆலோசனைகூறும் குழுவினரேயொழிய விசாரணைநடத்தும் குழுவினர் அல்ல. எனவே இப்போது நாம் செய்யக்கூடியது இவர்களிடம் சுதந்திரமான சர்வதேசவிசாரணைக்குழுவை ஐ.நா. அமைத்து பூரணமானவிசாரணையை மேற்கொள்ளவேண்டுமென வற்புறுத்தவேண்டும்.அதற்கான ஆலோசனையை இவர்கள் வழங்கவேண்டுமெனவற்புறுத்தவேண்டும்.அப்படிச்செய்யத் தூண்டுவதற்கு தமிழர்களாகிய நாம் பெரும்பெரும் எண்ணிக்கையான மின்னஞ்சல்களை அனுப்பவேண்டும்.சர்வதேசவிசாரணைக்கானவற்புறுத்தல்கள் பலபலஆயிரங்களாக அமையின் அதற்கான ஆலோசனைவழங்கும்  நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படும்.உலகில் எட்டுக்கோடி தமிழர்கள் இருப்பதாகக்கூறப்படுகிறது.அதில் சிறுபகுதியினர் செயற்பட்டாலேயே அது நிறைவேறிவிடும்.


இந்தப் பெருமுயற்சியில் இளைஞர்கள்,முதியவர்கள் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும். மின்னஞ்சல் வசதியுள்ள புலம்பெயர்தமிழர்கள்,மேற்குநாடுகளில் வாழ்வோர்,தமிழ்நாடு, மலேசியா,சிங்கப்பூர்,தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்வோர் எல்லாரும் பங்குகொள்ளலாம்.எமது துன்பங்களைத்தெரிந்த தமிழரல்லாத வேற்றினமக்களும் இந்த வேண்டுகோளை முன்வைக்கலாம்.ஏனெனில் பொருத்தமான விசாரணை மேற்கொள்வதுஐ.நா.வின் அடிப்படையான ஆரம்பக்கடமை; அதை எவரும் வற்புறுத்தலாம்.மேலும் நமது கருத்துகளை ஆங்கிலத்தில்மட்டுமல்லாது பிரெஞ்சு,யேர்மன் போன்ற முக்கிய ஐரோப்பிய மொழிகளில் அனுப்பினால் அவர்கள் அதனை மொழிபெயர்த்து அறிந்து கொள்வார்கள்;அது அவர்களின் கடமை.

உங்களுடைய கருத்துகளை பக்கம்பக்கமாக எழுதவேண்டும் என்பதல்ல.சில வரிகளில்  எழுதியும் அனுப்பலாம்.மொழியறிவு குறைவானவர்களுக்கு கூடிய அறிவுள்ளோர் உதவி செய்யலாம். மாதிரிக் கடிதங்களைத் தயாரித்துக்கொடுக்கலாம்.


நடைபெற்றபோரின்போது தமிழ்மக்கள் பாரியதுன்பங்களையும்,அழிவுகளையும்  அனுபவித்தார்கள். அவற்றை விசாரித்து தமிழ்மக்களுக்கு தேவையான நீதியை வழங்க சுதந்திரமான சர்வதேசவிசாரணைக்குழு அவசியம்.இலங்கைஅரசு நியமிக்கும் எந்தக்குழுவும் வழமைபோல் காலத்தை இழுத்தடிக்கும் கண்துடைப்பு வேலையாகவே அமையும். எனவே  நீதிவழங்க பக்கச்சார்பற்ற சர்வதேசவிசாரணை அவசியம் என்பதை எல்லோரும்  வற்புறுத்தவேண்டும்; அது மிகமுக்கியமானது.சம்பந்தப்பட்ட சாட்சியமளிப்பதற்கான அறிவித்தலின் ஆங்கில-தமிழ் வடிவத்தை இணைப்பு[Link] 1யும்,அவர்களின் உத்தியோகபூர்வஅறிவிப்பை இணைப்பு 2யும் 'கிளிக்' செய்து பார்க்கலாம்.அவற்றிற்குக்கீழே 'தமிழ்நெற்' இணையத்தளத்திலும்,பிற இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திக்கட்டுரைகளுக்கான இணைப்புகள் தரப்-பட்டுள்ளன. அவற்றைக் 'கிளிக்' செய்து நீங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல்களுக்கான கருத்துகளையும்,மேற்கோள்வாசகங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.மனித உரிமைகள்காப்பகம் [ HRW ], சர்வதேசமன்னிப்புச்சபை [ AI ], சர்வதேச நெருக்கடிக்கான குழு[ ICG ] என்பன பலஅறிக்கைகள் மூலம் சிறப்பான,தெளிவான கருத்துகளை முன்வைத்துள்ளன;அவற்றைப் படித்து நாம் பயன்படுத்தலாம்.


இந்தமின்னஞ்சலின் பிரதிகளை உங்கள் உறவினர்கள்,நண்பர்கள்,அறிமுகமானவர்கள், வேற்றினத்தவர்கள் என எல்லோருக்கும் அனுப்புங்கள்.வேறுநாடுகளில்வாழ்பவர்களுக்கும்அனுப்புங்கள்.நமக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சிறியவாய்ப்பை எல்லோரும் தவறாது  பயன்படுத்தும்படி பார்த்துக்கொள்ளுங்கள்! நமது ஈழதேசவிடுதலைக்காக தமது இனிய உயிர்களை ஈகம்செய்த மாவீரச்செல்வங்களை நினைவுகூரும் இந்தமாதத்தில் அவர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியின் ஓர்அம்சமாக இந்தப்பணியை மேற்கொள்வோம். அதற்காக எல்லோரையும் தூண்டுங்கள்! மிக்கநன்றிகள்; வணக்கங்கள்.


Chronology:
04.08.10  The Elders' Statement: Sri Lanka, truely terrifying
24.05.09  Marie Colvin:Tigers begged me to broker surrender
01.04.09  Arundhati Roy: It is a racist war on all Tamils
Photos showing the tragic plight of Tamil civilians

Comments  

நான் அரபு நாட்டில் வாழும் ஒரு தமிழன் ,என் ரத்த சொந்தங்களுக்கு நடந்த கொடுமை கண்டு மனம் வெம்பி வெம்பி புழுங்கி கொண்டு வாழ்கிறேன்.என் மக்கள் சிந்திய ஓவரு துளி ரத்தத்திற்கும் இந்த உலகம் பதில் சொல்லிய ஆகா வேண்டும்.எல்லா உயிர்க்கும் இந்த உலகில் வாழ உரிமை உண்டு,கொடுங்கோல ன் தண்டிக்கப்பட வேண்டும். தப்பி விடவே கூடாது கூடாது கூடாது ,என் கடைசி மூச்சி உள்ள வரை நான் போராடுவேன் இது சத்தியம் சத்தியம்

ஒரு வோட்டுக்கு நாற்பத்தி இரண்டாயிரம் ரூபாய்


தினமலரில் ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு சம்பந்தமாக வந்த ஒரு கட்டுரையில் இந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று கூறியுள்ளனர்.
இதில் எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை சொல்லியிருந்தனர். அது சத்தியமா தமிழ்நாட்டை திருத்துவதற்க்கோ இல்லை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்க்கோ இல்லை. இருந்தாலும் அது தமிழ்நாட்டின் சொத்தான ஓட்டுக்கு பணமே. அவர்கள் சொல்லிருந்த விஷயமாவது

"தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை."


