தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

காமராஜர் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சி? பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி? - கேட்டது முதல்வர் கருணாநிதி ?

இது கொஞ்சம் பழைய செய்திதான் . படித்ததில் பிடித்ததை இதை பதிகிறேன்.


இது தேமுதிக தலைவர் விஜயகாந்த் புளியந்தோப்பு கூட்டத்தில் பேசியதன்
எழுத்து தொகுப்பு . கொஞ்சம் பழைய செய்திதான் சுவராசியமாய் இருந்ததால்
இங்கே பதிகிறோம்


''உங்களை விமர்சித்தேன் என்பதற்காக எங்களை வீணர்கள்... வெறிக் கூச்சல்
போடுகிறோம்... என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறீர்கள். கலைஞரே
உங்களுக்கு தைரியம் இருந்தால் தே.மு.தி.க. என்று சொல்ல வேண்டியதுதானே?
'காமராஜர் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சி? பக்தவத்சலம் அண்ணாச்சி
பருப்பு விலை என்னாச்சி? கக்கன்ஜி அண்ணாச்சி கடலை விலை என்னாச்சி?' என்று
நீங்கள் மட்டும் கேட்கலாம். ஆனால், இந்த விஜயகாந்த் கேட்டால் தப்பா?
'எதையும் தாங்கும் இதயம் உண்டு' என்று அண்ணா சொன்னார். நான் சொன்ன
சொல்லைக்கூட தாங்க முடியாமல் என்னைத் திட்டித் தீர்க்கிறீங்களே, இதற்கு
பெயரா எதையும் தாங்கும் இதயம்? அண்ணா இதயத்தை இரவலா கொடுத்ததா
சொல்றீங்க, அப்படி கொடுத்திருந்தா... இந்த விஜயகாந்த் சொன்னதுக்கு
சரியா பதில் சொல்லியிருப்பீங்க. அண்ணா எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு
பதில் சொல்வாரு. ஏன் உங்களுக்கு ஆத்திரம் வருது?


கலைஞருக்கு அண்ணா மாலை போடுவது -போல ஒரு போட்டோ. என்ன மாதிரி அண்ணாவை
கேவலப்படுத்துகிறார்... அண்ணன் எப்போது எழுந்திருப்பார், திண்ணை
எப்போது காலியாகும் என்று காத்திருந்து, அப்படி உட்கார்ந்தவர்தான் இந்த
கலைஞர். பெரியார், அண்ணா , எம்.ஜி.ஆர். ஆகியோர் அரசியல் கட்சி என்ற
வீட்டைக் கட்டினர். ஆனால், கட்டிய வீட்டில் குடி புகுந்தவர் கலைஞர்.
கரையான் புற்றுக்குள் புகுந்த கருநாகம்தான் கலைஞர்.


பெரியார் வழியில் வந்ததாகச் சொல்லும் கலைஞர் கழுத்தில் ஒரு மஞ்சள்
துண்டு, கையில் ஒரு சிகப்பு கல் மோதிரம். அவர் சுண்டு விரலை பிடித்து
கொண்டு வந்தேன் என்று பொய் சொல்வார். அதற்காக செத்தவர்களைத்தான்
எப்போதும் அவர் சாட்சிக்கு அழைப்பார்.

எம்.ஜி.ஆர். ஒரு படத்தில், 'ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமை
தந்தார். தன் இனிய குடும்பம் ஒன்றுக்குதான் வறுமையை தந்தார்' என்று
அண்ணாவைக் காட்டிப் பாடுவார். ஆனால் அண்ணா வழி வந்த நீங்கள் இன்று விரல்
விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் ஒருவர். மந்திரி குமாரி, பராசக்தி
என்று இரண்டே இரண்டு படத்தை வைத்து இவ்வளவு நாட்கள் ஓட்டிக்
கொண்டிருக்கிறார் கலைஞர். அதன் பிறகு என்ன செய்தார்? இவர் எழுதிய
வசனத்திற்கு 50 லட்ச ரூபாய் எந்த பைத்தியக்காரனாவது தருவானா?

நாட்டுல கொலை நடக்குது, கொள்ளை நடக்குது... குண்டு எவன் போடறான்னு
பார்க்காமல், கூட்டணியை உடைக்க வேண்டும்... விஜயகாந்த் தனித்து
போட்டியிட வேண்டும் என்று புரளி கிளப்புகிறார். நான் அடங்குவேனா என்று
பார்க்கிறார். என்னய்யா விஜயகாந்த்துக்கு '8 காலம்' செய்தியா? வேறு
பக்கம் தள்ளிப்போடுங்கய்யா என்று சொல்வார். ஆனால் தான் பேசவில்லை
என்றும் சொல்வார். திருடன் எப்போதாவது தன்னை திருடன் என்று சொல்லிக்
கொள்வானா? மாணவர்களுக்கு ஐந்து முட்டைபோட்டேன்னு சொல்றீங்க. இன்னும்
ஒரு வருஷத்துல மக்கள் உங்களுக்கு முட்டை போடப்போறாங்க.

விஜய-காந்த்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறார் அழகிரி.
உங்களையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள்
மதுரைக்கு வந்தவர்கள். நான் மதுரை மண்ணில் பிறந்தவன் என்பதை ஞாபகம்
வைத்துக் கொள்ளுங்கள். கலைஞரே... உங்களுக்கு இத்தனை பிள்ளைகள்,
பேரன்கள், இத்தனை உறவினர்கள் என்பதைக் காட்டவா செம்மொழி மாநாட்டில்
முதல் வரிசையில் உட்கார வைத்தீர்கள்? எல்லா மந்திரி-களும் வாயில் கை
வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். அதைச் சுட்டிக்காட்டி,
'இதுவா சுயமரியாதை?' என்று என்னைப் பார்த்து மலேசி-யாவில் கேட்கிறார்கள்.

'என் பேரன்கள் சினிமாவில் நடிக்கக் கூடாதா... படம் எடுக்கக் கூடாதா...
சிவாஜி மகன் பிரபு நடிக்கவில்லையா? ரஜினி மருமகன் தனுஷ்
நடிக்க-வில்லையா?' என்று கேட்கிறார். உங்கள் மகன் மு.க.முத்து நடிக்க
வந்தததை நாங்கள் கேட்க-வில்லையே? ஸ்டாலின் அரசியலுக்கு வந்ததை
கேட்கவில்லையே?

'ரெட்ஜெயன்ட் மூவிஸ்', 'க்ளவுட் நைன்' என்ற பெயர்களில் பேரன்கள் மாதம்
ஒரு படம் எடுக்-கின்றனர். கேட்டால் அது அவர்களுக்கான பாக்கெட் மணியில்
எடுத்தது என்கிறார்கள். ஒரு படம் எடுப்பது சாதாரண விஷயமா? அவர்கள் பெரிய
நிறுவனங்களின் முதலாளிகளாக இருந்தவர்களா? அப்படி உரிமையாளர்களாக இருந்து
அதில் வந்த வருமானத்தில் படம் எடுத்திருந்தால் யாரும் கேள்வி கேட்க
மாட்டார்கள். பாக்கெட் மணியில் படம் எடுத்ததால்தான் கேள்வி எழுகிறது.
இன்று பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம், பெரிய பட நிறுவனங்கள் எல்லாம்
பயந்து கிடக்கிறார்கள். கலைஞரின் குடும்பத்தின் பிடியில்தான்
தியேட்டர்கள் இருக்கின்றன. என் 'விருத்தகிரி' படத்தை ரிலீஸ் செய்ய
விடாமல் தடுக்கிறீர்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்
'தர்மபுரி' படத்தை ஓட-விடாமல் தடுத்தீர்களே? மே மாசத்துக்குப் பிறகு
பாருங்கள். அவர்களை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட
வைப்பேன். நான் படத்தை ரிலீஸ் பண்ணுவேன். சும்மா கூட தெருவுல போட்டு
மக்களுக்கு காண்பிப்பேன்.

தே.மு.தி.க. ஒரு சுயம்பு. தொண்டர்களால், மக்களால், அன்புச்
சகோதரர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. செயின், வாட்ச், நகைகளை அடமானம்
வைத்து வளர்ந்து வரும் கட்சி. அப்படிப்பட்ட தியாகம் கொண்ட என் கட்சித்
தொண்டர்களை சீண்டிப் பாக்காதீங்க'' என்று ஆவேச உரை நிகழ்த்திவிட்டு நலத்
திட்ட உதவிகளை வழங்கத் தொடங்கினார் விஜயகாந்த். அவரது பேச்சுக்கு,
கூட்டத்தில் ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?

"கற்புக்கரசி " குஷ்புவினால் கலைஞர் வீட்டுக்குள் குடும்ப சண்டை .

Kushboo Hot Sexy Photo


''சில மாதங்களாக அடங்கிக்கிடந்த தி.மு.க.வின் உட்கட்சி பூசல்களும் குடும்ப மோதல்களும் அப்பட்டமாக வெளிப்படும்'' என்பதுதான் எல்லாதரப்பு அரசியல்வாதிகளும் முணுமுணுக்கும் செய்தியாக இருக்கிறது.



திடுமென தி.மு.க.வில் புகைய ஆரம்பித்திருக்கும் புகைச்-சலுக்கு காரணம் நாகர்கோவிலில் நடந்த முப்பெரும் விழா. இந்த விழாவில் அழகிரியின் பெயர் அழைப்பிதழில் முதலில் அச்சேரவில்லை. அவர் ஆவேசப்பட்டதும், அதே விழாவில் குஷ்புவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் தி.மு.க.வில் மீண்டும் குடும்ப மோதலுக்கு இழுத்துச் சென்றுள்ளது.




ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தி.மு.க.விற்கு கொண்டாட்ட மாதம்தான். திராவிட பாரம்பரியத்தின் அச்சாணிகளான பெரியார், அண்ணா ஆகியோரின் பிறந்த தினங்களோடு, கட்சி தொடங்கிய நாள் என மூன்று விழாக்களையும் இணைத்து, முப்பெரும் விழா எடுத்து வருகிறது தி.மு.க.



இந்த முப்பெரும் விழாவில் எப்போதும் ஒரு மெசேஜ் இருக்கும். இந்த முறை கிடைத்த மெசேஜ்... கலைஞர் தனது வாரிசுகளின் மூக்குடைத்துவிட்டு, குஷ்புவுக்கு ராஜ மரியாதை செய்திருப்பதுதான். அந்த விஷயத்துக்கு இறுதியில் வருவோம். நாகர்கோவில் தேர்வான ரகசியம்!



இந்த வருடம் முப்பெரும் விழா பற்றிய பேச்சுக்கள் கிளம்பியதுமே முதல்வர் கருணாநிதியிடம், ''கோவையில் செம்மொழி மாநாடு நடத்திவிட்டீர்கள். திருச்சியில் திகைப்பான கூட்டம் கூட்டி விட்டீர்கள். சமீப காலங்களில் வட மாவட்டங்களில்தான் கட்சியின் பெரிய விழா எதுவும் நடக்கவில்லை. அதனால் திருவண்ணாமலையில் முப்பெரும் விழாவை நடத்த வேண்டும்'' என கோரிக்கை வைத்திருந்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. அந்த கருத்தை ஸ்டாலினும் ஆதரித்திருக்கிறார். முதல்வர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ''தமிழகத்தின் தென் கோடியை நாம் மறந்து விட்டோம். இம்முறை நாகர்கோவில்தான். நான் அங்கு சென்றும் வெகு நாட்களாகிறது'' என்று சொல்லி நாகர்கோவிலை விழா நகரமாக தேர்வு செய்தாராம்.




ஆவேசத்துக்கு அச்சாரம் அழைப்பிதழ்!




நாகர்கோவிலில் முப்பெரும் விழா என்று முடிவானதுமே, அதற்கான மொத்த ஏற்பாடுகளையும் செய்யும்படி சுற்றுலா மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரான சுரேஷ்ராஜனிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்தார் கலைஞர். இதற்குள் அழகிரியின் காதுகளுக்கு முப்பெரும் விழா செய்திகள் போனது. உடனே ஆவேசமான அழகிரி, ''தென்மண்டலத்தில் விழா நடத்துவதைக்கூட ஒரு செய்தியாகத்தான் என்னிடம் சொல்கிறீர்கள். என்னிடம் கலந்தாலோசிக்க மாட்டீர்களா?'' என அப்போதே முதல்வரிடம் ஆவேசப்பட்டாராம்.



இருந்தாலும், விழா நடக்கட்டும் என்று அமைதியாக இருந்தார் அழகிரி. இதற்கிடையில், விழாவுக்கான அழைப்பிதழ் தயாராகி வந்தது. அதில் தன் பெயர் இல்லை என்றதும், கொதிக்க ஆரம்பித்து விட்டார்.


தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்களான துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன் ஆகியோரின் பெயர்களோடு லோக்கல் அமைச்சரான சுரேஷ்ராஜன் ஆகியோரது பெயர்கள் மட்டும்தான் அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது.


