தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மன்னார் பகுதியில் எண்ணெய்க் கொள்ளை மத்திய தமிழ் அமைச்சர் குடும்பத்திற்குப் பங்கு இராசபக்சேவின் சூழ்ச்சித் திட்டம்

இந்திய-இலங்கை உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் பெட்ரோல் கிடைப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. காவிரிப் படுகைப் பகுதி என்பது நாகை மாவட்டப் பகுதியிலும் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் மன்னார்-யாழ்ப்பாணம் பகுதி வரை பரவி உள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் பகுதியில் பெட்ரோல் எடுப்பது என்பதை இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும், அதனை இரு நாடுகளுமே சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என 1974ஆம் ஆண்டில் இந்தியாவும் இலங்கையும் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்றன. இதற்குப் பரிசாகத் தான் கச்சத் தீவு இலங்கைக்கு இந்தியாவால் விட்டுக்கொடுக்கப்பட்டது. ஆனால் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் இருக்கும் பகுதிகளில் ஒரு பகுதியைச் சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்திருக்கிறது. இந்தியாவைத் திருப்திப்படுத்த இந்தியாவுக்கு ஒரு பகுதியைக் கொடுத்திருக்கிறது. இது போக இன்னும் மூன்று பகுதிகளைப் பிற நாடுகளுக்கு வழங்குவதற்குச் சிங்கள அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.


இலங்கையின் பெட்ரோலிய வளர்ச்சித் துறை அமைச்சரான ஏ.எச்.எம்.பெளசி இந்த விவரங்களை அண்மையில் அறிவித்துள்ளார். இந்த எண்ணெய் எடுக்கப்படுமானால் தென் ஆசியாவில் செல்வ வளமிக்க நாடாக இலங்கை மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கை இப்போது ஆண்டுக்கு 1,53,000 கோடி ரூபாய் பெறுமான எண்ணெயை இறக்குமதி செய்கிறது. எதிர்காலத்தில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கை மாறும் என அவர் கூறினார். இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட பகுதி இந்திய அரசுக்கு கொடுக்கப்படவில்லை. மாறாக கெய்ரன் இந்தியா என்னும் கம்பெனியின் துணை நிறுவனமான கெய்ரன் லங்கா என்னும் நிறுவனத்திற்கு இந்த குத்தகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 450 கோடி ரூபாயில் எண்ணெய் எடுக்கும் பணிகளைத் தொடங்க இருக்கிறது. இந்திய அரசில் உயர் பதவி வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிக முக்கிய அமைச்சர் ஒருவரின் குடும்பத்திற்குக் கெய்ரன் லங்கா நிறுவனம் சொந்தமானது. இதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அந்த நிறுவனம் சம்பாதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் போர் தொடங்குவதற்கு முன்ன தாகவே இந்த குத்தகை அந்த நிறுவனத் திற்குச் சிங்கள அரசினால் வழங்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அமைச்சரின் முயற்சியால்தான் இந்திய அரசு முழுமையாக சிங்கள அரசுக்கு ஆயுத உதவி உட்பட எல்லா உதவிகளையும் செய்ய முன்வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

மன்னார் வளைகுடாப் பகுதியில் சுமார் 1000 கோடி பேரல் அளவுக்கு மேல் எண்ணெய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்திய அமைச்சருக்குச் சொந்தமான இந்த நிறுவனமும், சீனாவும் இன்னும் பிற நாடுகளும் மன்னார் வளை குடாவில் கிடைக்கும் எண்ணெயைப் பங்கு போடுவதற்கு சிங்கள அரசு முழுமையாக ஒப்புதல் தந்துள்ளது.

1974ஆம் ஆண்டு இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட உடன்பாட்டிற்கு இது எதிரானது. இந்திய அரசும் இலங்கை அரசும் கூட்டாக இந்தப் பகுதியில் எண்ணெய் எடுக்க வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு அதைக் குத்தகைக்குக் கொடுக்க இலங்கைக்கு உரிமையில்லை. ஆனால் இந்த உடன்பாட்டை மீறி இலங்கை இவ்வாறு செய்வதை ஏன் என்று கேட்பதற்கு இந்திய அரசு முன்வராததற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அமைச்சரே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த குத்தகையைத் தன் குடும்ப நிறுவனத்திற்கு கொடுத்து விட்ட காரணத்தினால் தான் இந்த அமைச்சர் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதைக் கண்டிக்க முன்வரவில்லை என்பதும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே பேசி வந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கதாகும்.


--
....நன்றி....

தூங்கும் புலியைப்
பறைகொண்டு எழுப்புவோம்...
தூய தமிழரைத்
தமிழ்கொண்டு எழுப்புவோம்!'