தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

முள்வேலிகளுக்கு பின்னால் தமிழ் ஈழம் - தோழர் தியாகு

கந்தலாகும் இந்திய இராசதந்திரம்

இந்திய தற்காப்புக் கற்கைகள் மற்றும் பகுப்பாய்வுக்கான கழகத்தின் முன்னாள் இயக்குநர் கே.சுப்பிரமணியம் இந்திய பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார் . இவற்றில் அவருடைய முக்கிய ஆதங்கம் வெளிப்படுகிறது.

 

இந்தியாவின் மேன்மை எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம் இதை ஏற்பதற்கு அயல் நாடுகள் மறுக்கின்றன. சீனாவைப் பெரும் வல்லரசாக எற்றுக் கொள்ளும் இந்தியாவின் அயல் நாடுகள் தமக்குச் சமதையான நாடாகவே இந்தியாவைக் கருதுகின்றன.  சுப்பிரமணியத்தாரின் இந்தப் புலம்பல் நிரந்தரமான உண்மையை வெளிப்படுத்துகிறது. இந்தியா தன்னைக் கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழியாகத் தான் காட்ட முடிகிறேதே தவிரச் சீனாவை போல் உலகத் தர வல்லரசாக வர முடியவில்லை.

 

இன்னொரு கட்டுரையில் இந்தச் சுப்பிரமணியம் என்ன சொல்கிறார் என்றால் 'வலு என்பது செய்யும் திறன், ஆக்கும் திறன், மாற்றங்களை ஏற்படுத்தும் திறன், உருவமாற்றத்திறன் என்பதோடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன். இந்திய நாட்டின் சக்திக் கோட்பாட்டில் இவை அடங்குகின்றன.' இந்த முக்கிய செய்தி கேந்திரப் பகுப்பாய்வுச் சஞ்சிகை ஏப்பரல் 1987 பக்கம் 04ல் காணப்படுகிறது. (Strategic Analysis, April 1987, Page 4 Author K. Subrahmaniyam).


சொன்னதைச் செய்ய முடியாத கட்டம் வரும் போது தனது சொற்களை மென்று விழுங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சுப்பிரமணியம் கூறும் இந்திய வலு அல்லது சக்தி எங்கே போய்விட்டது. அவர் பட்டியலிடும் திறன்களில் ஒன்றையாவது ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவால் நடைமுறைப் படுத்த முடிந்ததா..?

 

உள்நாட்டு பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் எப்படி ஈழத் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க இயலும். புரையோடிப் போயுள்ள காஷ்மீர் பிரச்சினையை இனப் படுகொலை மூலம் எதிர்கொள்ள முடிகிறதே தவிர, ஆக்கபூர்வமான தீர்வை வழங்கும் திறன் இந்தியாவிடம் இல்லை. தொடர் கதையாகி வரும் தமிழக மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல் கிட்டத் தட்ட இந்தியா மீது சிறிலங்கா தொடுத்துள்ள  மறைமுகப் போராகக் கருதப்படுகிறது .

 

09 யூலை 2010ம் நாள் நாகை மாவட்ட மீனவர் செல்லப்பன் படுகொலை செய்யப்பட்டார் . இது தொடர்பாகத் தமிழக முதல்வர் கருணாநிதி  பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்திற்கு  அவர் பதில் கூறவில்லை. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்பமிட்ட நாலு வரிப் பதில் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டது. பதில் என்ன சொன்னது..? தங்கள் கடிதம் தொடர்பாகப் பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோருக்கு விரிவாக எடுத்துரைத்துள்ளேன் இந்திய வெளிவிவகார அமைச்சகம்  சிறிலங்கா அரசுடன் பேசி இந்தப் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கும்.

 

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் தமிழக முதல்வர் எழுதும் கடிதங்களுக்கு இது போலத் தான் இந்திய நடுவண் அரசு பதிலளிக்கும். முதல்வர் கருணாநிதி இது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. சிறிலங்காத் து£தரை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைத்து சிறிலங்கா அரசைக் கண்டிக்க வேண்டியது தான் இராசதந்திர நடைமுறை. இது உலகம் முழுவதும் ஏற்றுள்ள பாரம்பரிய நடைமுறை. நியூசிலாந்து நாட்டின் செய்தி வாசிப்பாளர் போல் வெறன்றி என்பவர் புது டில்லி மாநில முதல்வர் ஷீலா டிக்ஷிற் அவர்களின் பெயரை உச்சரிக்க முடியாதவர் போல் நையாண்டி செய்தபோது கடுஞ்சினம் கொண்ட இந்திய அரசு மேற்கூறிய பாரம்பரிய நடைமுறையைப் பின்பற்றியது.

 

அதாவது நியூசிலாந்து து£தரை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைத்து இந்திய அரசு கடும் அதிருப்தியைத் தெரிவித்தது. இதற்கு அந்தத் து£தர் மன்னிப்புக் கேட்டார். போல் வெறன்றியின் வேலையும் போய்விட்டது. அவுஸ்திரேலியா தொடர்பாகவும் து£தரை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைக்கும் நிகழ்ச்சி ஒக்ரோபர் 09ல் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களும், இந்திய வம்சாவழி அவுஸ்திரேலியர்களும் மர்மக் கும்பல்களால் அண்மைக் காலமாகத் தாக்கப்படுவது உலகறிந்த விடயம்.


ஒரு இந்தியன் மின்சாரம் செலுத்தப்பட்டுக் கொல்லப்படும் காட்சியின் வீடியோப் பிரதிகளை மின் அஞ்சல் மூலம் அவுஸ்திரேலியப் பொலிசார் விநியோகித்தும். இன்ரர்நெற்றில் பதிவேற்றம் செய்தும் உள்ளனர். அத்தோடு இனவாதத்தைத் து£ண்டும் கருத்துக்களையும் வெளியிட்டனர். 09 ஒக்டோபர் 2010ம் நாள் இந்திய நடுவண் அரசு இது பற்றி அவுஸ்திரேலிய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. அத்தோடு நிற்காமல் புது டில்லிக்கான அவஸ்திரேலியத் து£தர் பீற்றர் வர்கீஸ் அவர்களை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைத்து கடும் அதிருப்தியை இந்தியா தெரிவித்துள்ளது.

 

நடுவண் அரச அமைச்சர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் இந்தியர்கள் எங்காவது தாக்கப்பட்டால் அதற்கு இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.  இது வரை 534 வரையிலான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இவர்கள் இந்தியர்கள் இல்லையா..? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்ச்சிகளின் போது போர்க் குற்றவாளியான மகிந்த ராஐபக்சவை எலிசபத் மகாராணியின் பிரதிநிதி எட்வேட் இளவரசரின் பக்கத்தில் அமர வைத்திருக்கும் இந்தியா, அரச குடும்பத்திற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .

 

இது பற்றிச் சர்வதேச ஊடகங்கள் கண்டனம் தெரிவித்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இந்திய அதிகாரிகளின் காதில் வீழ்ந்துள்ளது. முறைப்படி பார்த்தால் 77 தங்கப் பதக்கங்கள் உட்பட 177 பதக்கங்களை வென்ற அவுஸ்திரேலியாவின் பிரதமர் யூலியா கெயிலார்ட் அவர்களை அல்லவா விசேட விருந்தினராக அழைத்துக் கௌரவித்திருக்க வேண்டும்.  இந்த நாகரிகம் பக்குவம் இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை . இந்தியர்கள் பற்றி சராசரி அவுஸ்திரேலியர்கள் மட்டமாக நினைப்பதில் என்ன தவறு.

 

விக்கிரமாதித்தன் கதையில் வரும் மீண்டும் மீண்டும் முருங்க மரத்தில் ஏறும் வேதாளம் போல் முதல்வர் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்குச் சம உரிமை வழங்கும்படி சோனியாவிடம் கடிதமூலம் கேட்டிருக்கிறார். வாழ்வுரிமையே மறுக்கப்பட்டிருக்கிறது சம உரிமையாவது, சம உரிமையாவது கிடைக்குமா என்ன..? சட்டசபைத் தேர்தல் நெருங்கி விட்டது ªஐயலலிதாவின் அட்டகாசம் எல்லை கடந்து விட்டது. இருக்கிறது ஈழத்தமிழர் உரிமைப் பிரச்சனை விடுவாரா கருணாநிதி .

 

1956ல் சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அவர் ஈழத்தமிழர் உரிமை பற்றிப் பேசினார் என்று சொல்கிறார்கள் . நம்புவது கடினமாகத்தான் இருக்கிறது அசல் சந்தர்ப்பவாதியான கருணாநிதி உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் வல்லவராயிற்றே. அது சரி பெரியவரே சகோதர யுத்தத்தை மறைவாய் நின்று து£ண்டியவர்கள் யார் தெரியுமா? உங்களுக்கு தெரியாமலாபோகும்.

 

இன்று வரை இந்திய அரசியலில் பின்னணிச் சக்தியாக விளங்கும் றோ உளவமைப்புத் தான் போராளிக் குழுக்களை இணைந்து செயற்பட விடாமல்  பிளவு கோல் செருகியவர்களும் இவர்கள் தான். பரஸ்பர சந்தேகங்களை உருவாக்கி விரிசலைப் பெரிதாக்கியவர்கள் றோப் புண்ணியவான்கள் தான். சகோதர யுத்தம் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நாவலர் நெடுஞ் செழியனை ஓரங்கட்ட நீங்கள் செய்த சூழ்ச்சி, சகோதர யுத்தம் இல்லாமல் வேறென்ன. உங்கள்? வீட்டுக்குள் வரப்போகுது, வட்டியும் முதலுமாக கொடுக்கப் போகிறீர்கள்.

