தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஆறு மாநிலத்தில் நக்சல் பாரிகள் விடுத்த கடையடைப்பு போராட்டம் .



நக்ஸல் தலைவர் ஆசாத் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி 6 மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்த 2 நாள் பந்த் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த போராட்டத்தின்போது ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதி ராஜ்குமார் என்கிற ஆசாத் கொல்லப்பட்டார். போலீஸடன் நடந்த மோதலில் அவர் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்குச் சென்றவரை சுட்டுக் கொன்றுவிட்டதாக மாவோயிஸ்டுகள் கூறிவருகின்றனர்.  ஆசாத் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி மாவோயிஸ்டுகள் ஆதரவில் 6 மாநிலங்களில் நடத்தப்படும் இந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 2 போலீஸôர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.


மேற்கு வங்கம், பிகார், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். பந்த் போராட்டத்தின்போது சத்தீஸ்கர் மாநிலம் தன்டேவாடா மாவட்டத்தில் உள்ள பேஜி காவல்நிலையம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். மேலும், ரோந்து பணிக்காக வெளியில் செல்ல இருந்த 2 போலீஸôரையும் சுட்டுக்கொன்றனர்.  முன்னதாக, போலீஸôருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே திங்கள்கிழமை காலையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேற்கு வங்கத்தில் 5 மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள்



மேற்கு வங்க மாநிலம் மேற்கு மேதினிப்பூர் மாவட்டம், நாச்சுப்பட்டினம் கிராமத்தில் உள்ள தோமபாரா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் 5 பேரை வீடுகளிலிருந்து மாவோயிஸ்டுகள் வெளியே இழுத்து வந்து பலமாக அடித்து உதைத்து பின்னர் சுட்டுக்கொன்றனர் எனவும் போலீஸôர் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டம் பஞ்சதுமர் கிராமத்தில் காவலாளியாக பணிபுரியும்  ராஜேஷ் பரவான்  பாஸ்வான் என்பவரை அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்த மாவோயிஸ்டுகள் கைகளை கட்டிப்போட்டுவிட்டு பின்னர் சுட்டுக்கொன்றனர். போலீஸ் எடு பிடியாக செயல்பட்டார் என்பதற்காக அவரை கொன்றதாக அவரது சடலம் அருகில் இருந்த தாளில் மாவோயிஸ்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பஞ்சதுமர் கிராமத்தில் இளைஞர் ஒருவரையும் மாவோயிஸ்டுகள் கொன்றனர்.

கிரிதி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் கார்மவாட் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை வெடிவைத்து மாவோயிஸ்டுகள் தகர்த்தனர். இந்த குண்டுவெடிப்பில் சரக்கு ரயிலின் சக்கரங்கள் சேதம் அடைந்ததாக தன்பாத் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.மல்காங்கிரியில் மாவோயிஸ்ட் கைது: ஒரிசா மாநிலம் மல்காங்கிரியில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவரை போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.  அவரது பெயர் ககன் துருவா. மாதிலி பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் பிடிபட்டார்.


பிகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ம் தேதி 7 போலீஸர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 3 மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். முங்கர் மாவட்டம் பிச்சா கிராமத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 குண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என மாநில காவல்துறைத்தலைவர் நீலமணி பாட்னாவில் தெரிவித்தார்.