தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நல்ல சாலையும் , சுற்றுபுரத்தை மற்றும் சூழலை கெடுக்காத வாகனமும் முக்கியம்.

நல்ல சாலையும் , சுற்றுபுரத்தை மற்றும் சூழலை கெடுக்காத வாகனமும்  முக்கியம்.

செய்தி இங்கே
  :
 
வாகனங்கள் உற்பத்தி செய்யும் மையங்களில் உலகின் முதல் 10 இடங்களில் ஒன்றாக சென்னையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

 

காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரகடத்தில் ரெனால்ட்-நிஸôன் என்ற கார் உற்பத்தி தொழிற்சாலை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

 

இவ் விழாவுக்கு ஜப்பான் முன்னாள் பிரதமர் யோஷிரோ மோரி தலைமை தாங்கினார். இக் கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி பேசியது:

 

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வரும் எங்கள் அரசு, தொழிற்துறை வளர்ச்சியிலும் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. ÷தற்போது சென்னை, வாகன உற்பத்தி தொழிலில் ஆசியாவின் தலைநகர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து வருகிறது.

 

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியதே இதற்கு காரணம். ஆக்ஸ்போர்டு அனலேட்டிகா என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழகம்தான் முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த இடம் என்று கூறியுள்ளது.

 

கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன. கடந்த மே 2006-ல் இருந்து எங்கள் அரசு 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

 

2 லட்சம் பேருக்கு வேலை

 

அதில் 12 தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.

 

இதுவரை தமிழகத்தில் 37 முக்கிய தொழிற்சாலைகள் மூலம் ரூ.46,091 கோடி ரூபாய் முதலீடு வரப்பெற்றுள்ளது.

 

இந்த தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,22,000 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

 

மிகப் பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உள்ள சென்னையில், வாகனங்களை சோதனை செய்யும் வசதி இல்லாமல் இருந்தது.

 

நாங்கள் மத்திய அரசிடம் பேசியதன் அடிப்படையில் தேசிய வாகன தரக் கட்டுப்பாட்டு மையத்தை ரூ.450 கோடியில் ஒரகடத்தில் உருவாக்கி வருகிறது. இதற்கு தமிழக அரசு 304 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. இந்த மையம் உருவானால் இது உலகத் தரம் வாய்ந்த மையமாக இருக்கும்.

 

உலகின் 10 தலைசிறந்த வாகன உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மையங்களில் ஒன்றாக சென்னையை மாற்ற வேண்டும் என்பதே எனது கனவு. அந்த கனவு விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

 

 

இந் நிகழ்ச்சியில் "மாதிரி' காரை இயக்கி வைத்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:

 

தமிழகத்தில் ஒரு நிமிடத்துக்கு 3 கார்களும், 75 வினாடிக்கு ஒரு கனரக வாகனமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியவில் உற்பத்தியாகும் கார்களில் 39 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தியாகிறது.

 

தமிழகத்துக்கு வரும் வாகன உற்பத்தி தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிலுக்கென்று கொள்கை வகுக்கப்படும் என்றார்.

 

இவ் விழாவில் ரெனால்டு-நிஸôன் நிறுவனத்தின் தலைவர் கார்லஸ் குஸ்ன், நிர்வாக இயக்குநர்கள் ஆகிராசாகுரி, மார்க் நசீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
தலையங்கம் :
உற்பத்தி பிரிவில் தமிழ் நாடு முன்னணியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்திதான். அதே நேரம், ஒட்டு மொத்த தமிழ் நாடு மாநில அளவில் என்ன முன்னேற்றத்தை  கண்டுள்ளது என்று பார்க்க வேண்டியது மிக முக்கியம். தேசிய (மத்திய அரசின் பணி) நெடுஞ்சாலைகளை தவிர மாநில நெடுஞ்சாலைகள் மிக மோசமான அளவில் உள்ளது , கிராமப்புற நெடுஞ்சாலைகளை பற்றி பேசக்கூட முடியவில்லை.
 
வாகன உற்பத்தி எனபது , எந்த அளவிற்கு மாநிலத்திற்கு உதவுகிறது?  வேண்டும் என்றால் வேலை வாய்ப்பில் ஐம்பது சதவீதம் பயனிற்றிருக்கலாம் , அந்த வேலை வாய்ப்பிற்காக சுற்று சூழலில் நாம் கண்டிப்புடன் இந்த நிறுவனங்களிடம் இருந்துல்லோமா  என்று பார்க்க வேண்டும்.
 
பெருமை பட்டு கொள்ளும் விடயமாக வாகன உற்பத்தி இருப்பது எந்த அளவீட்டில் மாநிலத்திற்கு உதவியுள்ளது என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும்.