தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அதிமுக கூட்டணிக்கு பா ம கவின் துரோகம் -தமிழக தேர்தல் அலசல் -பகுதி இரண்டு




பாட்டாளி மக்கள் கட்சி  தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் கட்சி என்ற நிலையை பொது மக்களிடத்தில் பெற்றிருந்தாலும், எந்த அணியிலும் சேர்ந்து அவர்களிடம்  நைய பேசி தமக்கு தேவையான இருக்கைகளை பெற்று கொண்டு வந்திருக்கிறது. 1996  இல் நடந்த சட்டமன்ற மற்றும்   நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா மாபெரும் தோல்வியை சந்தித்தார் , அவர் போட்டியிட்ட  இரண்டு தொகுதியிலும் தோல்வியை தழுவினார்.  அப்பொழுது காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எனும் மூப்பனார் மற்றும் இப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் முக்கிய பிரமுகர்களை பிரதானமாய் கொண்டிருந்த கட்சி திமுகவுடன் கூட்டணி கண்டு அமோக வெற்றி பெற்றது. 





இந்த தேர்தலில் பா ம க , தனித்து நின்று நான்கு தொகுதிகளை கைப்பற்றி இருந்தது . அப்போது அதிமுகவும் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இருந்தாலும் பா ம க குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் வன்னியர் சாதிகளிர்க்குள் மட்டுமே செல்வாக்கு பெற்ற ஒன்றாகும். ஒட்டுமொத்தமாய் அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவீதம் அப்போது நான்கு மட்டுமே .




இந்த தேர்தல்தான் பா ம க தனித்து நின்று கடைசியாக போட்டியிட்டது அதற்க்கு பின்னர் அவர்கள் அதிமுக அல்லது திமுக என்று ஏதேனும் ஒரு  கூட்டணியில் தாம் இருந்துள்ளனர்.





1996   க்கு பின்னர் அமைந்த  மத்திய அரசு சிறுது காலத்தில் களைந்து விட்டது, பின்னர் 1998  இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா ஒரு பலம் மிக்க கூட்டணியை அமைத்தார் அப்போதும் இந்த கூட்டணியில்  முதலில் சேர்ந்த கட்சி மதிமுக , அதாவது தேர்தலிற்கு முன்னரே , 1997 ஆம் ஆண்டே மதிமுக கட்சியை அதன் தலைமையகமான தாயகம் சென்று வலிந்து கூட்டணிக்குள் சேர்த்து கொண்டார் ஜெயலலிதா. 




1996 தோல்விக்கு பின்னர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார் ஊழலின் ராணி என்று வர்ணிக்கப்பட்டார், அவரோடு கூட்டணி என்று எந்த கட்சியும் யோசித்திராத நேரத்தில் முதலில் கை கொடுத்தது மதிமுக தான்.  அதிமுகவோடு அந்த கால கட்டத்தில் கூட்டணிக்கு சேர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று வைகோ அறிவித்திருந்தார். அந்த  கூட்டணியில் அப்போது பாரதிய ஜனதா கட்சி இருந்தது.




இந்த பழைய கதைகளை நாம் பார்த்தது ஏன் என்றால், இப்போதுதான் மதிமுகவும் பா ம கவும் முதல் முறையாக கூட்டணியில் சேர்ந்துள்ளன. கூட்டணியில் தலைமை கட்சியான அதிமுக இரண்டு கட்சிகளிற்கும் தலா 5  இருக்கைகளை ஒதுக்கியது. பா ஜ கவிற்கும் 5  இருக்கைகள்.  மீதியுள்ள அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிமுக 18  இடங்களை கைப்பற்றி இருந்தது . ம தி முக மற்றும் பா ம க முறையே மூன்று  ,நான்கு  தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.




அதற்க்கு பின்னர் நடந்த தேர்தலில் பா ம க , திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாறி மாறி தாவி " தாம் இருக்கும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி " என்றும் பேசியது.



2009 நாடாளுமன்ற தேர்தலில் அந்த பா ம கவின் வார்த்தைகளுக்க்காகவே தோல்வி எனும் வகையில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பா ம க தோல்வியை கண்டது.



