தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

"கற்புக்கரசி " குஷ்புவினால் கலைஞர் வீட்டுக்குள் குடும்ப சண்டை .

Kushboo Hot Sexy Photo


''சில மாதங்களாக அடங்கிக்கிடந்த தி.மு.க.வின் உட்கட்சி பூசல்களும் குடும்ப மோதல்களும் அப்பட்டமாக வெளிப்படும்'' என்பதுதான் எல்லாதரப்பு அரசியல்வாதிகளும் முணுமுணுக்கும் செய்தியாக இருக்கிறது.



திடுமென தி.மு.க.வில் புகைய ஆரம்பித்திருக்கும் புகைச்-சலுக்கு காரணம் நாகர்கோவிலில் நடந்த முப்பெரும் விழா. இந்த விழாவில் அழகிரியின் பெயர் அழைப்பிதழில் முதலில் அச்சேரவில்லை. அவர் ஆவேசப்பட்டதும், அதே விழாவில் குஷ்புவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் தி.மு.க.வில் மீண்டும் குடும்ப மோதலுக்கு இழுத்துச் சென்றுள்ளது.




ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தி.மு.க.விற்கு கொண்டாட்ட மாதம்தான். திராவிட பாரம்பரியத்தின் அச்சாணிகளான பெரியார், அண்ணா ஆகியோரின் பிறந்த தினங்களோடு, கட்சி தொடங்கிய நாள் என மூன்று விழாக்களையும் இணைத்து, முப்பெரும் விழா எடுத்து வருகிறது தி.மு.க.



இந்த முப்பெரும் விழாவில் எப்போதும் ஒரு மெசேஜ் இருக்கும். இந்த முறை கிடைத்த மெசேஜ்... கலைஞர் தனது வாரிசுகளின் மூக்குடைத்துவிட்டு, குஷ்புவுக்கு ராஜ மரியாதை செய்திருப்பதுதான். அந்த விஷயத்துக்கு இறுதியில் வருவோம். நாகர்கோவில் தேர்வான ரகசியம்!



இந்த வருடம் முப்பெரும் விழா பற்றிய பேச்சுக்கள் கிளம்பியதுமே முதல்வர் கருணாநிதியிடம், ''கோவையில் செம்மொழி மாநாடு நடத்திவிட்டீர்கள். திருச்சியில் திகைப்பான கூட்டம் கூட்டி விட்டீர்கள். சமீப காலங்களில் வட மாவட்டங்களில்தான் கட்சியின் பெரிய விழா எதுவும் நடக்கவில்லை. அதனால் திருவண்ணாமலையில் முப்பெரும் விழாவை நடத்த வேண்டும்'' என கோரிக்கை வைத்திருந்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. அந்த கருத்தை ஸ்டாலினும் ஆதரித்திருக்கிறார். முதல்வர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ''தமிழகத்தின் தென் கோடியை நாம் மறந்து விட்டோம். இம்முறை நாகர்கோவில்தான். நான் அங்கு சென்றும் வெகு நாட்களாகிறது'' என்று சொல்லி நாகர்கோவிலை விழா நகரமாக தேர்வு செய்தாராம்.




ஆவேசத்துக்கு அச்சாரம் அழைப்பிதழ்!




நாகர்கோவிலில் முப்பெரும் விழா என்று முடிவானதுமே, அதற்கான மொத்த ஏற்பாடுகளையும் செய்யும்படி சுற்றுலா மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரான சுரேஷ்ராஜனிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்தார் கலைஞர். இதற்குள் அழகிரியின் காதுகளுக்கு முப்பெரும் விழா செய்திகள் போனது. உடனே ஆவேசமான அழகிரி, ''தென்மண்டலத்தில் விழா நடத்துவதைக்கூட ஒரு செய்தியாகத்தான் என்னிடம் சொல்கிறீர்கள். என்னிடம் கலந்தாலோசிக்க மாட்டீர்களா?'' என அப்போதே முதல்வரிடம் ஆவேசப்பட்டாராம்.