''திட்டமிட்டு என்னை அவமானப் படுத்துகிறார்கள். விழாவை நல்லா நடத்திட்டுப் போகட்டும். ஆனால், சத்தியமாக நாகர்கோவில் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கமாட்டேன்'' என்று தனது தாயிடமும், சகாக்களிடமும் தெரிவித்துவிட்டார். அழகிரியின் கோபம், ஆவேசமாக மாறிய விஷயம் கலைஞருக்கு எட்டியது. முப்பெரும் விழா தென் மண்டலத்தில் நடக்கிறது, அதில் அழகிரி பெயர் இல்லையென்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறியாதவர் அல்ல கலைஞர். ஆனாலும், அழகிரியின் பெயரை கலைஞர் ஏன் தவிர்த்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.


அழகிரியின் கோபம் குறித்து, செப்.18&ம் தேதி காலை முதலே விவாதிக்கத் தொடங்கிவிட்டார் கலைஞர். 'என்னய்யா... அவன் கோவிச்சிக்கிறான். அமைப்புச் செயலாளர் பெயர்களை இதுவரை முப்பெரும் விழாவில் போட்டதே கிடையாது. அப்படி போட்டால், அழகிரியோடு டி.கே.எஸ்.இளங்கோவன், பி.வி.கல்யாணசுந்தரம் பெயரையும் போட வேண்டுமே' என்றெல்லாம் விவாதம் தொடங்கி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார் கலைஞர். அவரது பெயரை போட்டுவிடுவது என்று முடிவு செய்து, அமைச்சர் துரைமுருகன் மூலம், அழகிரிக்கு தெரியப்படுத்தி-விட்டார் கலைஞர். அழகிரி பெயர் சேர்க்கப்பட்ட விளம்பரம் தயா-ராகி முரசொலி இதழ் அச்சாகிக் கொண்-டிருந்தது.


அழகிரியின் புயல் ஓய்ந்துவிடும் என்று கலைஞர் நினைத்துக் கொண்டே, சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்றார். அங்கே, அந்த விழா அழைப்பிதழில் கனிமொழி பெயரும் இடம் பெற வேண்டும் என்று ராசாத்தியம்மாள் போர்க்கொடி தூக்க, கலைஞருக்கு நெருக்கடி தொடங்கியது. ஒரு மணி நேரம் விவாதம் நடந்து முடிந்ததும், முரசொலிக்கு சென்ற விளம்பரத்தில் மாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார் கலைஞர்.


அழைப்பிதழில், அழகிரியின் பெயரோடு, கனிமொழி பெயரைச் சேர்த்ததுடன், குஷ்பு சுந்தர் பெயரையும் சேர்க்கச் சொன்னார் கலைஞர். அங்கேயும் ஒரு சுவாரஸ்ய திருப்பம் ஏற்பட்டது. சென்னைக்கு மட்டும் அடிக்க வேண்டிய முரசொலி மட்டுமே பாக்கி இருந்தது. அதனால் சென்னை பதிப்பு முரசொலி யில் மட்டுமே, கனிமொழி பெயரும், குஷ்பு சுந்தர் பெயரும் இருந்தது. முரசொலியின் இதர பதிப்புகளில் இந்த இருவரின் பெயர் இல்லை. மற்ற நாளிதழ்களில் திருத்தப்பட்ட அழைப்பிதழில் அழகிரி, கனிமொழி, குஷ்பு சுந்தர் பெயர்களும் இருந்தன. 19&ம் தேதி விளம்பரம் வந்த அன்றுதான், வாரிசுகள் அத்தனை பேரையும் கலைஞர் மூக்குடைத்தது அம்பலமாகி இருந்தது.

 


' ஆளாளுக்கு என் பேரை சேருங்கன்னு டார்ச்சர் செய்யறீங்களா... இருங்க என் வேலையை நான் காட்டுறேன்' என்று கலைஞர் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் மறுநாள் தான் தெரிந்தது.

 



குஷ்பு பெயர் வந்ததும் கடும் வெறுப்பில் மூழ்கியவர் கனிமொழி. கட்சிக்காக ஊர் ஊராக ஓடித்திரியும் தனது பெயரை சேர்க்க வேண்டி தாயார் கோரிக்கை வைத்தால், தனது இடத்திற்கு சமமாக குஷ்புவைக் கொண்டு வந்ததை கனிமொழியால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தும் தனது அதிருப்தியை, கலைஞரிடம் காட்டாமலேயே, நாகர்கோவில் சென்று வந்தார்.

 



குஷ்புவின் பெயர் அச்சில் ஏறிவிட்டது என்ற செய்தி தன்னை எட்டியதும், ஸ்டாலின் தவிப்புக்குள்ளானார். அழகிரியின் பெயரை போடுவதற்கு எப்போதுமே, தன்னால் தான் பிரச்னை ஏற்படும். இந்த முறை குஷ்புவின் மூலமாக குடும்பத்திற்குள் பிரச்னை வெடிக்கப்போகிறதே... அண்ணனை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று அவர் தவித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரைவிட உச்சக்கட்ட கடுப்புக்கு ஆளானவர் அழகிரிதான். பெயர் இல்லையே என்று மேலோட்டமாக கோபம் காட்டிய அழகிரி, திருத்தப்பட்ட அழைப்பிதழில் இருந்த பெயர்களைக் கண்டதும், கொதித்துவிட்டார்.

 



எடுபடாத தயாளு சமாதானம்!

பல தரப்பில் இருந்து சமாதானம் செய்தும் அழகிரி மசியவில்லை. பின்னர் துரைமுருகன் பேசியிருக்கிறார். ''நான் எம்.ஜி.ஆர் படம் பார்த்துக்கிட்டிருக்கேன். என்னை டிஸ்டர்ப் செய்யாதீங்க'' எனச் சொல்லி தொடர்பை கட் செய்துவிட்டாராம் அழகிரி.

 



இந்நிலையில் அழகிரியை சமாதானப்-படுத்த தயாளு அம்மாளைக் கொண்டு வந்தார்கள். வழக்கமாய் பேசும் அதே உருகிய குரலுடன் அழகிரியின் லைனுக்கு போயிருக்கிறார் தயாளு. ''எல்லாரும் ஒண்ணாயிருக்கறப்ப, நீ மட்டும் ஏம்பா முரண்டு பிடிக்கிறே. தேர்தல் வர்ற நேரத்துல, நீ இப்படி செய்யறது அப்பாவுக்கு பிடிக்கலைப்பா. எல்லாத்தையும் மறந்துட்டு என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து விழாவுக்கு போகணும்..'' என உரிமை கலந்து உத்தரவு போட்டாராம்.



''அழைப்பிதழில் என் பெயர் போடாததே பரவாயில்லை. விளம்பரத்துல என் பெயரை போடறேன்னு சொல்லிட்டு குஷ்பு பெயருக்கு மேல போட்டிருக்கீங்க. குஷ்புவுக்கு சமமா நான்? கட்சிக்குள்ள தலைவருக்கு அடுத்து ஸ்டாலின்னு முடிவு பண்ணிட்டீங்க. ஸ்டாலினுக்கு அடுத்து கூட நான் இல்லேன்னா, என்னை எந்த இடத்துலதான் வைச்சிருக்கீங்க?'' என்று கேட்டுவிட்டு, போனை ஆஃப் செய்துவிட்டார் அழகிரி



அண்ணன் நாகர்கோவில் செல்லவில்லை என்றதும், அவரது ஆதரவாளர்கள் அங்கே குவியத்தொடங்கினர். ''இந்தக் கட்சிக்காக எவ்வளவு உழைக்கிறேன். வர்ற சட்டமன்ற தேர்தலுக்காக இப்ப இருந்தே நாயா பாடுபடறேன். பெங்களூருல இருந்தும், டெல்லியில இருந்தும் ஆட்களை கூப்பிட்டு வந்து, இப்பவே சர்வே எடுத்துப் பார்க்கறேன். தென் மண்டலம் முழுவதும் இப்பவே பூத் கமிட்டி அமைக்கச் சொல்லியிருக்கேன். இப்படி நான் உழைக்கற உழைப்பு மாதிரி யார் உழைக்கறாங்க? அடுத்து வேற ஆட்சி வந்தால், என் நிலைமை என்னாகும்? எனக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? இன்னும் ஆறு மாசத்துல தேர்தல் வரட்டும். அப்ப நான் யாருன்னு காட்டறேன்'' என ஆவேசத்தில் தன்னுடைய வருத்-தங்கள் அனைத்தையும் தன் வீட்டில் குவிந்-தவர்களிடையே கொட்டினாராம். இந்த விஷயங்கள் அப்படியே கலைஞரின் காதுக்கும் போயிருக்கிறது.



இதற்கிடையில், முப்பெரும் விழா நாளில் நான் மதுரையில் இல்லாமல் இருப்பது போல் வெளியே தெரியக்-கூடாது. மதுரையில் இருந்து கொண்டுதான் விழாவுக்கு வரவில்லை என எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே, தொகுதி மேம்பாட்டு நிதியில் மதுரையில் நடைபெறும் சில வேலைகளை தனது படை, பரிவாரங்கள் சூழ சென்று பார்வை-யிட்டாராம் அழகிரி.

 



''விழாவைப் புறக்கணித்துவிட்டு அழகிரி, இப்போதைக்கு அமைதியாக இருந்தாலும், அடுத்தடுத்து அவர் ஆற்றப் போகும் காரியங்கள் கட்சிக்குள் பெரும் புயலை வீசச் செய்யும்...'' என்று அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் இருந்து விடுக்கும் செய்திகளால், தி.மு.க. தலைவர்கள் சிலர் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

 



கோபாலபுரத்தில் வழக்கமாக உள்ளூர் புயல்தான் வீசும். நீர் அடித்து நீர் விலகாது என்ற வகையில் அந்த புயல்கள் புஸ்வாண-மாகிவிடும். வடஇந்தியாவிலிருந்து வங்கக்-கரைக்கு வந்திருக்கும் குஷ்பு புயலால், கோபாலபுரம் குடும்பத்தில் என்ன கலவரத்தை ஏற்படுத்தும் என்பதைதான் தி.மு.க.வின் தொண்டர்கள் திகிலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.



காரணம், முப்பெரும் விழாவில் கட்சியில் சேர்ந்து ஆறு மாதங்கள் கூட ஆகாத ஒரு நடிகைக்கு கொடுக்கப்பட்ட ராஜமரியாதை, தி.மு.க. முக்கியஸ்-தர்களை மட்டு-மின்றி, மூன்று வாரிசுகளுமே வெவ்-வேறு வகைகளில் சங்கடத்திற்கு ஆளாகியிருக்-கிறார்-கள் என்பதும் மறுக்க முடியாத செய்தியாகும்.



ஆக, முப்பெரும் விழாவில் இறுதியில், தி.மு.க. தொண்டனுக்கு கிடைத்திருப்பது ஒரே ஒரு செய்திதான்... தனது வாரிசுகளை கட்டுப்படுத்த முடியாமல் அல்லது அவர்களுக்கு பாடம் கற்பிப்பதாக நினைத்து குஷ்புவை தாங்கிப்பிடித்திருக்கிறார் கலைஞர். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வாரிசை சமாளிக்க, அந்தந்த நேரத்தில் ஒரு அஸ்திரம் எடுப்பார். மூன்று வாரிசுகளுக்கும் ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுக்க, கலைஞர் எடுத்த அஸ்திரம்தான் குஷ்பு! இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அழகிரியின் அடுத்த மூவ்தான் முதலில் எடுத்துக்காட்டும்!

காமன் வெல்த் அல்ல காங்கிரஸ் "wealth" - இந்தியாவின் அவமானம். p

காமன் வெல்த் அல்ல காங்கிரஸ்  "wealth"  - இந்தியாவின் அவமானம்.

 

இன்றைய தலையங்க பகுதிக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்ற நிலையில் இந்த தின மலரின் செய்தியை அப்படியே பதிகிறேன் - ஆசிரியர் கண்ணன்.

 

சர்வதேச நாடுகளுக்கு இந்தியாவின் செல்வாக்கை நிரூபித்துக் காட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளால், நாட்டின் ஒட்டுமொத்த கவுரவத்துக்கும் பலத்த அடி விழுந்துள்ளது.


போட்டி ஏற்பாடுகளில் ஊழல், கட்டுமானப் பணிகளில் முறைகேடு, டெங்கு பீதி, விளையாட்டு கிராமத்தில் சுகாதாரக் கேடு, ஸ்டேடியத்தின் கூரை இடிந்து விழுந்தது, நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது, பயங்கரவாத மிரட்டல் என, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், சர்ச்சை போட்டிகளாக மாறிப் போய் விட்டன.பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சுகாதாரக் குறைபாட்டையும் காரணம் காட்டி, நியுசிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள், போட்டியில் பங்கேற்க தயக்கம் தெரிவித்துள்ளன. விளையாட்டு கிராமத்துக்கு வந்து பார்த்த, இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், அங்கு தெருநாய்கள் சுதந்திரமாக திரிவதையும், கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும் கண்டு, திகைத்துப் போயினர். இவர்களில் சிலர், "ஆளைவிட்டால் போதும்' என, மறுபேச்சு எதுவும் இல்லாமல், தங்கள் நாடுகளுக்கு பறந்து விட்டனர்.