2009, நாடாளுமன்ற தேர்தலில் , பா ம க ஒரு மிக பெரிய துரோகத்தை அதிமுக கூட்டணிக்கு உள்ளுக்குள் இருந்து கொண்டே செய்தது.




அது,ஈழத்தில் தமிழர்களை கொள்வது நித்தம் நடைபெற்று கொண்டிருந்த கால கட்டத்தில், திமுக தலைமையில் உள்ள காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மிகபெரிய தோல்வியை தழுவும் என்று எதிர்ப்பதிருந்த நேரத்தில், ஈழ விடயமே பிராதன தேர்தல் பிரசார கருவியாக இருந்த நேரத்தில், ஈழ விடயம் என்றால்  திமுக வும் அதிமுகவும் ஒருமித்த கருத்தை கொண்டிருந்த நேரத்தில், ஜெயலலிதா திடீரென்று ஈழத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அறிவித்தார். 




துரோகம் இதில் இல்லை.  இந்த நேரத்தில் நெடுமாறன் போன்ற தேர்தலில் போட்டியிடாத ஈழ ஆர்வலர்களே , ஈழ கூட்டணியை பற்றி யோசித்திராத நேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை , திமுக தூண்டிவிட்டு அமைய  முடியாத ஈழ கூட்டணியை பற்றி பேச வைத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நான் திமுகவில் இருந்து வெளியே வருகிறேன், பா ம கவும் மதிமுகவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும் . நாமெல்லாம் சேர்ந்து ஈழ கூட்டணியை அமைப்போம் என்று சொல்லி கொண்டிருந்தார். இது அமையாது என்று கருணாநிதிக்கும் தெரியும் , திருமாவிற்கும் தெரியும் அந்த தைரியத்தில்தான் அவர்கள் இப்படி சொன்னார்கள். ஏனென்றால் அப்படி அமைந்தால் அது  திமுகவின் வெற்றியை மிக இலகுவாக்கிவிடும்.



இங்கே அதிமுக கூட்டணியில் , பா ம க வின் ராமதாஸ், ஜெயலலிதாவிடம் முதல் ஆளாய் போய், " ஈழ கூட்டணி பற்றி பேசினார்கள் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் . வைகோ இன்னமும் அலைபாயும் மனதில் உள்ளார் " என்று  "கோல் மூட்டல்" என்பார்களே அதை செய்து தாம் விரும்பும் ஏழு தொகுதிகளை பெற்று கொன்று முதல் ஆளாய் தேர்தல் களத்திற்கு சென்று விட்டார். இந்த பொய்தான் பா ம கவின் துரோகம் என்று நாம் சொன்னது.




அதிமுக கூட்டணியில் முதலில் இருந்தே இருக்கும் வைகோவின் மீது ஜெயலலிதாவிற்கு  இப்போது பலத்த சந்தேகம் வந்துவிட்டது அதன் வெளிபாடே அந்த தேர்தலில் அவருக்கான இருக்கைகளை மிகவும் குறைத்தது , அவரது மதிமுகவை அசிங்கம் செய்த செயல். மதிமுகவிற்கு  நான்கு தொகுதிகளை போராடி வைகோ பெற்றார்.



இந்த அவமானமே மதிமுகவின் சிறப்பு  வாக்குகள் அனைத்தும்(மதிமுகவின் வாக்கு வங்கி ஆறு சதவீதத்தை தவிர) அதிமுக  கூட்டணிக்கு , கட்சி சார்பில்லாத  அந்த மூன்று அல்லது நான்கு சதவீத  மதிமுக சிறப்பு வாக்குகளை , அதிமுக கூட்டணி பெற இயலாமல் போனதிற்கு மிகவும் முக்கிய காரணம்.




இந்த தேர்தலில் ஏழு தொகுதிகளை பெற்றிருந்தாலும் , கட்சி மாறி வந்ததனால் மக்கள் இடத்தில மிகவும் கேட்ட பெயர் கொண்ட கட்சியாகத்தான் பா ம க பார்க்க பட்டது. அதுவும் போக, தேவை படும் பொழுதெல்லாம்    வன்னியர் சங்கம் நாங்கள் என்பதை காட்டி கொண்டே இருந்தது. அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் பொதுபடையான அரசியல் பேசாமல் சாதி சங்க தலைவர் தாம் என்பதை ராமதாஸ் அடிக்கடி காட்டிவந்துள்ளார். ஆனால் சொந்த சாதியை பயன்படுத்தி தன்னை மட்டுமே இவர் வளப்படுத்தி  கொண்டார் என்ற குற்றசாட்டில் பா ம க  நின்ற அனைத்து தொகுதிகளிலும் வன்னியர்கள் பலமாக உள்ள பகுதிகளிலும்  தோல்வி கண்டது.