 

கருணாநிதியை பற்றிய கவலையை விடுங்கள் அந்த ஆளின் பிறவிக் குணம் மாறாது. இப்போது சுப்பிமணியத்தார் சொன்ன இந்தியாவின் வலுவைப் பற்றிப் பார்ப்போம். புது டில்லியில் இருந்து து£ரப் பார்வை இந்தியாவின் எதிர் காலத்திட்ட வரைபடம் என்ற புதிய நு£லைப் படிக்கும்  வாய்ப்பு கிடைத்தது. அட்மிரல் ராஐ£ மேனன் என்ற இந்திய கடற்
படை அதிகாரியும், டாக்டர் ராவ் குமார் என்ற பாதுகாப்பு விவகாரப் பகுப்பாய்வு நிபுணரும் இணைந்து இந்நு£லை எழுதியிருக்கிறார்கள். இதில் சொல்லப்பட்ட விடையங்கள் சுப்பிரமணியத்தாரின் வலுத் திறன் கோட்பாட்டுடன் ஒத்துப் போவது போல் தென்பட்டாலும் அடிப்படையில் முரண்பட்டே காணப்படுகின்றன .

 

மிகச் சுருக்கமாகக் கூறுவதாயின் இராணுவ பொருளாதார வலுப்பெற்ற சீனாவின் எழுச்சி இந்தியாவுக்கு மிகப் பெரிய அசசுறுத்தலாக அமையும். இந்திய சீன எல்லைகளில் பதற்றம் நிலவும். அவற்றை சுமூகமாகத் தீர்க்கும் வலுவோ தந்திரமோ 2030 வரை இந்தியாவிடம் கிடையாது . இது தான் நு£லின் ஆதாரச் செய்தி   சீனா - பாகிஸ்தான் நட்புறவு இராணுவ, பாதுகாப்பு, இராசதந்திர அடிப்படையில் நீடிக்கும் இது இந்தியாவுக்குத் தீராத தலைவலியாக இருக்கும் .

 

உலக வல்லரசாக வளரும் இந்தியாவின் இலட்சியம் சீனா - பாகிஸ்தான் நெருக்க உறவுகளால் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். இவை அடுத்து வரும் செய்திகள். தெற்கு ஆசிய நாடுகளுக்குச் சீனா வழங்கும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு  உதவிகள் இந்தியா எதிர்பார்க்கும் நட்பு சக்திகளை சீனா பக்கம் இழுத்துச் செல்லும். இதனால் இந்தியா இந்தப் பிராந்தியத்தில் தனிமைப் படுத்தப்பட நிறைய வாய்ப்பு உண்டு.

 

சீனாவின் பலத்துக்கு நிகராக இந்தியா எழுச்சி பெற 2030 வரை காத்திருக்க வேண்டும் அதற்கிடையில் உலக மாற்றங்கள் மதிப்பிட முடியாதளவுக்கு நிகழ்ந்து விடும். இந்த நு£லை எழுதிய அட்மிரல் ராஐ£ மேனனும் பாதுகாப்பு ஆய்வாளர் டாக்டர் ராவ் குமாரும் சில நியாயப் படுத்த முடியாத எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளனர். இது முக்கியமான கனவு நு£ல் என்ற விமர்சனம் நியாயமானது.

 

அமெரிக்கா, மத்திய ஆசியநாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சீனாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்திய நட்புறவை எதிர்காலத்தில் நாடலாம் என்பது தான் கனவுகளின் உச்சக் கட்டம். வியட்நாம் 2020ம் வருடத்தில் ஒரு பலமான இராணுவ நாடாக வளர்ச்சி பெறுவதோடு, சீனாவுக்கு எதிரான இந்திய நட்பு நாடாக இடம் பெறும். இந்தோனேசியாவும் பலம் பெற்று இந்திய நட்பு நாடாக மாறுவதோடு தனது துறைமுகங்களை இந்தியக் கடற்படையின் பாவனைக்கு வழங்கும்.

 

கனவுலகில் சஞ்சரிப்போர் யதார்த்தத்தை இழந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். 2030ல் சீனாவுக்கு சமனான வளர்ச்சி காண்போம் என்ற கனவு இந்தியா என்ற நாடு இருந்தால் தான் பலிதமாகும் ஈழத் தமிழர்களை அழித்த இந்தியாவின் கனவுகள் மிதப்பாகத் தான் இருக்கின்றன.

 

- செண்பகத்தார்

நன்றி;ஈழமுரசு

குடும்ப அரசியல் கணக்கில் முதலில் சேர்க்கப்பட வேண்டியவரே இந்த ராகுல் காந்திதானே ?

குடும்ப அரசியல் கணக்கில் முதலில்  சேர்க்கப்பட வேண்டியவரே இந்த  ராகுல் காந்திதானே ?



இந்திய ஜனநாயக கட்சி எனும் புது கட்சியை  முதலில் உடையார்கள் எனும் சாதி கட்சியாக துவக்கிய தமிழ் நாடறிந்த பெரும் தொழில் அதிபர் பச்சமுத்து  நேற்று  அந்த கட்சியின் கொள்கைகளை அறிவித்து பேசியதாக வந்த செய்தியினை தொடர்ந்து இந்த தலையங்கம் எழுத நேரிட்டது.  முதலில் கீழே உள்ள செய்தியை படித்து விட்டு பின்னர் மேல் உள்ள தலையங்கத்தை படியுங்கள் தோழர்களே !

தலையங்கம் :

 

 

பச்ச முத்து அவர்களே, நீங்கள் படித்தவர், நல்லவர், உழைப்பால் உயர்ந்தவர், ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அனுசரணை அரசியல் செய்ய திட்டமிடும்  உங்களின் காங்கிரஸ் கட்சியின் சார்பு நிலை உங்கள் அரசியல் நாளாந்த நடவடிக்கைகளில்   நன்றாக தெரிகிறது.

 

 

பொதுவாகவே  பெரும் தொழில் அதிபர்கள் காங்கிரஸ் கட்சியைத்தான் "காப்பு" இடமாக விரும்புவார்கள். காரணம்  சொல்லி தெரியவேண்டியதில்லை.

 

 

எத்தனையோ கல்லூரி முதல்வர்கள் , கட்சி ஆரம்பித்து உள்ளார்கள், காணாமல் போயும் உள்ளார்கள். நீங்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அரசியல் செய்யவேண்டும் என்றால் அதற்க்கு எதற்கு தனி கட்சி? அந்த காங்கிரஸ் கட்சியோடு இணைந்து அரசியல் பணி ஆற்றலாமே? அல்லது  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால்,  நீங்கள் சார்ந்த சாதி இன மக்களை  ஒன்று திரட்ட முடியாது என்று நினைத்து , அவர்களையும் உங்கள் வழிக்கு ஏமாற்றி கொண்டு வர நினைத்து இப்படி ஒரு கட்சி ஆரம்பித்துள்ளீர்களா ?

 

 

உங்களது நடவடிக்கைகளை ஆரம்பம் முதல் பார்க்கும் பொழுது, நீங்கள் ராகுல் காந்தியின் செயல் திட்டத்தில் ஏற்கனவே உள்ள பா ம க மற்றும் தேமுதிக வோடு இப்போது IJK  வை இணைத்து கொண்டு பணியாற்றுகிறீர்கள் என்று தெரிகிறது.

 

 

அப்படி காங்கிரஸ் கட்சியோடு கள்ள காதல் உங்களிற்கு இல்லையென்றால் , குடும்ப அரசியலை எதிர்க்கும் நீங்கள் முதலில் எதிர்க்க வேண்டியது காங்கிரசின், இந்த சோனியா குடும்ப கூட்டத்தைதான். அதை விட்டு விட்டு , தமிழனை கொன்ற கூட்டத்தை சேர்ந்த ஒருவனை , ராகுல் காந்தியை பெருமையாக  பேசுகிறீர்கள்.

 

 

இவை எல்லாவற்றையும் விட இன்னும் ஒன்றையும் தெரிந்து கொள்ளுங்கள், காங்கிரஸ் கட்சிதான் ஒரு லக்ஷம் தமிழ் பேசும் சமூகத்தை ஈவு இறக்கம் இல்லாமல் கொல்லுவதற்கு முதல் காரணமான கட்சி.

 

 

நீங்களும் தமிழகத்தில்தான் அரசியல் களம் காண விரும்புகிறீர்கள். கர்நாடகத்தில் அல்ல அல்லது கேரளாவில் அல்ல. உங்களின் காங்கிரஸ் சார்பு மன நிலைக்கு ,  சாத்திய ஒற்றுமை என்ற ஆயுதத்தை  தூக்கி அவர்களை  பலி கடா ஆக்காதீர்கள் .

 

 

தலையங்கதிர்க்கான செய்திகள் இங்கே :

IJK எனும் இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கைகளை வெளியிட்டு நேற்று அதன் நிறுவனர் மற்றும் தலைவர் பேசியுள்ளவற்றின்  சாராம்சம் இங்கே :

 


நான் 40 ஆண்டுகாலமாக கல்விப் பணியில் இருக்கிறேன். என்னிடம் 20 கல்லூரிகளும், தமிழகம் முதல் டில்லி வரைக்கும் பெயர் பெற்ற ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது. அதில், 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உள்ளனர். அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அரசியல் கட்சி துவங்கியுள்ளேன். எனக்கு, ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சியில் பல அமைச்சர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். "இவர் நல்லவராயிற்றே, இவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்' என அவர்கள் கேட்கின்றனர். இதில் இருந்தே, அரசியலில் நல்லவர்கள் இருக்க முடியாது என தெரிகிறது. இதே போன்ற எண்ணம், தமிழகத்தில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள், ஓய்வு பெற்றவர்கள், முதியோர் என, பலதரப்பட்டவர்களின் மனதிலும் ஏற்பட்டுள்ளது.