கப்பலேறும் மானம் : காமன்வெல்த் கிராமத்தில் வீரர்கள் தூங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படுக்கைகளில் தெருநாய்கள் குதித்து விளையாடியதற்கான தடயங்களையும், தெருநாய்கள் ஆங்காங்கே சுற்றித் திரிவதையும், கழிவறைகள் சுகாதாரமற்ற வகையில் அழுக்கு படிந்து காணப்படுவதையும் காண முடிகிறது. போதாக்குறைக்கு, சில வெளிநாட்டு "டிவி' சேனல்கள், இந்த காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்பி, நம் மானத்தை வாங்கினர். "வரும் 2020ல் இந்தியா வல்லரசு நாடாகி விடும்' என்ற அரசியல்வாதிகளின் "பில்டப்'களை அடித்து நொறுக்கும் வகையில் அமைந்து விட்டது, காமன்வெல்த் போட்டிகளில் நடக்கும் குளறுபடிகள்.



காமன்வெல்த் போட்டிகள் : காமன்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2006ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் போட்டிகள் நடந்தன. இதை தொடர்ந்து, தற்போது டில்லியில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்த போட்டிகளில் 71 நாடுகளை சேர்ந்த 8,500 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடப்பது, இதுதான் முதல் முறை. ஆசியாவில் இரண்டாவது முறையாக இந்த போட்டிகள் நடக்கின்றன. கடந்த 1998ல் கோலாலம்பூரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தன.



ஒவ்வொரு நாட்டுக்கும் ரூ.48 லட்சம் : இந்த காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்காக, இந்தியா, கனடா நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 48 லட்ச ரூபாய் தரப்படும் என்றும், வீரர்களுக்கான விமான டிக்கெட், தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவையும் ஏற்றுக் கொள்வதாக இந்தியா உறுதி அளித்தது.இதையடுத்து, காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. இறுதியில் 46-22 என்ற ஓட்டு வித்தியாசத்தில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா வெற்றி பெற்றது.



செலவு எவ்வளவு?இந்தியாவில் நடக்கும் போட்டிக்காக 11 ஆயிரத்து 494 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், இதற்காக 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போட்டிகளை நடத்துவதற்காக கட்டமைப்பு பணிகளை செய்வது, விளையாட்டு அரங்கங்களை அமைப்பது மற்றும் புதுப்பிப்பது ஆகியவற்றுக்காக 27 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த செலவில் பெரும்பகுதி, "ஊழலில் கரைந்து விட்டதாக'  மீடியாக்கள் அம்பலப்படுத்தின.



எங்கெங்கு காணினும் ஊழல் : தொடர் ஜோதி ஓட்ட ஏற்பாடுகள், போட்டி ஒளிபரப்பு உரிமை, விளம்பரதாரர் உரிமை என, ஆரம்பத்திலேயே போட்டி ஏற்பாடுகளில் பெருமளவில் ஊழல் நடந்ததாக தகவல் வெளியானது. இப்போட்டிக்காக, கடந்த ஆண்டு தொடர் ஜோதி ஏற்றி, ஓட்டத்தை தொடங்கி வைத்த பிரிட்டன் ராணியே, தனது கவலையை தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. ஆனாலும், அதிகாரிகள் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.டில்லியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, விளையாட்டு அரங்கங்களை புதுப்பிப்பது, நடை மேம்பாலங்களை அமைப்பது, வீரர்களுக்கு தேவையான விளையாட்டு கருவிகளை வாங்குவது என, எங்கெங்கும் ஊழல் கரை கடந்தது. குறிப்பாக, மிகவும் விலை குறைந்த பொருட்களை, அதிக விலைக்கு வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டது. கட்டுமானப் பணிகளிலும் இதே நிலை தான். தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தியதால், நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது.



ஊழல் கண்காணிப்பு  ஆணையம் அதிரடி : காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் குறித்து தினமும் செய்திகள் வெளியானதும், மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆணையம் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. காமன்வெல்த் போட்டிகளின் 14 திட்டப் பணிகளில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது.குறிப்பாக, திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் அளித்தது உள்ளிட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்தது. இதன் தொடர்ச்சியாக, போட்டி ஏற்பாட்டு குழுவின் இணை இயக்குனர் பொறுப்பில் இருந்த தர்பாரி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.டென்னிஸ் கோர்ட் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம், போட்டி ஏற்பாட்டு குழுவின் பொருளாளர் அனில் கண்ணாவின் மகனுக்கு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அனில் கண்ணா ராஜினாமா செய்தார். காமன்வெல்த் பணிகளில், குழந்தை தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்படுவதாக, பிரிட்டன் பத்திரிகை ஒன்று, புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு, தன் பங்கிற்கு இந்தியாவின் மானத்தை கப்பலேற்றியது.



வெள்ளம் : ஊழல் ஒரு பக்கம், போட்டிகளுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்த, மறுபக்கம் இயற்கையும் தன் பங்கிற்கு விளையாடியது. அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பெய்த வரலாறு காணாத மழையால், டில்லியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மைதானங்கள் சேதமாயின. சாலைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்துக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும், தண்ணீரில் மிதந்தன. வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு கிராமம், வெள்ள நீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளித்தது. அங்கு தேங்கியிருந்த தண்ணீரால், கொசுக்கள் உருவாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உருவாக்கி, போட்டி ஏற்பாட்டாளர்களை கதறடித்தன.


பயங்கரவாதம் : இந்தியாவுக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து கொண்டிருந்த பயங்கரவாத பிரச்னையும், காமன்வெல்த் போட்டிகளில் ஊடுருவியது. போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களே உள்ள சூழ்நிலையில், டில்லி ஜும்மா மசூதி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தைவான் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடம் இருந்து, காமன்வெல்த் போட்டிகளுக்கு மிரட்டல் விடுத்து, இ-மெயிலும் வந்தது. இதை பார்த்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு பீதியை கிளப்பி விட்டு, புண்ணியம் தேடிக் கொண்டன. காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னல் தலைமையிலான குழுவினர், விளையாட்டு கிராமத்தை சுற்றிப் பார்த்து விட்டு, அதிருப்தி தெரிவித்தனர்.


அடி மேல் அடி :இதுபோன்ற பிரச்னைகளால் டில்லி காமன்வெல்த் போட்டிக்கு, தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருந்தது. விளையாட்டு வீரர்களிடம் பீதி ஏற்பட்டு, சிலர் போட்டிகளை புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். ஆனால், இதற்கெல்லாம் சாதாரண மக்கள் கவலைப்பட்ட அளவுக்கு கூட, விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும், பொறுப்பாளிகளும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. "சர்வதேச அளவிலான ஒரு போட்டியை ஏற்பாடு செய்யும் போது, இதுபோன்ற குறைபாடுகள் எல்லாம் சகஜம்' என, "குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத கதையாக' பேசித் திரிகின்றனர்.  தங்கள் பாக்கெட் நிறைந்தால் போதும் என்ற நிலை தான் அவர்களுக்கு.


பிரதமர் தலையிட்டும்  தீர்வு இல்லை : பிரச்னை பெரிதானதும், இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக தலையிட்டார். பிரதமர் வீட்டில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர்கள் ஜெய்பால் ரெட்டி, கில், டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐ.மு., கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சோனியாவும் ஆலோசனைகளை வழங்கினார்.இதன்படி, போட்டிக்கான பணிகளை கண்காணிக்கும்படி, மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். இருந்தும், பிரச்னை தீரவில்லை.


அரசு என்ன செய்ய  வேண்டும்? நம் நாட்டில் திறமையான முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை கண்டறிந்து, போட்டி ஏற்பாடுகளை அவர்கள் கையில் ஒப்படைப்பதன் மூலம், நம் நாட்டின் மதிப்பு, சர்வதேச அளவில் கெடாமல் பார்த்து கொள்ளலாம். ஆனால், அதற்கு அரசுக்கு மனம் வர வேண்டும்.மேலும், போர்க்கால அடிப்படையில் விளையாட்டு கிராமத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  போட்டி துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அரசு இயந்திரம் இதற்காக முடுக்கி விடப்பட வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை நிரூபிக்கும் பிரச்னை என்பதால், இதற்காக ராணுவத்தை கூட பயன்படுத்தலாம். இல்லையெனில், எதிர்காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை மட்டுமல்ல, வேறு எந்த நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு, சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டும் சூழ்நிலை உருவாகி விடும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்காவிட்டால், சர்வதேச நாடுகளின் முன், நாம் தலைகுனிந்து நிற்கும் சூழல் உருவாகும்.  எது எப்படியோ, போட்டிகள் சிறப்பாக நடந்து முடிவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடுவோம்.


இந்தியாவால்  முடியாதது இல்லை : சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவது என்பது, இந்தியாவுக்கு புதிய விஷயம் அல்ல. கடந்த 1951 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் ஆசிய விளையாட்டு போட்டிகள் இங்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட வரலாறு உண்டு. எனவே, வெறும் 12 நாட்கள் மட்டுமே நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளை நடத்துவது, இந்தியா போன்ற மனிதவளம் கொண்ட நாட்டுக்கு சிரமமான காரியமே அல்ல. ஆனால், போட்டி துவங்கியதில் இருந்து, முடிவது வரை அனைத்திலும் பிரச்னை என்றால், அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது என்று தானே அர்த்தம்!


"கவுன் டவுண்'  களேபரம் : போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களே உள்ள கடைசி நேரத்தில் நடந்த "மெகா' குளறுபடிகள்:
* ஜவகர்லால் நேரு அரங்கில் 961 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போட்டி துவங்குவதற்கு 11 நாட்கள் இருக்கும் போது, அரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.  இங்குள்ள நடைபாதை மேம்பாலமும் இடிந்து விழுந்தது.
* காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தின் பணிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் நடந்தன. வீரர்கள் வரத் துவங்கிய நேரத்தில் இங்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டது.
* இந்திரா காந்தி விளையாட்டு வளாகம், 669 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சைக்கிள் போட்டி நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஓடுபாதைக்குள், தண்ணீர் கசிந்ததால், ஓடுபாதை சேதமடைந்தது.


குற்றச்சாட்டு பட்டியல் : டில்லி காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து மற்ற நாட்டு வீரர்கள் கூறிய குற்றச்சாட்டுகள்:


ஸ்காட்லாந்து: விளையாட்டு கிராமத்தில் தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. வீரர்கள் தூங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கையில் நாய்கள் உற்சாகமாக விளையாடுகின்றன. அறைகளில் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.
பிரிட்டன்: விளையாட்டு கிராமத்தில் உள்ள கழிப்பறைகள், சுகாதாரமின்றி உள்ளன. உள்ளே நுழையவே முடியவில்லை. இங்குள்ள மின்சார கருவிகளும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.
கனடா: விளையாட்டு கிராமம் முழுவதும் குப்பை கூளங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அங்குள்ள சூழ்நிலையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.
நியூசிலாந்து: தற்போதுள்ள நிலை, இன்னும் ஒரு சில நாட்களில் முற்றிலும் மாறி விடும் என கூற முடியாது.


யார் யாருக்கு என்ன பொறுப்பு? * எம்.எஸ்.கில் (மத்திய விளையாட்டு துறை அமைச்சர்), ஜெய்பால் ரெட்டி (மத்திய நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர்), ஷீலா தீட்ஷித் (டில்லி மாநில முதல்வர்) இவர்கள் மூவருக்கும் தான், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான முக்கிய பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள் தொடர்பான திட்டங்கள், ஏற்பாடுகள் ஆகியவற்றை இவர்கள் தான் கண்காணிக்கின்றனர்.


*சுரேஷ் கல்மாடி: காங்கிரஸ் எம்.பி.,யான இவர், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாட்டு குழு தலைவர். தொடர் ஜோதி ஓட்டம், வீரர்களுக்கான டிக்கெட், போக்குவரத்து, தங்குமிட வசதி, உணவு வசதி, துவக்க மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், டிக்கெட் விற்பனை ஆகியவை இவர் பொறுப்பில் தான் விடப்பட்டன. ஊழல் குற்றச்சாட்டு எழுந்த போது, கல்மாடி மீது தான் அதிகம் புகார் தெரிவிக்கப்பட்டது. தற்போது காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழுவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார்.


*ஒய்.எஸ்.தத்வால்: டில்லி டி.ஜி.பி.,யான இவர் பொறுப்பில் தான், பாதுகாப்பு ஏற்பாடுகள் விடப்பட்டுள்ளன.


*செல்ஜா: மத்திய சுற்றுலா துறை அமைச்சர். போட்டிகளை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை இவர் பொறுப்பில் விடப்பட்டுள்ளன.


*அம்பிகா சோனி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர். போட்டிகளை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது, தரமான முறையில் ஒளிபரப்பு வசதிகளை செய்து தருவது, செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது ஆகியவற்றை, இவரது தலைமையிலான அமைச்சரகம் தான் கவனிக்கிறது.


"இதுபோன்ற அரைகுறையான போட்டி ஏற்பாடுகளை இதுவரை என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில், ஒலிம்பிக் போன்ற மிகப்பெரிய விளையாட்டு போட்டிகளை நம்மால் நடத்த முடியும் என, என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!'- மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குஞ்சராணி தேவி, பளு தூக்கும் வீராங்கனை.