இந்த விஷயம் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது எப்படினாலும் நாம் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்த போவதில்லை. அதனால் நான் உங்களை பணம் வாங்காதிங்கனு சொல்ல போறதில்லை. கம்மியா வாங்கிடாதிங்கனு தான் சொல்றேன். உங்களுடைய ஒரு ஓட்டுக்கு நாற்பத்திரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்பு இருக்கிறது.( அது நம்ம பணம்ங்க. அப்புறம் நாம தானே இன்கம் டாக்ஸ் எல்லாம் செலுத்துறோம். அரசியல்வாதிகளா ஒழுங்கா செலுத்துரானுங்க?) இந்த பணத்தை அடித்தது நம் தமிழ்நாட்டில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்களே என்று சொல்லபடுகிறது. அப்படியானால் நமக்கு தானே முதலுரிமை. நம்ம ஊர்காரங்க பணம் அடிச்சதெல்லாம் எதுக்காக? நாம பாட்டுக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம்னு ஆரம்பிச்சு திருமங்கலத்துல இருபத்தி ஐந்தாயிரம் வரைன்னு போயிட்டோம். யாருக்காக இருந்தாலும் நமக்கு ஓட்டுக்கு பணம் குடுக்கனும்னா கண்டிப்பாக இப்படி மாபெரும் ஊழல் செஞ்சு தானே ஆகணும்.இல்லையா இப்பவெல்லாம் இருபத்தி ஐந்தாயிரத்துக்கு கம்மியா எங்க தொகுதியில நாங்க வாங்குரதில்லைங்க ( நானும் திருமங்கலத்திருக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவன்).ஆனால் இது இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த விஷயம். இப்போ வருடங்களும் அதிகமாகிடுச்சு. ஊழலும் அதிகமாகிடுச்சு. நம்ம விலையும் அதிகமாகிடுச்சு. நாம தான் அதை ஒழுங்கா வசூல் செய்யணும். பொருள் நம்முடையது. அவங்களால எவ்வளவு கொடுக்க முடியும்னு தினமலர் சொல்லிருச்சு.( ப்ரோக்கர் கமிசன் கிடையாதுங்க ) இனி நாம என்ன செய்யனும்னா ஒழுங்கா உட்காந்து யோசிச்சு நல்ல விலையா பேசணும்.என்னை கேட்டால் ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் கேட்கலாம்னு சொல்லுவேன். அவங்களால நாற்பத்திரண்டு கொடுக்க முடிந்தாலும் அங்கே பணம் பட்டுவாடா செய்பவருக்கும் ஒரு நல்ல தொகை கிடைக்க வேண்டுமே.( அது தனி பதிவாக போடுறேன். பணம் பட்டுவாடா செய்பவர்கள் தயவு செய்து பின்னர் என்னை சந்திக்கவும்.) அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கும் வேணாம் அவர்களுக்கும் வேணாம். நாற்பதாயிரம் ரூபாய் கேளுங்கள் என்கிறேன். ஆனால் பணம் வாங்குவதற்கு கொடுக்கப்படும் பணத்திற்கு நான் ஜவாப்தாரி இல்லை. நல்ல ப்ரோக்கர்களை தேடி கேளுங்கள். நாற்பதாயிரம் ரூபாய் ஓட்டு உங்களுக்கு இல்லையென்றால் எதிர்கட்சிக்கு என்று கூறிவிடுங்கள்.திரும்பவும் சொல்கிறேன். ஏமாந்து விடாதிர்கள். ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் ரூபாய் என்றால் நான்கு பேருக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் லட்சாதிபதியாவதற்க்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு இது. ஏமாறுபவர்கள் பின்னர் யாரிடமும் கேட்க முடியாது. இது ஒரு முறையே கிடைக்கும் வாய்ப்பு.


( அய்யா நான் யாரையும் குறை சொல்ல வரலைங்க. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் கொடுத்திருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. அவர் வாங்கிய வீடு பத்து வருஷங்களுக்கு முன்னர் ஒரு கோடி என்றால் இப்போதும் அதே விலையிலே அவர் விற்பார். தயவு செய்து வீடு வாங்க ராசாவை அணுகவும்)

ஊழல்களின் ராஜா - ராஜா செய்த ஊழல்

ஊழல்களின்  ராஜா - ராஜா செய்த ஊழல்  (படித்ததில் அதிர்ந்தது )

இது தினமலரின் இன்றைய செய்தி

இந்திய ஊழல் வரலாற்றுக்கு புதிய வரவு ஸ்பெக்ட்ரம். நம் நாட்டில் ஊழல் நடவடிக்கைகள் புதிய விஷயமல்ல. கடந்த 1980களிலேயே ஊழலுக்கான வேர், இங்கு பலமாக ஊன்றப்பட்டு விட்டது. போபர்ஸ், தெகல்கா, மாட்டுத் தீவனம், ஹவாலா, லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு லஞ்சம், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பில் ஊழல் என, ஊழல் பூதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

 

சிறிய அளவில் பரவிக் கொண்டிருந்த இந்த ஊழல் நடவடிக்கைகள், தற்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஸ்வரூபம் எடுத்து, நாட்டு மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. இந்திய ஊழல் வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய தொகை.

 

சாதாரண மக்களும் திகைப்பு: "ஸ்பெக்ட்ரம், "2ஜி' அலைக்கற்றை, ஸ்வான், யுனிடெக், எஸ்.டெல்' என, மீடியாக்களில் அடிக்கடி கூறப்படுவதை, ஏதோ வேற்றுக் கிரக மக்கள் பேசும் மொழி யோ என, நினைத்து, இந்த விவகாரத்தை பொருட்படுத்தாத சாதாரண மக்கள் கூட, 1.76 லட்சம் கோடி ரூபாய் என, பேச்சு எழுந்ததுமே, ஒரு கணம் திகிலடித்து, அதிர்ச்சியுடன் கவனிக்கத் துவங்கியுள்ளனர். எங்கு முறைகேடு நடந்தது, எப்படி நடந்தது என்பது போன்ற விவகாரங்கள் எல்லாம் புரியவில்லை என்றாலும், மிகப் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளது என்பதை மட்டும் தெரிந்து கொண்டுள்ளனர்.

