தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கருணாநிதி பேசுவதை கேளுங்கள் முட்டாள்களே… …





கருணாநிதி பேசுவதையும், கடிதமாகவும், கேள்வி பதில் அறிக்கைகளாகவும், அவராகவே இலக்கியம் என்று கருதிக் கொண்டு எழுதும் கவிதைகளாகவும் கொட்டப்படும் விஷமத்தனமான உளறல்களை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொலைக்காட்சி ஊடகங்களும், செய்தி ஊடகங்களும், உங்கள் முகத்தில் அறைவது போல கொண்டு வந்து சேர்த்தே தீரும்.

கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள், கட்டண கழிப்பிடத்தை திறந்து வைத்தாலும், அது முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிடப்படும். கருணாநிதி பெங்களுரில் உள்ள மகள் செல்வி வீட்டுக்குச் சென்று தனக்கு மிகவும் பிடித்த நாட்டுக் கோழியை விரும்பி உண்டதை செய்தியாக நக்கீரன் வெளியிடுகிறது.

தேவைக்கு அதிகமாக, பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், சமூகம் அங்கீகரித்திருக்கம் ஒழுக்க கோட்பாடுகளை மீறி, நெருக்கடியின் காரணமாக இரண்டாவது திருமணம் செய்து, அக்குடும்பத்தை மக்கள் வரிப்பணத்தில் பராமரித்து வரும் சிஐடி காலனிக்கு கருணாநிதி இரண்டு நாட்கள் செல்லவில்லை என்றால் அதையும் செய்தியாக வெளியிடும் ஊடகங்கள் இருக்கின்றன.

கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தின் செய்திகள் அவர்களுக்கு பொழுது போக்கு. ஆனால் லட்சக்கணக்கான தமிழக மக்கள், தங்களின் பிரச்சினைகள் செய்தியாக வேண்டும் என்று தவம் இருக்கிறார்கள்.


ஆனால் இந்த ஊடகங்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. இந்த ஊடகங்களின் கவனத்தை திருப்பவாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தான் அவ்வப்போது, ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும், கருத்தரங்கங்களும் நடத்த முனைகிறார்கள்.

உண்ணாவிரதமோ, ஆர்ப்பாட்டமோ, கருத்தரங்கமோ, எதுவாக இருந்தாலும், அதை நடத்துவதில் எத்தனை சிரமம் என்பது அந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மட்டுமே அறிவார்கள்.

நிகழ்ச்சிக்கு இடத்தை தேர்வு செய்வதில் இருந்து, அந்நிகழ்ச்சிக்கு துண்டறிக்கை தயார் செய்வது, போஸ்டர் தயார் செய்வது, மைக் ஏற்பாடு செய்வது, விழாவுக்கு வருபவர்களுக்கு தேநீர் அல்லது மதிய உணவு ஏற்பாடு செய்வது, பேச்சாளர்களை அழைப்பது, அழைப்புக் கடிதம் கொடுப்பது, போலீஸ் அனுமதி பெறுவது என்று ஒரு நிகழ்ச்சியினுள் பொதிந்திருக்கும் பணிகள் ஏராளம். இப்படி எல்லா ஏற்பாடுகளையும், ஒரு பொது தேவைக்காகவும், பரந்து பட்ட உழைப்பாளி மக்களின் தேவைகளுக்காகவும், சமூக ஆர்வம் உள்ள அனைவரும் செய்தே வருகிறார்கள்.


இப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தவுடன் நிகழ்ச்சி நடக்கும் நாளன்று காலையில் காவல்துறை, உங்கள் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது என்று அனுமதி மறுக்கும் கடிதத்தை வழங்கினால் எப்படி இருக்கும் ?


கடந்த வாரத்தில் மட்டும் இது போன்ற மூன்று நிகழ்வுகள். முதல் நிகழ்வு. ஈழத் தமிழர்களை, தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி வதை முகாம்களுக்குள் அடைத்து வைப்பதை எதிர்த்து 13.03.2010 அன்று மாலை சென்னை மெமொரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்ட நிலையில் முதல் நாள் இரவு, அனுமதி மறுக்கப் பட்ட கடிதத்தை காவல்துறை வழங்கியது.

அடுத்த நிகழ்வு, சென்னையில் குடிசைப் பகுதி மக்களை சென்னை நகரை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் சென்னையை விட்டு அவர்களை விரட்டியடிக்க திட்டமிட்டு அரசு நடத்தும் அராஜக நடவடிக்கைகளை கண்டித்து, உண்ணாவிரதம் இருக்க திட்டமிடப்பட்டு, விழாவுக்கு சீமான், திருமாவளவன் போன்றோரை அழைத்து, எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்டு நிகழ்ச்சி தொடங்கும் நாளன்று காலை, நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடங்கள் இருக்கும் போது, காவல்துறை அனுமதி மறுக்கப் பட்டது என்ற கடிதத்தை கொடுத்தது. நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடங்கள் இருக்கும் போது அனுமதி மறுத்தால் என்ன செய்வீர்கள் ? விழா தொடங்குகிறது என்ற அறிவிப்பு வெளியிடச் சென்ற தோழர் உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது காவல்துறை.

மூன்றாவது நிகழ்வு. சேலத்தில் காவல்துறையின் சித்திரவதைகளுக்கும், வன்முறைகளுக்கும், போலி மோதல் படுகொலைகளுக்கும் எதிராக இன்று (செவ்வாய்) நடைபெற இருந்தது. சேலம் சுபிக்ஷா அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருந்த கருத்தரங்கில் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் பொ.ரத்தினம், ப.பா மோகன், புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொள்ள இருந்தனர். இந்நிகழ்ச்சிக்காக ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆராய்ச்சி செய்து காவல்துறையின் சித்திரவதை மற்றும் அராஜகங்களைப் பற்றிய ஒரு அறிக்கையை புகழேந்தி தயார் செய்து, சென்னையிலிருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார்.


சுபிக்ஷா அரங்க உரிமையாளரை மிரட்டி, அரங்கை பூட்டி, சாவியை எடுத்துச் சென்று விட்டது காவல்துறை என்று இன்று காலை தொலைபேசி வாயிலாக தகவல் தெரிந்தது.

நியாயமான ஜனநாயக வழியிலான போராட்டங்கள் எதையுமே நடத்த விடாமல் காவல்துறை இப்படி தடுப்பது கருணாநிதிக்கு தெரியாமலா நடக்கிறது என்கிறீர்கள் ? அப்படி தெரியாமல் நடந்தாலும், இப்படிப்பட்ட பொறுக்கி காவல்துறை அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு செயலிழந்த முதலமைச்சர் எதற்கு நமக்கு ?

உண்மை என்னவென்றால், கருணாநிதிக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது, மக்களின் நிலை என்னவென்பதெல்லாம் பற்றி துளியும் அக்கறை இல்லை.

இருந்தால் ஒரு முதல்வர், பிரியாணி பொட்டலம் விநியோகித்துக் கொண்டிருக்கும் அவலத்தை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? உழைப்பாளி மக்களின் உழைப்பை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப் படுவதை சவுக்கு வரவேற்கவே செய்கிறது என்றாலும், இந்தப் பிரியாணி பொட்டலத்தை வழங்க, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவசியமா ?

இதில் கலந்து கொண்ட இன்னொரு பெரும்புள்ளி, இந்து ராம். கருணாநிதியிடம் “இந்நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள் ஒலிபரப்பப்ட்டனவே” என்று கேட்டதற்கு, பாட்டுக்கு இந்தி நன்று, ஆனால் நாட்டுக்கு தேவையில்லை என்று பதில் அளித்து, அதை தலைப்புச் செய்தியாகவும் ஆக்கிய கருணாநிதியை என்னவென்று சொல்வீர்கள்.


கருணாநிதியை திட்டி, விமர்சித்து பதிவு எழுதுவதற்கு சவுக்குக்கே சலிப்பு ஏற்பட்டாலும் என்ன செய்வது, மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லையே…

கருணாநிதி கக்கூஸ் போனாலும் அது செய்தியாக வேண்டும். அதை நாம் படிக்க வேண்டும். ஆனால் உழைப்பாளி மக்களின் பிரச்சினைகளைப் பற்றி யாரும் எங்கேயும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் ஒரு அவல நிலை என்றுதான் மாறப்போகிறதோ.. ..


கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கருணாநிதி மனம் புழுங்க வேண்டும், கண்ணீர் விட வேண்டும் என்று சவுக்கு சபிக்கிறது.

சவுக்குக்கு சாபங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும், கையறு நிலையில் மனம் அங்கலாய்ப்பதை வேறு என்ன சொல்லி ஆற்றுவது ?

சவுக்கு
 
 

அல்லி ராணி அடிமையும், தள்ளு வண்டி தனயனும்…






இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் அல்லி ராணி யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த அல்லி ராணியின் அடிமையாகவும், பிரதிநிதியாகவும் இன்று பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






இந்தியாவின் பல மாநிலங்களை தனது மகனின் பட்டம் சூட்டும் விழாவுக்கு சோதனைக் கூடங்களாக சோனியா பயன் படுத்திக் கொண்டிருப்பது குறித்த செய்திகளை நாம் பத்திரிக்கைகளின் காண்கிறோம்.

இந்தியா நேரு குடும்பத்துக்கு நிரந்தர லீசுக்கு விடப்பட்டது போல, அந்தக் குடும்பம் இன்றும், என்றும் நடந்து கொண்டே வந்திருக்கிறது.



உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் நடத்தப் பட்ட சோதனை நல்ல பயனை கொடுத்திருப்பதையடுத்து, காங்கிரஸ் பலவீனமாக இருக்கும், தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கும், தனது மகன் பட்டம் சூட்டப் படும் நாளில், காங்கிரசுக்கு போட்டியாளர்களே இல்லாத ஒரு சூழலை உருவாக்கவும், காங்கிரஸ் தொடர்ந்து திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறது.



இந்தியாவின் மிகப் பெரிய ஊழலாக உருவெடுத்த ஸ்பெக்ட்ரம் ஊழலை திமுகவுக்க நெருக்கடி கொடுக்க ஒரு அருமையான ஆயுதமாகவே காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. 2009ல் காங்கிரஸ் கட்சிக்கு முன்பை விட அதிகமான அளவுக்கு எம்.பி.கள் கிடைத்ததும், திமுகவை அக்கட்சி 2004ல் நடத்தியதற்கும் தற்போது நடத்துவதற்கும் ஏராளமான வித்தியாசம் இருந்தது என்பதைக் கண்டோம்.


ராசாவுக்கு மீண்டும் தொலைத் தொடர்பு அமைச்சகம் வழங்கப் பட மாட்டாது என்று காங்கிரஸ் பிடிவாதம் பிடித்ததும், கருணாநிதி பிடிவாதமாக அத்துறைதான் வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து அத்துறையை பெற்றதும் நாம் அறிந்ததே.


