தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கதவைத் திற கட்டழகி வரட்டும்,சாமியார் நித்தியானந்தாவின் உண்மை முகம் !




அனைத்து தோழர்களுக்கும் பகலவனின் வணக்கம் !
          இன்று இரவு எதிர்பாராத விதமாக சன் செய்திகளை பார்க்க நேரிட்டது.பார்க்கும் போதே அலைவரிசையை ஏதாவது மாற்றி விட்டானோ என்ற தடுமாற்றம்.காரணம் எதிர் முனையில் பார்க்க நேரிட்ட காணொளி என்னை கொஞ்சம் அல்ல நிறையவே அதிர்ச்சயுடைய செய்தது.இது நாள் வரை கதவை திற காற்று வரட்டும் என்று கூறி கொண்டிருந்த நித்தியானந்த சுவாமியார் அவர் வீட்டு கதவை திறந்து வைத்து விட்டதற்கான பலனை அங்கு அனுபவித்து கொண்டிருந்தார்.சாமியாருடன் ஒரு நடிகை நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. நடிகை கால் அமுக்குகிறார் ,பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன என்று பின் புறத்தில் உணர்ச்சி பொங்க ஒருவர் பேசி கொண்டிருந்தார்.பலமுறை உறுதி படுத்திக்கொண்ட பிறகுதான் இந்த செய்தியை வெளியிடுகிறோம் என சன் குழுமம் திட்டவட்டமாக தெருவித்தது. வீடியோவின் தரத்தை பார்த்தால் அதில் எந்த ஒரு வெட்டு, ஒட்டும் தெரியவில்லை.சினிமா படம் எதுனா எடுக்குறாங்களா என்ற ஒரு சந்தேகம் சிறிது நிமிடங்களுக்கு பிறகே தீர்ந்தது!




                    
    தொலைகாட்சிக்கு சென்சார் இல்லாதது எவ்வளவு தப்பு என்பதை சன் தொலைக்காட்சி நிரூபித்தது ,இந்த காட்சிகளை வீட்டின் உள்ளேயே  கொண்டுவந்து காட்டும் போது கொஞ்சம் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். நீங்கள் ஆதாரங்களை வைத்து இருந்தாலும் எதை காட்ட வேண்டுமோ அதை மட்டும்தான் காட்ட வேண்டும். சன் தொலைக்காட்சி செய்தது சரியாகப் படவில்லை இது வன்மையாக கண்ணடிக்கதக்கது. சிறு குழந்தைகளும் இதை பார்க்க நேரிடும் என்பது கூடவா இவர்களுக்கு தெரியாது? சின்னபுள்ள தனமால்ல இருக்கு.ஒரு தமிழ் செய்தி முழுமையாக அறியப்படுவது தமிழ் வலை பதிவு உலகத்தில் மட்டுமே.ஆகையால் வலை உலகத்தை சுற்றிய போது பல தோழர்கள் என்னிடம் இதே செய்தியை கேட்டனர்.அதன் அடித்தளமாக எனக்கு தோழர்களின் மூலம் சேகரித்த செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
 