ஓய்வு பெறுவாரா கருணாநிதி ? இந்நேரம்.காம் அலசல் .

கடந்த ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி, தமக்கு அருந்ததியர் நடத்திய பாராட்டு விழாவில், தமது மூன்று குறிக்கோள்களை நிறைவேற்றி விட்டு மக்களில் ஒருவராய் இருந்துவிடப்போவதாகக் கருணாநிதி சொன்னதை, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகப் பொருள் கொண்டனர் அவரது குடும்பத்தினரும் கட்சியினரும் ஊடகங்களும்.

 

 

புதிய சட்டமன்றக் கட்டடம், செம்மொழி மாநாடு மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் என அவரது மூன்று ஆசைகளும் நிறைவேறிவிட்ட நிலையில் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடமும் பொதுமக்களிடமும் உருவாகியுள்ளது.

 


ஆனால் ஒரு வாரத்துக்கு முன் நாகர்கோவிலில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எண்பத்தாறு வயதுடைய கருணாநிதி, குமரி மாவட்ட மக்களால் மார்ஷல் என அழைக்கப்படும் "நேசமணிக்கு மணிமண்டபம் கட்டுவேன்; வருகின்ற  மே மாதம் தேர்தல் நடக்க இருப்பதால் ஜூன் மாதம் நானே வந்து திறப்பேன்" என்று பேசியுள்ளதில் இருந்து,  அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் அடுத்த தேர்தலிலும் தாமே தமிழக முதல்வர் என்றும் சூசகமாக அறிவித்துள்ளார் எனக் கொள்ளலாம்


திமுகவில் உட்கட்சிப் பூசல்களும் கோஷ்டிகளும் இருந்தாலும் கருணாநிதியின் மக்களில் இருவரான மு.க ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோரின் பின்னால் தனித்தனியாக அணிவகுத்துத் தொண்டர்களும் கட்சியினரும் நின்றாலும் கருணாநிதி என்ற தலைவருக்குக் கட்டுப்பட்டுக் கட்சியினர் கட்டுக்கோப்பாகச் செயல் படுகின்றனர். அவருக்குப் பின் இதே கட்டுப்பாட்டுடன் அக்கட்சி செயல்படுமா?


அ.இ.தி.மு.க.வில் எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட சூறாவளியைப்போல் கருணாநிதிக்குப் பின் தி.மு.க.வில் ஏற்படாது. எம் ஜி ஆர் தமக்குப் பின் தலைவர்களைக் கட்சியில் அடையாளம் காட்டவில்லை. திடீரென அவர் மறைந்ததும் அவரது மனைவி ஜானகி "திடீர் முதல்வரா"னார். அவருக்கு அதரவாகத் தீவிர எம்ஜிஆர் விசுவாசிகளாயிருந்த ஆர் எம் வீரப்பன், முத்துசாமி, பொன்னையன் போன்ற மூத்த தலைவர்கள் அணிவகுத்து நிற்க,சாத்தூர் ராமச்சந்திரன்,கருப்பசாமிப் பாண்டியன், திருநாவுக்கரசு போன்றோர் ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்தனர். கட்சி ஜா அணி, ஜெ அணி, எனப் பிளவுபட்டது. சட்டமன்றத்துக்குள் காவல்துறை நுழைந்து உறுப்பினர்கள் மீது தடியடி நடத்தியது. பின் சேவல் என்றும் இரட்டைப் புறா என்றும் போட்டியிட்டு, ஜெயலலிதா கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற, ஜா அணி, காணாமல் போக, அனைவரும் ஜெயலலிதாவிடம் சரணடைந்தனர். அக்கட்சியில் இன்று வரை இரண்டாம் நிலைத் தலைவர்கள் யாரும் இல்லை.


ஆனால் கருணாநிதி தம் மகன் ஸ்டாலினைத் தீவிர அரசியலில் ஈடுபடுத்திப் பயிற்சி அளித்தார். கட்சியின் இளைஞர் அணியை ஸ்டாலினின் பொறுப்பில் விட்டு வளர்த்தார். சென்னை மாநகராட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, , அமைச்சராக, இப்போது துணை முதல்வராக எனப் படிப்படியாகத் தமக்குப் பின் கட்சிக்கு ஒரு வாரிசை உருவாக்கித் தந்துள்ளார்.


கடந்தவாரம் காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழவில் பேசிய வை.கோபாலசாமி, தமக்குப் பின் திமுக இருக்காது என்றும் வைகோவின் கட்சிதான் திமுகவாக இருக்கும் என்றும் தழுதழுத்த குரலில் தம்மிடம் கருணாநிதி கூறியதாகக் குறிப்பிட்டார்.

 

கருணாநிதியை விட வைகோ தைரியசாலிதான்.

 

மரணப்படுக்கையில் இறுதி மூச்சு வாங்கும் நிலையில் முஸ்லிம் சமுதாயத்தைப் பாதுகாக்குமாறு தம்மிடம் காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப் வேண்டினார் என்றும் நெருக்கடிநிலைக் காலத்தில் காமராஜர் தம் கையைப் பிடித்துக்கொண்டு ஜனநாயகத்தை நீங்கள்தாம் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டியதாகவும் அத்தலைவர்களின் மறைவுக்குப் பின் பல முறை கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் வைகோ கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே இப்படிக்கூறியது கருணாநிதியைத் தர்மசங்கடத்துக்குள்ளாக்கியிருக்கும். தம்முடன் பொடாச் சட்டத்தின் கீழ்ச் சிறையிருந்த கணேசமூர்த்திக்குத் தாம் கேட்ட சீட்டைத் தராமல் இருப்பதற்காகக் "கருணாநிதி போட்ட ஸீன்" என்றும் வைகோ கூறினார். அதனால்தானோ என்னவோ நாகர்கோவிலில் முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதி, "தாம் தூங்கும் போதே தம்மைக் கொல்ல முயன்றார்கள்" என உருவகமாகச் சொல்லிவிட்டார்.

 

சி.என்.அண்ணாதுரை,  இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன் மற்றும் ஈ.வி.கே.சம்பத் ஆகியோர் தி.மு.கழகத்தை உருவாக்கிய போது கருணாநிதி இல்லை. ஆனால் அண்ணாதுரையின் மறைவிற்குப் பின் ஆட்சியையும் கட்சியையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இன்றுவரை கையில் வைத்துக் கொண்டு,  பணக்காரர்களின் வரிசையில் இடம்பிடித்துள்ள அவர் இந்நிலைக்கு உயர என்னென்ன (ராஜ)தந்திரங்கள் செய்திருப்பார், அரசியல் சதுரங்கத்தில் எத்தனை விதமாகக் காய் நகர்த்தியிருப்பார்,எத்தனைச் சோதனைகளைச் சந்தித்திருப்பார், எத்தனை சவால்களை முறியடித்திருப்பார் என்று எண்ணிப்பார்க்கையில் பெரு வியப்பு ஏற்படும்.

 

தமது பதினான்காவது வயதில் பொதுவாழ்வைத் துவக்கிய தக்ஷிணாமூர்த்தி என்ற கருணாநிதி, தம் பகுத்தறிவுக் கனல் தெறிக்கும் திரைப்பட வசனங்களாலும் மேடைப் பேச்சுக்களாலும் ஈர்க்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் ஆதர்சத் தலைவரானார்.

 

இந்தி எதிர்ப்பிலிருந்து தம் பொதுவாழ்வைத் துவங்கிய அவர் 1965 ஆம் ஆண்டில் மானவர்களிடம் ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு உணர்ச்சியைத் தக்கபடித் தூண்டி விட்டுப் பெரும் போரட்டமாக மாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் ராஜேந்திரன் காவல்துறையால் சுடப்பட்டு இறந்தார். அதன் விளைவாக மாணவர்களின் பேராதரவு தி.மு.கவுக்குக் கிடைத்தது.


தி.மு.க, இஸ்மாயில்சாகிப் தலைமையிலான முஸ்லிம்லீக், ராஜாஜியின் சுதந்திராக்கட்சி, பி.ராமமூர்த்தி தலைமையிலான இடது கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் ம.பொ.சி.யின் தமிழரசுக்கழகம்  உட்பட ஏழுகட்சிக் கூட்டணி அமைக்கப்பட்டது. அன்று தமிழ்நாட்டில் நிலவிய அரிசிப் பஞ்சமும் மாணவர் எழுச்சியும் சேர்ந்து 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், காமராஜர் போன்ற பெருந்தலைவர்களைத் தோல்வியுறச் செய்து காங்கிரஸ் ஆட்சியையும் துடைத்து எறிந்ததற்குக் கருணாநிதியின் அரசியல் வியூகங்களும் காரணம் எனலாம். அப்பொதுத் தேர்தல் சமயத்தில் எம் ஆர் ராதாவால் சுடப்பட்ட எம்ஜியாரின் போட்டோவைப் போஸ்டராகப் போட்டுத் தமிழகமெங்கும் ஒட்டச் செய்தது கருணாநிதியின் அரசியல் தந்திரங்களுள் ஒன்று.  கருணாநிதி "மூன்றுபடி லட்சியம்; ஒரு படி நிச்சயம்" என்ற கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதியைத் தந்து பொதுமக்களின் ஆதரவைப் பெற்றார். அண்ணாதுரையே எதிர்பாராத பெரு வெற்றியை ஈட்டித் தந்தார்.


1968 ஆம் ஆண்டில் அண்ணாதுரையின் மறைவைத் தொடர்ந்து தமிழக முதல்வரான கருணாநிதி, தாம் முதல் நிலை பெறுவதற்காக, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பரும் இல்லை என்ற தத்துவம் கைகொடுக்க, எதிரியையும் நட்பாக்கிக் கொள்வார், நண்பர்களையும் எதிரியாக்கிக் கொள்வார்.


எந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவன் ராஜேந்திரனைப் பலிகொடுத்துத் தமிழக மாணவர்களின் ஆதரவைத் தம் கட்சிக்குப் பெற்றுக் கொடுத்தாரோ அதே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவன் உதயகுமாரைத் தாம் டாக்டர் பட்டம் பெற்றபோது பலிகொடுத்து மாணவச் சமூகத்தை எதிரியாக்கினார்.

 

தமிழகத்தில் தாம் தோற்கடித்த காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் இரண்டாக உடைந்தபோது, இந்திராகாந்திக்கு ஆதரவளித்து 1971 ஆம் ஆண்டில் தேர்தல் கூட்டணி கண்டு இரண்டாம் முறையும் தமிழக முதல்வரானார் கருணாநிதி.


1971 தேர்தலில், ராய்பரேலி மக்களவைத் தொகுதியில் ராஜ்நாராயணை எதிர்த்து இந்திராகாந்தி பெற்ற வெற்றி செல்லாது என அலஹாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் இந்திராகாந்தியின் அரசியல் வாழ்வுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடிநிலை அமுல்படுத்தப்பட்டது. அப்போது தாம் ஆட்சியை இழப்பது பற்றிக்கூடக் கவலைப்படாமல் நெருக்கடி நிலையை எதிர்த்து, இந்திராவின் கோபத்துக்கு ஆளாகி ஆட்சியையும் இழந்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிபதி சர்க்காரியா கமிஷனால் விசாரிக்கப்பட்டார்.

 

1977 தேர்தலில் ஜனதாக்கட்சியுடன் கூட்டணி உறவு வைத்துத் தேர்தலைச் சந்தித்தார் கருணாநிதி.  இந்திராவின் ஆட்சி அகற்றப்படுகிறது.

 

1979 ஆம் ஆண்டு மதுரை வந்த இந்திராகாந்திக்கு, நெருக்கடிநிலைக் காலக் கொடுமைகளுக்காக, திமுகவினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தியபோது திமுகவினரால் இந்திராகாந்தி இரத்தம் வழியும் அளவுக்குத் தாக்கப்படுகிறார்.



ஆனால் 1980 ஆம் ஆண்டில், மீண்டும் இந்திராவுடன் "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!" எனப் புகழ்ந்து தேர்தல் கூட்டணி கண்டார்.



பண்டாரங்கள் என விமர்சித்த பாஜகவுடன் உறவு கொண்டு மத்திய அரசில் பதவி பெற்றார்; இப்போது மீண்டும் காங்கிரஸுடன் உறவு.

 

இவையெல்லாம் சில உதாரணங்களே!

 

தி மு கழகத்திலும் ஆட்சியிலும் தம் உயர்வுக்குத் துணை நின்ற, கட்சியில் தமக்கு இணையான செல்வாக்குப் பெற்றிருந்த  "நாற்பதாண்டுகால நண்பர்" என அவரே கூறும் எம் ஜி ஆரையே கட்சியில் இருந்து தூக்கி எறிந்தது தான் அவரது அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத நிகழ்வு.

 

ஆனால் எதைச் செய்தாலும் எம் ஜி ஆரையோ ஜெயலலிதாவையோ போல் சர்வாதிகாரமாகச் செயல்படாமல், ஜனநாயக ரீதியில் செய்வதாகக் காட்டிக் கொள்ளக் கட்சியின் செயற்குழுவிலோ அல்லது மூத்த தலைவர்களிடமோ ஒப்புதலைப் பெற்றுக்கொள்வார் கருணாநிதி. அப்படித்தான் மு க ஸ்டாலினைத் துணைமுதல்வராக்கினார்.