கிராமங்களில் பொலி காளை என்று காளை மாட்டை வளர்த்து வருவார்கள். இன்று போல Artificial insemination டெக்னாலஜியெல்லாம் வளராத காலத்தில், பசு மாட்டோடு இனப்பெருக்கம் செய்வதற்கு இந்தப் பொலி காளைகள் மட்டும் தான். இந்தப் பொலி காளைகள், அடங்கவே அடங்காது. மாட்டு வண்டியில் பூட்டினால், தறி கெட்டு ஒழுங்காகச் செல்லாமல் அலையும். எப்போது பார்த்தாலும் ஊரைச் சுற்றிக் கொண்டு திரியும். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இந்தப் பொலி காளையின் தொல்லை பொறுக்க முடியவில்லை என்றால் “காயடிப்பது” என்ற ஒரு தந்திரத்தை பயன்படுத்துவார்கள். இது என்னவென்றால் இந்தப் பொலிகாளையின் விதைப் பைகளை நசுக்கி, இந்தக் காளையை இனப்பெருக்கத்திற்கு தகுதியிழப்பு செய்து விடுவார்கள். காயடிக்கப் பட்ட காளை, சாதுவாக, வைக்கோலை மேய்ந்து கொண்டு சாதுவாக இருக்கும். வண்டியில் பூட்டினால் ஒழுங்காக போகும்.


தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தில், எந்த முடிவு எடுப்பதென்றாலும் 5 அல்லது 6 அமைச்சர்கள் கொண்ட குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற விதியை போட்டு, புதிதாக டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளைத் திறந்து வைப்பதைத் தவிர, தன்னிச்சையாக எந்த வேலையையும் ஆ.ராசா செய்ய முடியாத வகையில் நெருக்கடி அளித்து, ராசாவை, “காயடிக்கப் பட்ட காளையாகவே” மன்மோகன் சிங் மாற்றி விட்டார்.




இந்தத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தில் நெருக்கடிகள் வரும் என்றுத் தெரிந்தும், இத்துறைதான் வேண்டும் என்று கருணாநிதி பிடிவாதம் பிடித்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. சுதந்திர இந்தியா சந்தித்த மிகப்பெரிய ஊழல், எந்த நாளிலும் விசாரணைக்கு வரும் என்பது, ஊழலிலே ஊறித் திளைத்த கருணாநிதிக்கு தெரியாததல்ல. அதனால், மீண்டும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தை பெற்று, ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அழிப்பதுதான் கருணாநிதி மற்றும் ராசாவின் திட்டம்.


வல்லவனுக்கு வல்லவன் வைகயகத்தில் உண்டல்லவா ? இத்திட்டத்தை அறிந்த மன்மோகன் சிங், ஆ.ராசா அமைச்சராக இருக்கும் போதே, ராசாவின் துறையில், சிபிஐ யை விட்டு சோதனை நடத்தினார். இச்சோதனையில் ஏராளமான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது. இந்த ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ வசம் உள்ளதால், எப்போது வேண்டுமானாலும், வழக்கு பதிவு செய்து, ராசாவுக்கு பெரிய ஆப்பாக வைக்க காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது.



ஆனாலும், சிபிஐ தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக காட்டிக் கொள்ள பகீரத பிரயத்தனம் செய்தாலும், சீக்கிய கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் காரர்கள் மீது நடவடிக்கை எடுத்ததிலும், அல்லி ராணியின் நெருங்கிய குடும்ப நண்பர், ஒட்டோவியோ கொட்டரோச்சியை வெளிநாட்டுக்கு தப்ப விட்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவர் எடுக்க வசதி செய்து கொடுத்ததிலெல்லாம் சிபிஐயின் பாரபட்சமற்ற நடவடிக்கையை அனைவரும் அறிவார்கள் என்பதால், தானாக சிபிஐயை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வைக்காமல், டெல்லி உயர்நீதிமன்றமும், டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் தொடுத்திருக்கம் வழக்கில் ஏதாவது உத்தரவு கிடைத்தால் இதுதான் சாக்கென்று, உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது.


இந்நிலையில், டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, கடந்த வாரம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஆ.ராசா மீது வழக்கு தொடுக்க இரண்டு வாரங்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அனுமதி வழங்க ஆணை பெறுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.


இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கை, திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க ஒரு ஆயுதமாக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது என்பதே உண்மை. ஏனெனில், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முடிவுகள் எடுக்கப் பட்டாலும், இதையறிந்த பிரதமர் என்று வேண்டுமானாலும் தலையிட்டு இதைத் தடுத்திருக்க முடியும். அப்படி செய்யாமல், ராசாவும், கருணாநிதியும், இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளிக் குவிக்கையில் வாய் மூடி மவுனியாக இருந்த, அல்லி ராணியின் அடிமைக்கம் இந்த ஊழலில் பெரும் பங்கு உள்ளது.


இது தவிர, இன்னும் ஒரு பெரிய ஊழலில், திமுக பெரும் புள்ளிகள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும், மேம்படுத்தப் பட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப் பட்டது. முதலில் இத்திட்டத்திற்கு மதிப்பீடு தந்தது L&T Ramboll என்ற நிறுவனம். இந்நிறுவனம், இத்திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி செலவாகும் என்ற மதிப்பீட்டை வழங்கியிருந்தது.

சில நாட்கள் கழித்து, இந்த மதிப்பீட்டைக் கணக்கில் கொள்ளாமலேயே, அமெரிக்காவைச் சேர்ந்த Willbur Smith Associates என்ற ஒரு நிறுவனம், ரூபாய் 1500 கோடி செலவாகும் என்ற திருத்திய மதிப்பீட்டை வழங்கியது. இந்த வில்பர் ஸ்மித் என்ற நிறுவனத்தின் சார்பாக, இந்த மதிப்பீட்டை வழங்கியது, ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெயரளவில் Willbur Smith மதிப்பீடு வழங்கினாலும், இம்மதிப்பீட்டையெல்லாம் தயாரித்து வழங்கியது, ஆ.ராசாவின் மனைவி இயக்குநராக உள்ள Greenhouse நிறுவனம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





இதுபோன்ற வேலைகளில் ராசா தன்னிச்சையாக இறங்கும் அளவுக்கு தைரியம் இல்லாதவர் என்பதும், ராசாவின் ஒவ்வொரு அசைவின் பின்னணியிலும் கருணாநிதி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறான ஊழல்களில் திமுக இப்போது இறங்குவதற்கான காரணம் இருக்கிறது.


கடந்த யுபிஏ அரசாங்கத்தில், கப்பல் மற்றும் தரைப் போக்குவரத்து டி.ஆர்.பாலு வசம் இருந்ததால், இந்தியா முழுவதும் கட்டப் படும் சாலைகள் மற்றும், பாலங்கள் கட்டுமானத்தில் பெரும் தொகையை கையாடுவது சிரமம் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போதைய யுபிஏ அரசாங்கத்தில், இந்த சாலைப் போக்குவரத்து, திமுக வசம் இல்லை. தொலைத்தொடர்புத் துறையில் எந்த ஊழலும் செய்ய முடியாத அளவுக்கு கடுமையான கட்டுப் பாடுகள் இருக்கின்றன.

ஜவுளித் துறையில் பெரிய அளவில் ஊழல் ஏதும் செய்ய முடியாது. மேலும், தயாநிதி மாறனை, முன்பு போல முழுமையாக நம்ப கருணாநிதி தயாராக இல்லை.


ரசாயனம் மற்றும் உரத் துறைக்கு அமைச்சராக இருக்கும் அழகிரி, பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் அழும் குழந்தை போல, மதுரையில், காதுகுத்து, கபடிப் போட்டி, பூப்பூ நீராட்டு விழா போன்ற விழாக்களில் கலந்து கொள்வதில் பிசியாக இருப்பதால் அந்தத் துறையிலும் ஒன்றும் காசு பார்க்க முடியவில்லை.


அதனாலேயே இது போல, தமிழ்நாட்டில் நடக்கும் எந்தத் திட்டங்களாக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும், அதில் காசு பார்ப்பது என்று கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், இதிலும் ராசாவுக்கு ஆப்பு காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வில்பர் ஸ்மித் நிறுவனம் வழங்கியிருந்த திட்ட மதிப்பீட்டை கப்பல் போக்குவரத்துத் துறையும் சாலைப் போக்குவரத்துத் துறையும் நிராகரித்து விட்டன. மேலும் கடந்த ஜனவரி மாதத்தில், சென்னை க்ரீம்ஸ் சாலையில் இருந்த, ஆ.ராசாவின் பினாமி அலுவலகத்தில், டெல்லியைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டு, இந்த மதிப்பீடு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றிச் சென்று விட்டதாகவும் தெரிகிறது.


இந்நிலையில், இந்த சென்னைத் துறைமுகம், மதுரவாயல், மேம்படுத்தப் பட்ட இணைப்புச் சாலைத் திட்டத்தையே சுத்தமாக கைவிட்டு விட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், நேற்று (20.03.2010) இந்த சென்னைத் துறைமுகம் மதுரவாயல் மேம்படுத்தப் பட்ட இணைப்புச் சாலை தொடர்பாக சிபிஐ முழுமையான விசாரணை நடத்த சிபிஐக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஸ்பெக்ட்ரம், மதுரவாயல் சாலை போன்ற திட்டங்களில் சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டதன் மூலம், சட்டமன்றத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி வைக்கும் பட்சத்தில் 100க்கும் அதிகமான இடங்களும், துணை முதல்வர் பதவியோடு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் வைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு திமுக மசியா விட்டால், கூட்டணியை முறித்துக் கொண்டு, திமுக மத்தியில் செய்த ஊழல்கள் தொடர்பாக விசாரணையைத் தீவிரப் படுத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதையெல்லாம் நன்கு அறிந்த தள்ளுவண்டித் தனயன், காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனியே தேர்தலை சந்தித்தால் என்ன வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்று உளவுத் துறையை முடுக்கி விட்டு, சர்வே நடத்திக் கொண்டிருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்லிராணியின் அடிமையும் தள்ளு வண்டித் தனயனும் நடத்தும் இந்த கீரி பாம்பு சண்டையால், வேடிக்கைப் பார்க்கும் நமக்குத் தான் நஷ்டம் என்பதுதான் வேதனை.

சவுக்கு
 
 

மீண்டும் ஈழத்தில் போர் - இது காலத்தின் கட்டாயம்

மேற்குலகும், ஐ.நா.வும் சிறிலங்கா தொடர்பாகப் பொறுமை இழந்து வருவதாகவே உணர முடிகின்றது.  விடுதலைப் புலிகள் மேற்குலகின் விருப்பங்களுக்கு இசைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளச் சம்மதிக்காத காரணத்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இரக்கமில்லாக் கொடும் போரினால் முறியடிக்கப்படுவதைப் பார்வையாளர்களாக இருந்து அனுமதித்தன.

போரின் இறுதி நாட்களில், சிங்கள தேசத்தின் தாக்குதலின் கொடூரங்களை உணர்ந்து கொண்டு, உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்த மேற்குலகு முயன்ற போதும் அதற்கு இந்தியா அனுமதி வழங்க மறுத்ததனால் ஈழத் தமிழர்கள் மீது மிகக் கொடூரமான மனிதப் பேரவலம் நிகழ்த்தி முடிக்கப்பட்டது. இறுதி நாட்களில், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கணிப்பு வெளியாகியிருந்தாலும், அங்கிருந்து தப்பி வெளியேறியவர்கள் வெளியிட்டுவரும் தகவல்களின்படி, பலிகொள்ளப்பட்ட தமிழர்களின் தொகை ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பல ஆயிரம் குடும்பங்களில் ஒரு உறுப்பினர்கூடத் தப்பியிருக்கவில்லை என்பதால், இது குறித்த உண்மை விபரங்கள் வெளிவரக் கால தாமதம் ஆகலாம்.