 

ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்துள்ள முறைகேட்டின் மூலம், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதன் மூலம், இந்த 1.76 லட்சம் கோடி ரூபாயையும் யாருடைய பாக்கெட்டிற்கோ, போய் விட்டதாக அர்த்தம் இல்லை. அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில், முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சட்ட, நிதி அமைச்சகங்கள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் மூலம், அரசுக்கு கிடைக்க வேண்டிய 1.76 லட்சம் கோடி ரூபாய் கிடைக்காமல் போய் விட்டது என்பது தான், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் குற்றச்சாட்டு. தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராஜா, இந்த வருவாய் இழப்பு ஏற்பட காரணமாக இருந்தார் என்றும், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. முறையான விதிமுறைகளை பின்பற்றாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் உரிமங்கள் பெற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால், யார், யார் லாபம் அடைந்தனரோ அவர்கள் தான் ஊழல் செய்தவர்கள். இதற்காக, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் அவர்கள் எவ்வளவு லாபம் பெற்றனரோ, அந்த தொகை தான் ஊழல் தொகை. அது, சாதாரண தொகையாக இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக கூற முடியும்.

 

மூன்று ஆண்டுக்கு முன்பே கசிந்தது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்தாலும், மூன்று ஆண்டுக்கு முன்பே, இதுகுறித்து அரசல், புரசலாக மர்மங்கள் கசியத் துவங்கி விட்டன. போதிய இடைவெளிகளில் இதுகுறித்த தகவல்கள் வெளியானாலும், அப்போது யாரும் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. சமீபத்தில் மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய விஷயங்கள் வெளியில் கசியத் துவங்கியதும் தான், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

 

பலமுனை தாக்குதல்: பா.ஜ., - இடதுசாரி கட்சிகள், அ.தி.முக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் எழுப்பி, பார்லிமென்டை ஸ்தம்பிக்க வைத்தன. மறுபக்கம், மீடியாக்கள் அடிக்கடி இதுகுறித்த செய்திகளை வெளியிட்டவாறு இருந்தன. மற்றொரு பக்கம், தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகளும், இந்த விஷயத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கினர். குறிப்பாக, தொலைத் தொடர்பு துறையின் முன்னாள் செயலர் டி.எஸ்.மாத்தூர், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை மீடியாக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். இது, அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதை சமாளிப்பதற்காக சி.பி.ஐ., விசாரணை, பொது கணக்கு குழு ஆய்வு என, அரசு சார்பில் எவ்வளவோ சமாளிப்பு முயற்சிகள் நடந்தன. ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

 

மற்றொரு பக்கம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, "ராஜா விவகாரத்தில் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஆதரவு தரத் தயார்' என, சமயம் பார்த்து அரசியல் காய் நகர்த்தினார். சுப்ரீம் கோர்ட்டும் கடுமையான கேள்விகளை எழுப்பியது. அனைத்து பக்கங்களிலும் இருந்து வந்த பலமுனை தாக்குதலில் மத்திய அரசு நிலைகுலைந்து போனது. வேறு வழியில்லாமல், இறுதிக் கட்ட நடவடிக்கையாக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி ராஜாவுக்கு உத்தரவு வந்தது. "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. எனக்கு முன் பதவி வகித்தவர்கள் எந்த நடைமுறையை பின்பற்றினார்களோ, அதே நடைமுறையைத் தான் நானும் பின்பற்றினேன். பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல்படி தான், அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது. எனவே, பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை'என, அடம்பிடித்த ராஜா, வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்தார்.

 

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை: ராஜா ராஜினாமாவுடன் ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிவுக்கு வந்து விடும் என, நினைத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதையாய், தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையும் இதில் உருட்டப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், மவுனம் காத்தது என்? என, பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளதால், காங்கிரஸ் மேலிடம் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. எனவே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரின் பதவியும் ஊசாலாடிக் கொண்டிருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

 

தொலைத் தொடர்பு ஆணையத்தின் அதிரடி: இதுவரை மவுனம் காத்து வந்த தொலைத் தொடர்பு ஆணையமும் (டிராய்) தற்போது அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. 2008ல் புதிதாக நுழைந்து, "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் 62 லைசென்சுகளை ரத்து செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. "டிராய்' அளித்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: 15 மண்டலங்களில் தொலை தொடர்பு சேவை நடத்துவதற்காக அனுமதி பெற்ற எடிசலாட் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். யுனிடெக் நிறுவனத்துக்கு சொந்தமான யூனிநார் நிறுவனத்துக்கு எட்டு மண்டலங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஷியாம் குரூப்பிற்கு பத்து மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பத்து உரிமங்கள், லூப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 19 உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.

 

டிராயின் இந்த அதிரடி நடவடிக்கையால் உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆடிப் போய் உள்ளன.என்ன செய்யப் போகிறது சி.பி.ஐ., ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சரியாக செயல்படவில்லை என, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டிடம் இருந்து வாங்கிக் கொண்ட வெறுப்பில் இருக்கிறது சி.பி.ஐ., தற்போது இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. நாடு முழுவதும் கவனிக்கப்படும் விஷயமாகி விட்டது. எனவே, இந்த விஷயத்தில் சி.பி.ஐ., அடுத்து எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். முறைகேட்டுக்கு துணை நின்ற அதிகாரிகள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ., வலைவிரிக்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ., சுதந்திரமாக செயல்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

சுத்தமாகுமா இந்திய அரசியல்? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்தியாவில் ஊழல் செய்த அரசியல்வாதிகள் பெரிய அளவில் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இல்லாத மதுகோடா போன்ற அரசியல்வாதிகள் தான், கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் சுதந்திரமாகவே உலா வருகின்றனர். ஆனால், இதெல்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்காது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் மீடியாக்கள், தற்போது மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்களை, அடியோடு அம்பலப்படுத்தி, அவர்களின் முகத்திரையை கிழித்து, பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றன. கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் நில ஊழல் தொடர்பான விவகாரங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதே இதற்கு சிறந்த சாட்சி. எனவே, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி, அரசியலை தூய்மைப் படுத்தும் முயற்சியில் ஆளுவோர் களம் இறங்க வேண்டும்.