இருந்தாலும், விழா நடக்கட்டும் என்று அமைதியாக இருந்தார் அழகிரி. இதற்கிடையில், விழாவுக்கான அழைப்பிதழ் தயாராகி வந்தது. அதில் தன் பெயர் இல்லை என்றதும், கொதிக்க ஆரம்பித்து விட்டார்.


தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்களான துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன் ஆகியோரின் பெயர்களோடு லோக்கல் அமைச்சரான சுரேஷ்ராஜன் ஆகியோரது பெயர்கள் மட்டும்தான் அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது.


''திட்டமிட்டு என்னை அவமானப் படுத்துகிறார்கள். விழாவை நல்லா நடத்திட்டுப் போகட்டும். ஆனால், சத்தியமாக நாகர்கோவில் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கமாட்டேன்'' என்று தனது தாயிடமும், சகாக்களிடமும் தெரிவித்துவிட்டார். அழகிரியின் கோபம், ஆவேசமாக மாறிய விஷயம் கலைஞருக்கு எட்டியது. முப்பெரும் விழா தென் மண்டலத்தில் நடக்கிறது, அதில் அழகிரி பெயர் இல்லையென்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறியாதவர் அல்ல கலைஞர். ஆனாலும், அழகிரியின் பெயரை கலைஞர் ஏன் தவிர்த்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.


அழகிரியின் கோபம் குறித்து, செப்.18&ம் தேதி காலை முதலே விவாதிக்கத் தொடங்கிவிட்டார் கலைஞர். 'என்னய்யா... அவன் கோவிச்சிக்கிறான். அமைப்புச் செயலாளர் பெயர்களை இதுவரை முப்பெரும் விழாவில் போட்டதே கிடையாது. அப்படி போட்டால், அழகிரியோடு டி.கே.எஸ்.இளங்கோவன், பி.வி.கல்யாணசுந்தரம் பெயரையும் போட வேண்டுமே' என்றெல்லாம் விவாதம் தொடங்கி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார் கலைஞர். அவரது பெயரை போட்டுவிடுவது என்று முடிவு செய்து, அமைச்சர் துரைமுருகன் மூலம், அழகிரிக்கு தெரியப்படுத்தி-விட்டார் கலைஞர். அழகிரி பெயர் சேர்க்கப்பட்ட விளம்பரம் தயா-ராகி முரசொலி இதழ் அச்சாகிக் கொண்-டிருந்தது.


அழகிரியின் புயல் ஓய்ந்துவிடும் என்று கலைஞர் நினைத்துக் கொண்டே, சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்றார். அங்கே, அந்த விழா அழைப்பிதழில் கனிமொழி பெயரும் இடம் பெற வேண்டும் என்று ராசாத்தியம்மாள் போர்க்கொடி தூக்க, கலைஞருக்கு நெருக்கடி தொடங்கியது. ஒரு மணி நேரம் விவாதம் நடந்து முடிந்ததும், முரசொலிக்கு சென்ற விளம்பரத்தில் மாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார் கலைஞர்.


அழைப்பிதழில், அழகிரியின் பெயரோடு, கனிமொழி பெயரைச் சேர்த்ததுடன், குஷ்பு சுந்தர் பெயரையும் சேர்க்கச் சொன்னார் கலைஞர். அங்கேயும் ஒரு சுவாரஸ்ய திருப்பம் ஏற்பட்டது. சென்னைக்கு மட்டும் அடிக்க வேண்டிய முரசொலி மட்டுமே பாக்கி இருந்தது. அதனால் சென்னை பதிப்பு முரசொலி யில் மட்டுமே, கனிமொழி பெயரும், குஷ்பு சுந்தர் பெயரும் இருந்தது. முரசொலியின் இதர பதிப்புகளில் இந்த இருவரின் பெயர் இல்லை. மற்ற நாளிதழ்களில் திருத்தப்பட்ட அழைப்பிதழில் அழகிரி, கனிமொழி, குஷ்பு சுந்தர் பெயர்களும் இருந்தன. 19&ம் தேதி விளம்பரம் வந்த அன்றுதான், வாரிசுகள் அத்தனை பேரையும் கலைஞர் மூக்குடைத்தது அம்பலமாகி இருந்தது.

