இது தொடர்பாக மேலும் வரும் தகவல்களாவது ,
வன்னியில் நடைபெற்ற போரினை தொடர்ந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களை மீளக்குடியமர்த்தும் போது அவர்களுக்கு 25,000 ரூபாய்களையும், அதன் பின்னர் 50,000 ரூபாய்களையும் தருவதாக இலங்கை அரசு உறுதியளித்திருந்த போதும் உதவிகள் எவையும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 50,000 ரூபாய்களை வழங்குவதாக இலங்கை அரசு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது தெரிவித்திருந்தது. ஆனால் நிதி உதவிகளை இன்றுவரை வழங்கப்படவில்லை என மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாது, மீள்குடியேற்றத்தின் போது 25,000 ரூபாய்கள் உடனடியாக வழங்கப்படும் என அரசு ஆரம்பத்தில் தெரிவித்திருந்த உதவிகள் கூட வழங்கப்படவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தமக்கு நிதி கிடைத்ததும் தாம் அதனை வழங்குவதாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது