தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தேவையற்ற வீண் செலவு


கொஞ்சம் தாமதமான செய்தி-தலையங்கம்தான் இது ,  எனக்கு அஞ்சலில் வந்த  ஒரு  கடித விவரத்தை அப்படியே பதிகிறேன்.

இதில் பல விடயங்களில் நமக்கு மாற்று கருது உண்டு என்றாலும் , முதலில் அந்த கடிதத்தை பதிகிறேன் நாளை இது தொடர்பான நமது கருத்தை பதிகிறோம்.
 
தமிழ் இன உணர்வாளர்களே நேற்று நடந்த சட்ட சபை திறப்பு விழாவின் சிறப்பம்சங்கள்
 
சட்ட சபை கட்டிடத்தின் நோக்கம்
 
 மக்களுக்கு சேவை ஆற்றுவதற்காக கட்டப்பட்ட கட்டிடம்.  மக்கள் பிரதிநிதிகள் சுக போகமாக இருந்து சேவை ஆற்ற வேண்டும்  என்பதற்காக மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்ட  கட்டிடம் அதை மிக குறுகிய காலத்திற்குள் 450  கோடி ரூபாயில் செலவில் கட்டப்பட வேண்டிய கட்டிடத்தை  
 
கட்டிடத்தை பார்வையிட வேண்டியவர்கள் யார்? நடந்தது என்ன ?

காலத்திற்கும் தமிழ் மக்களுக்கு சேவை ஆற்றுவதற்காக கட்டப்பட்ட கட்டிடம் முதலில்  பார்வையிட வேண்டிய உரிமை தமிழ்  மக்களுக்கே உண்டு. ஆனால் நடந்தது வேறு .  தமிழ் மக்கள் வரி பணமாக இருந்தாலும் கட்டிடத்தை  கட்டியவர்கள் வெளி மாநிலத்தை, வெளி நாட்டை சேர்ந்தவர்கள். அதாவது தமிழர் அல்லாதவர்கள். அதனால் அதை திறப்பதற்கு வெளி மாநிலத்தை, வெளி நாட்டை சேர்ந்தவர்கள் தான் பொருத்தமானவர்கள் என்பதால் தான் மன்மோகன் சிங்கும் இத்தாலி சோனியாவையும் கர்நாடக எடியுரப்பவையும் ஆந்திர ரோசையவையும்  அழைத்திருக்கிறார் கருணாநிதி தமிழ் மக்களை தவிர கட்டிடத்தை பார்வையிடும் உரிமையை அனைவரும் பெற்றனர்.
 
இத்தாலி   சோனியா
 
தியாக திருவிளக்கே என்று கருணாநிதியால் அன்புடன் விளிக்கப்பட்டார்.  இந்திராகாந்திக்கு அன்னை பட்டம் வழங்கிய கருணாநிதி  அவருக்கு பிறகு இத்தாலி சோனியாவிற்கு அன்னை என்று பட்டம் வழங்கி சபையில் அன்னை சோனியா காந்தி என்று அழைத்து அக மகிழ்ந்தார்  இந்திராவின் மருமகளே இந்தியாவின் திருமகளே  வருக வருக   என்று வரவேற்று மகிழ்ந்தார் 
 
சாமான்ய கருணாநிதி

சாமான்ய குடும்பத்தில வறுமையில் பிறந்தவன் நான். எனக்கு என்று எந்த வித குடும்ப பெருமையும் இல்லை. எனக்கு  எந்த வித ஆசா பாசங்களும் இல்லை. ஏழை மக்களின் நினைப்பே என்னை எப்பொழுதும் ஆக்ரமித்துள்ளது. ( என்று கூறிய கருணாநிதி ஏழை குடும்பத்தில் பிறந்த தனக்கு எப்படி இத்தனை ஆயிரம் கோடி பணம் வந்ததென்பதை கூறவில்லை.)
 
மரியாதை  அரசியல் நாகரீகம்
 
எதிர் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை  தாம் மிகுந்த மரியாதையுடனும் நாகரீகத்துடனும் நடத்துவதாக கருணாநிதி கூறினார். நிகழ்ச்சியில் தான் பேசும் போதும், அவர் உற்ற தோழி சோனியா பேசும் போதும், சோனியாவின் எடுப்பு மன்மோகன் சிங்  பேசும் போதும் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அத்தனை முதல் அமைச்சர்கள் பெயரை வரிசையாக கூறிய பொழுது கூட அதில் இரு முறை முதல் அமைசராக இருந்த ஜெயலலிதா பெயரை ஒருவர் கூட ஒரு முறை கூட  குறிப்பிடவில்லை. இது தான் கருணாநிதியின்  அரசியல் நாகரீகம்.  86 வயது பெரியவரின்  பெருந்தன்மை. இதுதான் இத்தாலி சோனியா எடுப்பு  மன்மோகன் சிங்கின் அரசியல் நாகரீகம் . 
 
 
கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்ட காரணம்
 
தன்னை நள்ளிரவில் கைது செய்து எந்த இடத்தில்  உட்கார வைத்தார்களோ அதே இடத்தில தான் சட்ட சபை கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று நான்  உறுதி  பூண்டேன்  இன்று    அதே இடத்தில்  தான்  இந்த சட்ட சபை கட்டிடம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ( இந்த இடம் மக்கள் நன்மைக்காக தேர்வு செய்யப்பட்டது அல்ல  இன்று அண்ணா சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் படும் துன்பங்களை அறிந்தே இந்த  இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது இதானால் சென்னை மக்களின் துன்பம் மேலும் அதிகரிக்கும் இதை மக்கள் விரைவில் உணருவார்கள் )
 
 இத்தாலியின் சோனியாவின் ஆசான் கருணாநிதி
 
இத்தாலி சோனியா பேசும் பொழுது தனக்கு எந்த ஒரு பிரச்சனை  வந்தாலும் தான் முதலில் கலந்த்தாலோசிப்பது  கருணாநிதியை  மட்டும்தான் . கருணாநிதியின் ஆலோசனையை பெறாமல் தான் எந்த முடிவையும்  எடுப்பதில்லை.  நெருக்கடியான நேரங்களில் அவரே எனது ஆசான். அது மட்டுமல்லாமல் அவரிடம்  எந்த நேரத்திலும் ஆலோசனையை பெற முடியும்.  என்று கூறினார் ( அவரது ஆலோசனையின் பேரில்தான் ஈழத்து மக்களை கொன்று குவித்தது என்பதை மறைமுகமாக கூறினாரோ ) 

 மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டது 
 
சட்ட சபை கட்டிடம் மேல் கோபுரம்  அமைக்க  கால  அவகாசம்  இல்லாததால்  மாதிரி அமைப்பிற்கு  மட்டும் இரண்டு  கோடி ரூபாய்  செலவு   அரை மணி நேர விழாவிற்கு இத்தாலி சோனியா எடுப்பு மன்மோகன் சிங் என்று ஆடம்பராக நடந்த கருணாநிதியின் தற் பெருமை  விழா.

தற்காலிமாக  அமைக்கப்படும்  சாலை மின் விளக்கு    அலங்கார  வேலைபாடுகள் என்று  பல கோடி ரூபாய் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டது . விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக பல கோடி ரூபாய் செலவிட்டு  ஆறு  மாதத்திற்குள்  நாற்பது  சதவிகிதம் வேலை முடிந்தவுடன் அவசர அவசரமாக திறக்கப்பட்டது.   போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் கருணாநிதியின் சுயநலத்திற்காக கட்டப்பட்ட கட்டிடம்


நன்றி
தின தமிழ்