 


' ஆளாளுக்கு என் பேரை சேருங்கன்னு டார்ச்சர் செய்யறீங்களா... இருங்க என் வேலையை நான் காட்டுறேன்' என்று கலைஞர் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் மறுநாள் தான் தெரிந்தது.

 



குஷ்பு பெயர் வந்ததும் கடும் வெறுப்பில் மூழ்கியவர் கனிமொழி. கட்சிக்காக ஊர் ஊராக ஓடித்திரியும் தனது பெயரை சேர்க்க வேண்டி தாயார் கோரிக்கை வைத்தால், தனது இடத்திற்கு சமமாக குஷ்புவைக் கொண்டு வந்ததை கனிமொழியால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தும் தனது அதிருப்தியை, கலைஞரிடம் காட்டாமலேயே, நாகர்கோவில் சென்று வந்தார்.

 



குஷ்புவின் பெயர் அச்சில் ஏறிவிட்டது என்ற செய்தி தன்னை எட்டியதும், ஸ்டாலின் தவிப்புக்குள்ளானார். அழகிரியின் பெயரை போடுவதற்கு எப்போதுமே, தன்னால் தான் பிரச்னை ஏற்படும். இந்த முறை குஷ்புவின் மூலமாக குடும்பத்திற்குள் பிரச்னை வெடிக்கப்போகிறதே... அண்ணனை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று அவர் தவித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரைவிட உச்சக்கட்ட கடுப்புக்கு ஆளானவர் அழகிரிதான். பெயர் இல்லையே என்று மேலோட்டமாக கோபம் காட்டிய அழகிரி, திருத்தப்பட்ட அழைப்பிதழில் இருந்த பெயர்களைக் கண்டதும், கொதித்துவிட்டார்.

 



எடுபடாத தயாளு சமாதானம்!

பல தரப்பில் இருந்து சமாதானம் செய்தும் அழகிரி மசியவில்லை. பின்னர் துரைமுருகன் பேசியிருக்கிறார். ''நான் எம்.ஜி.ஆர் படம் பார்த்துக்கிட்டிருக்கேன். என்னை டிஸ்டர்ப் செய்யாதீங்க'' எனச் சொல்லி தொடர்பை கட் செய்துவிட்டாராம் அழகிரி.

 



இந்நிலையில் அழகிரியை சமாதானப்-படுத்த தயாளு அம்மாளைக் கொண்டு வந்தார்கள். வழக்கமாய் பேசும் அதே உருகிய குரலுடன் அழகிரியின் லைனுக்கு போயிருக்கிறார் தயாளு. ''எல்லாரும் ஒண்ணாயிருக்கறப்ப, நீ மட்டும் ஏம்பா முரண்டு பிடிக்கிறே. தேர்தல் வர்ற நேரத்துல, நீ இப்படி செய்யறது அப்பாவுக்கு பிடிக்கலைப்பா. எல்லாத்தையும் மறந்துட்டு என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து விழாவுக்கு போகணும்..'' என உரிமை கலந்து உத்தரவு போட்டாராம்.



''அழைப்பிதழில் என் பெயர் போடாததே பரவாயில்லை. விளம்பரத்துல என் பெயரை போடறேன்னு சொல்லிட்டு குஷ்பு பெயருக்கு மேல போட்டிருக்கீங்க. குஷ்புவுக்கு சமமா நான்? கட்சிக்குள்ள தலைவருக்கு அடுத்து ஸ்டாலின்னு முடிவு பண்ணிட்டீங்க. ஸ்டாலினுக்கு அடுத்து கூட நான் இல்லேன்னா, என்னை எந்த இடத்துலதான் வைச்சிருக்கீங்க?'' என்று கேட்டுவிட்டு, போனை ஆஃப் செய்துவிட்டார் அழகிரி