 

வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு வலுவற்றது ஆகும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியைத் தவிர பிற கட்சிகளில் வாரிசுகள் அரசியலுக்கு வந்ததே இல்லையா?

 

நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல், சஞ்சய், மனேகா,வருண் என அக்குடும்பம் அரசியலில் தொடர்கிறது.  சேக் அப்துல்லா, அவரது மகன் ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா எனக் காஷ்மீரில் வாரிசு அரசியல் தொடர்கிறது.


தேவகவுடா தம் மகன் குமாரஸ்வாமியை வாரிசாக்கினார். லாலுபிரசாத் யாதவ் தம் மனைவி ராப்ரிதேவியை வாரிசாக்கினார். இப்போது தம் மகன் தேஜஸ்வியை அடுத்த வாரிசாகக் களம் இறக்குகிறார்.



நானோ என் குடும்பத்தாரோ அரசுப் பதவிகள் பெற மாட்டோம் எனச்சொன்ன பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூடத் தம் மகனை மத்திய அரசில் அமைச்சராக்கினார். எனவே வாரிசு அரசியல் எனக்கூப்பாடு போடுவது சரியில்லை.

 

அழகிரிக்கு அவரால் ஆதாயம் பெறுவோரின் ஆதரவு அல்லது குறிப்பிட்ட சில பகுதியினரின் ஆதரவுதான் உள்ளதே தவிர, ஸ்டாலினுக்கு உள்ளதைப்போல் பரவலான ஆதரவு இல்லை. ஸ்டாலினைக் கட்சியினர் மட்டுமின்றிப் பொது மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. கருணாநிதியைப்போலக் கட்சியையும் ஆட்சியையும் தலைமையேற்று நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ள



கருணாநிதியின் ஓய்வில்லா உழைப்பும் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் தோல்வியிலும் துவளாத மன உறுதியும்  அரசியல் சாணக்கியத்தனமும் ஸ்டாலினுக்கு வந்துவிட்டால் கருணாநிதியின் தேர்வு தவறாகவில்லை என்பதைத் தமிழ்நாடு காணும். இவற்றை ஸ்டாலின் பெற்றுவிட்டால் கருணாநிதியின் ஓய்வு கட்சியையோ ஆட்சியையோ பாதிக்காது; கருணாநிதியும் மகிழ்வோடு ஓய்வெடுக்கலாம்.



கடந்த அரைநூற்றாண்டு தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் திகழ்ந்து வரும் கருணாநிதியின் ஓய்வு எத்தகைய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ள அவர் ஓய்வு பெறும் வரை பொறுத்திருந்தே ஆக வேண்டும். எப்போது ஓய்வு பெறுவார்? கருணாநிதியும் காலமும்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!

துளி நீர் அருந்தாமல் 12 நாள் உண்ணாவிரதம்- திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987

பெற்றோர் – பிள்ளைகள் - சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முண்ணாயே முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது: கண்கள் கண்ணீர்ரை சொரிகின்றது.


ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருப்பைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும். கண்களில் அழுவற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது.


ஆனால், இவர்கள் ஓருவர் ஓரு சொட்டு நீர் கூடஅருந்தால்10 நதற்களாக எம் கண் முண்ணாதல் அணு அணுவாகச் சாவின் விளின் வழளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! ….. அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஆத்துனை கொடுமை அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும் அது.



அதை நான் என் வாழ்நதளில் முதல்முறையாக அனுபவிறேன். இதையெல்லாம் என் கண்களால் பார்க்கவேண்டும். என்று முன்பே தெரிந்திருருமால், நாண் திலீபன் இருந்து பக்கமமே தலைவைத்துப் படுத்திருக்கமாட்டேன்



நான் முற்றுமுழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான்: இந்தியா ஓரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு: காந்தி பிறந்த பொன்னான பூமி: அகிம்சையைப் பற்றியும் - உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில்பெருமைப்படக்கூடிய அளவுக்கு காத்யடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு: அப்படிப்பட்ட ஓரு நாட்டிடம் நீதிகேட்டு அமிம்சை வழியில் உண்ணாவிரததை போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், உண்மையியேலே பாக்கியசாலிதான்.



ஏனெனில், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச் சயமாக திலீபனுக்கும் ஓர் நல்ல வழியைக் வழியைக் காட்டத்தான் செய்யும்…. ஆதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது… என்ற எண்ணத்தில்தான் மூடிக்கொண்டு… இந்தத் தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கைச் செலுத்துவதற்குத் தயாரானேன். நூன் நினைத்ததெல்லாம்… இவ்வளவு விரைவில் மாயமான் ஆகிவிடும் என்று நான் கனவுகூடக் கண்டிருக்கவில்லை………… எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை பெரிய தவிப்பு?



இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையைப் பார்த்தபோது. நும்பிக்கையே அற்றுவிட்டது.இனி ஓரு நல்ல திர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் பிறகு திலீபனை ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தாலும் காப்பாற்ற முடியுமா என்பது. என்னைப் பொறுத்த அளவில் கேள்விக்குறிதான்.



அப்படியிருக்க........... கடவுளே! மனித தர்மத்துக்கு கிடைக்கப் போகும் பரிசு இதுதானா?

திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர். என்;பது. புரிந்துவிட்டது.



அதோ வானத்தில் ஓர் வயோதிப உருவம் முகில்கனைக் கிழித்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவ்வுருவத்தின் தலையிலே மயிரைலே………கண்களிலே வெள்ளை கண்ணாடி ……அந்தக் கண்களில் அருவியாக வழிந்து கொண்டிருக்கிறது…அது என்ன?


இரத்தமா?

அந்த "மனிதன்" இரத்தக் கண்ணீர் சொரிகிறாரே…… ஏன்?

ஏன்?

ஏன்?

அடுத்து வேறு ஓரு உருவம்!


அதன் தலையிலும் மயிரைக் காணவில்லை …….. வர்னத்தின் நடுவலே வெள்ளரசு மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் அந்த உருவம் எம்மை, இல்லை திலீபனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பௌர்ணமி நிலவில் அந்தக் கருணை முகத்திலே…கருனையைத் தேடுகின்றேன்… ஆனால் காணமுடியவில்லை…


ஏன்…….

ஏன்…..?

இந்திய மண்ணில் என்றே தோன்றி மறைந்துவிட்ட அந்த இரு சோதிகளும் அல்ல, உருவங்களும் வெகுநேரம் திலீபனைப்பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தவாறு சிறிது சிறிதாக என் கண்களை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன…..



நேற்று சிறிதளவாவது அசைந்து கொண்டிருந்த திலீபனின் கை, கால்கள் இன்று அசைவற்று சோர்ந்து விட்டன. உள்மூச்சு மட்டும் பலமாக இழுத்துக்கொண்டிருக்கின்றது. கண்கள் உச்சியிலே குத்திவிட்டு நிற்கின்றன. உடலின் நிறம் சிறிது நீலமாக மாறத்தொடங்கி விட்டன.



நாடித்துடிப்பைப் பரிசோதிக்கின்றேன் 52.

இரத்த அழுத்தம் -80/50.



சராசரி மனிதனின் அளவுகளைவிட எல்லாமே மிகவும் குறைந்துள்ளன. இனித் திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம். ஐயோ….. அதைநினைத்துப்பார்க்கவே நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கின்றது. நெஞ்சே இந்தக் கணமே நீ வெடித்துவிடக்கூடாதா?



அன்று திலீபன் கிட்டுஅண்ணாவைப் பார்க்கவேண்டும் என்றாரே? இதற்காகத்தான? இந்திய அரசு தன் கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதை அவர் உள்ளுர அறிந்தவர் போல் அன்று உண்ணாவிரத மேடையிலிருந்து எவ்வளவு தீர்க்கதரிசியாக இதைக் கூறினார்.

"நான் இறப்பது நிச்சயம்…. ஆப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து… தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…"

இந்த வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.


திலீபன், கிட்டு அண்ணா மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதைப் போல் அவரும் திலீபன் மீது உயிரையே வைத்திருப்பது எனக்குத் தெரியும்.



கிட்டு அண்ணா யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரும் பாடுபட்டு உழைத்தவர். திட்மிடும் சாதுர்யம் அதை நிறைவேற்றுவதில் மிகச் சாதுர்யம்… எதிரியைப் பந்தாடுவதில் ராஜதந்திரம். இவற்றுடன் குறிதவறாமல் சுடுவதிலும் தன்னிகரற்றவரான தளபதி கிட்டுவும் , யாழ் மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவன் திலீபனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த மபெரும் பொக்கிசம் என்று தான் கூறவேண்டும். இவர்களை உறுப்பினர்களாகப் பெற்ற உறுதி மிக்க தலைவனை நாம் பெற்றுள்ளோம்.

கிட்டு அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்று திலீபன் அன்று மேடையிலிருந்து கூறிய போது அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் இன்று…? இந்த நிலையில் அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.



இதை என்றே ஒரு நாள் கிட்டு அண்ணாவிடம் கூறும் போது அவர் மனம் எவ்வளவு வேதனையடையும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க எனக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்பு வருகின்றது. இந்த மண்ணிற்காக நாம் எத்தனை அரும்பெரும் உயிர்களையெல்லாம் இழந்திருக்கின்றோம்.



நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தமது துப்பாக்கிகளைச் சிங்கள இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக காயப்பட்டு நடக்க முடியாத நிலையில் தம்மைச் சுட்டுவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடும் படி கட்டளையிட்ட சீலன், ஆனந்தன்……



இயக்க இரகசியங்கள் அடங்கிய முக்கிய விடையங்களையும் கோப்புக்கனையும் காப்பாற்றுவதற்காக கடைசிவரையும் தாக்குப் பிடித்து அவகளை மற்றவர்களிடம் எடுத்து அனுப்பிவிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த 'பண்டிதர்'.

இயக்கப் போராளிகள் குடியிருந்த இடமொன்றில் வெடிகுண்டின் கிளிப் எதிர்பாராமல் விலகிவிட மற்றவர்களை அந்த அழியிலிருந்து காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தன் வயிற்றுக்குள் அமுக்கிக் கொண்டு குப்புறப்படுத்து தன் உடலையே சிதறப்பண்ணி மற்றவர்களை அழிவினின்றும் காப்பாற்றிய தியாக வீரன் " அன்பு"

இவர்களைவிட அவ்வப்போது சிங்கள இராணுவத்திடம் பிடிபடும் நிலையில் இயக்க ரகசியங்களை காப்பாற்றுவதற்காக சயனைட்டைத் தின்று தியாக மரணமடைந்தவர்கள் உலக வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத்தான் ஏராளம் ஏராளம்.



இந்த வழிகளையெல்லர் விட தன் வழி மிகவும் வேறுபட்டதாக இருக்கட்டும் என்பதற்காக திலீபன் இந்த முடிவிற்கு வந்தார்?

இன்று மாலை வசாவிளான் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் அங்கிருந்து உண்ணாவிரத மேடை வரை தூக்குக் காவடியுடன் அழுதழுது வந்தது எல்லோரையும் கவர்ந்த ஒன்றாகும்.



வட்டுக்கோட்டை சிவன் கோவிலடி, அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக, மற்றும் சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் போன்ற இடங்களிலெல்லாம் அடையாள உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் பரந்தளவில் நடைபெற்றது.

பளையிலிருந்து நாவற்குழி வரையுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர். அவர்களின் ஊர்வலத்தில் பார்க்குமிடமெல்லாம் புலிக்கொடிதான் பறந்துகொண்டிருந்தன.


நாவந்துறையைச் சேர்ந்த மக்களின் உணர்ச்சி வெள்ளத்தை இன்று வந்த அவர்களின் ஊர்வலத்தின் மூலம் தான் அறியமுடிந்தது.

முல்லைத்தீவு மாவட்டமெங்கும் எங்கும் உண்ணாவிரதமும் மறியலும் நடக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம்.



'திலீபன்' என்ற இந்தச் சிறிய கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள் தான் நேசிக்கிறார்கள்."மன்னிக்கவும் இலட்சமல்ல கோடி! தமிழ் நாட்டிலும் ஏன்? ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள்.



பயணம் தொடரும்.....

துளி நீர் அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதம் -திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது.
"கூ.......கூ.....குக்….கூ......" அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், தலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.



ஆனால் இந்தக் குயில்…?


எம்மை - எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..?

திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.


அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.


உதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.

உதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.

கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.



இன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.



பொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.


இன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் !


கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும்.


இன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.


இந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் 'பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்' என்றும் பேசினார்.


திலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர்.


யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.


சங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன்.


எங்கும் - எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் ! மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.


திலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.



1. யாழ் பிரiஐகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)

2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)

3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஐம்

4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்

5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.



இன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.


இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது! ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-


l தூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்

l இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்

l அமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்

l பிரிகேடியர் பெர்னான்டஸ்

l இந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்

விடுதலைப் புலிகளின் தரப்பில்:-

l தலைவர். திரு. வே. பிரபாகரன்

l பிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).

l திரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)

l திரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)

l திரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்…..


எமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது…….. என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.


இரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழந்தபோது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது.


ஆம் ! பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித ஊறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.


பயணம் தொடரும்........

திலீபனுடன் எட்டாம் நாள் -22-09-1987

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன



ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள்.



உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்கயில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.



அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.



மட்டக்களப்பு மாநகரில் 'மதன்' என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.



மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல…..



லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.



தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சே;ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.



தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.



திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லைனெ;றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..?



வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.



"ஈழமுரசு" பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.



இந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி; சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.



புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.



திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.



அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..



பேச முடியவில்லை……

சிரிக்க முடியவில்லை………



ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது?

முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் (ளு.ழு.டு.வு) சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படு;த்திக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். புக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.



"சிந்திய குருதியால்

சிவந்த தமிழ் மண்ணில்

சந்ததி ஒன்று

சரித்திரம் படைக்க….

முந்திடும் என்பதால்….

முளையிலே கிள்ளிட…..

சுpந்தனை செய்தவர்

சிறுநரிக் கூட்டமாய்….

'இந்தியப்படையெனும்'

பெயருடன் வந்தெம்

சந்திரன் போன்ற…

திலீபனின் உயிரைப்

பறித்திட எண்ணினால்…..

பாரிலே புரட்சி…..

வெடித்திடும் என்று….

வெறியுடன் அவர்களை…..

எச்சரிக்கின்றேன் !"



மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.



இரத்த அழுத்தம் - 80/50

நாடித் துடிப்பு – 140

சுவாசம் - 24


பயணம் தொடரும்.......

துளி நீர் அருந்தாமல் உயிர் நீத்த - திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987

இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின.
நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக்
கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.


காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை.


ஆனால், திடீரென்று "இந்தியா ருடே" (India Tiday) பத்திரிகை நிருபரும்
இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப்
பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர்.


"இந்தியா ருடே" நிருவர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித்
துருவித் துருவித் கேட்டுத் தெரிந்துகொண்டார். என்னால் முடிந்தவரை முதல்
நாள் உண்ணாவிரத்திலிருந்து இன்றுவரை அவரின் உடலின் நிகழ்ந்த மாற்றங்கள்
அனைத்தையும் விரிவாக எடுத்துக் கூறினேன்.

அவர்கள் சென்ற பின் யோகியை அழைத்து, என் மனதுக்குள் குடைந்துகொண்டிருந்த
அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். அதற்கு யோகி கூறிய பதில் எனக்கு
அதிர்ச்சியைத் தந்தது.

'இந்திய அமைதி காக்கும் படையின் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர்
ராகவன், எயர் கொமாண்டர்ஜெயக்ககுமார், கடற்படைத் தளபதி அபயசுந்தர்
ஆகியோரும் வந்து பேசியதாகவும், உதவித்தூதுவர் வரவில்லை என்றும்,
திலீபனின் பிரச்சினையில் அவர்கள் ஓரு தீர்க்கமான முடிவை இதுவரை
எடுக்கவில்லை" என்றும் யோகி கூறினார்.

அந்தப் பதிலைக் கேட்டால் அதை ஜீரணிக்க என் மனத்துக்கு வெகுநேரம்
பிடித்தது. அந்தப் பேச்சுவார்த்தை பற்றிய முழு விபரத்தைம் யோகியும் யோகி
திலீபனிடம் விளக்கிக் கூறி, என்ன செய்யலாம்…..? என்று கேட்டார்.

பேசச் சத்தியற்று, நடக்கச் சத்தியற்று துவண்டு கிடந்த அந்தக் கொடி, தன்
விழிகளைத் திறந்து பார்த்துவிட்டு வழக்கம் போன்றுதன் புன்னகையை
உதிர்த்தது.

"எந்த முடிவும்…. நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும்
நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும்…. இல்லையெண்டால்…. நான்
உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் … கைவிடமாட்டன்."

ஓவ்வொரு வார்தையாக கரகரத்த குரலில் வெளிவந்தது திலீபனின் பதில்.


படபடவென்று நடுங்கிய நடுங்கிய குரலில் மெதுவாகத் திடமாகத் திலீபன்
கூறிமுடித்த போது யோகி மேடையில் இருக்கவில்லை.


யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் 1985
ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வந்த பின்னர் அரசியல்ப் பிரிவுப்
பொறுப்பாளராக திலீபன் இருந்து மிகச் சிக்கலான பிரச்சனைகளையெல்லாம்
பொதுமக்கள் மத்தியில் தீர்த்து வைத்திருக்கின்றார்.


1986 ஆம் ஆண்டு அச்சுவேலியில் ஏற்பட்ட ஒருசிறு பூசல் காரணமாக
மினிபஸ்களின் சொந்தக்காரர்கள் ஒருவாரகாலமாக பஸ்களை ஓடவிடாமல்
வழிமறிப்புப் போராட்டம் நடத்தியதால் மக்கள் மிகுந்ந துன்பப்பட்டனர்.


திலீபன் தனக்கேயுரிய புன்முறுவலுடன் அவர்களை அணுகி மிகவும் எளிமையாக
அவர்களுடன் பேசி இரண்டு மணித்தியாலத்தில் பஸ்களை ஓடச் செய்தனர்.யாழ்ப்பாண
மாவட்ட மீனவர்களுக்கு இடையே நடைபெறும் பூசல்கள் கடல் எல்லையிலே ஏற்படும்
பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்படும் சில சிக்கலான
பிரச்சினைகள்


பல்கலைக்கழகத்தில் ஏற்படும் சிக்களான பிரச்சினைகள், கடை முதலாளிகள் -
தொழிலாளர்களின் பிரச்சினைகள், மூட்டை தூக்குவோர், வண்டி ஓட்டுவோர் -
ரச்சிக்கரர்கள், மாநகரசபை ஊழியர்கள், ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள்,
டாக்ரர்கள், தாதிமார், வைத்தியசாலை சிற்றூழியர்கள், வழக்கறிஞர்கள்,
லொறிச் சொந்தக்காரர்கள் இப்படிப் பலரகமானவர்களின் பிரச்சினைகளையெல்லாம்
உடனுக்குடன் பேசிச் சமரசமாகத் தீர்த்து வைத்தவர் திலீபன்.


யாழ்ப்பாணக் கரையோரக் கிராமமான நாவாந்துறையில் தமிழர்களுக்கும்
முஸ்லிம்களுக்கும் இடையில் பலமான இனக்கலவரம் ஏற்பட்டது. கத்தகள்,
பொல்லுகள் கைக்குண்டுகள், துப்பாக்கிகள் எல்லாம் தாராளமாகப்
பாவிக்கப்பட்டன. ஒரே நாளில் பலர் இருபக்கத்திலும் மாண்டனர். பலர்
படுகாயமுற்றனர்.


திலீபன் தன்னந்தனியாக இரு சமூகத்தவர்களையும் இரவிரவாகச் சென்று
சந்தித்தார். முடிவு? அடுத்த நாள் பெருமழை பெய்து ஓய்ந்தது போல் கலவரம்
நின்றுவிட்டது.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழீழ மக்கள் மத்தியில் மாபெரும்
செல்வாக்கு இருப்பதற்குக் காரணம் இவர்கள் சிங்கள இராணுவத்தின்
அட்டூலியங்களிலிருந்து தம் உயிரையே அர்ப்பணித்து மக்களைக் காப்பாற்றுவது
மட்டுமல்ல எந்தச் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையானாலும்
புலிகளின் அரசியல்ப் பிரிவுத் தலைவர் திலீபனால் அவை நிச்சியமாகத்
தீர்க்கப்படும். என்ற உயர்ந்த நம்பிக்கையாலும் ஏற்பட்ட செல்வாக்குத்தான்.
அது.


மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரவு பகலாக உறங்காது வேளா
வேளைக்கு உணவின்றி அயராது உழைப்பதில் திலீபனுக்கு நிகர் திலீபன் தான்.
ஆவர் சுயமாக எப்போதாவது மினுக்கிய மடிப்புக் கலையாத ஆடைகள் அணிந்ததையும்
நான் பார்த்ததில்லை.


அவரிடம் இருப்பதெல்லாம் ஒரேயொரு நீளக்காற்சட்டை (ட்ரவுசர்) ஒரேயொரு
சேர்ட் தான். அரசியல் விசயமாக ஊரெல்லாம் சுற்றி பல பிரச்சினைகளைத்
தீர்த்துவிட்டு காய்ந்த வயிற்றுடன் இரவு 12.00, 1.00 மணிக்கு தலைமை
அலுவலகத்திற்கு வருவார். ஆந்த நள்ளிரவில் அழுக்கேறிய தன் உடைகளைக்
களைந்து தோய்த்து காயப் போட்டுவிட்டே படுக்கச் செல்வார். பின்னர் அந்த
இயந்திரம் அதிகாலையிலேயே தன் இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்து விடும்.


இப்படிப்பட்ட திலீபன் இன்று வாடி, வதங்கி தமிழினத்துக்காக தன்னையே
அழித்துக் கொண்டிருக்கின்றாரே? ஏத்தனையே பேரின் பிரசிசினைகளைத் தீர்த்து
வைத்த இவரின் பிரச்சினையை, தமிழினத்தின் பிரச்சினையை யார் தீர்க்கப்
போகின்றார்கள்.


சீலமுறு தமிழன் சிறப்பினை இழப்பதோ?
சிங்கள இனத்தவர் நம்மை மிதிப்பதோ?
கோலமுறு திரு நாடினிக் கொள்ளையர்….
வுpரித்த வலையினில் வீழ்ந்து அழிவதோ?
காலனெனும் கொடும் கயவனின் கையினால்..
கண்ணை இழந்து நாம் கவலையில் நலிவதோ?
நீலமணிக்கடல் நித்தமும் அழுவதோ..?
நாடு பெறும்வரை நம்மினம் தூங்குமோ…?


"ஈழமுரசு" பத்திரிகையில் வெளிவந்த இந்தக் கவிதையை ஒருநாள் திலீபன்
வாசித்துவிட்டு என் தோள்களைத் தட்டிப் பாராட்டியதை இன்று எண்ணிப்
பார்க்கின்றேன்.


வாரா வாரம் பத்திர்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் எனது கவிதைகளை ஒரு
தொகுப்பாக்கி வெளிவிட வேண்டும். என்ற திலீபனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக
சென்ற வாரம் தான் அவைகளை ஒன்று சேர்த்து பிரதிகள் எடுத்து ஒருபிரதியை
ராஜனிடமும் மறு பிரதியை யோகியிடமும் கொடுத்திருந்தேன்.


தலைவர் பிரபாகரன் "முன்னுரை" எழுதவேண்டும் என்ற என் விருப்பத்தை
திலீபனிடம் வெளியிட்ட போது அவரும் அதற்குச் சம்மதித்தார். உண்ணாவிரதம்
முடிந்த பின் முதல் வேலையாகத் தலைவரிடம் சகல கவிதைகளையும் கொடுக்க
வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.


தலைவர் பிரபா ஒர் "இலக்கிய ரசிகன்" என்பது பலருக்குத் தெரியாது.


அந்த நெஞ்சுக் கூட்டிற்குள் நிறைந்து கிடக்கும் இராணுவத்திட்டங்களும்,
அரசியல்ப் புரட்சிக் கருத்துக்களும் - இலக்கியக் குவியல்களும் - மலை
போன்ற தமிழுணர்வும்…. அப்பப்பா! ஏராளம் ஏராளம்.! அப்படிப்பட்ட ஒரு
தலைவனின் வழிவந்த திலீபனின் ஏழாம் நாள் தியாகப் பயணம் தொடர்கின்றது.


பயணம் தொடரும்........

துளி நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் - உயிர் நீத்த திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987


துளி நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் - உயிர் நீத்த திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987



அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.



ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.



நூலைந்த நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது? தூன் மறைவிடம் சென்று சிறுநீர் இகழிக்கப் போவதாகக் கூறினார். ஆவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம் பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார்;.



அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது. ஏனக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ஐந்து நாட்களாக எதுவும் குடிக்காமல் இருக்கும் ஒருவரால் இது எப்படிச் சாத்தியமாக முடியும்? அன்று வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களிடம் இதுபற்றி மறக்காமல் கேட்டேன். ஆவர் எந்தப் பதிலுமே கூறாமல் மௌனமாக சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார்.



அன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஒர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். ஆவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்…..


என் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது…… இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஐPவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா?


திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களிற்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.


திலீபா ! நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது. போலும்? உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.


ஏமக்கு மட்டும் ஆயுதங்களை தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன? முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை "செல்வா" தலைமையில் முயன்று முடியாத நிலையில்…… எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம்.


நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்…. அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்….


ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும். நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும்? தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும் - பூரிப்பும் எப்பொழுது மலரும்?


அண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது… காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்… ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது.


ஆனால் நமது மண்ணில் அப்படியா?