 

"2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு : சி.ஏ.ஜி., அறிக்கை கூறுவது என்ன?

 

* கடந்த 2008ல் நடந்த "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியே 645 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

* ஏல முறைக்கு பதிலாக, முதலில் வருபவர்களுக்கே ஒதுக்கீடு என்ற முறை பின்பற்றப்பட்டுள்ளது.

 

* உரிமம் கோரிய 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் போதிய நிதி மூலதனத்தை பெற்றிருக்கவில்லை. இவற்றில் 45 நிறுவனங்கள், "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் கோருவதற்கான தகுதிகளை பெற்றிருக்கவில்லை.

 

* சில நிறுவனங்களுக்கு மிக குறைந்த விலையில் இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

 

* மத்திய சட்ட மற்றும் நிதி அமைச்சகங்களின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பு துறை (டிராய்) விதிமுறைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

 

* சில தனியார் நிறுவனங்களுக்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்குவதிலும் வெளிப்படையற்ற தன்மை பின்பற்றப்படவில்லை.

 

* உரிமம் பெற்ற சில நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற இந்திய நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளன. ஸ்வான் நிறுவனம், தனது 45 சதவீத பங்குகளை "எடிசலாட்'என்ற ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்துக்கு 4,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. யுனிடெக் நிறுவனம், தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.

 

* உரிமம் பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு விற்றதால், பெரிய அளவில் பயன் அடைந்துள்ளன. அதே நேரத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் அரசுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 

* உரிமம் வழங்கும் நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை.

 

* அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

 

* அனுபவம் இல்லாத "ஸ்வான்' நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

 

* "3ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்க கிடைத்த வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய். ஆனால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 10 ஆயிரத்து 772 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.

 

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? உலகம் முழுவதும் மொபைல் போன் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. எனவே, தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கு தேவையான சிக்னல்களை பெறுவதற்கான அலைவரிசைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்புக்கான அலைக்கற்றைகளின் (ஸ்பெக்ட்ரம்) கட்டுப்பாடு, அந்தந்த நாட்டு அரசுகளின் கைகளில் உள்ளன. இதை உலக அளவில் ஒருங்கிணைக்கும் பணியில் சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன் ஈடுபட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், தங்களின் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல, இந்த அலைக்கற்றைகள் அவசியம். எனவே, மத்திய அரசிடம் இருந்து, இந்த அலைக்கற்றைகளை தனியார் நிறுவனங்கள் பெறுகின்றன. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் அலைக்கற்றைகள், நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப இரண்டாம் தலைமுறை (2ஜி), மூன்றாம் தலைமுறை (3ஜி) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

 

1.76 லட்சம் கோடியில் என்ன செய்யலாம்?

 

* 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் சமம்.

 

* மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த தொகை ஆறில் ஒரு பங்கு.

 

* பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் டிவிடென்ட் மூலம், அரசுக்கு 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் கிடைக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொகை, அதை விட மூன்று பங்கு அதிகம்.

 

* பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக 25 ஆயிரத்து 154 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு தொகை இதை விட ஏழு மடங்கு அதிகம்.

 

* கல்விக்காக பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் தொகையை விட, ஊழல் நடந்ததாக கூறப்படும் தொகை மூன்று மடங்கு அதிகம்.

 

இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்கள்: மகாவீரர், புத்தர் போன்ற மகான்களின் மிகச் சிறந்த போதனைகளால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு புகழ் கிடைத்தது அந்த காலம். இதற்கு பின், மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டங்கள், இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தின. ஆனால், தற்போது இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் வரலாறு தான், இந்தியாவை உலகுக்கு அடையாளப் படுத்தும் விஷயமாக மாறி விட்டது என்பது வேதனையான உண்மை. இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்களில் சில:

 

1. பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி

 

2. சர்க்கரை ஊழல் 650 கோடி

 

3. போபர்ஸ் ஊழல் 65 கோடி

 

4. ஹவாலா ஊழல் 65 கோடி

 

5. எம்.பி., டிரேடிங் 32 கோடி

 

6. உர ஊழல் 133 கோடி

 

7. மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி

 

8. இந்தியன் வங்கி 1,336 கோடி

 

9. மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி

 

10. நில ஊழல் (பீகார்) 400 கோடி

 

11. வேட்டி - சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி

 

12. நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி ஊழல் செய்யப்பட்ட இந்த தொகையை, நாட்டின் கட்டமைப்புக்கு வசதிக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ இடம் பெற்றிருக்கும்.

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!


ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

பல்லக்கிலிருந்து இறக்கிவிடப்பட்ட பார்ப்பனியம் போலீசு பாதுகாப்புடன் நடையை கட்டுகிறது

திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவிலில் 1993ஆம் ஆண்டு ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதே கோவில் முன்பு பெரியார் சிலை இடிக்கப்பட்ட போது ராமனது படத்தை எரித்த போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. தற்போது இந்தக் கோவிலில் மேலும் ஒரு பார்ப்பன ஆதிக்கத்தை தோழர்கள் முறியடித்திருக்கின்றனர்.

கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களின் போது 3 நாட்கள் பிரம்ம ரத மரியாதை என்ற ஒரு கேவலம் நடக்கும். இதன்படி வேதவியாசபட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சக அய்யங்கார் பட்டர்களை, யானை முன்னே செல்ல மாலை குடை தீப்பந்தம் ஆகியவற்றுடன் பல்லக்கில் அமர வைத்து மனிதர்களே தூக்கிச்செல்வதுதான் பிரம்ம ரத மரியாதை. பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது.

இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் 'பாதந்தாங்கிகள்' (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். "கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு" என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார்.

இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வ்ழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்.

கோவில் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உதவிட வேண்டியும், "இவ்வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டு பட்டருக்கு எதிராக வாதாட அனுமதிக்க வேண்டும்" என்று நீதி மன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் வாதாடினர்.

வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் கைசிக ஏகாதேசியான கடந்த வியாழக்கிழமையன்று (17/11/2010) கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் பல்லக்கில் தூக்கிச்செல்ல பாதுகாப்பு தரக்கோரி காவல்துறையிடம் பார்ப்பன பட்டர்கள் அனுமதி கோரினர். இந்த மனுதர்ம கோரிக்கைக்கு இந்துமதவெறி அமைப்பு வானரங்கள் பலவும் கும்பல் சேர்த்துக் கொண்டு ஆதரவளித்தன.

