தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

காமராஜர் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சி? பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி? - கேட்டது முதல்வர் கருணாநிதி ?

இது கொஞ்சம் பழைய செய்திதான் . படித்ததில் பிடித்ததை இதை பதிகிறேன்.


இது தேமுதிக தலைவர் விஜயகாந்த் புளியந்தோப்பு கூட்டத்தில் பேசியதன்
எழுத்து தொகுப்பு . கொஞ்சம் பழைய செய்திதான் சுவராசியமாய் இருந்ததால்
இங்கே பதிகிறோம்


''உங்களை விமர்சித்தேன் என்பதற்காக எங்களை வீணர்கள்... வெறிக் கூச்சல்
போடுகிறோம்... என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறீர்கள். கலைஞரே
உங்களுக்கு தைரியம் இருந்தால் தே.மு.தி.க. என்று சொல்ல வேண்டியதுதானே?
'காமராஜர் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சி? பக்தவத்சலம் அண்ணாச்சி
பருப்பு விலை என்னாச்சி? கக்கன்ஜி அண்ணாச்சி கடலை விலை என்னாச்சி?' என்று
நீங்கள் மட்டும் கேட்கலாம். ஆனால், இந்த விஜயகாந்த் கேட்டால் தப்பா?
'எதையும் தாங்கும் இதயம் உண்டு' என்று அண்ணா சொன்னார். நான் சொன்ன
சொல்லைக்கூட தாங்க முடியாமல் என்னைத் திட்டித் தீர்க்கிறீங்களே, இதற்கு
பெயரா எதையும் தாங்கும் இதயம்? அண்ணா இதயத்தை இரவலா கொடுத்ததா
சொல்றீங்க, அப்படி கொடுத்திருந்தா... இந்த விஜயகாந்த் சொன்னதுக்கு
சரியா பதில் சொல்லியிருப்பீங்க. அண்ணா எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு
பதில் சொல்வாரு. ஏன் உங்களுக்கு ஆத்திரம் வருது?


கலைஞருக்கு அண்ணா மாலை போடுவது -போல ஒரு போட்டோ. என்ன மாதிரி அண்ணாவை
கேவலப்படுத்துகிறார்... அண்ணன் எப்போது எழுந்திருப்பார், திண்ணை
எப்போது காலியாகும் என்று காத்திருந்து, அப்படி உட்கார்ந்தவர்தான் இந்த
கலைஞர். பெரியார், அண்ணா , எம்.ஜி.ஆர். ஆகியோர் அரசியல் கட்சி என்ற
வீட்டைக் கட்டினர். ஆனால், கட்டிய வீட்டில் குடி புகுந்தவர் கலைஞர்.
கரையான் புற்றுக்குள் புகுந்த கருநாகம்தான் கலைஞர்.


பெரியார் வழியில் வந்ததாகச் சொல்லும் கலைஞர் கழுத்தில் ஒரு மஞ்சள்
துண்டு, கையில் ஒரு சிகப்பு கல் மோதிரம். அவர் சுண்டு விரலை பிடித்து
கொண்டு வந்தேன் என்று பொய் சொல்வார். அதற்காக செத்தவர்களைத்தான்
எப்போதும் அவர் சாட்சிக்கு அழைப்பார்.

எம்.ஜி.ஆர். ஒரு படத்தில், 'ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமை
தந்தார். தன் இனிய குடும்பம் ஒன்றுக்குதான் வறுமையை தந்தார்' என்று
அண்ணாவைக் காட்டிப் பாடுவார். ஆனால் அண்ணா வழி வந்த நீங்கள் இன்று விரல்
விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் ஒருவர். மந்திரி குமாரி, பராசக்தி
என்று இரண்டே இரண்டு படத்தை வைத்து இவ்வளவு நாட்கள் ஓட்டிக்
கொண்டிருக்கிறார் கலைஞர். அதன் பிறகு என்ன செய்தார்? இவர் எழுதிய
வசனத்திற்கு 50 லட்ச ரூபாய் எந்த பைத்தியக்காரனாவது தருவானா?