எத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள்? எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தாhப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும்? எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்?


அப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்?


அகிம்சை ! அகிம்சை ! அகிம்சை !


இந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார்? நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்டகளாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யதார்? சிங்களப் பேரினவாதம்தான் !


இன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் !


தளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சை தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.


"ஒரு கால் போனால் என்ன? இன்னும் ஒரு கால் இருக்கு…. இரண்டு கையிருக்கு…. அவன் கடைசி சரையும் போராடுவான்…"


போர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது.


உதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்…. அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர்…. ஏன்ற செய்தியை 'சிறி' வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன்.



காலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால்…… உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ். பேரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார்.


இப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன்.


இயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமால் விம்மி விம்மி அழுத என் நெஞ்சைத் தொட்டது.


தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர்.


அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார்.


" கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு…." என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே 'ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.


கிட்டண்ணா, குட்டிசிறி ஜயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கபின்றனர்.


திலீபனுக்கு என்ன பதில் சொல்லதென்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான்.


இரவு வெகுநேரம்வரை போச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம்… ஆனால், அது வரவேயில்லை


இன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.


இரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.



அவரின் இரத்த அழுத்தம் 85 . 60

நாடித்துடிப்பு- 120

சுவாசம் -22


பயணம் தொடரும்........

சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் - திலீபனுடன் ஐந்தாம் நாள் 19-09-1987





வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை.யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிககளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கி விட்டனர்.



இன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறார். ஆவரால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது.மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைப் பற்றிய செய்திகளே இடம்பெற்றிருக்கின்றன.



"திலீபன் உடல்நிலை மோசமாகி வருகிறது. ஆவர் கடைசியாக சிறுநீர் கழித்து 48 மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது….. இதே நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து சிறுநீர் கழியாவிட்டால், அவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படலாம்" என்று ஒரு பத்திரிகையில் போட்டிருந்தார்கள். வேறு ஒரு பத்திரிகை பின்வருமாறு எழுதியிருந்தது.



"திலீபன் சோர்ந்து வருகிறார்… ஒரு மெழுகுவர்த்தியைப்போல் அவர் தமிழினத்துக்காக சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார்…. அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்".



பத்திரிகைகளைப் படிக்கும்போது என் கைகளுடன் சேர்ந்து உள்ளமும் நடுங்கியது….. தலீபன் என்றோர் இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்துக்கு வந்துவிட்டோம் என்பது போன்ற பிரமை எனக்கு ஏற்படுகிறது.



அதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாகக் கலந்து வந்து என் காதில் விழுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பிரிவைச் சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார். ஏன்பது தான், அது….. புலிகளின் சார்பாக திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால்….. பிரதமர் ராஐவ் காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசையில் அதைப்பற்றி அறிவதற்காக பிரதித் தலைவர் மாத்தயாவிடம் செல்கிறேன்.



அங்கு அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. வழக்கம் போல சாதாரண விசயங்களைக் கவனிக்கத்தான் திலகர் போயிருக்கிறார்…" என்று மாத்தயா சொன்னதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது. திலகரின் இந்தியப் பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும் ஆனால்…?



விதியே ! உன் கரங்கள் இத்தனை கொடியதா? பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக் கொண்டு எம்மையே சுற்றிவரும் திலீபனைச் சித்திரவதைப் பள்ளத்தில் தள்ளுவது தான் உன் கோர முடிவா? ஆப்படி அவர் என்ன குற்றம் செய்துவிட்டார்?



தமிழினத்துக்காகத் தனது தந்தை, சகோதரங்களைப் பிரிந்து வந்தாரே…. அது குற்றமா?

தமிழினத்துக்காகத் தன் வைத்தியப் படிப்பையே உதறி எறிந்தாரே….. அது குற்றமா?

தமிழினத்துக்காக இரவு பகல் பாராமல் மாடாக உழைத்தாரே…… அது குற்றமா?

தமிழினத்துக்காக தன் வயிற்றிலே உள்ள குடலின் 14 அங்குலத்தை வெட்டி எறிந்தாரே…. அது குற்றமா?

தமிழினத்துக்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாலே…. அது குற்றமா?

எது குற்றம்?



வானத்தைக் பார்த்து வாய்;விட்டுக் கத்தவேண்டும் போல் இருக்கிறது.



கதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது இலட்சக் கணக்கான மக்கள் கடந்த ஐந்து நாட்களாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே…. யாருக்காக….? திலீபனுக்காக…… தமிழினத்துக்காக…..



அப்படியிருக்க…. அந்தக் கண்ணீரை…. ஏக்கத்தை…. இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே…? ஏன்?



உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா? குhந்தி இறந்ததற்காக கண்ணீர் வடிக்கும் இந்த உலகம், காந்தீயத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்ற மெழுகுவர்த்தியைக் காணவில்லையா?



அல்லது கண்டும் காணாமலும் போய்விட்டதா…?



ஏத்தனையோ முறை திலீபன் சாவின் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறார்…. ஏண்பத்து மூன்றாம் ஆண்டு அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நவாலிப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்தபோது ஒரு நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று பொது மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தடீரென இரண்டு ஐப்வண்டிகள் அவரின் அருகிலேயே முன்னும் பின்னுமாக வந்து நின்றன…



சிறீலங்கா இராணுவத்தினர் கண்சிமிட்டும் நேரத்தினுள் சுற்றி வளைத்து விட்டதை உணர்ந்த தலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் நிதானமாக நின்றார்…. ஆவரின் மதிநுட்பம் மிகத்தீவிரமாக வேலை செய்யத் தொடங்கியது. யாரோ ஒரு தமிழ்த் துரோகியால் பெறப்பட்ட தகவலை வைத்துக் கொண்டு திலீபனை அடையாளம் கண்டு கொண்ட இராணுவத்தினர் ஐPப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.



அவரது கையிலே ஆயுதம் அடங்கிய சிறிய "சூட்கேஸ்" ஒன்று இருந்தது. அவரருகே இரு இராணுவத்தினர் சேர்ந்து வந்தனர். ஐPப் வண்டியில் ஏறும்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேசினால் மின்னல் வேகத்துடன் தாக்கிவிட்டு பக்கத்திலிருந்து பனந்தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினார் தலீபன். ஏதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்துவிட்ட இராணுவத்தினர் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று திகைத்து நின்றனர்.



மறுகணம்…. அவர்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் பயங்கரமாக தலீபனை நோக்கி உறுமத் தொடங்கின. அவரது கையொன்றைத் துளைத்துக்கொண்டு சென்றது துப்பாக்கிக் குண்டு.



இரத்தம் சிந்தச் சிந்த மனதைத் திடமாக்கிக் கொண்டு வெகு நேரமாக ஓடிக் கொண்டிருந்தார் தலீபன். இராணுவத்தினரால் அவரைப் பிடிக்க முடியவில்லை. இந்த ஏமாற்றத்தினால் பல பொது மக்களை அவர்கள் அன்று கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளிவிட்டுச் சென்றனர்.



1986ஆம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புலிகள் - சிறீலங்கா இராணுவ மோதலின் போது, தலீபன் தன் துப்பாக்கியால் பலரைச் சுட்டுத் தள்ளினார். ஆனால் எதிரிகளின் ஓர் குண்டு அவரின் குடலைச் சிதைத்து விட்டது.



யாழ் பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டபோது, அவரின் குடலில் 14 அங்குல நீளத் துண்டைச் சத்திரசிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிட்டனர். ஆந்தப் பெரிய சத்திர சிகிச்சையின்போது அவர் பெருமளவில் இரத்தத்தை இழந்திருந்தார். அந்தக் காயம் மிகவும் சிக்கலாக இருந்ததால் மேலும் இரண்டு சத்திரசிகிச்சைகளைச் செய்த பின்பே அவர் பூரண குணமடைந்தார். சுமார் மூன்று மாதங்களாக அவரின் வாழ்வு வைத்தியசாலையிலே கழிய வேண்டியதாயிற்று.



இப்படி எத்தனையோ துன்பங்களைத் தமிழினத்துக்காக அனுபவித்தவர்தான் திலீபன்..



ஆயுதப் போராட்டத்தினால் மாத்திரமன்றி அகிம்சையாலும் தன்னால் சாதனை பரிய முடியும் என்பதில் திலீபனுக்கு அசையாத நம்பிக்கை இருந்ததால் அவர் இந்தப் போராட்டத்தில் தானகவே முன்வந்து எத்தனையோ பேர் தடுத்தும் கேட்காமல் குதித்தார்.



இன்று மாலை இந்தியப் சமாதானப் படையினரின் யாழ்கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் பரார் அவர்கள், திலீபனைப் பார்க்க வந்தார். அவர் சனக் கூட்டத்தினூடே வரும்போது பல தாய்மார் அவர் மீது கற்களை வீசத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தடுத்து தகுந்த பாதுகாப்புக் கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச் சென்றனர் விடுதலைப் புலிகள்.



திலீபனின் உடல்நிலை மோசமாகி வருவதால் பொது மக்களும் இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும், வேறு சிலரும் அவரிடம் எடுத்துக் கூறினர். தூன் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறிவிட்டுச் சென்றார். அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்ற நப்பாசையில் அன்று எம்மிற் சிலர் சற்று நிம்மதியாக இருந்தோம்.



பயணம் தொடரும்........


ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த உண்ணாவிரதம் - திலீபனுடன் நான்காம் நாள் 18-09-1987

ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த உண்ணாவிரதம் - திலீபனுடன் நான்காம் நாள் 18-09-1987



கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.




கடந்த மூன்று நாள்களாக ஒன்றுமே நான் உண்ணாமல் அருந்தாமால் இருந்தது சிறிது களைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் திட மனத்துடன் அதைச்சமாளித்துக் கொண்டேன். நான்காம நாளான இன்றுதான் எனக்குச் சற்று நாவறர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அதைப்பொருட்படுத்தாமல் யாரிடமும் என் விரதத்தைப்பற்றிக் கூறாமல் இருந்தேன். இரண்டு மூன்று முறை ராஜனும் - நவீனும் என்னைச் சாப்பிட அழைத்த போது நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன்.




ராஐன், மாத்தயா அண்ணையிடம் இன்று என்னைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்பதை மாத்தயா அண்ணை என்னை மேடைக்குப் பின்புறமிருந்த வீட்டிற்கு அழைத்துப் பேசியதிலிருந்து அறிந்து கொண்டேன். என்னை வீணாகப் பட்டினி இடக்க வேண்டாம் என்று மாத்தயா வேண்டிக் கொண்டார். திலீபன் இருக்கும் நிலையைப் பார்க்கும் போது என்னால் எதுவும் அருந்த முடியவில்லை என்று மாத்தயாவிடம் கூறிய போது என்னால் தாங்க முடியவில்லை. விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சோகச் சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. ஓன்றுக்குமே நான் அழுததில்லை. இன்று?... மாத்தயா என்னை அதன் பின் வற்புறுத்தவில்லை.




ஆனால் இன்று காலை 10 மணியளவில் தலைவர் பிரபாகரன் என்னை அழைத்துவரச் சொன்னதாக மாத்தயா என்னிடம் கூறியபோது, என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.



தலைவர் மிகவும் கண்டிப்பானவர். ஏன்ன சொல்லப்போகிறாரோ என்ற கேள்வியை எனக்குள் பலமுறை கேட்டுக் கொண்டேன்.
தலைவரின் அறைக்குள் பயத்துடன் சென்றேன்.



"இருங்க வாஞ்சி அண்ணா" என்ற அன்பான குரல் என்னை வரவேற்றது – ஆச்சரியத்தால் என் கண்கள் அகன்றுவிட்டன. சாப்பிடாத மயக்கத்தில் என் கண்களும் மயங்கிவிட்டனவா என்று, ஒருகணம் சிந்தித்தேன்.
இல்லை !



என் முன் இருப்பவர், தலைவர் பிரபாகரன் தான் !
துறு, துறுவென்று பார்க்கும் அதே கண்கள். வட்ட முகம், கூரிய அழகான பெரிய மூக்கு,
அளவாக – அழகாக நறுக்கிவிடப்பட்ட நீண்ட மீசை.



"நீங்க படிச்சவர். வயதில் மூத்தவர். நான் சொல்ல வேண்டியதில்லை. திலீபனில் அன்பு இருக்கவேண்டியது தான். அதற்காக இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் எதுவும் குடிக்காமல், சாப்பிடாமல் இருப்பது? நீங்கள் அவரைப் பார்க்க வேண்டியவர். உங்கள் உடம்பில் சக்தி இருந்தால்தான் அதற்கு உங்களால் முடியும். நான் தலீபனில் அன்பில்லாதவன் என்றா நினைத்திருக்கிறீர்கள்? திலீபன் என் பிள்ளையைப் போன்றவன். நானே அவனை இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதித்திருக்கிறேனென்றால் என் மனத்தைக் கல்லாக்கித்தான் அதைச் செய்திருக்கிறேன். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேவையான மனோதிடம் திலீபனிடம் இருப்பதனால்தான், உண்ணாவிரதத்தை அவன் நடத்த விரும்பியபோது நான் அதற்குச் சம்மதித்தேன். ஒவ்வொருவராக இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதுதான் நல்லது. திலீபனுக்கு அடுத்த சந்தர்ப்பம் உங்களுக்குத்தர முயற்சிக்கிறேன். அதுமட்டும் நீங்கள் வழக்கம்போல் சாப்பிட்டு, குடித்து இருக்கவேண்டும். திலீபனை வடிவாகக் கவனித்துக் கொள்ளுங்கள். இப்போது எதையாவது குடித்து உங்கள் பிடிவாதத்தை விட்டுவிடுங்கள்."