இருப்பினும், யுத்தம் முடியும்வரை மவுனத்தைக் கடைப்பிடித்த மேற்குலகுக்கு, யுத்தத்திற்குப் பின்னரான சிங்கள அரசின் அணுகுமுறை ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. யுத்த முனையில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வும், எதிர்கால நம்பிக்கையுடனான புனர்வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்ற மேற்குலகின் வற்புறுத்தல்கள் சிங்கள அரசால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், சிங்கள அரசு மீதான மேற்குலகின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றது. ஆரம்பத்தில், இந்த அழுத்தங்களை இந்திய – சீன – ரஷ்ய ஆதரவுகளுடன் முறியடித்த சிறிலங்கா அரசு தற்போது, ஐ.நா. ஊடான யுத்தக் குற்ற விசாரணைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையை எதிர்கொண்டு வருகின்றது.

ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புப் போருக்குப் பின்பலமாக நின்ற இந்தியா, மேற்குலகின் மனிதாபிமான அணுகு முறைகளுக்கும் தடை போட்டுத் தனது சிங்களக் கூட்டாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் ஈழத் தமிழர்களது பகை நாடாகக் கருத வேண்டிய நிலையை எதிர் கொண்டுள்ளது. இதனால், ஈழத் தமிழர்கள் தமக்கான நீதிக்காக மேற்குலகின் பக்கம் சாயவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இது இந்தியாவின் தென் திசைக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும் அபாயம் கொண்டது என்பதை இந்தியா நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளது. இதனால்த்தான், தனது இறுதித் துருப்புச் சீட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் களத்தில் இறக்கியுள்ளது.
 ஈழத் தமிழர்களது அரசியல் அபிலாசைகளையும், சிங்கள தேசத்தின் மேலாதிக்க சிந்தனையும் இந்தியாவின் மிரட்டல் அரசியலுக்கு இலங்கைத் தீவு களமாகியது. ஈழத் தமிழர்கள் ஊடான இந்தியாவின் இலங்கைப் பிரவேசம் விடுதலைப் புலிகளின் இந்திய எதிர்ப்பால் தடம் மாறியது. இந்தியாவின் எதிர்பார்ப்பை விடுதலைப் புலிகள் நிர்மூலம் ஆக்கியதால், அதன் மிரட்டல் அரசியல் சரணாகதி அரசியலாக மாற்றம் பெற்றது. அதனை சிங்கள தேசம் அழகாகக் கையாண்டு, முள்ளிவாய்க்கால் வரை இந்தியாவின் துணையோடு ஈழத் தமிழர்கள் மீது அத்தனை கொடூரங்களையும் நடாத்தி முடித்தது. தற்போது, சிங்கள அரசு இந்தியா மீது மிரட்டல் அரசியலை ஆரம்பித்துள்ளது. அது இந்தியாவை தற்போது ஆட்டம் காண வைத்துள்ளது.  இந்தியா விரித்த சதி வலையில் இந்தியாவையே சிங்கள தேசம் சிக்க வைத்துள்ளது. தற்போது சீனாவை வைத்து இந்தியாவை மிரட்டும் அரசியலை சிங்கள தேசம் ஆரம்பித்துள்ளது.

இந்தியாவை மீறி தெற்காசியாவில் எதுவுமே சாத்தியமில்லை என்ற காலம் காலாவதியாகி, இலங்கைத் தீவிற்கான தமிழீழ நுழைவாயிலையும் இந்தியா இழந்து தடுமாறுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடத்தைப் பிடித்தால், அவர்கள் மூலமான காய் நகர்த்தல்கள் ஊடாகத் தன்னை இலங்கைத் தீவில் நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியா கணக்குப் போடுகின்றது. இதற்குச் சமாந்தரமாக கிழக்கின் முதல்வராக மகிந்தாவால் முடி சூட்டப்பட்ட பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் வலை விரிக்கப்படுகின்றது. ஆனாலும், கிழக்கு தமிழர்களது கரங்களை விட்டு நழுவிச் செல்லும் நிலையை அடைந்து விட்டதால், அது எதிர்பார்த்தபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் கூட வடக்குடன் இந்தியக் கனவு முடிவுக்கு வரப் போகின்றது.

தற்போது, சிங்கள அரசு மேற்கொள்ளும் இராணுவக் குடியிருப்புக்கள், சிங்கள வர்த்தகர்களது யாழ். முற்றுகை, வர்த்தக வளாகங்கள் என்ற போர்வையிலான சிங்களத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புக்கள் என்று வடக்கு சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் சென்று கொண்டுள்ளது. இது வட பகுதித் தமிழர்களுக்கு அச்சத்தைக் கொடுப்பதுடன், அவர்களது மொத்த கோபமும் இந்தியா மீது திரும்பும் நிலையில், தற்போது தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியும் சிங்கள ஆக்கிரமிப்பு வர்த்தகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. தமிழீழத்தின் அகிம்சைப் போராட்டத்தின் வடிவமாகப் பூசிக்கப்பட்ட அந்த நினைவுச் சின்னத்தின் சிதைப்பு தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலையை உருவாக்கியுள்ளது.

சிங்கள தேசத்தினதும் அதன் காடையர் கூட்டத்தினாலும் ஈழத் தமிழர்களின் போராட்டகால நினைவு சின்னங்களும், கலாச்சார அடையாளங்களும் திட்டமிட்டுத் தொடர்ந்தும் சிதைக்கப்பட்டு வருவது புலம்பெயர் தேசத்துத் தமிழர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது. சிங்கள தேசத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களையும் உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் சோகங்களால் சோர்ந்து போயுள்ள புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் நீதி கோரிப் போராட வேண்டிய அவசியத்தினுள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிங்கள தேசத்துடன் சமரசம் செய்து வாழக்கூடிய அத்தனை திசைகளும் அடைக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சவால்களை சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது. இது சாத்தியமல்ல என்று தத்துவம் பேசுபவர்கள் இஸ்ரயேலின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். அதிலிருந்து எதிர்கால நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் போராட மறுத்தாலோ, தயங்கினாலோ சிங்கள ஆக்கிரமிப்புக்குள் நாம் எமது தேசத்தை இழந்துவிடுவது மட்டுமல்ல, எமக்கான அடையாளங்களையும் இழந்து விடுவோம்.

சிங்கள தேசத்திற்கு எதிராகவோ, ஒற்றைச் சிங்களவனுக்கு எதிராகவோ நாம் கருத்துக் கூறாவிட்டாலும் கூட, நாம் தமிழர்களாக வாழ முற்பட்டால் அவர்களது தாக்குதல்களுக்கு இரையாகுவோம் என்பதே தியாகதீபம் திலீபன் அவர்களது நினைவுத் தூபி இடிப்பு எமக்கு உணர்த்தும் செய்தியாகும். எமக்கான மீட்பர்களை வெளியே தேடுவதை நிறுத்தி, எமக்குள்ளேயே வாழும் மீட்பர்கள் வழியில் பயணிப்பது காலத்தின் கட்டாயமாகவே உள்ளது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய சார்பு நிலைப்பாடும் புலம்பெயர் தமிழீழ மக்களின் சுதந்திரத் தமிழீழ நிலைப்பாடும் ஒரே புள்ளியில் சந்திப்பதற்கான சாத்தியம் அற்றே காணப்படுகின்றது. இந்தியச் சிறைப்படுத்தலிலிருந்து தன்னை விடுவித்து, தமிழீழ விடுதலைக்கான புலம்பெயர் தமிழர் சக்திகளுடன் இணைந்து பயணிப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இப்போதுள்ள ஒரே வழி. இதை உணர்ந்து கொள்ளத் தவறினால், தமிழர் விடுதலைக் கூட்டணி போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முகவரியற்றுப் போய்விடும். 




--
....நன்றி....

தூங்கும் புலியைப்
பறைகொண்டு எழுப்புவோம்...
தூய தமிழரைத்
தமிழ்கொண்டு எழுப்புவோம்!'


மன்னார் பகுதியில் எண்ணெய்க் கொள்ளை மத்திய தமிழ் அமைச்சர் குடும்பத்திற்குப் பங்கு இராசபக்சேவின் சூழ்ச்சித் திட்டம்

இந்திய-இலங்கை உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் பெட்ரோல் கிடைப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. காவிரிப் படுகைப் பகுதி என்பது நாகை மாவட்டப் பகுதியிலும் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் மன்னார்-யாழ்ப்பாணம் பகுதி வரை பரவி உள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் பகுதியில் பெட்ரோல் எடுப்பது என்பதை இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும், அதனை இரு நாடுகளுமே சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என 1974ஆம் ஆண்டில் இந்தியாவும் இலங்கையும் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்றன. இதற்குப் பரிசாகத் தான் கச்சத் தீவு இலங்கைக்கு இந்தியாவால் விட்டுக்கொடுக்கப்பட்டது. ஆனால் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் இருக்கும் பகுதிகளில் ஒரு பகுதியைச் சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்திருக்கிறது. இந்தியாவைத் திருப்திப்படுத்த இந்தியாவுக்கு ஒரு பகுதியைக் கொடுத்திருக்கிறது. இது போக இன்னும் மூன்று பகுதிகளைப் பிற நாடுகளுக்கு வழங்குவதற்குச் சிங்கள அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.


இலங்கையின் பெட்ரோலிய வளர்ச்சித் துறை அமைச்சரான ஏ.எச்.எம்.பெளசி இந்த விவரங்களை அண்மையில் அறிவித்துள்ளார். இந்த எண்ணெய் எடுக்கப்படுமானால் தென் ஆசியாவில் செல்வ வளமிக்க நாடாக இலங்கை மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கை இப்போது ஆண்டுக்கு 1,53,000 கோடி ரூபாய் பெறுமான எண்ணெயை இறக்குமதி செய்கிறது. எதிர்காலத்தில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கை மாறும் என அவர் கூறினார். இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட பகுதி இந்திய அரசுக்கு கொடுக்கப்படவில்லை. மாறாக கெய்ரன் இந்தியா என்னும் கம்பெனியின் துணை நிறுவனமான கெய்ரன் லங்கா என்னும் நிறுவனத்திற்கு இந்த குத்தகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 450 கோடி ரூபாயில் எண்ணெய் எடுக்கும் பணிகளைத் தொடங்க இருக்கிறது. இந்திய அரசில் உயர் பதவி வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிக முக்கிய அமைச்சர் ஒருவரின் குடும்பத்திற்குக் கெய்ரன் லங்கா நிறுவனம் சொந்தமானது. இதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அந்த நிறுவனம் சம்பாதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் போர் தொடங்குவதற்கு முன்ன தாகவே இந்த குத்தகை அந்த நிறுவனத் திற்குச் சிங்கள அரசினால் வழங்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அமைச்சரின் முயற்சியால்தான் இந்திய அரசு முழுமையாக சிங்கள அரசுக்கு ஆயுத உதவி உட்பட எல்லா உதவிகளையும் செய்ய முன்வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

மன்னார் வளைகுடாப் பகுதியில் சுமார் 1000 கோடி பேரல் அளவுக்கு மேல் எண்ணெய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்திய அமைச்சருக்குச் சொந்தமான இந்த நிறுவனமும், சீனாவும் இன்னும் பிற நாடுகளும் மன்னார் வளை குடாவில் கிடைக்கும் எண்ணெயைப் பங்கு போடுவதற்கு சிங்கள அரசு முழுமையாக ஒப்புதல் தந்துள்ளது.