இவ்விசயத்தில் கோவில் பிரகாரத்தில் பல்லக்கு தூக்க தடை விதித்து வெளியில் சொந்தமாக தூக்கிச்செல்லலாம் என காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

"மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, எவ்விடமாக இருந்தாலும் சமூக குற்றமே! எனவே கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல கோவிலுக்கு வெளியிலும் பல்லக்கு தூக்க அனுமதிக்க முடியாது. இது மனுதர்ம விதிப்படி மனிதர்களை விட தான் உயர்வானவன் என பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள முனைவதை அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்து, மீறினால் தடுத்து நிறுத்துவோம்!",  என மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி மற்றும் ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் ராஜா உள்ளிட்ட தோழர்கள் பட்டர்கள் மற்றும் காவல்துறையினரை எச்சரித்தனர்.

இந்நிலையில் திருவரங்க கோவில் ரெங்கா கோபுரம் முன்பாக தோழர்கள் குவிய துவங்கினர். இதை கண்டவுடன் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பட்டரின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலுக்கு வெளியில் பிரம்ம ரத ஊர்வலம் நட்த்த ஏதுவாக நூற்றுக்கணக்கான காவலர்களை இறக்கி, மனித உரிமை பதுகாப்பு மைய தோழர் வழக்குரைஞர் போஜகுமார் மற்றும் ம.க.இ.க தோழர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போராட்ட்த்தை தடுக்க காவல் துறை முயன்றது.

வழக்கமாக கவுசிகப் புராணம் பாடிய பின் அதிகாலை 5.20க்கு கோவில் முன் வாசல் வழியாக சொந்த காசைப் போட்டு தயாரித்த பல்லக்கில் பவனி வருவதற்க்கு ஏற்ப்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், ம.க.இ.க தோழர்களால் தான் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்து அஞ்சி நடுங்கி கோவில் நிர்வாகம் அளித்த மாலை,சந்தன,குடை மரியாதைகளை ஏற்க மனமில்லாமல் பின் வாசல் வழியாக(வடக்கு வாசல்) காவல்துறை உதவியுடன் தப்பி ஓடினார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமும் நகைப்புடன் அதிசயத்தும் போயினர்.

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

என்னா லுக்கு !

பல நூற்றாண்டுகளாக கடவுள் உண்டென்றும் அந்த கடவுளுக்கு நிகரானவன் தான் என்றும் ஆணவத்துடன் இருக்கும் பார்ப்பனக் கொழுப்புக்கும், ஆதிக்கத்துக்கும் பெயர் போன திருவரங்கத்தில் "சூத்திர, பஞ்சம, பெண்கள், குழந்தைகளை உள்ளிட்ட மக்களை அணிதிரட்டி ம.க.இ.க தோழர்கள் 1993ல் நடத்திய "கருவறை நுழைவு போராட்டத்தின்" வெற்றியை தொடர்ந்து இன்று மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, வெளியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு பட்டர்களின் பிரம்ம ரத மரியாதை எனும் அவமரியாதை முடிவுக்கு வந்தது.

இவ்வெற்றி நிகழ்வினை மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து, திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு (இந்த சிலை இந்து மத வெறியர்களால் சிதைக்கப்பட்டபோது உடனடியாக மக்களை திரட்டி தேசிய நாயகன் என்று இந்து வெறியர்களால் அழைக்கப்படும் ராமன் படத்தை செருப்பால் அடித்தும், படத்தை கொளுத்தியும் ம.க.இ.க போராடிய பின் மீண்டும் நிறுவப்பட்டது) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,

"தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்!
பெரியாரின் வாரிசுகள் என்பதை நிலைநாட்டுவோம்!"

என விண்ணதிர முழக்கமிட்டு கொண்டாடினர்.

இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள்.

ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் 'கைப்புள்ள கதைபோல்' 'கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!' என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர்.  ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது.

அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை. அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள்.

பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள்.

எது எப்படியோ அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை உயர்நீதிமன்றமும் பட்டர்களின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது "அயோத்தி அல்ல", தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

போராடிய தோழர்களுக்கு வினவின் வாழ்த்துக்கள்!!

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

பல்லக்கிலிருந்து இறக்கிவிடப்பட்ட பார்ப்பனியம் போலீசு பாதுகாப்புடன் நடையை கட்டுகிறது

திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவிலில் 1993ஆம் ஆண்டு ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதே கோவில் முன்பு பெரியார் சிலை இடிக்கப்பட்ட போது ராமனது படத்தை எரித்த போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. தற்போது இந்தக் கோவிலில் மேலும் ஒரு பார்ப்பன ஆதிக்கத்தை தோழர்கள் முறியடித்திருக்கின்றனர்.

கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களின் போது 3 நாட்கள் பிரம்ம ரத மரியாதை என்ற ஒரு கேவலம் நடக்கும். இதன்படி வேதவியாசபட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சக அய்யங்கார் பட்டர்களை, யானை முன்னே செல்ல மாலை குடை தீப்பந்தம் ஆகியவற்றுடன் பல்லக்கில் அமர வைத்து மனிதர்களே தூக்கிச்செல்வதுதான் பிரம்ம ரத மரியாதை. பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது.

இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் 'பாதந்தாங்கிகள்' (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். "கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு" என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார்.

இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வ்ழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்.

கோவில் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உதவிட வேண்டியும், "இவ்வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டு பட்டருக்கு எதிராக வாதாட அனுமதிக்க வேண்டும்" என்று நீதி மன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் வாதாடினர்.

வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் கைசிக ஏகாதேசியான கடந்த வியாழக்கிழமையன்று (17/11/2010) கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் பல்லக்கில் தூக்கிச்செல்ல பாதுகாப்பு தரக்கோரி காவல்துறையிடம் பார்ப்பன பட்டர்கள் அனுமதி கோரினர். இந்த மனுதர்ம கோரிக்கைக்கு இந்துமதவெறி அமைப்பு வானரங்கள் பலவும் கும்பல் சேர்த்துக் கொண்டு ஆதரவளித்தன.

இவ்விசயத்தில் கோவில் பிரகாரத்தில் பல்லக்கு தூக்க தடை விதித்து வெளியில் சொந்தமாக தூக்கிச்செல்லலாம் என காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

"மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, எவ்விடமாக இருந்தாலும் சமூக குற்றமே! எனவே கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல கோவிலுக்கு வெளியிலும் பல்லக்கு தூக்க அனுமதிக்க முடியாது. இது மனுதர்ம விதிப்படி மனிதர்களை விட தான் உயர்வானவன் என பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள முனைவதை அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்து, மீறினால் தடுத்து நிறுத்துவோம்!",  என மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி மற்றும் ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் ராஜா உள்ளிட்ட தோழர்கள் பட்டர்கள் மற்றும் காவல்துறையினரை எச்சரித்தனர்.