அரசியல் ஒரு சாக்கடை, அது அசுத்தம் நிறைந்தது என்றும் அவர்கள் கருதுகின்றனர். படித்தவர்கள் அரசியலில் இருந்தால் தான், நம் நாடு முன்னேறும். தகுதியும், திறமையும் மிக்கவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதற்காவே, இந்திய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டுள்ளது. இரண்டு நாட் களுக்கு முன், முன்னாள் துணைவேந்தர் ஒருவர் எங்கள் கட்சியில் இணைந்தார். விரைவில் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரும் இணைய இருக்கின்றனர்.

 

 

இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. அது இருப்பதாக நினைத்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.



இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என விரும்பும் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், இதை ஒப்புக்கொள்கிறார். அவர், வெளிநாடுகளில் படித்தவர் என்பதால், அங்குள்ள அரசியல் நிலவரங்களை ஆராய்ந்து, நமது நாட்டிலும் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என கூறுகிறார். அவர் கூறிய உண்மையை நான் எடுத்து சொல்வதில் எந்த தவறும் இல்லை.

 

அன்று வெள்ளைக்காரர்களிடம் போராடி சுதந்திரம் வாங்கினோம். இன்று 100 குடும்பங்கள் மூலம் நாட்டில் ஆட்சி நடக்கிறது. காஷ்மீரை எடுத்துக் கொண்டால் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா போன்றவர்கள் ஆட்சி செய்கின்றனர். தமிழகத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. அரசியலில் தூய்மை, அனைவருக்கும் வாய்ப்பு, குடும்ப ஆட்சிமுறை ஒழிப்பு, இதுதான் இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கை.

 

 

இதோடு இலவசங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் கட்சியின் முக்கிய கொள்கை. இதை சொல்வதால், நான் ஏழைகளுக்கு எதிரானவன் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. நாட்டில் என்னை விட யாரும் ஏழையாக வாழ்ந்திருக்க முடியாது. ஒருவன் 10 ரூபாய்க்கு உழைத்து சாப்பிட நினைக்கும்போது, அவனுக்கு ஒரு ரூபாய்க்கு இலவச கஞ்சி வழங்குகின்றனர். இதனால், அவனது ஒன்பது ரூபாய் வருமானம் பறிக்கப்பட்டு, அவனும் சோம்பேறியாகிவிடுகிறான். எனவே, உழைப்பது மரியாதை குறைவு என நினைக்காமல், அனைவரும் இலவசங்களை தவிர்த்து உழைத்து சம்பாதிக்க வேண்டும்.

 

அரசும் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் முறையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் மகளிர் அணி, இளைஞர் அணி, விவசாய அணி, ஆசிரியர் அணி என பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒரு கட்சிக்கு அடிப்படையானதாக உள்ள வக்கீல்கள் அணி, மற்ற அணிகளுக்கு கேடயமாக உள்ளது. நாட்டில் எந்த ரூபத்திலும் பிரச்னைகள் வரும். கட்சியில் உள்ளவர்களுக்கும் சங்கடங்கள், பிரச்னைகள் வருகின்றன. அவற்றை தீர்க்கும் பணியை வக்கீல்கள் அணி சிறப்பாக செய்யும். இவ்வாறு பச்சமுத்து பேசினார்.

இதே விழாவில் பேசிய பச்சமுத்து ,

நாட்டை, 100 குடும்பங்கள் ஆட்சி நடத்துகின்றன. காஷ்மீரை எடுத்துக் கொண்டால் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா போன்றவர்கள் ஆட்சி செய்கின்றனர். தமிழகத்தை பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. அரசியலில் தூய்மை, அனைவருக்கும் வாய்ப்பு, குடும்ப ஆட்சிமுறை ஒழிப்பு, இதுதான் இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கை, என்றும் சொல்லி விட்டு, பின்னர் பேசும் பொழுது ராகுல் காந்தியை புகழ்ந்துள்ளார்.

 

அந்த புகழ் வரிகளை மீண்டும் ஒரு முறை இங்கே கொடுக்கிறேன்
"
இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என விரும்பும் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், இதை ஒப்புக்கொள்கிறார். அவர், வெளிநாடுகளில் படித்தவர் என்பதால், அங்குள்ள அரசியல் நிலவரங்களை ஆராய்ந்து, நமது நாட்டிலும் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என கூறுகிறார். அவர் கூறிய உண்மையை நான் எடுத்து சொல்வதில் எந்த தவறும் இல்லை.
"

விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்க வைகோ வின் வாதம் - பதில் அளிக்க முடியாமல் மத்திய அரசின் உள்துறை செயலர் திணறல் .

விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்க வைகோ வின் வாதம் - பதில் அளிக்க முடியாமல் மத்திய அரசின் உள்துறை செயலர் திணறல் .

இது தொடர்பாக வந்துள்ள செய்தியின் விவரங்கள் வருமாறு :

 

ன்று, (20.10.2010) புதன்கிழமை அன்று, உதகமண்டலத்தில், தமிழகம் மாளிகையில், விடுதலைப்புலிகள் மீதான தீர்ப்பு ஆயத்தின் விசாரணை நடைபெற்றது. தீர்ப்பு ஆயத்தின் தலைவரும், தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான, மாண்புமிகு விக்ரம்ஜித் சென், விசாரணையை சரியாக 10.30 மணிக்குத் தொடங்கினார். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, நீலகிரி மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன், கழக வழக்கறிஞர்கள் குருநாதன், சூரி நந்தகோபால், பிரியகுமார், ஆசைத்தம்பி மற்றும்பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

 

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், வழக்கறிஞர் சந்திரசேகர் அவர்களும், மற்றும் நுற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இந்த விசாரணை மன்றத்தில் கூடி இருந்தனர்.

 

அரசுத்தரப்பின் இரண்டாவது சாட்சியாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறைப் பிரிவு இயக்குநர் மிஸ்ரா, சாட்சியம் அளித்தார். அவர், சாட்சியத்தை முடித்தவுடன், மாண்புமிகு நீதிபதி வைகோ அவர்களிடம், 'நீங்கள் குறுக்கு விசாரணை செய்கிறீர்களா?' என்று கேட்டார். வைகோ அதனை ஏற்றுக் கொண்டார்.

 

இப்படிப்பட்ட தீர்ப்பு ஆயங்களின் விசாரணையில், நேரடியாக சாட்சிகளிடம் கேள்வி கேட்கின்ற முறை இல்லை. கேள்வியை, நீதிபதி மூலமாகத்தான் சாட்சியிடம் கேட்க வேண்டும். அப்படி, நீதிபதி மூலமாக வைகோ கேள்விகளைக் கேட்டார்.

 

'மாண்புமிகு நீதிபதி அவர்களே, அரசுத்தரப்பின் இரண்டாவது சாட்சி இங்கே கூறுகையில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, உலகத்தில் பல நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள், இந்த அமைப்பை உருவாக்குவதில் பங்கு ஏற்று, தேர்தல் எல்லாம் நடந்து உள்ளது. விடுதலைப்புலிகளில் தீவிரப் பிரிவினரும், மிதவாதப் பிரிவினரும் என இரண்டு பிரிவுகளாக உள்ளனர். அதில் மிதவாதப் பிரிவினர் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை ஆதரிக்கின்றனர். இவையெல்லாம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு மேலும் ஒரு காரணம் ஆகிறது என்று இங்கே குறிப்பிட்டாரே, அவர் குறிப்பிட்ட அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைக்க, ஏற்பாடு செய்தவர்கள் உள்ள நாடுகளில், விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அவர் அறிவாரா?

 

உடனே நீதிபதி, 'இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்குமாறு' சாட்சியிடம் கூறினார்.


அதற்கு, சற்று நேரம் திணறிய சாட்சி மிஸ்ரா, 'அமெரிக்காவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளதா? என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை' என்று கூறினார்.

 

அடுத்து வைகோ, 'புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு உள்ள அமெரிக்காவில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, பிலடெல்பியாவில் தொடக்க விழா நடத்துவதற்கு, அமெரிக்க அரசாங்கமோ, அமெரிக்கக் காவல்துறையோ, எந்த இடையூறும் செய்யவில்லை என்பது, சாட்சிக்குத் தெரியுமா?'

 

இதற்கும் பதில் அளிக்குமாறு சாட்சியிடம் நீதிபதி கேட்டார்.

 

சாட்சி, 'அதுபற்றித் தனக்குத் தெரியாது' என்றார்.

 

உடனே மத்திய அரசு வழக்கறிஞர் எழுந்து, 'இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?' என்று கேட்டார்.

 

உடனே வைகோ எழுந்து, 'உலகம் முழுவதிலும், தொலைக்காட்சிகளிலும், ஏடுகளிலும் இது வெளிவந்து உள்ளது? வேறு என்ன ஆதாரம் வேண்டும்?' என்றுகேட்டார்.

உடனே அரசு வழக்கறிஞர் அமர்ந்து விட்டார்.

