தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் திமுக கட்சி ஆட்சியில் இருக்க முடியாது ? - பகுதி ஒன்று.

                   இன்னும் தமிழக  சட்டமன்ற தேர்தலிற்கு அனேக நாட்கள் உள்ளது. அதிமுக அணி இப்போது பலம் வாய்ந்ததாக உள்ளது. இதையும் மீறி திமுக அணி வெற்றி பெற்றுவிட்டாலும் அதுவும் பெரும் சிக்கல்தான்.காங்கிரஸ் கட்சியின் மூலமாக.

ஆம் இப்போது இதுதான் நிலைமை. காங்கிரஸ் கட்சியின் பேச்சும் இப்போது இதுதான். அது எப்படி . டெல்லியில் நமது செய்தி அளிப்பாளர்கள்  தரும் விவரங்கள் கடைசியில் ஆரயாபடும்., அதற்கும் முன்னர் நமது தேர்தல் நிலவர ஆய்வு இதுதான். (இன்றைக்குள்ள நிலவரப்படி)

அதிமுக கூட்டணி :


காங்கிரசும் திமுகவும் சேர்ந்தேதான் சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறது. அதில் மாற்றம் இருப்பாதாய் தெரியவில்லை.
இப்போதைக்கு  திமுக கூட்டணி  திமுக + காங்கிரஸ் + விடுதலை சிறுத்தைகள் என்ற அளவில் உள்ளது,
மாறாக அதிமுக கூட்டணி,அதிமுக +மதிமுக+மார்க்ஸ் கம்யூனிஸ்ட்+இந்திய கம்யூனிஸ்ட் என்ற கொஞ்சம் வலுவான அளவிலேயே உள்ளது .
தனி தனி கட்சிகளின் செல்வாக்கை பார்த்தாலும் ,
அதிமுக  32 சதவீதம் மதிமுக 6 சதவீதம் இரண்டு கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து 6 சதவீதம் , ஆக மொத்தம் 44 சதவீத வாக்குகளை இப்போது அதிமுக அணி பெற்றுள்ளது இதில் சேதமடையும் வாக்குகளாக மூன்றை கழித்தாலும் 41 சதவீத வாக்குகளை அதிமுக அணி பெற்றுள்ளது.



மதிமுகவின் சிறப்பு வாக்குகள் :




எந்த கட்சிக்கும் இல்லாதபடி ,வைகோ வின் அணுகுமுறைக்கும் அவரது வளர்ச்சியை அல்லது அரசியலில் அவருக்கான சிறப்பான  அங்கீகாரத்தை விரும்பும் வாக்குகள் மூன்று சதவீதம் தமிழ் நாட்டில் உள்ளது. இந்த வாக்குகள் மதிமுகவிற்கு தனியாக விழும் வாக்கு வங்கி வாக்குகளாக இல்லாமல், மதிமுக இடம்பெறும் கூட்டணிக்கு ஆதரவாய் அல்லது  வெற்றி பெரும் வாய்ப்பு இருந்தால் விழும் வாக்குகளாக உள்ளது. உதாரணமாய் மதிமுக தனித்து நின்றால் இந்த வாக்குகளில்  ஒரு சதவீதம்தான் மதிமுகவிற்கு பதியப்படும். மதிமுக  சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினால் அவமானபடுத்தப்பட்ட பொழுது, பின்னர் சமாதானமாகி நான்கில் மதிமுக போட்டியிட்டாலும், இந்த வாக்குளில் ஒன்று கூட விழுந்திருக்காது. இது களத்தில் நாம் கண்ட உண்மை.  இந்த சிறப்பு வாக்குகள் மதிமுக பங்கு பெரும் கூட்டணிக்கு சாதகாய் இருப்பதும் இல்லாதிருப்பதும் மதிமுகவை கொண்டுள்ள கூட்டணி அவர்கள் எப்படி நடத்துகிறது என்பதை பொறுத்து உள்ளது.



