தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அனைத்து சுயநிதி கல்லூரிகளிலும் ஏமாற்றி கட்டண வசூல் நடக்கிறது.


 
முதலில் தலையங்கம் :
 
இருக்கின்ற பல சட்டங்களை நடைமுறை படித்தினாலே  அது மிகபெரிய பயனை தரும். புதிதாய் வரும் சட்டங்கள் இது போன்றவையும் தேவைதான்.சட்டங்கள் இயற்றுவதை விட அதை கண்காணித்து நடைமுறை படுத்த வேண்டும்.இப்போது உள்ள அனைத்து சுய நிதி கல்வி நிறுவனங்களும் முறை கேடான வசூலில் இயங்குவது உண்மை. "கல்வி நிறுவனத்தின் தகவல் குறிப்பேட்டில்  குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிறுவனங்களையும் தண்டிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. "என்ற வாசங்கள் எதற்கு ?  கல்வி நிறுவனங்கள் தப்பித்து கொள்ளவா? தகவல் குறிபேட்டில் தெரிவித்து விட்டு எது வேண்டுமானாலும் செய்யலாமா ?அந்தந்த கல்லூரியின் தரத்திற்கு ஏற்ப அரசே கட்டணத்தில் ஒரு சீரான கொள்கையை நடைமுறைபடுத்த வேண்டும் .சட்டம் இயற்றிய இன்றைய நாளில் இருந்து சட்டத்தினை அமல்படுத்து எத்தனை கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று நாம் அடுத்த வருடம் கூட பார்ப்போம்.
 
கூடுதல் செய்தி :
என்பது சதவீத சுயநிதி கல்லூரிகள் அரசியல்வாதிகளால் நடத்தபடுகிறது.
 
இப்போது தலையங்கத்திற்க்கான  செய்தியை பார்ப்போம் :
 
கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது ரூ. 50 லட்சம் அபராதமோ விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கல்வி நிறுவன நிர்வாகியை வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும் இந்த சட்டத் திருத்தம் வகை செய்யும். இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.தரமற்ற கல்வி நிறுவனங்களை தண்டிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்தால் அது கிரிமினல் குற்றமாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் குறிப்பேட்டில் (prospe​ctus) குறிப்பிட்டுள்ள கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தால் கல்வி தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த தகவலை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். கல்வி நிறுவனத்தின் தகவல் குறிப்பேட்டில்  குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிறுவனங்களையும் தண்டிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் அதிக அளவு நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்ற பரவலான புகாரை அடுத்து இந்த சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது. இது தவிர தேசிய அங்கீகார நிறுவனம் அமைக்கவும் கல்வி தீர்ப்பாயம் அமைப்பதற்காகவும் இரு வெவ்வேறு மசோதாகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.