1974ஆம் ஆண்டு இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட உடன்பாட்டிற்கு இது எதிரானது. இந்திய அரசும் இலங்கை அரசும் கூட்டாக இந்தப் பகுதியில் எண்ணெய் எடுக்க வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு அதைக் குத்தகைக்குக் கொடுக்க இலங்கைக்கு உரிமையில்லை. ஆனால் இந்த உடன்பாட்டை மீறி இலங்கை இவ்வாறு செய்வதை ஏன் என்று கேட்பதற்கு இந்திய அரசு முன்வராததற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அமைச்சரே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த குத்தகையைத் தன் குடும்ப நிறுவனத்திற்கு கொடுத்து விட்ட காரணத்தினால் தான் இந்த அமைச்சர் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதைக் கண்டிக்க முன்வரவில்லை என்பதும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே பேசி வந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கதாகும்.


--
....நன்றி....

தூங்கும் புலியைப்
பறைகொண்டு எழுப்புவோம்...
தூய தமிழரைத்
தமிழ்கொண்டு எழுப்புவோம்!'


ஈழத்துக்கு இப்பொழுது தேவைப்படுவது என்ன?சுகி சிவம் பார்வையில் -காணொளி



ஈழத்துக்கு இப்பொழுது தேவைப்படுவது என்ன?சுகி சிவம் பார்வையில் -காணொளி 



நன்றி
பகலவன் 

தமிழ் வாழ்கிறதாம் - பகலவன் கவிதை.


தமிழ் வாழ்கிறது 
தமிழ் நாடு அழிய...
இவன் வாழ்கிறான் 
தமிழினம் அழிய...

மாநாடு நடத்துகிறானாம்
தமிழை அழிக்க....
கொடநாடு போகிறாளாம்
கன்னடத்து அம்மா.

இனம் அழிய பார்த்தோம்
அரசியல் நாடகத்தை...
தன்மானம் ஒழிய பார்க்கிறோம்
மானாட மயிலாட .

மாநாடு வேண்டுமாம்
செம்மொழி தமிழ் வாழ...
திராவிடம் வேண்டுமாம்
இவன் பரம்பரை வாழ.

பாரத ரத்னா வேண்டுமாம்
இவன் துரோகங்கள்வாழ...
இலவசம், மயக்கம்கொடுப்பானாம்,
தமிழன் சோம்பேறியாய்வாழ.

தமிழைத்தேடுகிறேன்
செம்மொழி- தமிழைத் தேடுகிறேன்!
தமிழனைத்தேடுகிறேன்,
தன்மானத்தமிழனைத் தேடுகிறேன்,

கட்சிக்குச் சொந்தக்காரன்
பாதித்தமிழன் !
சாதிக்குச்சொந்தக்காரன்
மீதித்தமிழன்.

அகர முதல எழுத்தெல்லாம்
தமிழனின் வாழ்வேடு ;
அதைப் புரிந்துகொள்ளாதவரை
நீதான் தமிழனே ! தமிழுக்குச்சாபக்கேடு.

தமிழனின் துரோகத்தின்
பட்டியல் நீண்டுபோக...
தமிழனின் வீரத்தின்பட்டியல்
குருடாகிப்போனது. 

தமிழ் வாழ்கிறதாம்
முல்லையில் அரசியல்விளையாட !
தமிழ் நடனம்ஆடுகிறதாம்  
டாஸ்மாக்கில் குடிகாரத்தமிழன்ஆட.

தமிழ் வாழ்கிறதாம்,
பாலாற்றில் தெலுங்கன் மணலைஅள்ள !
தமிழினம் ஒளிர்கிறதாம்,
தமிழன் அகதியாய் உலகம் திரிய.

வந்தாரை வாழவைத்தானாம்,
வந்தவனெல்லாம் ஏறிமிதிக்க !
இந்தியஅன்னையை வாழ்த்துகிறானாம்,
தமிழகமீனவனை ஏறிநசுக்க.

ஆம்! எங்கும் தமிழ்நாடுவாழ்கிறது,
தமிழ் அழிய ....
இவன் வாழ்கிறான்,
தமிழினம் அழிய !!!

....பகலவன்....






இந்தியாவிற்கு பாதுகாப்பு தமிழ் ஈழம்தான்.

21-ம் நூற்றாண்டை அணுகும் தற்போதைய உலகம் அடைந்த விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்களிலும் பார்க்க, அது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட தீவிரமடைந்துள்ளன.
புத்திஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் அனைவரும் அவற்றையெண்ணி அதிர்ச்சி, அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.

பெரியார் பேசிய திராவிடத்தின் உள்ளடக்கம் தமிழர்களின் விடுதலைதான்

பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் என்ற இந்த நூலை ஒரு பெரியாரின் தொண்டன் என்ற அடிப்படையில் பெருமிதத்தோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்று சில சொற்களை சொல்ல விரும்புகிறேன். இந்த தமிழ்ச் சமுதாயத்தில், தமிழ்நாட்டில் மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தலைவர்களில் பெரியார் தான் முதன்மையானவர். அப்படிப்பட்ட தலைவரை இவரது சரியான உருவம் எது, இவருடைய சரியான சிந்தனைகள் எவை என்று விளக்குவதற்கு அவருடைய கருத்துகள் முழுமையாக தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைத்திருக்க வேண்டும்.

கைப்புண்ணை பார்க்க கண்ணாடி தேவையில்லை

அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது என்பது மிக தெளிவு.ராசாவின் மீது நடவடிக்கை எடுக்காத மதிய அரசும் அந்த ஊழலே நடக்கவில்லை என்று மிகபெரிய பொய்யை திரும்ப திரும்ப சொல்லும் மாநில அரசும் ஊழலுக்கு துணை நிற்கின்றன என்பது மிக தெளிவு.நியாயங்களையும் நீதிகளையும் பேசி வரும் மத்திய அரசு முதலில் அமைச்சர் ராசாவை நீக்கிவிட்டு விசாரணை நடத்தட்டும், அவர் குற்றமற்றவர் என்று நிருபிக்கப்பட்டால் மீண்டும் பதவிக்கு வரட்டும் அல்லது தண்டனை பெறட்டும் .இதுதான் மக்கள் விரும்புவது .

வெளிச்சத்திற்கு வரும் கருணாநிதியின் மூடநம்பிக்கைகள்.


உலகம் முழுதும் தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லி திரியும் கூட்டத்தின் தலைவர் கருணாநிதி அவர்கள் மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாய் இருப்பதை உலகிற்கு எடுத்து சொல்வதே இக் கட்டுரை.


தினம் நடக்கும் பூஜை –

ஒன்றும் அறியாத தொண்டர்களை மடையர்களாக மாற்றி விட்டு அவர்கள் தலைவர் கருணாநிதி ஒய்யாரமாய் அமர்ந்திருக்கிறார். அதுவும் எப்படி இந்து மதத்தின் எல்லா பலன்களையும் அனுபவித்துக் கொண்டு. தினம் தினம் அவர் வீட்டில் பூஜை நடக்கிறது. பகவானுக்கு தினம் பஜனை நடக்கிறது. என்னவென்று கேட்டால் எல்லாம் தலைவரின் மனைவி செய்கின்றார், அதில் தலைவருக்கு பங்கில்லை. அதெப்படி குடும்ப தலைவரின் பங்கில்லாமல் பூஜை செய்ய முடியும், யாகம் செய்ய முடியும். புரோகிதர்கள் அதற்கு சம்மதம் தர மாட்டார்கள்.

ஏமாற்றப்படும் ஈழ மக்கள் - எங்கே சென்றது இந்தியாவின் உதவிப்பணம் ?

ளக்குடியமர்த்தப்பட்ட இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதாக தெரிவித்த சிறீலங்கா அரசு தற்போது நிதி உதவிகள் எதனையும் வழங்காது ஏமாற்றிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் வரும் தகவல்களாவது ,

வன்னியில் நடைபெற்ற போரினை தொடர்ந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களை மீளக்குடியமர்த்தும் போது அவர்களுக்கு 25,000 ரூபாய்களையும், அதன் பின்னர் 50,000 ரூபாய்களையும் தருவதாக இலங்கை அரசு உறுதியளித்திருந்த போதும் உதவிகள் எவையும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 50,000 ரூபாய்களை வழங்குவதாக இலங்கை அரசு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது தெரிவித்திருந்தது. ஆனால் நிதி உதவிகளை இன்றுவரை வழங்கப்படவில்லை என மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாது, மீள்குடியேற்றத்தின் போது 25,000 ரூபாய்கள் உடனடியாக வழங்கப்படும் என அரசு ஆரம்பத்தில் தெரிவித்திருந்த உதவிகள் கூட வழங்கப்படவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தமக்கு நிதி கிடைத்ததும் தாம் அதனை வழங்குவதாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது

திமுக - 200 ரூபாயும் பிரியாணி பொட்டலமும் அதிமுக -100 ரூபாயும் பிரியாணி பொட்டலமும்.

பென்னாகரம்:முதல்வர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா பிரசார கூட்டங்களில், அதிகளவில் கூட்டங்களைச் சேர்க்க, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.தி.மு.க.,வில் முதல்வர் கருணாநிதி பிரசாரத்தில் பங்கேற்க வரும் ஒரு நபருக்கு, 200 ரூபாய் மற்றும் பிரியாணி கொடுப்பதாகக் கூறி ஆட்கள் சேர்க்கும் பணி நடக்கிறது.அதேபோல், அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்களில் கூட்டத்தைச் சேர்க்க 100 ரூபாயும், பிரியாணியும் வழங்குவதாக கூறி, ஆட்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது.தலைவர்கள் வருகையை முன்னிட்டு அந்தந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்பு மற்றும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.முதல்வர் வருகையையொட்டி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலைகள் சரி செய்யப்பட்டு, இருபுறமும் உள்ள மரங்களில் நட்சத்திர வடிவிலான பிரதிபலிப்பான்கள் (ரிப்ளெக்டர்கள்) பொருத்தப்பட்டுள்ளன.அதேபோல், தொகுதியின் முக்கியமான பகுதிகளிலிருந்து, பென்னாகரம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை குறிக்கும் வகையில், புதிதாக விளம்பர போர்டுகள் எழுதப்பட்டு, ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன.

 

மானிய விலையில் மின் இயந்திரம் வழங்கபென்னாகரம் மக்கள் கோரிக்கை:மானிய விலையில் மின் இயந்திரம் வழங்கி, கயிறு திரிப்பு தொழிலை மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பென்னாகரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.தமிழகத்தில் வறட்சியான மாவட்டமாக தர்மபுரி உள்ளது. காவிரி ஆறு அருகில் இருந்தும் குடிநீர் தேவைக்காக மக்கள் அல்லல்படும் அவலம் பென்னாகரத்தில் உள்ளது.மழைப் பொழிவும் இல்லாததால், வயல்வெளிகள் வறண்டு காணப்படுகின்றன. தண்ணீர் இல்லாததால் செங்கல், புளி, கயிறு, பால் உற்பத்தி போன்ற தொழில்கள் தான் தற்போது இங்கு அதிகமாக நடக்கிறது.கற்றாழை கயிறு திரிப்பு தொழிலை நம்பியே, பாப்பாரப்பட்டி, ஆலமாமரத்துப்பட்டி, சிட்லக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் உள்ளனர்.

 

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து கற்றாழை நார்கள் மொத்தமாக தனியார் நிறுவனங்களுக்கு வருகிறது. அவர்கள் 50 கிலோ, 100 கிலோ என்ற அளவில், கயிறு திரிக்கும் தொழிலாளர்களுக்கு வழங்குகின்றனர். அவற்றை கயிறாக திரித்து மீண்டும் அந்த நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டும்.கற்றாழை நார் மீது டீசல், தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும், அவற்றை கூர்மையான ஆணிகளில் அடித்து பட்டு நூல் போன்று வெளியில் எடுக்கின்றனர். அவற்றை சேகரிக்கும் தொழிலாளர்கள், கூடையில் போட்டு அதற்குரிய கை இயந்திரம் மூலம் கயிறாக திரிக்கின்றனர்.அவ்வாறு திரிக்கும்போது, கைகள் அறுபட்டு காயம் ஏற்படும் நிலையும் உள்ளது. 50 கிலோ கொண்ட கற்றாழை நாரில், அரை கிலோ எடை கொண்ட 90 கயிறு கட்டுகள் கிடைக்கின்றன.இதற்கு, ஆண் தொழிலாளர்களுக்கு 200 ரூபாயும், பெண் தொழிலாளர்களுக்கு 100 ரூபாயும் கூலியாக வழங்கப்படுகிறது. இத்தொழிலை நம்பி பாப்பாரப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.மானிய விலையில் மின் இயந்திரம் வழங்கி, கயிறு திரிப்பு தொழிலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.பாப்பனேரிப்பட்டியைச் சேர்ந்த ஜெயவேல் கூறியதாவது:கற்றாழை கயிறு நல்ல வலுவானது. டில்லி, உத்தரபிரதேசம் போன்ற பகுதிகளில் கட்டில் தயாரிப்புக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

 

அரை கிலோ எடை கொண்ட 90 பீஸ் கயிறு தயார் செய்து கொடுத்தால், 450 ரூபாய் கிடைக்கும். அதில், 250 ரூபாய் அந்த நிறுவனங்களே நாருக்கு எடுத்துக் கொள்வர். மீதம் 200 ரூபாய் கூலியாக கிடைக்கும்.ஒரு நாளைக்கு 50 கிலோ நார் மூலம் கயிறு திரிக்கலாம். அதற்கென இயந்திரம் எல்லாம் இல்லை. கைகளில் தான் திரிக்க வேண்டும். சில நேரங்களில் கை அறுபட்டு ரத்த காயங்களும் உண்டாகும். மின்சார சப்ளை மூலம் இயங்கும் இயந்திரங்களை வழங்கினால், இப்பகுதியில் தொழில் இன்னும் நன்றாக இருக்கும்.இவ்வாறு ஜெயவேல் கூறினார்.



மறுபடியும் கருணாநிதியின் சாணக்கியதனமே வெல்லும்

கருணாநிதியின் தொடர் வெற்றி

ஈழத்தில் தமிழினம் அழிக்கப்படுவதை பார்த்து தமிழக தமிழர்கள் பொங்கி எழும்போது அதை திட்டமிட்டு திசை திருப்பி தான் ஒரு அரசியல் சாணக்கியன் என்பதை நிருபித்தார் கருணாநிதி.ஈழத்தில் மக்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்படும்போது கூட, இது  தமிழக மக்களுக்கு   ஒரு சிக்கலே(பிரச்சனை) அல்ல என்று கூறி, நாய்க்கு எலும்பு துண்டை போடுவதை போல இலவச திட்டங்கள் அளித்து, தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மக்களின் நாடி துடிப்பை சரியாக அறிந்து வைத்திருந்தார் கருணாநிதி.மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிக்கும் போதெல்லாம் மனித சங்கிலி போராட்டம்,  உறுபினர்கள் ராஜினாமா.ஒரு நாள் உண்ணாவிரதம் என்று கூறி தினம் ஒரு நாடகம் அரங்கேற்றியவர் கருணாநிதி.   தமிழ்  இனத்தை இத்தாலிக்கு தாரை  வார்த்து கொடுத்து தான் ஒரு இந்தியன் என்று மார் தட்டி கொண்டவர் கருணாநிதி.
 
தமிழ் இனம் அழிந்தது மக்கள் அடிமையாக ஆக்கப்பட்டார்கள். காப்பாற்றுவான் என்று எண்ணிய தலைவனின் கயமை தனத்தை தமிழ் மக்கள்  உணர்ந்தனர். உலக தமிழர்களின் கண்கள் திறந்தது. தமிழர்களின் தலைவன் என்று போற்றி புகழ்ந்த அவர்களது வாயால் கருணாநிதியை தமிழின துரோகி என்று முத்திரை குத்தினர் கருணாநிதியின் சாணக்கியத்தனம் அப்போதைக்கு  தோற்றது.இன்று அந்த முத்திரையை கிழிதெறிந்து தன்னை நல்லவன் போல் உலக மக்களுக்கு காட்டி கொள்ள கருணாநிதி கண்டுபிடித்ததுதான் உலக தமிழ் செம்மொழி மாநாடு.  மொழிக்கு உயிர் கொடுப்பது அம மொழியை பேசும் மனிதர்கள் உயிருடன்  வாழும் வரை தமிழனை அழித்துவிட்டு தமிழுக்கு உயிர் கொடுக்க போகிறாராம் கருணாநிதி. தமிழனை அழித்துவிட்டு தமிழை  வாழவைக்க போகிறாராம் கருணாநிதி . இதை    கேட்க ஒரு மந்தை   கூட்டம் உலகம் முழுவதிலும் இருந்து ஒன்று கூட போகிறது தமிழ் தமிழ் என்று கூக்குரலிட்டு  தமிழனை மறக்க போகிறது.செம்மொழி மாநாட்டில் தமிழுக்கு அழகு சேர்கிறேன் என்று கூறி கருணாநிதி விடும் எழுத்து சீர்மை   அறிக்கையை கண்டு உலக தமிழர்கள், இதுதான் சரி இன்று ஒரு கூட்டமும், இது சரியல்ல என்று ஒரு கூட்டமும், மேடை கட்டி  பேசும். ஈழத்தில் தமிழன் செத்து மடிவதை கண்டும் காணாமல் இருந்த தமிழர்கள்  கூட்டம் , இன்று    தமிழன் இல்லையேல் உயிரற்று போகும் தமிழுக்காக உயிர் போகும் வரை கத்தி கொண்டிருப்பர்.

அதற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும் தமிழின துரோகி கருணாநிதி என்று முத்திரை குத்தியதை மக்கள் மறந்து, தமிழனை கொன்றவன் என்பதையும் மறந்து, மறுபடியும் கருணாநிதியை வெல்ல வைப்பர். தமிழனை கொன்று இன துரோகியானவர் தமிழை கொண்டு தமிழின தலைவராக போகிறார்.மறுபடியும் கருணாநிதியின் சாணக்கியதனமே வெல்லும்

தமிழை சீர்மை படுத்துவதை விட்டு விட்டு தமிழனை சீர்மை  படுத்துவோம்தமிழில் களை எடுப்பதை விட்டு விட்டு தமிழின துரோகிகளை களை எடுப்போம்

                         "நாளைய தமிழினத்தின் எதிகாலம் "நாம் தமிழர்" நம் கையில்"
                        " நாம் தமிழராய் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம் தமிழீழத்தை"

 
என் அறிவுக்கு எட்டிய சிற்சில ஆலோசனைகள் இவை .

 
இரு   தமிழனாக             இரு.   இரு  உணர்வுள்ள    தமிழனாக  இரு

இரு   தமிழினத்தை        காக்க  உயிர்   கொடுக்கும்   தமிழனாக  இரு
 
எழு   தமிழின                  துரோகிகளை  அழிக்கும்   நெருப்பாய் எழு.

எழு   தமிழனை               தமிழனாக  மாற்றுவதற்கு  எழு .



 

குளம் வற்றும்வரை காத்திருந்த கூட்டமைப்புக் கொக்குகள்!

குளம் வற்றும்வரை காத்திருந்த கூட்டமைப்புக் கொக்குகள்!
 
அந்த வன்னிக் குளம் நிரம்பியிருந்தது. அங்கே, அழகான தமிழ் மீன்கள் துள்ளி விளையாடின. கரையோர மரத்தில் குடியிருந்த கூட்டமைத்துக் குடியிருந்த கொக்குகளுக்கு அந்த மீன்களின் ஆனந்த அழகு பிடிபடவில்லை. என்றாலும், குளத்துடன் கோபிக்கும் தைரியமும், அதனை உடைக்கும் ஆற்றலும் இல்லாமல்  அந்த மீனகளை இரையாக்கும் ஆசையுடன் தவித்தன. ஆனாலும், அந்த மீன்களை அரவணைத்துப் பாதுகாத்தது அந்த வற்றாத குளம். மீன்களும் ஆனந்தமாக நீச்சலடித்தன. அபார நம்பிக்கையுடன் எந்த அச்சமும் இல்லாமல் நீந்தி மகிழ்ந்தன.

அயற்காட்டுச் சிங்கள நரிகளுக்கும் அந்த அழகு பிடிக்கவில்லை. குளத்திலிருந்துகொண்டு கும்மாளம் போடும் அந்த மீன்களை நினைத்தபோதெல்லாம் பசி எடுத்தது. அதனால், அந்த மீன்களைக் குரூரத்துடன் பார்த்தது. அவற்றைச் சிதைத்து, உணவாக்க ஆசை கொண்டது. அந்தக் குளத்தின் அணைகளை உடைத்தாவது அந்த மீன்களைப் பிரித்து எடுக்க யோசனை போட்டது. அயற்காட்டு இந்திய நரிகளுக்கும் தூது அனுப்பியது. ஆலோசனை கேட்டது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எப்படி நழுவ விடுவது? இரண்டு நரிக் கூட்டங்களும் இணைந்து திட்டம் தீட்டின.

நாங்கள் பிரிந்திருந்து தனித் தனியாக இந்தக் குளத்தை உடைப்பது சாத்தியமேயில்லை. இருவரும் இணைந்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று தோழில் கைபோட்டு உறவாடின. இந்திய நரிகள் செய்யும் உபகாரத்திற்கு, கிடைக்கும் இரையைப் பங்கு போடவும், தப்பிப் பிழைத்து எஞ்சிய தண்ணீரில் சிக்கித் தவிக்கும் மீன்களைத் தேவைக்கேற்றவாறு பகிர்ந்து கொள்ளவும், அதற்காக அந்தப் பகுதியில் நிலை கொள்ளவும் இந்திய நரிகளுடன் சிங்கள நரிகள் ஒப்பந்தம் செய்து கொண்டன.