இந்த வாக்குகள் அனைத்தும் மெத்தபடித்த அரசியல் விவரங்கள் அனைத்தும் அறிந்த, காசிற்கு மயங்காத, அதே சமயம் மதிமுக கட்சிக்கென்றே என்றில்லாமலும் இருக்கும் வாக்குகள். சற்று  வித்தியாசமான வாக்குகள்தாம்.சென்ற நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக அதிமுகவினால் அவமானபடுத்தப்பட்டது உண்மை , அப்படி இல்லாமல் அவர்களை சரியாக நடத்தி இருந்தால் இந்த மூன்று சதவீத வாக்குகள் தேர்தலில் அதிமுக அணிக்கு சாதகமாய் பதியபட்டிருக்கும். தேர்தல் முடிவில் கொஞ்சம் அதாவது இன்னும் எட்டு தொகுதிகளில் அதிமுக அணி வெற்றி பெற்றிருக்கும். அதை கெடுத்து கொண்டது அதிமுகதான். மதிமுகவும் இந்த வாக்குகளை பெற முயற்சி செய்யவில்லை.





திமுக கூட்டணி :


திமுக 30 சதவீதம் , காங்கிரஸ் கட்சி 6  சதவீதம் , விடுதலை சிறுத்தைகள் இரண்டு சதவீதம் என திமுக கூட்டணி இப்போது 38சதவீத வாக்ககுகள் மட்டுமே பெற்றுள்ளது. இதில் சேதார வாக்குகள் மூன்றை கழித்தால் 35  சதவீதம் மட்டுமே உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் வாக்குகள் உள்ளது என்றாலும் எட்டு சதவீதம் வைத்து கொண்டாலும் மொத்தம் 37 சதவீத வாக்குகள் மட்டுமே திமுக கூட்டணிக்கு உள்ளது.



தேமுதிக  எப்படி இருந்தாலும் அழிவே :


தேமுதிக கட்சிக்கு இப்போது எட்டு சதவீதம் வாக்குகள் இருந்தாலும் அல்லது அந்த கட்சியினர் சொல்வதை போல பத்து சதவீத வாக்குகள் இருந்தாலும் இந்த தேர்தலில் அது முழுமையாக அவர்களிற்கு பதியாது. மூன்று சதவீதம் அந்த கட்சிக்கு சரிவு நிச்சயம் உண்டு.  இவர்கள் திமுக அல்லது அதிமுக அணியில் சேர்ந்தாலும் நிலைமை மிகவும் மோசமாகும் , அதாவது இவர்களின் வாக்கு நான்கு அல்லது மூன்று சதவீதமாய் குறைந்து விடும் ஏனென்றால் இதுவரை தேமுதிக இரு கட்சிகளையும் எதிர்த்தே அரசியல் செய்துள்ளது. ஏதேனும் ஒரு அணியில் இவர்கள் சேர்ந்தால் அத்தோடு இவர்களின் அரசியல் நடு நிலை  பயணம் முடிவுக்கு வந்து விடும். அதே சமயம் இவர்கள் தனியாக தேர்தலை சந்தித்தாலும் , எட்டு அல்லது பத்து சதவீத வாக்குகள்பெற்றாலும் வரும் சட்ட மன்ற தேர்தலில் ஒரு இருக்கையை கூட பெற முடியாது என்ற சூழலே உள்ளது.எட்டு அல்லது பத்து சதவீதம்  வாக்குகள், தேமுதிகவிற்கு இருந்தாலும்  எந்த அணிக்கும் உதவாமல் அல்லது தமது கட்சிக்கே உதவாமல்தான் இப்போதைய தேமுதிக வின் நிலைமை உள்ளது.





இனி வரும் பகுதிகள் :



பகுதி இரண்டு: பா ம க மற்றும் இதர கட்சிகளின் தேர்தல் நிலை ?
பகுதி மூன்று : காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் என்ன மதிப்பு ?
பகுதி நான்கு : கட்சிகளின் அணி மாற்றம்  மற்றும்  பிரச்சாரம் எப்படி இருக்கும் ?
பகுதி ஐந்து : திமுகவை எப்படி பார்த்தாலும் கவிழ்க்கும் காங்கிரஸ் கட்சி ?
பகுதி ஆறு : ஈழம் பிரதான பிரச்சினையாக இருக்குமா அல்லது மறக்கப்பட்டிருக்குமா?
பகுதி ஏழு  :  ஒரு வாக்கிற்கு எவ்வளவு காசு கொடுப்பார்கள் ?
பகுதி இறுதிக்கு முந்தியது   : புதிய தமிழகம்  அதிமுகவிற்கு புதிய வரவு . அதிமுக கூட்டணிக்கு பலமா ?
பகுதி இறுதி : இன்ன பிற கட்சிக்கள் மற்றும் அமைப்புகள்.

தேர்தல் சிறப்பு ஆய்வு கட்டுரை , ஆசிரியர் கண்ணன்.