தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

திமுக - 200 ரூபாயும் பிரியாணி பொட்டலமும் அதிமுக -100 ரூபாயும் பிரியாணி பொட்டலமும்.

பென்னாகரம்:முதல்வர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா பிரசார கூட்டங்களில், அதிகளவில் கூட்டங்களைச் சேர்க்க, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.தி.மு.க.,வில் முதல்வர் கருணாநிதி பிரசாரத்தில் பங்கேற்க வரும் ஒரு நபருக்கு, 200 ரூபாய் மற்றும் பிரியாணி கொடுப்பதாகக் கூறி ஆட்கள் சேர்க்கும் பணி நடக்கிறது.அதேபோல், அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்களில் கூட்டத்தைச் சேர்க்க 100 ரூபாயும், பிரியாணியும் வழங்குவதாக கூறி, ஆட்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது.தலைவர்கள் வருகையை முன்னிட்டு அந்தந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்பு மற்றும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.முதல்வர் வருகையையொட்டி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலைகள் சரி செய்யப்பட்டு, இருபுறமும் உள்ள மரங்களில் நட்சத்திர வடிவிலான பிரதிபலிப்பான்கள் (ரிப்ளெக்டர்கள்) பொருத்தப்பட்டுள்ளன.அதேபோல், தொகுதியின் முக்கியமான பகுதிகளிலிருந்து, பென்னாகரம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை குறிக்கும் வகையில், புதிதாக விளம்பர போர்டுகள் எழுதப்பட்டு, ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன.

 

மானிய விலையில் மின் இயந்திரம் வழங்கபென்னாகரம் மக்கள் கோரிக்கை:மானிய விலையில் மின் இயந்திரம் வழங்கி, கயிறு திரிப்பு தொழிலை மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பென்னாகரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.தமிழகத்தில் வறட்சியான மாவட்டமாக தர்மபுரி உள்ளது. காவிரி ஆறு அருகில் இருந்தும் குடிநீர் தேவைக்காக மக்கள் அல்லல்படும் அவலம் பென்னாகரத்தில் உள்ளது.மழைப் பொழிவும் இல்லாததால், வயல்வெளிகள் வறண்டு காணப்படுகின்றன. தண்ணீர் இல்லாததால் செங்கல், புளி, கயிறு, பால் உற்பத்தி போன்ற தொழில்கள் தான் தற்போது இங்கு அதிகமாக நடக்கிறது.கற்றாழை கயிறு திரிப்பு தொழிலை நம்பியே, பாப்பாரப்பட்டி, ஆலமாமரத்துப்பட்டி, சிட்லக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் உள்ளனர்.

 

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து கற்றாழை நார்கள் மொத்தமாக தனியார் நிறுவனங்களுக்கு வருகிறது. அவர்கள் 50 கிலோ, 100 கிலோ என்ற அளவில், கயிறு திரிக்கும் தொழிலாளர்களுக்கு வழங்குகின்றனர். அவற்றை கயிறாக திரித்து மீண்டும் அந்த நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டும்.கற்றாழை நார் மீது டீசல், தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும், அவற்றை கூர்மையான ஆணிகளில் அடித்து பட்டு நூல் போன்று வெளியில் எடுக்கின்றனர். அவற்றை சேகரிக்கும் தொழிலாளர்கள், கூடையில் போட்டு அதற்குரிய கை இயந்திரம் மூலம் கயிறாக திரிக்கின்றனர்.அவ்வாறு திரிக்கும்போது, கைகள் அறுபட்டு காயம் ஏற்படும் நிலையும் உள்ளது. 50 கிலோ கொண்ட கற்றாழை நாரில், அரை கிலோ எடை கொண்ட 90 கயிறு கட்டுகள் கிடைக்கின்றன.இதற்கு, ஆண் தொழிலாளர்களுக்கு 200 ரூபாயும், பெண் தொழிலாளர்களுக்கு 100 ரூபாயும் கூலியாக வழங்கப்படுகிறது. இத்தொழிலை நம்பி பாப்பாரப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.மானிய விலையில் மின் இயந்திரம் வழங்கி, கயிறு திரிப்பு தொழிலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.பாப்பனேரிப்பட்டியைச் சேர்ந்த ஜெயவேல் கூறியதாவது:கற்றாழை கயிறு நல்ல வலுவானது. டில்லி, உத்தரபிரதேசம் போன்ற பகுதிகளில் கட்டில் தயாரிப்புக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

 

அரை கிலோ எடை கொண்ட 90 பீஸ் கயிறு தயார் செய்து கொடுத்தால், 450 ரூபாய் கிடைக்கும். அதில், 250 ரூபாய் அந்த நிறுவனங்களே நாருக்கு எடுத்துக் கொள்வர். மீதம் 200 ரூபாய் கூலியாக கிடைக்கும்.ஒரு நாளைக்கு 50 கிலோ நார் மூலம் கயிறு திரிக்கலாம். அதற்கென இயந்திரம் எல்லாம் இல்லை. கைகளில் தான் திரிக்க வேண்டும். சில நேரங்களில் கை அறுபட்டு ரத்த காயங்களும் உண்டாகும். மின்சார சப்ளை மூலம் இயங்கும் இயந்திரங்களை வழங்கினால், இப்பகுதியில் தொழில் இன்னும் நன்றாக இருக்கும்.இவ்வாறு ஜெயவேல் கூறினார்.