வெகு நாட்கள் திட்டம் தீட்டப்பட்டு, ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. குளத்தை உடைக்கும் தாக்குத்களும் மேற்கொள்ளப்பட்டது. பலமான குளக் கட்டுக்களும் தொடர்ந்த நரிக் கூட்டங்களின் தாக்குதல்களால் சிதைந்து உடைந்தே போய்விட்டது. தண்ணீர் கரை கடந்தது.  மீன்கள் தவித்தன. தண்ணீரின் போக்கில் தப்பி ஓடின. நரிகளின் வேட்டையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் பலிகொள்ளப்பட்டன. அப்படியும் தொடர்ந்தது தாக்குதல். இறுதிக் கரைவரை ஓடி ஒழிந்த மின்கள் சிறைபடுத்தப்பட்டன. நரிகளால் சித்திவதை செய்யப்பட்டு, சீரழிக்கப்பட்டன.

குளம் வற்றியதை கொக்குகளால் கொண்டாட முடியாவிட்டாலும், இரைக்கு இனிப் பஞ்சம் எப்போதும் இல்லை என்று திருப்தி கொண்டன. அதற்காக நரிகளுடனும் பேச்சுக்கள் நடாத்தின. அந்தக் குளத்தின் எல்லைக்குட்பட்ட அனைத்தும் எங்களது ஆளுகைக்குட்பட்டது என்று ஏற்றுக்கொண்டால், உங்களையும் சேர்த்துக்கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபணை கிடையாது ஆனால், எங்கள் மீன் வேட்டைக்கு எந்த இடைஞ்சலும் கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்தன.

குளத்தின் எல்லைக்குள் நாங்களும் இருந்தால்தான், சிங்கள நரிகளின் மீன் வேட்டையைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு, எங்கள் பிரன்னத்தை ஏற்றுக் கொள்வதுடன், எங்கள் ஆலோசனை கேட்டுத்தான் நீங்கள் நடக்க வேண்டும். நாங்கள் மீன் வேட்டையில் சிங்கள நரிகளுடன் சமரசம் செய்து கொள்ளுகின்றோம் என்றன தலைக் கொக்குகள் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தன.

தப்பிப் பிழைத்த மீன்கள் மீதான பகுதி ஆதிக்கம் கொக்குகளிடம் வந்து சேர்ந்தது. அத்துடன் அவைகளுக்கிடையே போட்டிகளும் உருவெடுத்தன. சில கொக்குகள் சிங்கள நரிகளுடன் கூட்டுச் சேர்ந்தன. சிங்கள நரிகளாலேயே எஞ்சியிருக்கும் மீன்களை வாழ விட முடியும் என்று பட்டயம் போட்டு அறிவித்தன. இல்லை, இல்லை… இந்திய நரிகள்தான் இந்த மீன்களின் இரட்சகர்கள். அவர்களை மீட்பர்களாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த மீன்களுக்குப் பாதுகாப்பு என்றன தலைமைக் கொக்குகள். இந்திய நரிகள் சிங்கள நரிகளை விடவும் கொடுமையானவை, கோரமானவை. அந்த இரண்டு நரிகளாலும் இந்த மீன்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கப்போவதில்லை. மீண்டு அணையைக் கட்டும் உதவியை எவரிடமிருந்தாவது அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தால் மட்டுமே அவர்கள் இந்த இடத்தில் வாழ முடியும் என்று போர்க் குரல் எழுப்பின மீன்களின் அவலம் கண்டு கலங்கிநின்ற சில மனச்சாட்சியுள்ள கொக்குகள். முரண்பட்ட கொக்குகள் அங்கிருந்து தலைமைக் கொக்குகளால் வெளியேற்றப்பட்டன.

இழப்புக்களுடன் எதிர்காலத்தையும் தொலைத்து நிற்கும் தமிழ் மீன்கள் சோகமாகத் தங்கள் விதியை நொந்து சிரித்துக்கொண்டன. குளத்திற்கு அணை கட்டித் தங்களை வாழ வைக்க யாராவது வரமாட்டார்களா? என்ற ஏக்கத்துடன் அவைகளால் காத்திருக்கத்தான் முடிகின்றது.

நீங்கள் அணை கட்டக் கைகொடுக்கப் போகின்றீர்களா? சிங்கள நரிகளின் தொடர் வேட்டைக்குத் துணைபோகப் போகுறீர்களா? அல்லது தலைக் கொக்குகளின் துணையோடு இந்திய நரிகளின் தொடர் துரோகங்களை அனுமதிக்கப் போகின்றீர்களா?

இனி நீங்களே முடிவு செய்யுங்கள்!

சி. பாலச்சந்திரன்
ஆசிரியர்
ஈழநாடு

தமிழர்கள் என்னிடம் எதுவும் கேட்க முடியாது - நான் அளிப்பதை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் -ராஜபக்ஷ


எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்ள நான் உத் தேசித்துள்ளேன். அப்போது அவர்கள் விடுதலைப்புலிகள் கேட்டதை எல்  லாம் கேட்க முடியாது.வடக்குக் கிழக்கை நான் ஒருபோதும் இணைக்கப்போவதில்லை. மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்குவது ஆபத்தானது.சமஷ்டி என்பது இலங்கையைப் பொறுத்தவரை மிகக் கேவலமானது. அது பிரிவினையுடன் தொடர்புபட்டது.இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிங்கப்பூரின் "ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ்' பத்திரி கைக்கு வழங்கியுள்ள நீண்ட பேட்டியில் மேற்கண்டவற்றைத் தெரிவித்திருக்கின்றார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பேட்டியில் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்கு இப்போது மன்னிப்புக் கிடையவே கிடையாது என்றும், அரசியலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்தத் தவறிய முட்டாள் என்றும் விமர்சித்துள்ளார். "ஸ்ரெய்ட் ரைம்ஸ்' பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களது கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து எவ்வாறு மதிப்பிடு கிறீர்கள்? மூன்றில் இரண்டு பெரும் பான்மை சாத்தியமா?


பதில்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர் தல் குறித்து நான் பதற்றமற்ற நிலையில் உள்ளேன். மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது எனக்கு முக்கியமான விடயமல்லஏனென்றால், நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட வேளை என்னிடம் பெரும்பான்மை இருக்கவில்லை. நாடாளு மன்ற சபாநாயகரை எதிர்க்கட்சியினரே நியமித்தனர்.நான்கு வருடங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை நான் கலைத்த வேளை,  சபாநாயகர் உட்பட 47 புதியவர் கள் எனது கட்சியில் இருந்தனர். எனக்கு பெரும்பான்மையும் இருந்தது.ஆகவே, நான் எண்ணிக்கை குறித்து கவலையடையவில்லை. நாங்கள் சிறந்த வெற்றியைப் பெறுவோம். எனினும், மூன்றில் இரண்டு பெரும் பான்மை என்பது அரசமைப்பை மாற்றுவ தற்கு உதவும்.இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்க வில்லை.

கேள்வி: விடுதலைப் புலிகளின் ஆதர வாளர்கள் இன்னமும் செயற்படுகிறார்களா?

பதில்: இலங்கைக்குள் செயற்படு வதை விட, அதற்கு வெளியேதான் அதி களவிற்கு செயற்படுகின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தை வைத்தே வாழ்க்கை நடத்துகின்றனர்.அவர்களுக்கென நிகழ்ச்சி நிரல் உள் ளது. அவர்கள் இதில் வாழ்கின்றனர்.கடந்த காலம் போன்று தமிழர்கள் தற் போது நிதி வழங்க முன்வராததால் விடுத லைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் நிதி திரட்டியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக அவர்களைப் பொறுத் தவரை இங்கே ஏதாவது நடக்கவேண்டும்.

கேள்வி: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை குறித்து என்ன சொல்கிறீர்கள்? அதன் அதிகாரங் களைக் குறைப்பீர்களா?

பதில்: இதனை நாடாளுமன்றமே தீர்மா னிக்கவேண்டும். நாடாளுமன்றம் இவ் வாறான விடயங்களை கடந்த காலங்க ளில் கையாண்டுள்ளது. ஆகவே, நாடாளு மன்றமே இதனைத் தீர்மானிக்கட்டும்.

கேள்வி: நாடாளுமன்றம் நீங்கள் சொல்வதைத் தானே செய்யும்?

பதில்: எனக்குத் தெரியும். அவ்வாறே கருதுகிறேன். என்றாலும், சில மாற்றங்கள் நிகழவேண்டும் என எதிர்பார்க்கிறேன். நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கும் கடப்பாடுடைய ஜனாதிபதி முறையை நான் விரும்புவேன். அல்லது இவை அனைத்தையும் விட்டுவிட்டு நாடாளு மன்றத்திற்குப் பதிலளிக்கும் பிரதமரை யும் விரும்புவேன். அல்லது ஓய்வுபெற்று சிங்கப்பூரின் லீகுவான் யூ போன்று அர சிற்கு ஆலோசனை வழங்க விரும்புவேன். ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில்லாவிட் டால் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந் திருக்க முடியாது.

கேள்வி: பூரண நல்லிணக்கத் திட்டம் குறித்து எழுதியிருந்தீர்கள். அதன் அர்த்தம் என்ன?

பதில்: இதனையே நான் நம்புகிறேன். சமாதானம் இல்லாமல் அபிவிருத்தி இல்லை. இதேபோன்று அபிவிருத்தி இல் லாமல் சமாதானம் இல்லை.கிராமமொன்றிற்கோ அல்லது நலன் புரி முகாமிற்கோ சென்று உங்களுக்கு அரசமைப்பு மாற்றம் வேண்டுமா எனக் கேளுங்கள். எங்களுக்கு இருப்பதற்கு வீடு வேண்டும், எனது குழந்தைக்கு கல்வி வேண்டும் என்ற பதிலே வரும்.இந்தப் பகுதிகளை அபிவிருத்தி செய் தால் புதிய நடைமுறையும், புதிய அரசி யல்வாதிகளும் உருவாகலாம்.இதற்காகவே நான் தேர்தலை நடத்தி னேன்.வடபகுதி மக்கள் எனக்கு ஆதர வளிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்திருந் தும் தேர்தலை நடத்தினேன்.என்றாலும் எனக்குக் கிடைத்த வாக் குகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

கேள்வி: தீர்வு என்ற வகையில் சமஷ்டி கொள்கை தகுதிவாய்ந்தது இல்லையா? இந்தியா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடு களில் இது பலனளித்துள்ளதே?

பதில்: சமஷ்டி என்பது இலங்கை யைப் பொறுத்தவரை மிகக் கேவலமான வார்த்தை. அது பிரிவினையுடன் தொடர் புபட்டுள்ளது.அரசியலிலிருந்து ஓய்வு பெற அல்லது விலகத் தீர்மானித்தால் சமஷ்டி பற்றிப் பேசுவதே சிறந்த வழி, அதற்குப் பின்னர் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட் டார்கள்.நான் ஓர் அரசியல்வாதியல்லவா? உண்மையான நிலைவரம் என்னவென் றால், இது இந்தியா போன்று பாரிய நாடல்ல. இலங்கையின் வரலாற்றை மறக்க முடியாது.தற்போது அனைத்து முதலமைச்சர்க ளும் எனது கட்சியைச் சேர்ந்தவர்கள் என் பதால் அவர்களை என்னால் கட்டுப் படுத்த முடிகின்றது.என்றாலும், அவர்களுக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்புச்சபைக் கூட்டத்தைக் கூட்டு கின்றனர்.அவர்களுக்கு மேலும் அதிகாரத்தை வழங்கினால் தாங்கள் நினைத்ததை எல் லாம் செய்வார்கள்.இந்தியத் தமிழர்கள் தமது பகுதிக்கு வரமுடியாது என அவர்கள் தெரிவிக்கவும் கூடும்.