யார் இந்த நித்தியானந்தா?
            இந்த உத்தமரை நாம் ஆனந்த ஆனந்தவிகடன் மற்றும் குமுதத்தில் பார்த்து இருப்போம்,அன்று இந்த தூயவரின் போலியான முகத்தை அந்த பார்ப்பனிய கூட்டங்கள் சுட்டி காட்டியது.ஆனால் இன்று உண்மையான முகத்தை முடிந்த வரை நான் உங்ககளுக்கு இப்பொழுது சுட்டி காட்ட உள்ளேன் .எனது திருவண்ணாமலை தோழர் சங்கரை தொடர்பு கொண்ட போது இந்த உத்தமரை பற்றி பல தகவல்களை அடுக்கினார்.
       நித்தியானந்தாவின் இயற் பெயர் இராஜ சேகர்.இவரின் பூர்விகம் திருவண்ணமலை. இவரின் குடும்பம் ஒரு சாதாரண விவசாய குடும்பம்.இவரின் அப்பா ஒரு கூலி தொழிலாளியாகவே அறியப்படுகிறார்.பன்னிரெண்டாம் வகுப்பு வரை இவர் அரசு பள்ளியிலையே படித்து உள்ளார்.அதன் பின் அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.ஆரம்ப காலங்களில் இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவராகவே சுற்றி உள்ளார்.கல்லூரியில் சேர்ந்த முதல் இவரை கல்லூரியில் பார்ப்பதை விட ஆலயங்களில் மட்டுமே அதிகம் பார்க்க முடிந்ததாம்.முழுமையாக கல்லுரி படிப்பை முடிக்காமலேயே நான்கு வருடத்தை கழித்துவிட்டு வெளியேறி உள்ளார்.அருணை கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அதில் இருந்து வெளியேறிய முதல் தொகுதி (BATCH) இவரும் ஒருவர் என்பது கூடுதல் தகவல்.
              இந்த நிலையில் தான் இவரின் அட்டுழியம் ஆரம்பமாகி உள்ளது. கிரிவல பாதையில் இவர் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து உள்ளார்.இவரை தரிசிக்க வரும் முட்டாள் பக்த்தர்கள் கூட்டமும் அதிகமாகி உள்ளது.பக்திகளுடனான சில்மிஷமும் செய்ய ஆரம்பித்து உள்ளார்.அதை பயன்படுத்தி பல ஏக்கர் நிலங்களை அபகரித்து அதை சுற்றி சுவரும் எழுப்பி உள்ளார்.அந்த நிலங்கள் அனைத்தும் ராயர் பேமிலியாக கருதப்படும் ஒரு குடும்பத்தின் சொத்துக்கள்.இவரின் அடாவடியை அப்பொழுதே சில திருவண்ணாமலை நிருபர்கள் சென்று தட்டிக்கேட்டு அந்த ஆசிரமத்தை தாக்கி உள்ளனர்.உண்மையாக சொல்லபோனால் திருவண்ணாமலை மக்களே இவரை சாமியாராய் ஏற்று கொள்ளவில்லை.ஒரு பைத்தியகரானாகவே கருதி உள்ளனர்.இந்நிலையில் அவர் திருவண்ணாமலையில் இருந்து வெளியேறி தஞ்சம் அடைந்தது கர்நாடகா மாநிலம்.இன்றைய சுழ்நிலையில் பல பல சாமியார்கள் சரணடைவது அங்குதானே! அங்கு சில முக்கிய தமிழ் புள்ளிகளின் உதவியுடன் ஆசிரமும் அமைத்து உள்ளார்.அதன் பின் இவரின் வாழ்க்கை முறையே மாறி உள்ளது.அதற்க்கு ஏதுவாக சில பார்ப்பனிய புத்தகங்களும் இவரை தெய்வ சொருபமாக சித்தரித்து இவரின் சொற்பொழிவுகள் என்ற பெயரில் இந்துத்துவா கருத்துக்களை தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தது.
          
              இதன் பலனாக இந்த  சாமியாருக்கு உலகம் முழுக்க கிளைகள் உருவாயின.ஆசிரமங்கள், வணிக நிறுவனங்கள் பெருகின. இங்கெல்லாம் இவருக்கு ஏராளமான பக்தர்களும் உண்டு.இவரை பார்க்க சென்ற இவர் தந்தையையே சாமியார் அவமதித்து அனுப்பி உள்ளார். திருவண்ணாமலையின் சிறப்பே தேர் திருவிழாவின் போது மக்கள் கூட்டம் அலை மோதுவது தான்.ஆனால் ஒரு வருடத்துக்கு முன் திருவண்ணாமலையில் உள்ள 24 ஆலயங்களில் ஒரே நேரத்தில் மாக பூஜையை நடத்தி காட்டி உள்ளார்.இவர் நடத்திய மாக பூஜையில் சுமார் 30 சொகுசு பேருந்துகள் வரவழைத்துள்ளார்.அந்த பேருந்துகளில் வந்திரங்கியவர்கள் அனைவரும் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.தேர் திருவிழாவை விட இவர் நடத்திய மாக பூஜையில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதைப் பார்த்த திருவண்ணாமலை மக்களே சற்றே ஆடிப் போய்தான் உள்ளனர்.எழுத்தாளர் சாருவும் சாமியாரின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவர். இந்த உத்தமரின் பக்தியை பரப்பும் தீவிர எழுத்தாளர் சாரு தான்.இந்திய தேசத்தில்தான் இது போன்ற அக்கிரமங்கள் எல்லாம் நடக்கும் என்று சாருநாளைக்கு ஒரு கட்டுரை எழுதுவார்.அதில் இந்திய தகவல்தொழில் நுட்பத்தை சாடுவார்.ஒருவனின் படுக்கை அறைவரை கேமராவை தூக்கிக்கொண்டு போகும் வக்கிரம் என்ற பொங்கி எழுந்தாலும் ஆச்சரியமில்லை.
       சாமியார்கள் நன்கு அனுபவித்து  உலகின் கள்ளத்தனங்கள் அத்தனையிலும் கரை கண்ட பிறகு முடியாத காலத்தில் ஓய்ந்து போய் இளைஞர்களுக்கு உத்தமர்கள் போல் உபதேசம் செய்வதைப் பார்க்கலாம். சுவாமிகள், ஆச்சார்யார்கள், சந்நிதானங்கள் என பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் கயமையின் நிறம் ஒன்றுதான்!
"கதவைத் திற காற்று வரட்டும்"
"
மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்"

          என்று மாடர்ன் தத்துவம் பேசிய இந்த 32 வயது இளம் சாமியார் போல் நமக்கு தெரிஞ்சுது சன் நியூஸ் அளவு... தெரியாதது உலகளவு, ஒரு வேலை அந்த நடிகையுடன் நான் கடவுள் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருப்பாரோ .சாமியார்னு ஆகிட்டா சந்தைக்கு ஒரு நாள் வந்துதான ஆகணும். நாம என்ன ஒன்னு ரெண்டு சாமியாரையா பாத்திருக்கோம்? 
  
    இது ஒரு அரசியல் சாமச்சரமாக கூட இருக்கலாம். இந்த விடயம் நாளை பெரிதாகும்போது, இந்த ஆசாமிக்கு வக்காலத்து வாங்க சிலர் வரவும் கூடும். உணர்ச்சியைத் தூண்டிவிட்டு மாட்டிவிட்டு விட்டார்கள் என்றும் காரணம் சொல்லக் கூடும். அப்படியெனில் உணர்ச்சிகளுக்கு அடிமையானவன் மனிதன், அதை வென்றவன் யோகி என்றெல்லாம் அளந்து விடும் இந்த யோக்கியவான்களுக்கு சுவாமிஜி என்ற பட்டம் எதற்கு?சாதாரண பாமரனாக இருந்துவிட்டுப் போவதுதானே. தலைக்குப் பின்னால் செயற்கை ஒளிவட்டத்தை பொருத்திக் கொண்டு ஊரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பார்க்க சுவாமிஜி பதவி வேண்டுபவர்கள் மேல் பிழை சொல்பதை விட இன்னும் இது போன்ற ஆசாமிகளின் பின்னால் கொடி தூக்கும் கூட்டத்தை என்ன வென்று சொல்வது?மக்கள் தெளிவுறதா வரை இன்னும் பல கடவுள்கள் அவதரிப்பார்கள்!

        ஒரு நல்ல மனிதனாக வாழ நேர்மை, ஒழுக்கம் மட்டும்தான் வேண்டும். இதை கடைப்பிடித்து முறையாக திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கை அனுபவித்து, குழந்தைகள் பெற்று, அவர்களைப் பொறுப்பாக வளர்த்து, வாழ்க்கையில் நிலைபெறச் செய்து, அந்த குழந்தைகள் வாழ்வதை ஆனந்தமாகப் பார்த்தபடி  ஆயுளைக் கழிக்கும் குடும்பத் தலைவன் ஒவ்வொருவனுக்கும் இந்த சமுதாயத்துக்கு உபதேசிக்கும் தகுதியிருக்கிறது. இத்தனை பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற ஒரு சாமானியனால் முடிகிறதென்றால் பின் இந்த பித்தலாட்டமும் இறை நம்பிக்கையும் எதற்கு ?எந்தப் பொறுப்பும் இல்லாத, வெந்ததைத் தின்று, கிடைத்த சந்தில் புகுந்து ஒழுக்கக்கேட்டில் முழுகி, அந்த கயமைகளைக் காவியில் மறைத்து ஊருக்கு உபதேசம் செய்யும் போலிச் சாமியார்கள் உருவாவதே மூட நம்பிக்கையின் முழு வளர்ச்சியாகவே  தெரிகின்றது. சாமியார் பின்னால் சுற்றும் பலியாடுகளுக்கு இன்னுமொரு சாட்டையடி.இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கும் அதன் காவலாளிகளான சாமியார்களுக்கும் இந்த தலைமுறையிலையே விடை கொடுப்போமே!

நன்றி
பகலவன்
http://pagalavantamil.blogspot.com/p/blog-page.html