 

அடுத்து வைகோ கேட்டது, 'நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஏற்படுத்த, அமைப்பினை உருவாக்கியவர்கள் வெளியிட்ட தமிழ் ஈழம் குறித்த வரைபடத்தில், இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகள் மட்டும்தான் இடம் பெற்று இருக்கின்றன. கடந்த 16 ஆம் தேதி டெல்லியில் தீர்ப்பு ஆயத்தில், நான் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில், இணைப்புப் பகுதியாகச் சேர்த்து உள்ள புத்தகத்தில், 67 ஆம் பக்கத்தில் இந்த வரைபடத்தைக் காட்டி இருக்கிறேன். நீதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள பிரமாண வாக்குமூலத்தைத் தாங்கள் இப்போது பார்க்கலாம்' என்று கேட்டுக் கொண்டார்.

 

உடனே நீதிபதி, அந்த ஆவணத்தை வரவழைத்து, அதைச் சரிபார்த்து, அதை விசாரணைக் குறிப்பில் பதிவு செய்து கொண்டார்.

 

உடனே வைகோ, 'தமிழ் ஈழம் என்பது இந்தப் பகுதி மட்டும்தான். தமிழ்நாட்டைச் சேர்க்கவில்லை என்பது இதிலே நிரூபணம் ஆகிறது. இதுபற்றி, சாட்சிக்கு ஏதாவது தெரியுமா?' என்று கேட்டார்.

 

சாட்சி, 'தனக்குத்தெரியாது' என்றார்.

 

அதன்பின் வைகோ, '2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு, விடுதலைப்புலிகளை ஆதரித்ததாகப் போட்ட வழக்குகள், ஏதேனும் தண்டனையில் முடிந்து இருக்கிறதா? ஏதேனும் விடுதலையில் முடிந்து இருக்கிறதா? 2008 மே மாதத்துக்குப் பிறகு போடப்பட்ட வழக்குகள் ஏதேனும் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறதா?' என்று கேட்டார்.

 

சாட்சி, 'அதுபற்றிய விவரங்களை இப்போது அளிக்க முடியாது' என்றார்.

 

வழக்கின் அடுத்த விசாரணை, 28 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

 

இதுபற்றி, செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், 'இந்தத் தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி, விசாரணயை மிக நேர்மையாக நடத்துகிறார். இன்று அரசாங்க சாட்சி, வகையாக மாட்டிக் கொண்டார். என் குறுக்கு விசாரணைக்குப் பதில் சொல்ல முடியவில்லை. தடையை நீடிக்கக்கூடாது என்ற என்னுடைய வாதத்துக்கு வலுச் சேர்ப்பதாக இன்றைய எனது குறுக்கு விசாரணை அமைந்து இருக்கிறது. தொடர்ந்து நீதிக்காகப் போராடுவோம்' என்று கூறினார்.

 

அஞ்சா நெஞ்சன் அஞ்சுவது ஏன்? ஜெயலலிதா

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பேசியது:


"மதுரை என்றால் அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன், சித்திரைத் திருவிழா, சமத்துவத்தைப் போதிக்கும் கோரிப்பாளையம் பள்ளிவாசல், திருமலை நாயக்கர் மகால், அறிவை வளர்க்கும் அமெரிக்கன் கல்லூரி போன்றவைதான் நினைவுக்கு வரும். கோயில் நகருக்கு யாத்ரீகர்கள் வருகை அதிகரித்ததால் மதுரை தூங்கா நகர் என பெயர்பெற்றது. ஆனால், தற்போது இவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ரௌடிகள் ஆதிக்கம், கட்டப் பஞ்சாயத்து, கொள்ளை போன்றவைதான் நினைவுக்கு வருகின்றன.


இட்லிக் கடையிலிருந்து நகைக்கடை உரிமையாளர்கள் வரை மு.க. அழகிரிக்கு கப்பம் கட்டினால்தான் இங்கு தொழில் நடத்த முடியும். கடந்த நான்கரை ஆண்டுகளில் பலமுறை ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தை முன்னின்று கவனிப்பவர் அழகிரியின் வலதுகரமான பொட்டு சுரேஷ் என்பவர்.


கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர் என ஒரு அரசும், அழகிரியை தலைமையாகக் கொண்ட மற்றொரு அரசும் தமிழகத்தில் நடைபெறுகின்றன. தென் பகுதியில் ஸ்டாலின் வரவேண்டுமென்றால்கூட அழகிரியிடம் விசா பெற்ற பின்னரே வரவேண்டும் என்ற சூழ்நிலை.


மதுரையில் குடிநீர்ப் பிரச்னைக்காக போராடியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் லீலாவதி 1997 ஏப்ரல் மாதம் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆனால், உள்ளாட்சித் தேர்தலின்போது அவர்களில் ஒருவர் தவிர (இறந்துவிட்டதால்) மற்றவர்கள் பரோலில் வெளிவந்து வன்முறையில் ஈடுபட்டனர்.


திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் 2003-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அப்போது அவரது மனைவி பத்மாவதி அளித்த பேட்டியில் மு.க. அழகிரிதான் அவருக்கு ஒரே எதிரி எனக் குறிப்பிட்டார்.


இதையடுத்து எனது ஆட்சியில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த வழக்கில் சாட்சிகள் மிரட்டப்பட்டு, பிறழ் சாட்சியானதால் குற்றவாளிகள் விடுதலையானார்கள். இக்கொலையில் தொடர்புடையவர்கள் தற்போது துணை மேயர், தி.மு.க செயற்குழு உறுப்பினர், ஆணையூர் நகராட்சித் தலைவர், மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர், நகர்ச் செயலர், திமுக பகுதி கழகச் செயலர்கள், உறுப்பினர்கள் போன்ற முக்கியப் பதவிகளில் உள்ளனர்.


மதுரை என்ன அஞ்சா நெஞ்சன் கோட்டையா? மதுரை அவர் அப்பா வீட்டு சொத்தா? அஞ்சா நெஞ்சர் என்பது அவருக்கு யார் கொடுத்த பட்டம்? எங்களைப் பார்த்தா மிரட்டுகிறார். நான் பயந்தவள் அல்ல. என்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க எவ்வளவோ வழக்குகள் போட்டு கருணாநிதி சதித் திட்டம் தீட்டினார். இதற்கெல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. பல மிரட்டல்களுக்குப் பின்னரும் இந்த பிரமாண்டக் கூட்டத்தில் நான் பேசுகிறேன்.


இதைவைத்தே யார் அஞ்சுகிறார், யார் அஞ்சவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்வர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அஞ்சாத சிங்கங்கள் நாங்கள். மரணம் என்பது ஒருமுறைதான் வரும். அது உங்கள் முன்னிலையில் ஏற்பட்டால் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்.


முதல்வர் பிறந்த நாளுக்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஜூலை 18-ல் நடைபெற்ற விழாவில் ஹார்லிக்ஸ் வழங்கினார் மு.க. அழகிரி. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறந்தநாள் விழாவின்போது மருத்துவ முகாம், ரத்ததான முகாம், அன்னதானம் போன்றவை செய்யப்படும் என்றுதான் நான் கேள்விப்பட்டுள்ளேன்.


ஆனால், விழா நடைபெறுவதற்கு முன் ஜூலை 12-ம் தேதி 8,700 ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் காணவில்லை என்ற புகாரை போலீசார் வழக்குப் பதிவு செய்ய முன்வரவில்லை. எனவே, ஜூலை 18-ம் தேதி நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட ஹார்லிக்ஸ் திருடப்பட்டதுதான் என புகார் எழுப்பப்பட்டது. அது திருடப்பட்டது அல்ல. அதற்கான ரசீது உள்ளது என அழகிரி பதில் அளித்தார். ஆனால் அந்த பில் பாலாஜி காட்டன் கம்பெனியில் வாங்கியுள்ளது எனத் தெரியவந்துள்ளது. யாராவது ஹார்லிக்ஸ் பெட்டிகளுக்கு காட்டன் கம்பெனியில் பில் வாங்குவார்களா?


அழகிரியிடம் இங்கு யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் டெல்லியில் கேள்விக்குப் பயந்து அவர் ஓடி ஒளிகிறார். அவரது கன்னிப் பேச்சே ஒருசில துளிகளில்தான் இருந்தது. மக்களவைக் கூட்டம் நடக்கும்போது தகவல் இல்லாமல் மாலத்தீவு சென்றுவிட்டார். அங்கு ரிசார்ட் ஒன்று அமைக்கிறார் என்ற செய்தி பத்திரிகையில் வெளியாகியுள்ளது.


2009-ல் இந்தோனேஷியா சென்றார். அங்குள்ள தொழிலதிபர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க மு.க. அழகிரி அழைப்பு விடுத்ததின்பேரில் ஒரு நிறுவனம் சார்பில் 2,200 கோடி மதிப்பில் தொழில் துவங்குவதற்கான உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் தெரிவிக்கப்பட்டது.


இந்தோனேஷியாவில் வங்கிக் கடன் பெற்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் 2008-ம் ஆண்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அந்த நபரின் கம்பெனி பணத்தில்தான் தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. போக போகத் தான் இப்பிரச்னை குறித்து தெரியவரும்.


கருணாநிதி போன்ற ஒரு நீதிமானை பார்க்கமுடியாது.


2009-ல் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பது தொடர்பாக கருத்துக் கணிப்பு வெளியிட்ட பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு, குண்டு வீசி எரிக்கப்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரக் காட்சிகள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு வந்த கலாநிதிமாறன், இச்செயலுக்கு அழகிரிதான் காரணம். நீதி கிடைக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.