இப்போதுதான் ஜெயலலிதாவிற்கு ராமதாசின் கபட வேடம் புரிந்தது.



அந்த தோல்விக்கு பின்னர் ஜெயலலிதாவை சந்திக்க கூட ராமதாஸ் அனுமதிக்க படவில்லை. அதன் பின்னர், கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் திமுக வில் பா ம க வலுக்காட்டயமாய் போய் சேர்ந்தது. தனது மகன் அன்புமணிக்கு ஒரு இருக்கை  தந்தால், போதும் என்று சொல்லியது. திமுகவிற்குள் சேர்த்து கொண்ட கருணாநிதி அன்புமணிக்கு இருக்கை இல்லை என்று கை விரித்து விட்டார். சேர்ந்த பா ம க பின்னர் பொது குழுவை கூட்டி நாங்கள் இன்னும் திமுகவோடு சேரவில்லை  என்று சொன்னது.




பொன்னகரம் தேர்தலில் , அதிவேக சாதி வெறிகளை தூண்டி  வேட்பாளரை தனித்து நிறுத்தியது . இரண்டாம் இடம் பெற்றதை தமிழகம் முழுதும் உள்ள அரசியலுக்கு பயன்படுத்த துடித்தது. இருந்தாலும் பா ம க வை இரண்டு கழகங்களும் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் இப்போதைய நிலவரம்.



1996 க்கு பின்னர் பா ம க மீண்டும் தேர்தலை தனியாக சந்திக்க இருக்கின்றது. அல்லது தமது எண்ணிக்கை பிடிவாத அரசியலை விட்டு விட்டு 15 அல்லது 20 தொகுதிகளிர்க்குள் திமுக அல்லது அதிமுகவோடு பேரம் பேசினாலும் பேசும்.




கடந்த வாரம் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பா ம க , தம்மோடு கூட்டணிக்குள் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. மீசையில் மண் ஒட்டவில்லை என்று பா ம கவும் திமுகவிற்குள் சேரும் என்றே இப்போதைக்கான நிலைமை உள்ளது. இதுதான் பா ம கவின் இப்போதைய விருப்பமும் கூட. 




அவர்கள் பேசும் மூன்றாம் கூட்டணி அல்லது விஜயகாந்தோடு கூட்டணி என்பதெல்லாம் அரசியல் வீராப்பு வார்த்தைகள்தாம் என்று அனைவருக்கும் நன்றாய் தெரியும்.

 

 

திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் திமுக கட்சி  ஆட்சியில் இருக்க முடியாது ? - பகுதி ஒன்று.

 

இனி வரும் பகுதிகள் :

பகுதி மூன்று : காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் என்ன மதிப்பு ?
பகுதி நான்கு : கட்சிகளின் அணி மாற்றம்  மற்றும்  பிரச்சாரம் எப்படி இருக்கும் ?
பகுதி ஐந்து : திமுகவை எப்படி பார்த்தாலும் கவிழ்க்கும் காங்கிரஸ் கட்சி ?
பகுதி ஆறு : ஈழம் பிரதான பிரச்சினையாக இருக்குமா அல்லது மறக்கப்பட்டிருக்குமா?
பகுதி ஏழு  :  ஒரு வாக்கிற்கு எவ்வளவு காசு கொடுப்பார்கள் ?
பகுதி இறுதிக்கு முந்தியது   : புதிய தமிழகம்  அதிமுகவிற்கு புதிய வரவு . அதிமுக கூட்டணிக்கு பலமா ?
பகுதி இறுதி : இன்ன பிற கட்சிக்கள் மற்றும் அமைப்புகள்.


தேர்தல் சிறப்பு ஆய்வு கட்டுரை , ஆசிரியர் கண்ணன்.