இந்நிலையில் திருவரங்க கோவில் ரெங்கா கோபுரம் முன்பாக தோழர்கள் குவிய துவங்கினர். இதை கண்டவுடன் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பட்டரின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலுக்கு வெளியில் பிரம்ம ரத ஊர்வலம் நட்த்த ஏதுவாக நூற்றுக்கணக்கான காவலர்களை இறக்கி, மனித உரிமை பதுகாப்பு மைய தோழர் வழக்குரைஞர் போஜகுமார் மற்றும் ம.க.இ.க தோழர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போராட்ட்த்தை தடுக்க காவல் துறை முயன்றது.

வழக்கமாக கவுசிகப் புராணம் பாடிய பின் அதிகாலை 5.20க்கு கோவில் முன் வாசல் வழியாக சொந்த காசைப் போட்டு தயாரித்த பல்லக்கில் பவனி வருவதற்க்கு ஏற்ப்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், ம.க.இ.க தோழர்களால் தான் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்து அஞ்சி நடுங்கி கோவில் நிர்வாகம் அளித்த மாலை,சந்தன,குடை மரியாதைகளை ஏற்க மனமில்லாமல் பின் வாசல் வழியாக(வடக்கு வாசல்) காவல்துறை உதவியுடன் தப்பி ஓடினார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமும் நகைப்புடன் அதிசயத்தும் போயினர்.

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

என்னா லுக்கு !

பல நூற்றாண்டுகளாக கடவுள் உண்டென்றும் அந்த கடவுளுக்கு நிகரானவன் தான் என்றும் ஆணவத்துடன் இருக்கும் பார்ப்பனக் கொழுப்புக்கும், ஆதிக்கத்துக்கும் பெயர் போன திருவரங்கத்தில் "சூத்திர, பஞ்சம, பெண்கள், குழந்தைகளை உள்ளிட்ட மக்களை அணிதிரட்டி ம.க.இ.க தோழர்கள் 1993ல் நடத்திய "கருவறை நுழைவு போராட்டத்தின்" வெற்றியை தொடர்ந்து இன்று மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, வெளியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு பட்டர்களின் பிரம்ம ரத மரியாதை எனும் அவமரியாதை முடிவுக்கு வந்தது.

இவ்வெற்றி நிகழ்வினை மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து, திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு (இந்த சிலை இந்து மத வெறியர்களால் சிதைக்கப்பட்டபோது உடனடியாக மக்களை திரட்டி தேசிய நாயகன் என்று இந்து வெறியர்களால் அழைக்கப்படும் ராமன் படத்தை செருப்பால் அடித்தும், படத்தை கொளுத்தியும் ம.க.இ.க போராடிய பின் மீண்டும் நிறுவப்பட்டது) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,

"தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்!
பெரியாரின் வாரிசுகள் என்பதை நிலைநாட்டுவோம்!"

என விண்ணதிர முழக்கமிட்டு கொண்டாடினர்.

இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள்.

ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் 'கைப்புள்ள கதைபோல்' 'கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!' என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர்.  ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது.

அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை. அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள்.

பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள்.

எது எப்படியோ அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை உயர்நீதிமன்றமும் பட்டர்களின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது "அயோத்தி அல்ல", தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

போராடிய தோழர்களுக்கு வினவின் வாழ்த்துக்கள்!!

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

ஸ்பெக்ட்ரம் - "தூ.. தூ.. " ஊரான் காசை இப்படி அதிகாரமாய் சாப்பிடும் இதுவும் ஒரு பிழைப்பா ?

ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி  நாடாளுமன்றம் கடந்த நான்கு நாட்களாய்  அமளி துமளி பட்டுக்கொண்டு வருகிறது.


இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல்  என்று பத்திரிக்கைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் சொல்ல காரணமான CAG (The Comptroller and Auditor General )  அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 


அதில் சொல்லப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன :


ஆங்கிலத்தில் :

 

 • 85 firms suppressed facts, gave fictitious papers to DoT
 • DoT kept spectrum pricing issue out of GoM's purview
 • A Raja ignored Prime Minister's, FM's and Law Ministry's advice
 • Spectrum was rare national asset, should have been auctioned
 • 2G spectrum allocated to new players at throwaway prices
 • Undue advantage to Swan Telecom in allocation of spectrum
 • Email ID of Swan Telecom shown as that of a Reliance ADA group official
 • Spectrum allocated beyond contracted quantity to 9 firms including Bharti, Vodafone, Idea, BSNL, Reliance, Aircel
 • Idea and Spice not given spectrum on grounds of proposed merger- this was against the rules
 • Allocation of 2G spectrum led to loss of Rs. 1.76 lakh crore
 • DoT did not follow its own practise of first-come-first-serve in letter and spirit
 • Calculation of loss based on 3G auction earlier this year
 • Cut-off date for license letters advanced arbitrarily by a week
 • This went against time-tested procedures of government functioning
 • Entire process lacked transparency
 • Undertaken in arbitrary and inequitable manner

 

 

தமிழாக்கம்  இதோ :