அண்ணன் நாகர்கோவில் செல்லவில்லை என்றதும், அவரது ஆதரவாளர்கள் அங்கே குவியத்தொடங்கினர். ''இந்தக் கட்சிக்காக எவ்வளவு உழைக்கிறேன். வர்ற சட்டமன்ற தேர்தலுக்காக இப்ப இருந்தே நாயா பாடுபடறேன். பெங்களூருல இருந்தும், டெல்லியில இருந்தும் ஆட்களை கூப்பிட்டு வந்து, இப்பவே சர்வே எடுத்துப் பார்க்கறேன். தென் மண்டலம் முழுவதும் இப்பவே பூத் கமிட்டி அமைக்கச் சொல்லியிருக்கேன். இப்படி நான் உழைக்கற உழைப்பு மாதிரி யார் உழைக்கறாங்க? அடுத்து வேற ஆட்சி வந்தால், என் நிலைமை என்னாகும்? எனக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? இன்னும் ஆறு மாசத்துல தேர்தல் வரட்டும். அப்ப நான் யாருன்னு காட்டறேன்'' என ஆவேசத்தில் தன்னுடைய வருத்-தங்கள் அனைத்தையும் தன் வீட்டில் குவிந்-தவர்களிடையே கொட்டினாராம். இந்த விஷயங்கள் அப்படியே கலைஞரின் காதுக்கும் போயிருக்கிறது.



இதற்கிடையில், முப்பெரும் விழா நாளில் நான் மதுரையில் இல்லாமல் இருப்பது போல் வெளியே தெரியக்-கூடாது. மதுரையில் இருந்து கொண்டுதான் விழாவுக்கு வரவில்லை என எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே, தொகுதி மேம்பாட்டு நிதியில் மதுரையில் நடைபெறும் சில வேலைகளை தனது படை, பரிவாரங்கள் சூழ சென்று பார்வை-யிட்டாராம் அழகிரி.

 



''விழாவைப் புறக்கணித்துவிட்டு அழகிரி, இப்போதைக்கு அமைதியாக இருந்தாலும், அடுத்தடுத்து அவர் ஆற்றப் போகும் காரியங்கள் கட்சிக்குள் பெரும் புயலை வீசச் செய்யும்...'' என்று அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் இருந்து விடுக்கும் செய்திகளால், தி.மு.க. தலைவர்கள் சிலர் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

 



கோபாலபுரத்தில் வழக்கமாக உள்ளூர் புயல்தான் வீசும். நீர் அடித்து நீர் விலகாது என்ற வகையில் அந்த புயல்கள் புஸ்வாண-மாகிவிடும். வடஇந்தியாவிலிருந்து வங்கக்-கரைக்கு வந்திருக்கும் குஷ்பு புயலால், கோபாலபுரம் குடும்பத்தில் என்ன கலவரத்தை ஏற்படுத்தும் என்பதைதான் தி.மு.க.வின் தொண்டர்கள் திகிலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.



காரணம், முப்பெரும் விழாவில் கட்சியில் சேர்ந்து ஆறு மாதங்கள் கூட ஆகாத ஒரு நடிகைக்கு கொடுக்கப்பட்ட ராஜமரியாதை, தி.மு.க. முக்கியஸ்-தர்களை மட்டு-மின்றி, மூன்று வாரிசுகளுமே வெவ்-வேறு வகைகளில் சங்கடத்திற்கு ஆளாகியிருக்-கிறார்-கள் என்பதும் மறுக்க முடியாத செய்தியாகும்.



ஆக, முப்பெரும் விழாவில் இறுதியில், தி.மு.க. தொண்டனுக்கு கிடைத்திருப்பது ஒரே ஒரு செய்திதான்... தனது வாரிசுகளை கட்டுப்படுத்த முடியாமல் அல்லது அவர்களுக்கு பாடம் கற்பிப்பதாக நினைத்து குஷ்புவை தாங்கிப்பிடித்திருக்கிறார் கலைஞர். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வாரிசை சமாளிக்க, அந்தந்த நேரத்தில் ஒரு அஸ்திரம் எடுப்பார். மூன்று வாரிசுகளுக்கும் ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுக்க, கலைஞர் எடுத்த அஸ்திரம்தான் குஷ்பு! இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அழகிரியின் அடுத்த மூவ்தான் முதலில் எடுத்துக்காட்டும்!