கேள்வி: அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து என்ன கருதுகிறீர்கள்? குறிப்பாகப் பொலிஸ் மற்றும் காணி மீதான அதிகாரங் கள் மாகாண சபைகளுக்கு வழங்குவது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

பதில்: இதுகுறித்து நாங்கள் ஆராய வேண்டும். 13 ஆவது திருத்தம் ஏற்க னவே நடைமுறையில் உள்ளது.பொலிஸ் அதிகாரத்தைத் தவிர, ஏனையவற்றை மாகாணசபைகளுக்கு வழங்கிவிட்டோம். நிலங்கள் தொடர்பாகச் செய்வதற்கு எதுவுமில்லை.வடக்கில் மாகாணசபை இல்லாத போது என்னால் என்ன செய்யமுடியும்?எவ்வாறெனினும், மத்திய அரசின் கட்டுப்பாடும் இருக்கவேண்டும்.நீர்ப்பாசனக் குளங்களைத் தமது நண் பர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் சிலர் வழங்குகின்றனர். பொலிஸ் அதிகாரத் தைப் பொறுத்தவரை எனது மக்கள் இதனை வழங்கவேண்டாம் என்றே தெரிவிப்பர்.சோனியா காந்தி உத்தரப்பிரதேசத் திற் குச் சென்றவேளை, என்ன நடை பெற்றது என்பதைப் பாருங்கள். அவரது தொகுதிக் குள் அவரை நுழைவதற்கு அந்த மாநில முதலமைச்சர் அனுமதி வழங்க மறுத்தார். அவர்கள் பொலிஸின் கட்டுப்பாட்டிற் காக அடிபணிகின்றனர். இந்தியாவிடமிருந்து பாடம் கற்றுள்ளேன்நான் இந்தியாவிடமிருந்து பாடம் கற் றுள்ளேன். இதே தவறை நான் செய்வேன் எனக் கருதுகிறீர்களா?

கேள்வி: விடுதலைப் புலிகள் முற் றாக அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறு வீர்களா?

பதில்: இல்லை. செயற்படாமல் இருக்கும் உறுப்பினர்கள் உள்ளனர். குறிப் பாக இலங்கைக்கு வெளியே அவர்கள் உள்ளனர். தலைமைத்துவம் அழிக்கப்பட் டதால் அனைத்தும் முடிவடைந்து விட வில்லை. யுத்தம் முடிவடைந்து ஒன்பது மாதங்களே ஆகின்றன. பயிற்றுவிக்கப் பட்ட தற்கொலைப் போராளிகள் செயற் படாமலுள்ளனர்.விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை அவர்கள் தற்கொலைப் போராளி களை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையை நடத்தினர். அவர்கள் கொழும் பிலும் ஏனைய வெளிநாடுகளிலும் உள் ளனர். பலர் அவர்களைப் பயன்படுத்த லாம்.பொன்சேகா ஒரு முட்டாள் மன்னிப்பு வழங்கு சாத்தியம் இல்லை.

கேள்வி: பொன்சேகா குறித்த உங் களது உணர்வலைகள் என்ன? நீங்கள் திட்டமிட்டுள்ள தேசிய நல்லிணக்கத்தின் கீழ் அவரையும் அரவணைக்க முடியாதா?

பதில்: அவர் ஒரு முட்டாள். நவம்பர் 16ஆம் திகதி அவர் இங்கு எனக்கு முன் னால் அமர்ந்திருந்தார். ஜனாதிபதித் தேர்த லில் போட்டியிட விரும்புகிறீரா என நான் அவரைக் கேட்டேன். அவர் இல்லை யென்றார்; அதுபற்றிச் சிந்திக்கவில்லை என்றார். இறுதியாக என்னைச் சந்தித்த போது கூட அவர் இதுபற்றிக் கூறவில்லை.நான் அவரிற்கு ஆலோசனை வழங் கினேன். அரசியல், இராணுவத்திற்குரியது அல்ல என்றேன்.இராணுவத்தில் நீங்கள் உத்தரவிட் டால் அவர்கள் பின்பற்றுவார்கள். அரசிய லில் வேறு மாதிரி. உங்களை விமர்சித்த வர்களிடமே நீங்கள் செல்கிறீர்கள் என்றேன்.அவர் இதுவும் அரசியல்தானே என்றார்.நான் நீங்கள் அவதானமாக இருங்கள், அவர்கள் ஒருநாள் உங்களைக் கைவிடு வார்கள் என்றேன்  சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பு வழங்கியதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.அவர் தன்னை அரசியலுக்குத் தயார்ப்படுத்தாத முட்டாள் என்றார்.



அனைத்து சுயநிதி கல்லூரிகளிலும் ஏமாற்றி கட்டண வசூல் நடக்கிறது.


 
முதலில் தலையங்கம் :
 
இருக்கின்ற பல சட்டங்களை நடைமுறை படித்தினாலே  அது மிகபெரிய பயனை தரும். புதிதாய் வரும் சட்டங்கள் இது போன்றவையும் தேவைதான்.சட்டங்கள் இயற்றுவதை விட அதை கண்காணித்து நடைமுறை படுத்த வேண்டும்.இப்போது உள்ள அனைத்து சுய நிதி கல்வி நிறுவனங்களும் முறை கேடான வசூலில் இயங்குவது உண்மை. "கல்வி நிறுவனத்தின் தகவல் குறிப்பேட்டில்  குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிறுவனங்களையும் தண்டிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. "என்ற வாசங்கள் எதற்கு ?  கல்வி நிறுவனங்கள் தப்பித்து கொள்ளவா? தகவல் குறிபேட்டில் தெரிவித்து விட்டு எது வேண்டுமானாலும் செய்யலாமா ?அந்தந்த கல்லூரியின் தரத்திற்கு ஏற்ப அரசே கட்டணத்தில் ஒரு சீரான கொள்கையை நடைமுறைபடுத்த வேண்டும் .சட்டம் இயற்றிய இன்றைய நாளில் இருந்து சட்டத்தினை அமல்படுத்து எத்தனை கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று நாம் அடுத்த வருடம் கூட பார்ப்போம்.
 
கூடுதல் செய்தி :
என்பது சதவீத சுயநிதி கல்லூரிகள் அரசியல்வாதிகளால் நடத்தபடுகிறது.
 
இப்போது தலையங்கத்திற்க்கான  செய்தியை பார்ப்போம் :
 
கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது ரூ. 50 லட்சம் அபராதமோ விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கல்வி நிறுவன நிர்வாகியை வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும் இந்த சட்டத் திருத்தம் வகை செய்யும். இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.தரமற்ற கல்வி நிறுவனங்களை தண்டிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்தால் அது கிரிமினல் குற்றமாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் குறிப்பேட்டில் (prospe​ctus) குறிப்பிட்டுள்ள கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தால் கல்வி தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த தகவலை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். கல்வி நிறுவனத்தின் தகவல் குறிப்பேட்டில்  குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிறுவனங்களையும் தண்டிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் அதிக அளவு நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்ற பரவலான புகாரை அடுத்து இந்த சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது. இது தவிர தேசிய அங்கீகார நிறுவனம் அமைக்கவும் கல்வி தீர்ப்பாயம் அமைப்பதற்காகவும் இரு வெவ்வேறு மசோதாகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.




மின்சாரத்திற்கு விடுமுறை

முதலில் தலையங்கம் :

மின்சாரத்திற்கு விடுமுறை விட்ட ஒரே நாடு அல்லது ஒரே அமைச்சர் என்று மின்துறை அமைச்சரை இன்னும் விமர்சிக்கிறார்கள், மின் பற்றாக்குறையை முன்னமே உணராமல், அல்லது அதற்க்கான ஆயத்த பணிகள் செய்யாமல் தமிழக அரசு உள்ளது இருந்தது எனபது உண்மை.மின்சாரம் மிக அடிப்படையான அவசியமான தேவை, கிராமபுரங்களின் நான்கு மணி நேரத்திற்கும் மேலான மின் வெட்டு இருப்பதுதான் உண்மை.   அனால் அமைச்சர் இரண்டு மணி நேரம்தான் என்று பொய் சொல்லுகிறார்.இதே அமைச்சர் போன வருடத்தில் மின் வேட்டினை எதிர்த்து கட்சிகள் போராடியபொழுது , மின் வெட்டி இல்லாத மாநிலம் தமிழகம் என்ற அண்டப்புளுகு ஒன்றை சொன்னார்.அந்த பொய்யை பலநாள் தாக்கு பிடித்து சொல்லி பின்னர் முடியாமல் 'மின் வெட்டு ' உள்ளது என்றார்.சரி மின் வெட்டு வந்து விட்டது என்னென பணிகள் செய்து இந்த மின் வேட்டை நீக்க போகிறார்கள் என்று திட்ட வட்டமான அறிக்கைகள் இல்லை.மின் வெட்டு என்பதை வைத்து கொண்டு தொழில் துறையில் தமிழகம் முன்னேறுகிறது என்று முதல்வரும் துணை முதல்வரும் பேசினால் அது ஏமாற்று வேலைதான்.


இதோ செய்தி :


தமிழகத்தில் அமலில் உள்ள 2 மணி நேர மின்சார வெட்டு மே மாதம் வரை தொடரும்'' என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட தமிழ் வழியிலான இணையதளத்தை, தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி. பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இது, மே 31 வரை நீடிக்கும்.இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சியில் 8 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.கூடங்குளத்தின் முதல் பிரிவில் ஜூனிலும், 2}வது பிரிவில் டிசம்பரிலும் மின் உற்பத்தி தொடங்கும்.கோடைகாலத்தில்: கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படுவது இயற்கையானது. தமிழகத்தின் ஒரு நாள் மின்தேவை 10,500 மெகாவாட்டாக உள்ளது.இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய பக்கத்து மாநிலங்களில் இருந்து நியாயமான விலைக்கு மின்சாரத்தைப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.600 மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.  தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களைப் பாதிக்காத வகையில் மின்வெட்டு செய்யப்படுகிறது.கிராமப்புறங்களில் இரண்டு மணி நேரத்தைத் தாண்டி மின்வெட்டு செய்யப்படுவதாகக் கூறுவது தவறு. கூடுதல் நேரம் மின்வெட்டு இருந்தால், மின்மாற்றிகளில் உள்ள கோளாறால் மட்டுமே ஏற்பட்டு இருக்கும்.இணையதள சேவை: தமிழகத்தில் 2.7 கோடி மின்நுகர்வோர்கள் உள்ளனர். மின் பயன்பாடு குறித்தத் தகவல்கள், சேவைகள் குறித்த தகவல்கள் மின்சார வாரியத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளன. இப்போது, கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் தமிழிலும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது'.

இணையதள முகவரி: www.tneb.in/​tamilweb9.bhp

மின் கட்டணம் உயருமா?"மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கான உத்தேச கட்டண விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. கட்டணத்தை அதிகரிப்பது குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்டு, அறிக்கை தயாரிக்கப்படும்.அதன்பின்பே, மின் கட்டணத்தை உயர்த்துவதா?இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.இணையதளம் வழியாக மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படும்' என்றார் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி.



உலக வன நாள் - 21.03.2010 - World Forest Day


இன்று உலக வனநாள்,
 
இயற்கையைப் போற்றுவோம்! இனிமையான வாழ்க்கையினைப் பெற்றிடுவோம்!
35618125.jpg
 
நன்றி : தினமணி

--
தமிழ்நாடன்
www.anaimuthu.blogspot.com
www.sitrithazh.blogspot.com
www.matruthirai.blogspot.com
www.tspkuwait.blogspot.com
00965 - 66852906 / 23727086
குவைத்



--
பொங்குதமிழ் மன்றம் - குவைத்
www.pongutamil.org
thamizh@pongutamil.org
+965 66852906






பென்னாகரம் தொகுதி என்ன நடக்கிறது - ஒரு பார்வை



பென்னாகரம் தொகுதி என்ன நடக்கிறது - ஒரு பார்வை
 
பென்னாகரம் தேர்தல் பிரசாரத்துக்கு, முதல்வர் கருணாநிதி வருவதால், பா.ம.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பென்னாகரம் தொகுதியில், வரும் 20 முதல் 25ம் தேதி வரை, முக்கிய கட்சியின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில், கடைசியாக நடந்த இடைத்தேர்தல்களில், முதல்வர் கருணாநிதி தேர்தல் பிரசாரத்துக்கு செல்லாத நிலையில், பென்னாகரத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்துக்கு திடீர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, தி.மு.க.,வினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.கருணாநிதி பிரசாரம் பெருமளவில் கை கொடுக்கும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்க்கின்றனர்.

தி.மு.க.,வினர் வழங்கும் இலவசப் பொருட்கள் குறித்து தேர்தல் கமிஷன், போலீஸ் என, புகாருக்கு மேல் புகார்களை கொடுத்து, ஆளுங்கட்சியினர் மீதான அதிருப்தியை தொகுதி யில் பா.ம.க.,வினர் ஏற்படுத்தியுள்ளனர்.தி.மு.க.,வின் இந்த நடவடிக்கைகள் வெட்ட வெளிச்ச மாகியதால், அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் சோர்வும், கட்சி தலைமையின் கண்டிப்புக்கும் தி.மு.க.,வினர் ஆளாக நேரிட்டது.

தொகுதியில் பா.ம.க., ஏற்படுத்தியுள்ள மாயையை உடைக்கவே, கருணாநிதி பிரசாரத்துக்கு கடைசி நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.முதல்வர் கருணாநிதியின் இந்த திடீர் பிரசார அறிவிப்பால், பா.ம.க., - அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் பிரசார கூட்டத்தில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள அனைத்து வன்னியர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், பேச வாய்ப்பு வழங்கப் பட உள்ளது.

வன்னியர் அமைப்புகளில் இருந்தவர்கள், பா.ம.க.,வில் இருந்த போது ஏற்பட்ட இன்னல்களை குறிப்பிட்டு பேசவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதே போல், 'வன்னியர்களுக்கு தி.மு.க., அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டும், இன்னும் உருக்கமாக முதல்வர் கருணாநிதியின் பேச்சு அமையும்' என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பென்னாகரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 23ம் தேதி இரவு சென்னையில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில், முதல்வர் கருணாநிதி செல்கிறார். மொரப்பூர் ரயில் நிலையம் சென்றதும், அங்கிருந்து, தர்மபுரி செல்கிறார். 24ம் தேதி மாலை பென்னாகரம் அண்ணாதுரை திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகிறார். அன்று இரவே மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை புறப்பட்டு செல்வதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் வருகையால் சுவர் விளம்பரங்கள் புதுப்பிப்பு:பென்னாகரம் தொகுதிக்கு, முதல்வர் கருணாநிதி வருவதையொட்டி, சுவர் விளம்பரங்களை புதுப்பிக்கும் பணியில் தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர்.பென்னாகரம் இடைத்தேர்தல் ஜனவரி 20ம் தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தி.மு.க.,வினர் தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்கள் செய்தனர்.தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மார்ச் 27ல் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து பிரசாரம் செய்து வந்த நிலையிலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியுடைய சுவர் விளம்பரங்களே காணப்பட்டன.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.அதனால், பென்னாகரம் - தர்மபுரி சாலையின் முக்கியப் பகுதிகளில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு புதிதாக எழுதப்பட்டு வருகிறது.முதல்வர், துணை முதல்வர் வருகையையொட்டி கட்சியினர் தர்மபுரியில் டிஜிட்டல் பேனர் தயார் செய்வதில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.

22 - 25 தேதிகளில் ஸ்டாலின் பிரசாரம்:பென்னாகரம் தொகுதியில் துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 22 முதல் 25ம் தேதி வரை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்கான சுற்றுப்பயண திட்டங்களை தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர்கள் தயார் செய்து வருகின்றனர். பயண திட்டம் குறித்து ஸ்டாலின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு, ஒப்புதல் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி: தர்மபுரியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, நேற்று பயிற்சி நடந்தது.பென்னாகரம் தொகுதிக்கு வரும் 27ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில், 250 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இப்பணியில் 1,230 மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்கள்275 பேரும் நுண் பார்வையாளர்களாக பணிபுரிய நியனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் பார்வையாளர்களுக்கு நுண் பார்வையாளர்கள் நேரடியாக தகவல்கள் அளிப்பர். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி, தர்மபுரி டான் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஆர்., மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நேற்று நடந்தது.

கனிமொழி பிரசாரம்:பென்னாகரத்தில், வரும் 20, 21ம் தேதியில் கனிமொழி எம்.பி., பிரசாரம் செய்ய உள்ளார்.மொத்தம் 39 கிராமங்களில் பிரசாரம் செய்யும் அவர், ஒவ்வொரு இடத்திலும் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை, வேனில் இருந்து பிரசாரம் செய்ய உள்ளார்.

250 ஓட்டுச் சாவடிகளிலும் 'வெப் கேமரா':பென்னாகரம் இடைத்தேர்தலில், ஓட்டுப்பதிவு நடக்கும் 250 ஓட்டுச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு நடவடிக்கைகளை, வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு நிகழ்வுகளை ஓட்டுச்சாவடிகளில் பொருத்தப்படும் வெப் கேமராக்கள் மூலம் மாநில தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டு அறையிலும் இன்டர்நெட் மூலம் தெரியும் வகையில் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாப்பாரப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில், மாவட்ட தேர்தல் அலுவலர் அமுதா மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் சஞ்சய்பூஸ் ரெட்டி, அஹுஜா, தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில், இதற்கான சோதனை நடந்தது.





நல்ல சாலையும் , சுற்றுபுரத்தை மற்றும் சூழலை கெடுக்காத வாகனமும் முக்கியம்.

நல்ல சாலையும் , சுற்றுபுரத்தை மற்றும் சூழலை கெடுக்காத வாகனமும்  முக்கியம்.

செய்தி இங்கே
  :
 
வாகனங்கள் உற்பத்தி செய்யும் மையங்களில் உலகின் முதல் 10 இடங்களில் ஒன்றாக சென்னையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

 

காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரகடத்தில் ரெனால்ட்-நிஸôன் என்ற கார் உற்பத்தி தொழிற்சாலை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

 

இவ் விழாவுக்கு ஜப்பான் முன்னாள் பிரதமர் யோஷிரோ மோரி தலைமை தாங்கினார். இக் கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி பேசியது:

 

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வரும் எங்கள் அரசு, தொழிற்துறை வளர்ச்சியிலும் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. ÷தற்போது சென்னை, வாகன உற்பத்தி தொழிலில் ஆசியாவின் தலைநகர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து வருகிறது.

 

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியதே இதற்கு காரணம். ஆக்ஸ்போர்டு அனலேட்டிகா என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழகம்தான் முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த இடம் என்று கூறியுள்ளது.

 

கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன. கடந்த மே 2006-ல் இருந்து எங்கள் அரசு 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

 

2 லட்சம் பேருக்கு வேலை

 

அதில் 12 தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.

 

இதுவரை தமிழகத்தில் 37 முக்கிய தொழிற்சாலைகள் மூலம் ரூ.46,091 கோடி ரூபாய் முதலீடு வரப்பெற்றுள்ளது.

 

இந்த தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,22,000 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

 

மிகப் பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உள்ள சென்னையில், வாகனங்களை சோதனை செய்யும் வசதி இல்லாமல் இருந்தது.

 

நாங்கள் மத்திய அரசிடம் பேசியதன் அடிப்படையில் தேசிய வாகன தரக் கட்டுப்பாட்டு மையத்தை ரூ.450 கோடியில் ஒரகடத்தில் உருவாக்கி வருகிறது. இதற்கு தமிழக அரசு 304 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. இந்த மையம் உருவானால் இது உலகத் தரம் வாய்ந்த மையமாக இருக்கும்.

 

உலகின் 10 தலைசிறந்த வாகன உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மையங்களில் ஒன்றாக சென்னையை மாற்ற வேண்டும் என்பதே எனது கனவு. அந்த கனவு விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

 

 

இந் நிகழ்ச்சியில் "மாதிரி' காரை இயக்கி வைத்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:

 

தமிழகத்தில் ஒரு நிமிடத்துக்கு 3 கார்களும், 75 வினாடிக்கு ஒரு கனரக வாகனமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியவில் உற்பத்தியாகும் கார்களில் 39 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தியாகிறது.

 

தமிழகத்துக்கு வரும் வாகன உற்பத்தி தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிலுக்கென்று கொள்கை வகுக்கப்படும் என்றார்.

 

இவ் விழாவில் ரெனால்டு-நிஸôன் நிறுவனத்தின் தலைவர் கார்லஸ் குஸ்ன், நிர்வாக இயக்குநர்கள் ஆகிராசாகுரி, மார்க் நசீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
தலையங்கம் :
உற்பத்தி பிரிவில் தமிழ் நாடு முன்னணியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்திதான். அதே நேரம், ஒட்டு மொத்த தமிழ் நாடு மாநில அளவில் என்ன முன்னேற்றத்தை  கண்டுள்ளது என்று பார்க்க வேண்டியது மிக முக்கியம். தேசிய (மத்திய அரசின் பணி) நெடுஞ்சாலைகளை தவிர மாநில நெடுஞ்சாலைகள் மிக மோசமான அளவில் உள்ளது , கிராமப்புற நெடுஞ்சாலைகளை பற்றி பேசக்கூட முடியவில்லை.
 
வாகன உற்பத்தி எனபது , எந்த அளவிற்கு மாநிலத்திற்கு உதவுகிறது?  வேண்டும் என்றால் வேலை வாய்ப்பில் ஐம்பது சதவீதம் பயனிற்றிருக்கலாம் , அந்த வேலை வாய்ப்பிற்காக சுற்று சூழலில் நாம் கண்டிப்புடன் இந்த நிறுவனங்களிடம் இருந்துல்லோமா  என்று பார்க்க வேண்டும்.
 
பெருமை பட்டு கொள்ளும் விடயமாக வாகன உற்பத்தி இருப்பது எந்த அளவீட்டில் மாநிலத்திற்கு உதவியுள்ளது என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும்.