தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழ் வாழ்கிறதாம் - பகலவன் கவிதை.


தமிழ் வாழ்கிறது 
தமிழ் நாடு அழிய...
இவன் வாழ்கிறான் 
தமிழினம் அழிய...

மாநாடு நடத்துகிறானாம்
தமிழை அழிக்க....
கொடநாடு போகிறாளாம்
கன்னடத்து அம்மா.

இனம் அழிய பார்த்தோம்
அரசியல் நாடகத்தை...
தன்மானம் ஒழிய பார்க்கிறோம்
மானாட மயிலாட .

மாநாடு வேண்டுமாம்
செம்மொழி தமிழ் வாழ...
திராவிடம் வேண்டுமாம்
இவன் பரம்பரை வாழ.

பாரத ரத்னா வேண்டுமாம்
இவன் துரோகங்கள்வாழ...
இலவசம், மயக்கம்கொடுப்பானாம்,
தமிழன் சோம்பேறியாய்வாழ.

தமிழைத்தேடுகிறேன்
செம்மொழி- தமிழைத் தேடுகிறேன்!
தமிழனைத்தேடுகிறேன்,
தன்மானத்தமிழனைத் தேடுகிறேன்,

கட்சிக்குச் சொந்தக்காரன்
பாதித்தமிழன் !
சாதிக்குச்சொந்தக்காரன்
மீதித்தமிழன்.

அகர முதல எழுத்தெல்லாம்
தமிழனின் வாழ்வேடு ;
அதைப் புரிந்துகொள்ளாதவரை
நீதான் தமிழனே ! தமிழுக்குச்சாபக்கேடு.

தமிழனின் துரோகத்தின்
பட்டியல் நீண்டுபோக...
தமிழனின் வீரத்தின்பட்டியல்
குருடாகிப்போனது. 

தமிழ் வாழ்கிறதாம்
முல்லையில் அரசியல்விளையாட !
தமிழ் நடனம்ஆடுகிறதாம்  
டாஸ்மாக்கில் குடிகாரத்தமிழன்ஆட.

தமிழ் வாழ்கிறதாம்,
பாலாற்றில் தெலுங்கன் மணலைஅள்ள !
தமிழினம் ஒளிர்கிறதாம்,
தமிழன் அகதியாய் உலகம் திரிய.

வந்தாரை வாழவைத்தானாம்,
வந்தவனெல்லாம் ஏறிமிதிக்க !
இந்தியஅன்னையை வாழ்த்துகிறானாம்,
தமிழகமீனவனை ஏறிநசுக்க.

ஆம்! எங்கும் தமிழ்நாடுவாழ்கிறது,
தமிழ் அழிய ....
இவன் வாழ்கிறான்,
தமிழினம் அழிய !!!

....பகலவன்....