மே 10-ம் தேதி சட்டபேரவையில், இதுதொடர்பான சர்வே வெளியிடப்போவதாக தகவல் தெரிந்ததும், அதை வெளியிட வேண்டாம் என நான் தொலைபேசியில் தெரிவித்தேன் என கருணாநிதியும் பேசினார்.


சிபிஐ -க்கு வழக்கு மாற்றப்பட்டு அட்டாக் பாண்டி என்பவர் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 86 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன. ஆனால், கருணாநிதி குடும்பத்தில் சண்டையிட்டோர் சமாதானம் செய்துகொண்டதையடுத்து இந்த வழக்கில் கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாக மாறினர். இதனால், வழக்கை சி.பி.ஐ.யால் நிரூபிக்க முடியாததால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


இச்சம்பவத்தில் ஊழியர்கள் 3 பேரும் தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்களா?


தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்? அவரை கொலை செய்தவர்கள் யார்? அவர் தன்னைத்தானே கத்தியால் குத்தித் தற்கொலை செய்துகொண்டாரா? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை.


தா. கிருஷ்ணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றால் அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார்?" என்று ஜெயலலிதா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

காங்கிரசுடன் கள்ள கூட்டு கொண்டு காணாமல் போய்விட்ட விஜயகாந்தும் தேமுதிகவின் அரசியலும் .

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து ஆறு வருடங்கள் ஆகபோகிறது ., இதுவரை அதிமுக மற்றும் திமுக எதிர்ப்பு அரசியலை நன்றாக செய்தார்.
நான்கு வருடத்திற்கு முன்னர் இவரது அரசியலை புதியவர்கள் எழுச்சியாக நோக்கினார்கள்.

Vijaykanth



அதிமுகவை திட்டினாலும் தம்மை "கருப்பு எம்ஜியார்" என்று அழைக்க விட்டு , தமக்கும் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கும் முன்னாள் அமைச்சர்களிர்க்கும் இப்போதைய பல கல்லூரி முதல்வர்களிர்க்கும் உள்ள தொடர்பை உறுதி படுத்தினார்.

 



"எம்ஜியாரை"  அடிக்கடி மேடைகளில்  சொன்னதாலும்  மேலும் கருணாநிதியை கடுமையாக தாக்கி பேசியதாலும்  அதிமுகவில் இருந்தும் பலர் விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவு அளித்தனர்.

 



ஆனால் இவரது சுயரூபம் , கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுவிட்டது, இவர் காங்கிரஸ் கட்சியின் கைப்பாவை எனபது இப்போதைய அரசியலை நோக்கும் அனைவரும் நன்றாக உணர்வார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அனுசரணையாக முடிவு எடுக்கும் கட்சியாக தேமுதிக  இப்போது உள்ளது.


காங்கிரஸ் கட்சி திருச்சியில் மாநாடு  போடலாம், தனி ஆட்சி அமைப்போம் என்று சொல்லலாம் , ஆனால் அவர்களிற்கு நன்றாக தெரியும் தமிழ்நாட்டில் தமது கட்சி தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட்  தொகை கிடைக்காது என்று அவர்களிற்கு நன்றாக தெரியும்.



இன்னும் ஈழத்தில் அவர்கள் செய்த பாவம் , கொடும் குற்றத்தை தமிழர்கள் மறக்கவில்லை என்பதை நன்றாக அறிவார்கள்.

 


இதனால் தேமுதிகவை ஒரு கருவியாக வைத்து கொண்டு காங்கிரஸ் அரசியலில் காயை நகர்த்துவது அனைவரும் அறிந்த ஒன்று.

 



இந்த காங்கிரஸ் கட்சியின் கள்ள  தொடர்பினாலேயே தேமுதிக கட்சியும் தமிழர் எதிரி கட்சியாக இந்த தேர்தலில் பார்க்கபடபோவதும், தேர்தலில் நான்கு சதவீதமோ அல்லது மூன்று சதவீத வாக்குகளை மட்டும் பெரும் ஒரு கட்சியாக மாரபோவதும் உண்மை.

Vijaykanth

 


திமுக மற்றும் அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் தேமுதிக ஊழலின்  ஊற்றுக்கண்ணாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை , தமிழர்களின் எதிரியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஏன்  ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை என்பதை தமிழ்நாட்டின் வாக்காளர்கள் உணர ஆரம்பித்து விட்டனர்.


வாக்களர்களிற்கு பணத்தை பட்டுவாடா செய்தால் மட்டுமே ஒரு சில தொகுதிகளை வெல்ல முடியும் என்ற நிலையில்தாம் இப்போதைய திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி உள்ளது.



அந்த பட்டுவாடாவை நம்பி, அதிமுகவும் காங்கிரஸ் கட்சியை விரும்பி தேர்தல் கூட்டணி கண்டால் , அதிமுக வும் மண்ணை கவ்வும் எனபது உறுதி.

 


ஏனென்றால் காங்கிரஸ் கட்சியை தமிழர்கள் , அறவே ஒதுக்கி இரண்டு வருடங்கள் ஆகபோகிறது. ஈழத்தில் செத்த  ஒரு லக்ஷம்  தமிழனின் ரத்த வாடை தமிழ் மொழியில் கலந்து உள்ளது.  தமிழ் மொழி பேசும் ஒவ்வொருவனும் , தமிழ் நாட்டில் வாழும் ஒவ்வொருவனும் காங்கிரஸ் நாய்களை தமிழ் நாட்டில் இருந்து விரட்டி அடிப்பான்.  விரட்டி அடிக்க முடிவெடுத்துவிட்டான். அதன் வெளிபாடே சென்ற நாடாளுமன்ற தேர்தலில் , தோற்ற அதன் அனைத்து தலைகளும்.


அந்த முடிவு , அதோடு கூட்டணி சேரும் யாருக்கும்தான். அது திமுக அல்லது அதிமுக அல்லது தேமுதிக . காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரும் எவனும் தமிழனுக்கு துரோகியே.

ராஜபக்ச மோசமானவர் இல்லை! மிருகங்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கவே முள்வேலி முகாம் அமைக்கப்பட்டது!: அப்துல் காதர் எம்.பி.

ராஜபக்ச மோசமானவர் இல்லை! மிருகங்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கவே
முள்வேலி முகாம் அமைக்கப்பட்டது!: அப்துல் காதர் எம்.பி.


தமிழக மக்கள் நினைப்பது போல இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மோசமானவர்
இல்லை. அவர் இலங்கைத் தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
இவ்வாறு இலங்கையின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான
ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் கண்டி தொகுதி பாராளுமன்ற
எம்.பி.யான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர்,

நான் இலங்கையின், ஐக்கிய தேசிய கட்சியில் 50 வருடம் இருந்திருக்கிறேன்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் ராஜபக்சேவின் சுதந்திர
கட்சியில் இணைந்தேன்.

இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று
வருகிறது. இன்னும் 1 வருடத்திற்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின்
பகுதிகள் சரிசெய்யப்பட்டு தமிழர்கள் அந்த பகுதியில்
குடியமர்த்தப்படுவார்கள்.

இதற்காக இந்திய அரசு பெருமளவில் உதவி செய்து வருகிறது. குறிப்பாக
தமிழர்களை மீள்குடியமர்த்துவதில் தமிழக அரசு பெரும் உதவிகளை செய்து
வருகிறது. இந்தியாவில் இருந்து எந்த மந்திரியாக இருந்தாலும், எம்.பி.யாக
இருந்தாலும் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமையை பார்வையிட வரலாம்.
அவர்களை தகுந்த பாதுகாப்புடன் நான் இலவசமாக அழைத்துச் செல்கிறேன்.

தமிழகத்தில் உள்ள மக்கள் முள்வேலி முகாம் என்றால் கொடுமையான இடம் என்று
நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், முகாம் இருக்கும் இடத்தில்
காட்டு விலங்குகளினால் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக
அமைக்கப்பட்டது தான் இந்த முள்வேலி.


இலங்கையை சேர்ந்த அனேகமான சிங்களவர்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டால் அதை
சரிசெய்வதற்கு தமிழ்நாட்டிற்கு குறிப்பாக சென்னைக்கு தான் வருகிறார்கள்.
அவர்கள் தமிழர்களை உறவினர்களாக தான் நினைக்கிறார்கள்.

தமிழக மக்கள் நினைப்பது போல இலங்கை அதிபர் ராஜபக்ச மோசமானவர் இல்லை. அவர்
இலங்கை தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார் என்று கூறினார்.

கள்ள பாதிரியார் ராஜரத்தினம் போன்ற காமுகர்களை கழுவில் ஏற்ற வேண்டும் .

திருச்சியில் பழைமை வாய்ந்த ஒரு கல்லூரியில் வேலை பார்த்து வந்த ஒரு பாதிரியார் என்று வேடம்  போட்டுகொண்டு ஊரை ஏமாற்றி வந்த , திருட்டு காமுகன் ராஜரத்தினம் என்பவன் , அங்கே வேலை பார்க்கும் கன்னியாஸ்திரி ஒருவரை பல நாட்கள் மிரட்டி காம லீலை புரிந்துள்ளான்.


இவன் போன்றவர்களை கழுவில் ஏற்றுவதற்கு  சமான தண்டனையை கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள பொது மக்கள் கொதித்து போய் உள்ளார்கள்.


இது தொடர்பாக இன்று வந்துள்ள செய்தியின் சாராம்சம் இங்கே :


கன்னியாஸ்திரியைக் கற்பழித்து, கருவைக் கலைத்து, வீடியோ படங்களைக் காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வரும், பாதிரியாருமான ராஜரத்தினம் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிளாரன்ஸ் மேரி. 31 வயதான மேரி தன்னை ராஜரத்தினம், மிரட்டிக் கற்பழித்து, அதை செல்போனில் படம் பிடித்து வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பங்கப்படுத்தி வந்ததாகவும், கர்ப்பம் தரித்தபோது அதைக் கலைத்து விட்டதாகவும், தன்னை சீரழித்த அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராஜரத்தினம் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். நேற்று திருச்சி மருத்துவமனையில் மேரிக்கு மருத்துவப் பரிசோதனை  நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ராஜரத்தினம், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி வி.பெரியகருப்பையா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.எம்.அன்புநிதி, கற்பழிப்பு புகார் கூறி உள்ள பிளாரன்ஸ்மேரியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் மனுதாரருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதாடிநார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.பெரியகருப்பையா, பிளாரன்ஸ் மேரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

முதல்வர் பதவியிலிருந்து சஸ்பெண்ட்:

இந்த நிலையில், கற்பழிப்புப் புகாரில் சிக்கிய ராஜரத்தினம் முதல்வர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராஜரத்தினம் கற்பழிப்புப் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து தமிழ்நாடு  ஜேசுயிட் கல்லூரிளின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் குழுவின் தலைவரான பாதிரியார் தேவதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,

முதல்வர் பதவியிலிருந்து பாதிரியார் ராஜரத்தினம் விலக்கி வைக்கப்படுகிறார். அவரே கடந்த ஒருமாதமாக தன்னை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரி வந்தார். இருப்பினும் அவர் கல்லூரியில் பேராசிரியராக தொடர்ந்து செயல்படுவார் என்றார். தற்காலிக முதல்வராக பாதிரியார் செபாஸ்டியனை நியமித்துள்ளனர்.

ராஜரத்தினம் மீது கற்பழிப்பு, கிரிமினல் செயலில் ஈடுபட்டு மிரட்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேரிக்கு செய்யப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் ராஜரத்தினத்தை கைது செய்ய போலீஸார் தீவிரமாக இறங்குவார்கள் எனத் தெரிகிறது.

ராஜரத்தினத்திற்கு பரிசோதனை கோரி போராட்டம்

இதற்கிடையே பாதிரியார் ராஜரத்தினத்தையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர் தப்ப அனுமதிக்கக் கூடாது, அவரை காப்பாற்ற யாரும் முயற்சிக்கக் கூடாது என்று கோரி மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று செயின்ட் ஜோசப் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜரத்தினத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

165 ஆண்டு பழமையான கல்லூரியான செயின்ட் ஜோசப் கல்லூரிக்குப் பெரும் களங்கமாக அமைந்துள்ளது ராஜரத்தினத்தின் செயல் என்று திருச்சி மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

எந்திரன் படம் படு தோல்வி ? p

இந்த எதிர் விமர்சனம் அதிர்வு தளத்தில்  வந்துள்ளது. அதை இங்கே மீள் பதிகிறோம்.



சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எந்திரன் படம் தயாரிக்கப்பட்டதாக அரசல் புரசலாகக் கதைகள் அடிபடும் நேரத்தில், இப் படம் தோல்வியடைந்தால் தான் இனி நடிக்கபோவது இல்லை என ரஜனி சிலரிடம் கூறியுள்ளாராம். ஆனால் லண்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் எந்திரன் படம் காண்பிக்கப்படும் திரையரங்குகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இப் படத்தை பார்வையிடுகின்றனர். அது ஒரு புறம் இருக்க நாங்கள் கதைக்குச் செல்வோம்!



6 ல் இருந்து 60வரை, படையப்பா, சிவாஜி, பாட்ஷா, போன்ற பெருவெற்றி தந்த ரஜனியா இப் படத்தையும் நடித்துள்ளார் என்று எண்ணத்தோன்றுகிறது.

 

3000ம் ஆண்டு வந்தால் கூட தயாரிக்க முடியாத ஒரு இயந்திர மனிதனைப் பற்றிய கதை இது. ஹாலிவுட் திரைப்படங்களான ஐ- ராபாட், மற்றும் டேர்மினேட்டர் ஆகிய 2 ஆங்கிலப் படங்களை ஒன்றாகக் கலந்து அதில் காதலைப் புகுத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர் அவர்கள். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்பது பிரம்மாண்டத்தில் புரிகிறது. மொத்தத்தில் கலாநிதி மாறனை மொட்டை அடித்துள்ளார் ஷங்கர். கலைஞர் குடும்பத்தாரிடம் இருந்து காசடித்த முதல் ஆள் ஷங்கராகத்தான் இருக்கவேண்டும்.

 

டாக்டராக வசீகரன் என்னும் பெயரில் வரும் ரஜனி, சுமார் 10 ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு தன்னைப்போல ஒரு ரோபோவை (இயந்திர மனிதனை) உருவாக்குகிறார். அதற்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் வருகிறது. தன்னை உருவாக்கிய எஜமான் ரஜனியின் காதலி என்று கூடப்பாரமல் அவரை அது தூக்கிச் செல்கிறது. பின்னர் ஐஸ்வர்யாவை ரஜனி மீட்டு அந்த ரோபோவை அழிக்கிறார் இது தான் கதை. ஐரோப்பிய நாடுகளில் மேற்கத்தைய கலாச்சாரத்தோடு ஒத்துவாழும் தமிழர்களுக்கே இப் படம் பாதியோடு அலுப்புத்தட்ட ஆரம்பமாகியது. திரையரங்கில் இடைவேளையோடு ஒரு முதியவர் எழுந்து வீட்டிற்கு சென்றுவிட்டார்.

 

இந்தியாவைப் பொறுத்தவரை நகரங்களில் இப் படம் ஓடினாலும், கிராமப்புறங்களில் அவ்வளவான வரவேற்ப்பை இப் படம் பெறப்போவது இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது. அம்மா சென்டிமென்ட் அல்லது தங்கை அண்ணன் சென்டிமென்ட் வைத்து எடுத்தாலே நல்லா படம் ஓடாத இந்த காலகட்டத்தில் ஷங்கர் ஏன் இப்படி ஒரு படத்தில் இறங்கினார் என்றுகேட்டால், அது அவர் நீண்ட நாள் ஆசை என்கிறார்கள். அதற்கு ரஜனி பலிக்கடா. ஐஸ்வர்யா ராய் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனவே நடித்துள்ளார். குறிப்பாக ரஜனி படத்தில் பல நகைச்சுவைகளையும், திரில்லிங்கையும், நல்ல சண்டைக்காட்சிகளையும் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் ஆனால் இதில் ஒன்றுமே இப் படத்தில் நேர்த்தியாக இல்லை.



ரஜனி தான் உருவாக்கிய ரோபோவை கண்டபடி கன்னா பின்னா என்று திட்டுகிறார். அதிகம் ஆங்கில வார்த்தைகள் உபயோகம், நடக்கவே முடியாத சம்பவங்கள் பலவற்றை சர்வசாதாரணமாக காட்டியுள்ளமை, என பல பிழைகள் இப்படத்தில் உள்ளன. பாடல் காட்சிகள் மிக அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளதோடு, உடைகளும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ன தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் கடவுள் என்றொருவர் இருக்கிறார் என்று ரோபோ வாயால் சொல்ல வைத்திருக்கிறார் ரஜினி.


பல வருடங்களுக்குப் பிறகு ரஜனி வில்லனாகவும் நடித்துள்ளார் இப் படத்தில்.


மொத்தத்தில் திரையரங்கு சென்று அதி கூடிய டிக்கட் விலைகொடுத்து பார்க்கும் அளவிற்கு எந்திரன் இல்லை என்றே சொல்லலாம். கொஞ்ச நாட்கள் பொறுத்தால் இதன் ஒரிஜினல் சீ.டி வெளியாகும் அதனை சாவகாசமாக வீட்டில் பார்வையிடலாமே எனத் தோன்றுகிறது.

சரணடைய வந்த விடுதலை புலிகளை ,ராணுவமே சுட்டு கொன்றது - பொன்சேகா சொன்னது உண்மை .

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான நடேசன், ரமேஷ் மற்றும் புலித்தேவன் ஆகிய மூவரும் வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்தபோது படையினரே அவர்களை சுட்டுக்கொன்றதாக பிரதிவாதியான சரத் பொன்சேகா என்னிடம் கூறினார் என்று சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெற்ரிக்கா ஜான்ஸ் தெரிவித்தார்.

 

செய்தியை மறுக்கவோ அல்லது நீக்கி கொள்ளுமாறோ பிரதிவாதி கோரவில்லை. திருத்தத்திற்கே இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அச்செய்தியை கௌரவமாக மறுக்குமாறு எம்.பி.க்களான அனுரகுமாரவும் மங்களவும் என்னிடம் கோரினர். சரத்பொன்சேகா மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயரை குறிப்பிடவில்லை என்று மறுக்குமாறு கோரினர். அது மோசடியான திருத்தம் என்று கூறினேன். அப்போது சரத்பொன்சேகா கூட்டணி உறுப்பினர்களின் அழுத்தத்திற்கு முகம்கொடுத்தார் என்றும் அவர் கூறினார்.

 

பிரதி வாதியான ஜனாதிபதி வேட்பாளருக்கு எமது நிர்வாகம் ஆதரவளிக்க தீர்மானித்தது. இது அவரின் வெற்றிக்கு பெரும் பங்கமாக இருக்கும் என்பதனாலும் தேர்தல் வெற்றியையும் ஜனாதிபதியாவதையும் தடுத்துவிடும் என்பதற்காகவுமே திருத்தத்தை பிரசுரிப்பதற்கு இணக்கம் தெரிவித்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.

 

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் நேற்று இரண்டாவது நாளாக சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.

 

மேல் நீதிமன்ற பிரதம நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என். பி.பி வராவெல, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கின் முதலாவது சாட்சியை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார நெறிப்படுத்தினார்.

 

இதன் போது சாட்சியமளித்த பெற்ரிக்கா ஜான்ஸ் தொடர்ந்து அளிக்கப்பட்ட சாட்சியங்களில், முக்கிய பகுதிகள்:

கே: கேள்விகளை கேட்கும் போது எப்போதாவது நீதிமன்றத்திற்கு வருவீர்கள் என நினைத்தீர்களா?

ப: இல்லை

கே: இறுதி கேள்விக்கு பிரதிவாதி அளித்த பதில் என்ன?

ப: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானிலிருந்து நாட்டிற்கு திரும்புவது தொடர்பில் கூறினார். மஹிந்த என்னை அழைக்கவில்லை. சவேந்திரவையே அழைத்துள்ளார். அதுவும் விமானத்திற்குள் அழைத்துள்ளார். அப்போது யுத்தம் நிறைவடைந்து விட்டதாக சவேந்திர சில்வா கூறி விட்டார். எனினும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவருவதற்கு சில மணிநேரம் இன்னும் இருந்தது.

 

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறிய தகவலின் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமானத்திலிருந்து இறங்கி மண்ணை முத்தமிட்டார். அத்தருணத்திலும் பிரபாகரன் மரணித்துவிட்டதாகவே ஜனாதிபதி நினைத்திருந்தார். அதே போல கோத்தபாயவும் சவேந்திரவுடன் கதைத்துள்ளார். அதேபோல வெள்ளைக்கொடியுடன் சரணடைய வருகின்ற புலிகளுக்கு இடமளிக்கவேண்டாம். அவர்களை கொலைசெய்யுமாறு யுத்தகளத்தில் நின்ற சவேந்திரவிடம் கோத்தபாய தெரிவித்துள்ளார். மூன்று புலிகளும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியிலேயே கொல்லப்பட்டுள்ளனர். அங்கு 58 ஆவது படையணி இருந்துள்ளது.

 

கே: பிரதிவாதி அவ்வாறு கூறியதாலா நீங்கள் எழுதினீர்கள்?

ப: ஆம். புலிகளின் முக்கிய உறுப்பினர்களான நடேசன், ரமேஸ் மற்றும் புலித்தேவன் ஆகிய மூவரும் வெள்ளைக்கொடியுடன் வரும்போது இராணுவத்தினரே அவர்களை சுட்டுக்கொன்று விட்டதாக  பிரதிவாதி என்னிடம் கூறினார்.

 

கே: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி கூறிய விடயங்கள் எதனையாவது மறுத்தாரா?

ப: ஆம், 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 8,12 ஆம் திகதிகளில் கூறியதில் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக் கொடியுடன் குடும்பத்தாருடன் வரவில்லை. அவர்கள் பலியாகி விட்டனர் என்றார். சட்டவிரோதமான பணிப்பை கோத்தபாய ராஜபக்ஷவே விட்டார் என்றும் வெள்ளைத் துணியை ஏந்தியேனும் வரவில்லை. யுத்தத்திலேயே பலியானர்கள் என்றார்.

 

கே: உங்கள் சாட்சியின் பிரகாரம் இராணுவத்தினரே சுட்டுள்ளனர் என்று 8, 12 ஆம் திகதிகளில் உங்களிடம் தெரிவித்துள்ளார்.

ப: துப்பாக்கியால் சுடவில்லை. யுத்தத்திலேயே மரணித்துள்ளனர் என திருத்துவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

 

கே: திருத்தத்தை பிரசுரிப்பதற்கு ஏன் இணக்கம் தெவித்தீர்கள்?

ப: புலிகளின் தலைவர்கள் பலியெடுக்கப்பட்ட செய்தியை மறுக்கவில்லை, சரணடைய வரும்போது பலியெடுக்கப்படவில்லை என்றும் யுத்தத்திலேயே கொல்லப்பட்டனர் என்றும் பிரசுரிப்பதற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என்பதால் இது அவரின் வெற்றிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் தேர்தலின் வெற்றியையும் ஜனாதிபதியாவதை தடுத்துவிடும் என்பதற்காகவுமே இணக்கத்தை பிரசுப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் பத்திகையின் நிர்வாகம் அவருக்கு ஆதரவளிப்பதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்தது என்பதனாலாகும் என்றார்.

 

முதலாவது சாட்சி இரண்டாவது நாளாகவும் சாட்சியமளித்ததை அடுத்து வழக்கு விசாரணையை நீதிமன்றம் 11 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.

சிறையில் தளபதி . மன்னனும் சிறைக்கு வருவானா?

நக்கீரனில் வெளி வந்துள்ளது  இந்த கட்டுரை .

 

யுத்த நெறிகளை புறம் தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தற்போது அலுமினிய தட்டுடன் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். உடலும் மனதும் களைப்படைந்து போய், கடந்த கால சம்பவங்களை நினைத்து விம்மிவிம்மி அழுது கொண்டிருக்கிறார்.

 

இலங்கையின் ராணுவத் தளபதி யாக இருந்த சரத் பொன்சேகா, போரின் வெற்றி யாருக்குச் சொந்தம் என்கிற பஞ்சாயத்தில் ராஜபக்சே சகோதரர்களிடம் மல்லு கட்டினார். இந்த மல்லுக்கட்டில் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். இதனால் ராஜபக் சேவும் பொன்சேகாவும் எதிரிகளானார் கள்.

 

போருக்குப் பின்பு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து களமிறங்கிய பொன் சேகா, தேர்தலில் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்று அதிபர் பொறுப்பை ஏற்றதும் முதல் வேலையாக பொன்சேகாவை கைது செய்தார் ராஜ்பக்சே. ராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் பொன்சேகா ஊழல் செய்தார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப் பட்டது.

 

இந்த குற்றச்சாட்டின்படி ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார் பொன் சேகா. இந்த வழக்கை சுமார் ஒரு வருட மாக விசாரித்து வந்த ராணுவத்தின் இரண்டாம் நிலை நீதிமன்றம், பொன்சேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு 3 வருட கடும் சிறை தண்டனை விதிக்கப் படுகிறதுஎன்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

 

ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் அதனை அதிபருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி ராஜபக்சேவின் பார்வைக்கு தீர்ப்பினை அனுப்பி வைத்தது கோர்ட். அப்போது அமெரிக்காவில் ராஜபக்சே இருந்த தால் இந்த தீர்ப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமெரிக்காவிலிருந்து கடந்த 30-ந்தேதி இலங்கை திரும்பியதும், பொன்சேகாவிற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஃபைலை அன்று இரவு ஆராய்ந்த ராஜபக்சே, ராணுவ கோர்ட் தந்துள்ள 3 வருட சிறைத் தண்டனையை இரண் டரை வருடமாக (30 மாதங்கள்) குறைத்து ஒப்புதல் அளித்தார்.

 

பொன்சேகாவிற்கு கோர்ட் தந்த சிறை தண்டனையை ராஜபக்சே ஏற்று ஒப்புதல் அளித்ததால் ராணுவ சிறை கொட்டடியிலிருந்து கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைக்கு மாற்றப் பட்டார் பொன்சேகா என்கிறது அதிபர் மாளிகை.

 

வெலிக்கடை சிறைக்கு பொன் சேகா கொண்டு செல்லப்பட்டதும் வெள்ளை நிறத்தில் அவர் அணிந் திருந்த தேசிய ஆடையை அகற்றி விட்டு கைதிகளுக்கான ஆடை கொடுக்கப்பட்டது. அந்த ஆடை மிகவும் லூசாக- தொளதொள வென்று இருந்ததால் அதனை அணிய பொன்சேகா மறுக்க, இதனைத்தான் நீ போட்டுக்கொள்ள வேண்டும். மறுத்தால் டெய்லர் வந்து அளவு எடுத்து சரியான ஆடையை தைத்து கொண்டு வரும்வரை அரை நிர்வாண மாகத்தான் இருக்க வேண்டும். தேசிய ஆடையுடன் சிறையில் இருக்க அனுமதிக்க முடியாது. இது அதிபரின் உத்தரவு என்று ஒருமையில் அதட்டி னார் ஜெயில் வார்டன். தன் நிலையை நினைத்து நொந்த வாறு அந்த ஆடையை வாங்கி கொண்டார் பொன்சேகா. அவருக்கு 0/22032 எண் கொண்ட கைதி எண்ணை ஆடையில் குத்தி விட்டுப் போனார் ஜெயில் வார்டன்.

 

 

சிறையில் எஸ் பிரிவில் அடைக்கப் பட்டுள்ளார் பொன்சேகா. இது ஒரு தனிமைச் சிறை. ஜெயவர்த்தனா அதிபராக இருந்தபோது, தீவிரவாதி களுடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட விஜயதுங்கே அடைக்கப் பட்ட அதே அறைதான் பொன்சேகா விற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறையில் அடைக்கப்பட்ட பொன் சேகா, இரவு தூக்கம் இன்றி தவித்தார். மின் விசிறிகள் எதுவும் அந்த அறையில் இல்லை. நூற்றுக்கணக்கான எறும்பு கள் அந்த அறையில் குடியிருந்தன. காற்று வசதி இல்லாமலும் எறும்புகளின் கடியிலும் இரவு முழுக்க அவஸ்தை பட்டார். விடியற்காலை 5 மணிக்கு எல்லா கைதிகளையும் எழுப்புவது போல பொன்சேகாவையும் எழுப்ப வந்தார் சிறை பணியாளர். ஆனால் அவர் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டி ருந்ததை பார்த்து எழுந்துட்டீங்களா? என்று மட்டும் சொல்லிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போனார்.