 • 85 நிறுவனங்கள் உண்மைகளை மறைத்து , பொய்யான தகவல்களை DoT க்கு அளித்துள்ளது .
 • ராஜாவின் அதிகாரத்திற்குள் இருந்த , DoT அலைக்கற்றை ஒதுக்கீது சம்பந்த பண விவரங்களை அமைச்சர்களின் கூட்டு குழுவிற்கு (Group of Ministers) தெரியாமல் மறைத்தது.
 • ராஜா,பிரதமர் அலுவலகம், நிதி அலுவலகம்  மற்றும் சட்ட அமைச்சகம் என அனைத்து அமைச்சகத்தின் பரிந்துரைகளை நிராகரித்தார்.
 • ஸ்பெக்ட்ரம் இந்தியாவின் அரிதான சொத்து இதை , ஏல முறையில்தாம் விற்றிருக்க வேண்டும்.
 • 2G spectrum புத்தம் புது நிறுவனங்களிற்கு , கணக்கில்  கொள்ள கூட தகுதியில்லாத அளவிற்கு மிக குறைந்த அளவான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
 • Swan Telecom   எனும் கம்பெனிக்கு தேவை இல்லாத அல்லது நீதிக்கு புறம்பான , முக்கியத்துவம் தரப்பட்டு விற்பனை நடந்துள்ளது.
 • Swan Telecom , எனும் நிறுவனம் Reliance ADA எனும் நிறுவனத்தின் ஒரு பகுதி எனபது அதன் இணைய அஞ்சல் முகவரியின் மூலம் தெரிகிறது.
 • அலைகற்றை , வரையறுக்கப்பட்ட  எல்லைகளையும் அல்லது அளவுகளையும் மீறி , Bharti, Vodafone, Idea, BSNL, Reliance, Aircel  முதலான ஒன்பது நிருவனகளிற்கு விற்கப்பட்டுள்ளது
 • Idea மற்றும் Spice  நிறுவனங்கள் தாம்(அலைகற்றைகளை பெற்ற பின்னர்) இணையபோகும்  செய்திகளை முன்கூட்டியே அமைச்சகத்திற்கு தெரிவிக்கவில்லை , இது சட்டத்திற்கு புறம்பானது.
 • அலைகற்றை ஒதுக்கீட்டில் அரசிற்கு 1,76 லக்ஷம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 • DoT நீதிக்கு புறம்பான முறையிலேயே(அல்லது பதிவில்லாத தவறான முறையிலேயே) , அதன் நடைமுறை  வழக்கமான , முதல் விண்ணப்பத்திற்கு முதல் ஒதுக்கீடு  என்ற ஒழுக்கத்தை , பொய்யாக கடைபிடித்துள்ளது.
 • இந்த இழப்பு கணக்கீடானது , 3G  அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இந்த வருடம் விற்று முதலில் இருந்தே கணக்கிடப்பட்டுள்ளது.
 • மொத்தத்தில்  இந்த நிகழ்வுகள் அத்தனையும் , ஒளிவு மறைவின்றி நடக்கவில்லை.

 

 


கூட்டு கொள்ளை அடித்தார்களோ? :

இவ்வளவு விடயங்களையும் வைத்து கொண்டு ,  ஒட்டு மொத்த அமைச்சகத்தை ஏமாற்றிய அமைச்சர் ராஜாவை குற்றம் சாட்டும் அமைப்புகளிற்கு "பதில் சொல் " என்று ஒரு பொறுப்பான முதல்வராக  சொல்லாமல் , ராஜா தலித் அதனாலேயே  அவரை பதவி நீக்க கோருகிறார்கள் என்று கருணாநிதி சொல்லுவதும் , அதற்க்கு ஆதரவு தெரிவித்து ஒரு மடத்தனமான அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டுள்ளதையும்  பார்க்கும் பொழுது , இந்த கூட்டு கொள்ளையில் இவர்கள் அனைவருக்கும் பங்கு உண்டோ என்று என்ன தோன்றுகிறது.

 


http://www.hindu.com/2009/03/17/images/2009031759780701.jpg

 


இதைவிட கொடுமையாக , இவ்வளவு அசிங்கங்களை செய்த ஊழல் ராஜாவை கண்டிப்பதை விட்டுவிட்டு , "மாண்புமிகு போனாலும் மானமிகு போகவில்லை " என்று  மானத்தை விட்டு வீரமணி பாராட்டுவதும்.

 http://www.periyar.org/images/kveeramani.jpg

 அவரை தலித் என்று சொல்லி அவர் செய்த ஊழலை மறைக்க பார்ப்பதும் அல்லது தலித் என்றால்  சமூக மோதலுக்கு பயந்து  இந்த விடயத்தை அப்படியே  அனைவரும் விட்டு விடுவார்கள் என்ற நப்பாசையிலும், மேலுள்ள மூன்று  தலைவர்கள் நாளொரு அறிக்கை விடுவதை பார்த்தால் , " காரி உமிழ்ந்து விடு பாப்பா " எனும் பாரதியாரின் வரிகள்தாம் மனதிற்குள் ஓடுகிறது.  " தூ தூ " ஊரான் காசை இப்படி அதிகாரமாய் சாப்பிடும் இதுவும் ஒரு பிழைப்பா ?ஊரை ஏமாற்றும் கூட்டத்திற்கான பதில் இங்கே :


2001 மற்றும் 1999  இல்  பா ஜ க அரசு கடை பிடித்த நடைமுறைகளைத்தான் கடைபிடித்ததாக , ஊரை ஏமாற்றி விட்டு அனைவரையும் ஏமாற்ற பார்க்கிறது இந்த ஊழல் கூட்டம்.
2G licenses issued in the year 2008 at 2001 prices , 2008  இல்  2001 விலையையே ஏன் நிர்ணயம் செய்தாய் என்பது தான் கேள்வி அன்றி  , ஏன் அந்த நடைமுறையை பின் பின்பற்றினாய்  என்பது கேள்வி அல்ல? இந்த ஊழலின் கணக்கீடு  யூகத்தில்  அல்லது  காகிதத்தில்  இருக்கும் ஒன்றல்ல  :


http://www.flashnews-online.com/wp-content/uploads/2010/11/Raja.jpeg


Some firms sold partial stakes for much higher  rates,  அலைகற்றை ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்ட  சில நிறுவனங்கள் , அதன் பகுதி ஒதுக்கீட்டையே நடைமுறை விலைக்கு ( பெற்ற விலையை விட நூறு மடங்கு விலைக்கு) விற்றுள்ளதுதான் இந்த ஊழலின் ஊற்று கண். எனவே இது ஊகங்களின் அடிப்படையான ஊழலின் அளவு  கணக்கீட்டு  மதிப்பு அல்ல.ஊழல் செய்து , பலர் வற்புறுத்த ராஜினாமா செய்த , ராஜா, இன்று  சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் ஏதோ மிகபெரிய தியாகம் செய்து  சென்னை திரும்புவது போல  அவருக்கு ஒரு வரவேற்ப்பு .அண்ணா உருவாக்கிய திமுகவின் அப்பாவி  தொண்டர்களை , ஊழல் செய்த ராஜா வை வரவேற்க "பாடம் " செய்து வைத்துள்ளது மிகபெரிய திறமைதான் .

ஊழல்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒன்றும் இல்லாமல் போவது தனி விதம் ?ராஜாவின் ராஜினாமா மட்டும் இறுதி தீர்வா ?

வெற்றி, வெற்றி என எட்டுத் திக்கும் எக்காளம் கேட்கிறது. வெற்றியைப்பங்கிடுவதில் கடும் போட்டியும் நிலவுகிறது. ஊடகங்கள் ஒரு பக்கம், குற்றம்கண்டுபிடித்தே பெயர் வாங்கும் எதிர்க்கட்சிகள் மறுபக்கம்.ராஜா ராஜினாமா செய்துவிட்டார்!