நாட்டுல கொலை நடக்குது, கொள்ளை நடக்குது... குண்டு எவன் போடறான்னு
பார்க்காமல், கூட்டணியை உடைக்க வேண்டும்... விஜயகாந்த் தனித்து
போட்டியிட வேண்டும் என்று புரளி கிளப்புகிறார். நான் அடங்குவேனா என்று
பார்க்கிறார். என்னய்யா விஜயகாந்த்துக்கு '8 காலம்' செய்தியா? வேறு
பக்கம் தள்ளிப்போடுங்கய்யா என்று சொல்வார். ஆனால் தான் பேசவில்லை
என்றும் சொல்வார். திருடன் எப்போதாவது தன்னை திருடன் என்று சொல்லிக்
கொள்வானா? மாணவர்களுக்கு ஐந்து முட்டைபோட்டேன்னு சொல்றீங்க. இன்னும்
ஒரு வருஷத்துல மக்கள் உங்களுக்கு முட்டை போடப்போறாங்க.

விஜய-காந்த்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறார் அழகிரி.
உங்களையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள்
மதுரைக்கு வந்தவர்கள். நான் மதுரை மண்ணில் பிறந்தவன் என்பதை ஞாபகம்
வைத்துக் கொள்ளுங்கள். கலைஞரே... உங்களுக்கு இத்தனை பிள்ளைகள்,
பேரன்கள், இத்தனை உறவினர்கள் என்பதைக் காட்டவா செம்மொழி மாநாட்டில்
முதல் வரிசையில் உட்கார வைத்தீர்கள்? எல்லா மந்திரி-களும் வாயில் கை
வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். அதைச் சுட்டிக்காட்டி,
'இதுவா சுயமரியாதை?' என்று என்னைப் பார்த்து மலேசி-யாவில் கேட்கிறார்கள்.

'என் பேரன்கள் சினிமாவில் நடிக்கக் கூடாதா... படம் எடுக்கக் கூடாதா...
சிவாஜி மகன் பிரபு நடிக்கவில்லையா? ரஜினி மருமகன் தனுஷ்
நடிக்க-வில்லையா?' என்று கேட்கிறார். உங்கள் மகன் மு.க.முத்து நடிக்க
வந்தததை நாங்கள் கேட்க-வில்லையே? ஸ்டாலின் அரசியலுக்கு வந்ததை
கேட்கவில்லையே?

'ரெட்ஜெயன்ட் மூவிஸ்', 'க்ளவுட் நைன்' என்ற பெயர்களில் பேரன்கள் மாதம்
ஒரு படம் எடுக்-கின்றனர். கேட்டால் அது அவர்களுக்கான பாக்கெட் மணியில்
எடுத்தது என்கிறார்கள். ஒரு படம் எடுப்பது சாதாரண விஷயமா? அவர்கள் பெரிய
நிறுவனங்களின் முதலாளிகளாக இருந்தவர்களா? அப்படி உரிமையாளர்களாக இருந்து
அதில் வந்த வருமானத்தில் படம் எடுத்திருந்தால் யாரும் கேள்வி கேட்க
மாட்டார்கள். பாக்கெட் மணியில் படம் எடுத்ததால்தான் கேள்வி எழுகிறது.
இன்று பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம், பெரிய பட நிறுவனங்கள் எல்லாம்
பயந்து கிடக்கிறார்கள். கலைஞரின் குடும்பத்தின் பிடியில்தான்
தியேட்டர்கள் இருக்கின்றன. என் 'விருத்தகிரி' படத்தை ரிலீஸ் செய்ய
விடாமல் தடுக்கிறீர்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்
'தர்மபுரி' படத்தை ஓட-விடாமல் தடுத்தீர்களே? மே மாசத்துக்குப் பிறகு
பாருங்கள். அவர்களை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட
வைப்பேன். நான் படத்தை ரிலீஸ் பண்ணுவேன். சும்மா கூட தெருவுல போட்டு
மக்களுக்கு காண்பிப்பேன்.

தே.மு.தி.க. ஒரு சுயம்பு. தொண்டர்களால், மக்களால், அன்புச்
சகோதரர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. செயின், வாட்ச், நகைகளை அடமானம்
வைத்து வளர்ந்து வரும் கட்சி. அப்படிப்பட்ட தியாகம் கொண்ட என் கட்சித்
தொண்டர்களை சீண்டிப் பாக்காதீங்க'' என்று ஆவேச உரை நிகழ்த்திவிட்டு நலத்
திட்ட உதவிகளை வழங்கத் தொடங்கினார் விஜயகாந்த். அவரது பேச்சுக்கு,
கூட்டத்தில் ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?