என்று கூறிய தலைவர், சொர்ணனை அழைத்து குளுக்கோசும் எலுமிச்சம் பழமும் வரவழைத்து, தானே தன் கைப்படக் கரைத்து, அந்தக் கிளாசை என்னிடம் நீட்டினார். ஆவ்வளவு கூறியபின் என்னால் எதுவும் திருப்பிக் கூற முடியவில்லை.மடமடவென்று வாங்கிக் குடித்தேன்.




தலைவர் பிரபாகரன் கண்டிப்பானவர் என்பது தெரியும். ஆனால் அவரின் அன்பான வார்த்தைகள் எமது வாயைத் தானாகவே அடைக்கச் செய்துவிடும் என்பது எனக்கு இன்றுதான் புரிந்தது.





திலீபனின் உண்ணாவிரதச் செய்தி இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், அரபு நாடுகளிலிருந்தும் தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டேயிருந்தன.
ஏன்? இந்தியாவின் தமிழகத்திலும் இந்தச் செய்தி, உணர்வு அலைகளைக் கொந்தளிக்கச் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் உட்பட பல நாட்டுப் பத்திரிகைகள் திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகத் தலைப்புச் செய்திகளைப் போட்டிருப்பதாக, எமது தகவல் தொடர்பு அறிக்கைகள் கூறுகின்றன.





இன்று திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்து நான்காவது நாள், அவரது உடல் மிகவும் அசதியாகக் காணப்பட்டது…..பயற்றங்காயைப்போல் வாடி வதங்கி, கட்டிலின்மேல் அவர் சுருண்டு கிடந்த தோற்றம், பார்ப்பவர் நெஞ்சங்களைப் பதை பதைக்க வைத்தது. அப்படியிருந்தும் அவர் இன்று மக்கள் முன் உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு:




"அன்பார்ந்த தமிழீழ மக்களே !
விளக்கு அணையுமுன்பு பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேசமுடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்! ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651 ஆவது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது அவயவங்கள் செயலிழப்பதனால், இனிமேல் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும்.
எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. முக்கள் புரட்சி வெடிக்கட்டும். நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவைகளும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்".




நேற்று இரவு முழுவதும் அவர் ஆழ்ந்து தூங்கினார். இன்று காலை ஒன்பது மணி ஆகியும் தூக்கத்தைவிட்டு அவர் எழுந்திருக்கவில்லை.
இளைஞர்களான 'நவீனன்கள்' இருவரும், அவரின் இடப் பக்கத்திலும் வலப்பக்கத்திலுமாக அமர்ந்திருந்து விசிறியால் ஆள்மாறி ஆள் வீசிக்கொண்டிருக்கிறார்கள்.
நேற்று இரவு வழக்கத்தைவிட நாடித்துடிப்பு 110 ஆக அதிகரித்திருந்ததில் இருந்து அவர் உடல் நிலை பாதிப்படையத் தொடங்கிவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.



சூரியனின் கதிர்கள் பூமியெங்கும் வியாபித்திருந்தன.
அவரருகே சென்று அவரின் நாடித்துடிப்பை மெதுவாகப் பரிசோதித்துக் கொண்டு சுவாசத்தையும் எண்ணுகின்றேன்.


நாடித்துடிப்பு – 120
சுவாசத்துடிப்பு – 24


ஆம். சாதாரண நிலையிலிருந்து மிகவும் அசாதாரணமாகக் கூடிக்கொண்டிருக்கிறது நாடித்துடிப்பு.
(நாடித்துடிப்பு – சாதாரணம் 72-80)(சுவாசம் - 16-22)



நான்கு நாட்களாக நீராகாரம் உட்கொள்ளாத காரணத்தினால் உடலில் திரவநிலை குறையத் தொடங்கிவிட்டதால், இருதயத்திற்கும் நுரையீரல்களுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவும், கனமும் குறையத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இருதயமும், சுவாசமும் பலமாக வேலை செய்யத் தொடங்கியிருந்தன. இதைவிட இரண்டு நாட்களாகச் சிறுநீர் கழியவில்லை.



தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களுக்குச் சிறுநீர் கழியாமல் இருக்குமானால் சிறுநீரகத் தளர்ச்சி (Kidney Failiure) ஏற்படலாம். 'கிட்னி பெயிலியர்' ஏற்படுமானால் அது இருதயத்தில் தாக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இறப்பை உண்டுபண்ணலாம்.




எனக்கு தெரிந்தவரை வழக்கமான நடைபெறக்கூடி இந்த நிகழ்சிகளினால் திலீபனின் உயிர் பறிக்கப்பட்டக்கூடிய வாய்பு எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
நல்லூர்க்கந்தனிடம் முறையிட்ட மக்கள் நாச்சிமார் கோயில் அம்மனிடமும் மனமார வேண்டுவதைக் காதல் கேட்கிறேன்.
"தாயே உன் பிள்ளையொன்று உணவில்லாமல் செத்துக் கொண்டிருக்கிறது. அதை நீதானம்மா கடைசிவரையும் காப்பாற்ற வேண்டும்…."
நீண்ட, நாட்களுக்குப்பின், திலீபனுக்காக மக்களுடன் சேர்ந்து நானும் இப்படி வேண்டிக்கொள்கின்றேன்.
வெகு நேரத்தின்பின் கண் விழித்த திலீபன், எழும்புவதற்குச் சத்தியின்றி படுக்கையிலேயே கிடக்கிறார்.



மைதானம் சனக்கூட்டத்தினால் நிரம்பிக்கொண்டிருக்கிறது.
தீபனைப் பார்ப்பதற்குகாக அணியணியாக மேடைக்கு முன் புறம் மக்கள் வந்து போய்க்கொண்டிருந்தனர்………. ஓருவர் முகத்திலாவது மகிழ்ச்சி இல்லை. சில தாய்மார்கள் திலீபன் படுத்திருக்கும் பரிதாப நிலை கண்டு பொறுக்க முடியாடல் விம்மி விம்மி அழுகின்றனர்.


கிறிஸ்தவ பாதிரியாரும் - பல வருடங்காய் சிறையில் அடைபட்டுத் தாங்க முடியாத சித்திரவதைகளை அனுபவித்தவரும், 1983 ஜூலையில் வெளிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதினள் சிங்கள இனவாதப் பூதங்கால் கொல்லப்பட்ட சமயம் எதிர்பாராத விதமாகத் தம்பியவரும் ஆகிய, வண, பிதா சிங்கராயர் அவர்கள், திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வந்தார்.


ஓரு துறவியாக இருந்தாலும் திலீபனின் கோலத்தைக் கண்டதும் அவர் அழுதே விட்டார். திலீபனின் கரங்ளைப் பற்றி அவர் அன்போடு வருடினார்.
உடல் சோர்வுற்று இருந்தபோதிலும் திலீபன் அவருடன் மனம் திறந்து வெகுநேரம்வரை பேசிக்கொண்டிருந்தார்.



தீலீபனின் பிடிவாதத்தையும், திடமனத்தையும் நன்கு அறிந்தவர் துறவி அப்படிருத்தும் திலீபன் படுத்திருக்கம் கோலத்தைக் கண்டு பொறுக்க முடியாடல் விசும்பினார்.
கொஞ்சமாவது தண்ணீர் அருந்திவிட்டு உண்ணாவிரதத்தைத் தொடருமாறு அவர் வற்புறுத்தினார்.



பாதர் சிங்கராயர்மீது திலீபனுக்கு எப்போதும் மிகுந்த மதிப்பும் பாசமும் உண்டு. அப்படியிருந்தும் தனக்கே உரிய புன்முறுவலைக் காட்டி- அதையே அவரின் - வேண்டுகோளுக்குப் பதிலாக்கிவிட்டு- மௌனமாகினார்- திலீபன்.


பாதர் சிங்கராயர் சென்ற பின் ஈரோஸ் இயக்கத் தலைவர் பாலகுமாரும், இயக்க யாழ். மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளரும் 'பரா' வும் வந்தனர்.
எந்த இயக்கத்தவர்களானாலும் அவர்ளுடன் சகஜமாகப் பேசுவதில் திலீபனுக்கு நிகர் திலீபன்தான்.


அவர்களும் திலீபனைத் தண்ணீராவது அருந்தும்ப டிவற்புறுத்தினார். அனால், அவர்களுக்குக் கிடைத்த பதிலும் மௌனம்தான்.



செல்வி குகசாந்தினி, திருமதி நல்லையா ஆகிய இரு பெண்கள் திலீபனுக்கு ஆதரவாக, சாகும்வரையிலான உண்ணாநோன்பினை ஆரம்பித்தனர். ஆத்துடன், வல்வெட்டித்துறையயில் 05 தமிழர்கள் ஏற்கெனவே உண்ணாவிரதம் ஆரம்பித்துவிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.





இன்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவு ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், திலீபனை வந்து சந்தித்தார். இந்திய அரசிடமிருந்தோ, இந்தியத் தூதுவரிடமிருந்தோ இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று. அவர் திலீபனிடம் கூறினார். அவருடன் திரு யோகியும் வந்திருந்தார்.



தீலீபனின் பொறுப்புக்களையெல்லாம் தன் தலைமீது சுமந்து கொண்டிருப்பவர் யோகி.சில நாட்களுக்குமுன் இந்திய அமைதி காக்கும் படையின் பாரபட்சமான நடவடிக்கைகளையும் சிங்கள இராணுவத்துக்கு ஆதரவான நடவடிக்கைளையும் கண்டித்து, ஓரு நாள் அடையாள மறியற் போராட்டம், சகல இராணுவ முகாம்களிலும் பொது மக்களால் நடத்தப்பட்டபோது, யாழ் கோட்டையின் முன்பாக அன்றைய மறியல் போராட்டத்தை முடித்துவைத்து திலீபன் பேசிய பேச்சு என்நினைவுக்கு வருகின்றது.






" இந்த யாழ்ப்பாணக் கோட்டையியே சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழனின் கொடி பறந்த அந்த கொடியை போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர். ….. போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும் ஒல்லாந்தரிடமிருந்தும் ஆங்கிலேயரும் கைப்பற்றிக்கொண்டனர். ஆங்கிலேயரிடமிருத்து சிங்களவர் கடைசியில் கைப்பற்றினர். அதாவது புலிக்கொடி பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அந்த தமிழ்க்கொடியைப் பறக்க விடுவதற்காக, ஒவ்வொருவரும் எமது உயிரை அர்பணித்துக்கொண்டு வருகிறோம். அதில் என் பங்கு எப்போது……? என்பதுதான் எமது கேள்வியாக இருக்க வேண்டும் தவிர, பதவிகள் எமக்கு பெரியதல்ல.. பதவிகளைத்தேடிச் செய்பவர்கள் புலிகள் அல்ல. அதற்கு வேறு ஆட்கள் இங்கே இருக்கிறார்கள்!"





அந்த தீர்க்கரிசனப் உயிர்வடிவம் கொடுப்பதற்குற்காகத்தான், திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான்.
திலீபன் ஓரு சிறப்பான சதுரங்க வீரன். தனது பள்ளிப் பருவத்தில் பல பரிசுகளை இதற்காக அவர் பெற்றுள்ளார். ஆரசியலில் எந்த காயை எப்படி, எந்த நேரத்தில், நகர்த்த வேண்டும் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரிந்துருக்க வேண்டும்.



அகிம்சைப் போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் இந்திய நாட்டின் சமாதான படையினரின் கண்களைத் திறப்பதற்கு, இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது முற்றிலும் பொருத்தமானதே. இந்தியா உள்ப்பூர்வமாக அண்ணல் காந்தியைப் பின்பற்றும் நாடாக இருந்தால், நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இல்லையேல் உலகத்தின் பார்வையில் இருந்து அது தப்பவே முடியாது.




அன்றிரவு திலீபனுக்குத் தெரியாமல் அவரது இரத்த அழுத்தத்தைப் பதிவு செய்து விட்டேன். அது 100/65
நாடித்துடிப்பு – 114சுவாசம் - 25



இந்தியா என்ன செய்யப்போகிறது? ஏனக்கு ஒன்றும் புரியவில்லை. "வெள்ளையனே வெளியேறு" என்று ஆங்கிலேயரை வெளியேற்றுவதற்கதாகப் போராட்டம் நடாத்திய காந்தி இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ஆனால் திலீபனோ இந்தியப் படையை வெளியேறு என்று கூடக் கேட்கவில்லையே! இவர்கள் திலீபனின் சாதாரண கோரிக்கைகளுக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்? எனக்கு எதுவும் புரியவில்லை.



பயணம் தொடரும்........