 

முடிந்துவிட்டதா எல்லாம்? இந்திய அரசியல்வாதிகளின் மானம்காப்பாற்றப்பட்டுவிட்டதா? இனிமேல் மத்திய அரசு, அப்பழுக்கற்ற அரசாகத்திகழுமா? கழகத்தின் மீது பட்ட கறை நீங்கிவிட்டதா?எதுவுமே இல்லை. இந்த அரசியல்வாதிகளின் மானம் மீண்டும் கப்பலேறும்; மத்தியஅரசு மீது மேலும் பல ஊழல் புகார்கள் எழும்; கழகம் தன் கடமையைச் செய்யும். எதுவுமே நிற்கப்போவதில்லை. அப்புறமும் எதற்கு வெற்றிக் கொண்டாட்டங்கள்?எல்லாம், வெறும் பரபரப்புக்காக மேற்கொள்ளப்படுபவை. மத்தியில் ஒன்றும் ராமராஜ்யம் நடக்கவில்லை; ராஜா மீது குற்றம்சாட்டியவர்களும் உத்தம புத்திரர்கள்இல்லை. எல்லாருமே முதுகில் அழுக்கைச் சுமப்பவர்கள் தான். அடுத்தவர் முதுகுதெரியும்போது ஆர்ப்பாட்டம் போடுவார்கள்; தங்கள் முதுகின் மீது கவனமாகதிரையிடுவார்கள்.

 

ராஜினாமா மூலம் எந்தப் பிரச்னையும் தீர்ந்ததாகச் சரித்திரம் இல்லை. சிபு சோரன் என ஒரு மத்திய மந்திரி இருந்தார். நினைவிருக்கிறதா? அவர் மீது, ஓட்டு போடுவதற்காகலஞ்சம் வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு. தன் உதவியாளரை கொலை செய்ததாக மற்றொரு குற்றச்சாட்டு. நமக்குத் தெரிந்தது இவ்வளவு தான். இன்னும் எவ்வளவுஉண்டோ!அவரும் ஒரு கட்டத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். என்ன ஆயிற்று? லஞ்சமாக வழங்கப்பட்ட பணம் திரும்பப் பெறப்பட்டதா? அவருக்கு லஞ்சம்வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? இறந்துபோன உதவியாளர் தான் உயிரோடுதிரும்பினாரா? சோரன் ராஜினாமா செய்தார்; அவ்வளவு தான்!

 

நட்வர் சிங் என ஒரு வெளியுறவுத் துறை அமைச்சர் இருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவர் தான் வெளியுறவு மந்திரி. ஈராக்கிலிருந்து எண்ணெய்கொள்முதல் செய்ததில் அவருக்குத் தொடர்பு என்ற புகாரால் ராஜினாமா செய்தார். என்ன ஆயிற்று? எண்ணெய் ஊழலில் நாடு இழந்த பணம் ஈடு கட்டப்பட்டதா?அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? அவர் தான்விசாரிக்கப்பட்டாரா? நட்வர் சிங் ராஜினாமா செய்தார்; அவ்வளவு தான்!

 

ராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பென்னாண்டஸ் மீது சவப்பெட்டி ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. ராஜா விவகாரம் மாதிரி தான்; பார்லிமென்டே நடக்கவில்லை. பெர்னாண்டஸ் எழுந்து நின்றாலே, வெளிநடப்பு செய்துவிடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தது காங்கிரஸ். வேறு வழியில்லாமல் அவரும் ராஜினாமா செய்தார்.கடந்த 2009ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது சி.பி.ஐ., தயாரித்த குற்றப்பத்திரிகையில் பெர்னாண்டஸ் பெயரே இல்லை. அப்போதுகாங்கிரஸ் சுமத்திய குற்றச்சாட்டு என்ன ஆனது? சி.பி.ஐ., பொய்யானகுற்றப்பத்திரிகையைத் தயார் செய்துவிட்டதா? இல்லை, காங்கிரஸ் தான்பெருந்தன்மையாக விட்டுவிட்டதா?

 

ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு முறைகேட்டில், மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் ராஜினாமா செய்தார். கார்கில் போரில் இறந்தோரின் ஆத்மா சாந்தியடைந்துவிட்டதா? அதே கட்சியைச் சேர்ந்த இன்னொரு சவான்முதல்வராகிவிட்டார்; அவ்வளவு தான். அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்முடிந்துவிட்டது.

 

மீடியாக்களும், எதிர்க்கட்சிகளும் ராஜாவின் பக்கம் பார்வையைத் திருப்பின. எந்தச்சேனலிலும் வேறு செய்தியில்லை; ஒரு நாளும் பார்லிமென்ட் நடக்கவில்லை. விடாமல் குடைச்சல் கொடுத்ததன் எதிரொலியாக, அவரும் ராஜினாமாசெய்துவிட்டார். முடிந்தது ஸ்பெக்ட்ரம் பிரச்னை.அடுத்த விவகாரத்தை நோக்கி கவனத்தைத் திருப்ப வேண்டியது தான். இது தானேநடந்து கொண்டிருக்கிறது இத்தனை நாளாய்? இது தான் நடக்க வேண்டுமா இனியும்?கருணாநிதி, ஜெயலலிதா, மாயாவதி, முலாயம் சிங், எடியூரப்பா, லாலு, சோனியாஎன, குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அரசியல்வாதியே கிடையாது. அதேசமயம், குற்றம்செய்ததாக தண்டிக்கப்பட்ட அரசியல்வாதியும் கிடையாது. எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும், பாரபட்சமற்ற விசாரணை என்பதற்குஎந்த உத்தரவாதமும் இல்லை. எல்லாருடைய செயல்பாட்டுக்கு பின்னணியிலும்ஏதோ ஒரு சதி இருக்கிறது. அப்புறம் எப்படி இவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்கமுடியும்?

 

ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும்; ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்; முறைகேடான சொத்துக்களை மொத்தமாக பறிமுதல் செய்ய வேண்டும். இவையெல்லாம் நடந்தால் மட்டுமே ஊழலின் வீச்சு ஒரு சதவீதமாவது குறையும். இதற்கெல்லாம் முதல் படியாக, உருப்படியான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல், ஒன்றை ஒன்று மிஞ்சும் ஊழல் கதைகளைக்கேள்விப்பட்டு, வாயைப் பிளந்துகொண்டிருக்க வேண்டியது தான்.ஒரு வரியில் சொல்வதானால்...  விரல் நுனியில் இருக்கும் ஆயுதத்தைவீணாக்கிவிட்டு, விதியை நோவதில் அர்த்தமில்லை.