 

அந்த அறையில் இருந்த கழி வறையை பயன்படுத்த அவர் நினைத்த போது அதில் தண்ணீர் வரவில்லை. அப்போது அங்கு வந்த வார்டனிடம் இதனை அவர் சொன்னபோது, ஒரு அலுமினிய ஜக்கை கொடுத்து அதோ அங்கிருக்கிற தொட்டியில் தண்ணீ இருக்கு. அதிலிருந்து தண்ணீயை எடுத்து பொது கழிவறையை யூஸ் பண்ணிக்கோங்க என்று வார்டன் சொல்ல, அதே போல ஜக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போனார் பொன்சேகா. பிறகு மற்ற கைதிகளைப் போலவே கியூவில் நின்று குளித்தார். குளித்து விட்டு வந்த பொன்சேகாவின் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு டம்ளரும் கொடுக்கப்பட்டது. அந்த அலுமினிய தட்டை ஏந்தியவாறு கியூவில் நின்று சோறு வாங்கி சாப்பிட்டார். 10 மணிக்கு வந்த டெய்லர் அவருக்கு சரியான ஆடை தைக்க அளவு எடுத்துக் கொண்டு போனார்.

 

முதல் நாளில் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை. காலை போலவே மதியமும் இரவும் கியூவில் நின்று சோறு வாங்கி சாப்பிட்டார். மாலை 6 மணிக்கெல்லாம் அறைக்குள் போகச் சொல்லி அவரை பூட்டினர். பகலில் மற்ற கைதிகள் யாரிடமும் பொன்சேகாவை பேச அனுமதிக்க வில்லை சிறை நிர்வாகம். முதல் நாளை போலவே இரண் டாவது இரவிலும் அவஸ்தைப்பட்டார் பொன்சேகா. சிறையில் சொகுசாக பொன்சேகா இருக்கக்கூடாது. அதனால் அச்சகத்தில் பணிபுரியும் வேலையைக் கொடுக்கலாமா அல்லது தோட்டத்தை பராமரிக்கும் வேலையை கொடுக்கலாமா என்று 4 ஆம் தேதி வரை சிறை நிர்வாகம் ஆலோசித்துக் கொண்டிருந்தது.

 

வெலிக்கடை சிறைக்குள் வந்ததிலி ருந்து யாரிடமும் பேசுவதற்கு அவர் முயற்சிக்கவில்லை. நிறைய நேரம் அழுது கொண்டே இருந்தார். ஒருமுறை தனது அறையின் கம்பிகளை பிடித்துக் கொண்டு கதறினார் பொன்சேகா. இவரை சிறைக்குள் கொண்டுவருவ தற்கு முதல் நாள் வரை அந்த அறையில் இரண்டு மின்விசிறிகள் இருந்தன.

 

திடீரென்று அதனை அகற்றி விட்டனர். ஏன் என்று வார்டனிடம் கைதிகள் சிலர் கேட்க, இந்த அறையில் தான் நாளை இரவு பொன்சேகா அடைக்கப்படவிருக்கிறார். மின் விசிறிகளை அகற்ற சொல்லி அர சாங்கம் உத்தரவிட்டிருக்கிறதுன்னு சொன்னார் வார்டன் என்கின்றன சிறையிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

 

சிறையில் அடைக்கப்பட்ட பொன் சேகாவை அவரது மனைவி அனோமா சென்று சந்தித்தார். அவரிடம் தான் அணிந்திருந்த தேசிய ஆடையையும் இதுநாள்வரை பயன்படுத்திக் கொண் டிருந்த கருப்பு பேக்கையும் கொடுத்தார் பொன்சேகா. கணவனின் நிலையை கண்டு கதறிய அனோமாவிடம் தனது அறையை பற்றியும் தூக்கமில்லா இரவுகளையும் தெரிவித்திருக்கிறார் நொந்து போய். பொன்சேகாவை சந்தித்து விட்டு வெளியே வந்த அனோமா,ஒரு போர் வீரனாக நின்று இந்த நாட்டை மீட்டுக் கொடுத்த என் கணவருக்கு கடைசி யில் மிஞ்சியது ஒரு அலுமினிய தட்டும் ஒரு டம்ளரும்தான். அந்த நிலையை பார்க்க முடியவில்லை. காற்று வசதி யில்லாமலும் எறும்புக் கடியிலும் கொடு மையை அனுபவிக்கிறார் என் கணவர். அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறை சுகாதாரமின்றி அசுத்தமாக இருக்கிறது. இதற்கெல்லாம் இந்த அரசாங்கம் விரைவில் பதில் சொல் லியே ஆக வேண்டும் என்றார்.

 

பொன்சேகாவை ஆதரிக்கும் சிங்கள கட்சியான ஜே.வி.பி.யின் நாடா ளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்து நெத்தி,பொன்சேகாவை பார்த்து அச்சம் கொண்டுள்ளது இந்த அரசு. அதனால்தான் கோர்ட் தீர்ப்பில் அவசரம் அவசரமாக ஒரு முடிவெடுத்து அவரை வெலிக்கடை சிறையில் அடைத்திருக்கிறார் அதிபர் என்கிறார். ஆனால் மற்றொரு சிங்கள கட்சி யான ஜாதிஹெல உறுமயவின் செய்தி தொடர்பாளர் நிசாந்தஸ்ரீவர்ண சிங்கே,இந்த தண்டனை பொன் சேகாவிற்கு சரியான, நியாயமான தண்டைனைதான். இவர் ராணுவ தளபதியாக இருந்த போது ராணுவ அதிகாரிகள் பலருக்கும் இதே போல தணடனை கொடுத்திருக்கிறார். அதே சட்டத்தில்தான் இவருக்கும் தண் டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

 

இதற்கிடையே,குற்றங்களை ஒப்புக்கொண்டு பொன்சேகா மன்னிப்பு கேட்கட்டும். அவருக்கு பொது மன் னிப்பு கொடுக்க தயாராக இருக்கிறார் அதிபர் ராஜபக்சே என்கிறார் பொன்சேகாவின் தண்டனை குறித்து கருத்து தெரிவிக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் அனோமா பொன் சேகாவோ, என் கணவர் குற்றம் செய்யவில்லை. குற்றம் செய்யாத அவர் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? மன்னிப்பு கேட்க மாட்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத் ததற்காக இந்த அரசாங்கம் ஒரு நாள் வருந்தப் போகிறது என்கிறார் ஆவேச மாக.

 

இந்நிலையில், பொன்சேகாவின் இன்றைய நிலை அறிந்து மகிழ்ச்சியை தெரிவிக்கும் ஈழத்தமிழர்கள், சர்வதேச நெறிகளுக்கு எதிராகவும் மனித நேயமின்றியும் கொடூரமான யுத்தம் நடத்தி பல லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்ததில் முதல் குற்றவாளி ராஜபக்சே. இரண்டாவது குற்றவாளி பொன்சேகா. இரண்டாவது குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தி ருக்கிறது. அதேபோல முதல் குற்றவாளிக்கும் தண்டனை கிடைக்கும். அதிலிருந்து ராஜபக்சே தப்பிக்க முடியாது. கொன்ற வனுக்கு தண்டனை என்றால் கொல்ல ஏவியவனையும் (ராஜ பக்சே) நிச்சயம் காலம் தண்டிக்கும் என்கிறார்கள்.

 

இந்தியா மற்றும் சீனாவின் உதவி இல்லாமல் இலங்கை ஒரு அடி நகர்ந்திருக்க முடியாது..

மேற்குலகம் விடுதலைப்புலிகளை காப்பாற்ற முயன்றபோதும், இந்தியாவும், சீனாவும் வழங்கிய உதவிகளால் தான் சிறீலங்கா விடுதலைப்புலிகளை முறியடித்துள்ளதாக த ரைம்ஸ் சஞ்சிகை தனது பத்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:போரில் மட்டுமல்லாது, போரின் பின்னரும் சீனாவும், இந்தியாவும் இணைந்து சிறீலங்காவை காப்பாற்றியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சீனாவும் – இந்தியாவும் இணைந்து முறியடித்திருந்ன.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் கூட சீனா, ரஸ்யாவுடன் இணைந்து சிறீலங்காவுக்கு எதிரன நடவடிக்கைகளை முறியடித்திருந்தது. மேலும் சிறீலங்காவுக்கான நிதி உதவிகளை வழங்குவதிலும் இந்தியாவும், சீனாவும் இணைந்தே பணியாற்றி வருகின்றன.

 

போரின் பின்னர் இந்தியா 800 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளது. 50,000 வீடுகளையும் கட்டிக்கொடுக்க அது முன்வந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின் படி 160,000 வீடுகள் தேவை. அதில் மூன்றில் ஒரு பகுதியை கட்டிக்கொடுக்க இந்தியா முன்வந்துள்ளது.

 

சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள இந்திய நிறுவனங்கள் போட்டியிட்டுவருவதாக இந்தியாவின் ஆடம்பர விடுதிகளில் ஒன்றான தாஜ் விடுதியின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் றெய்மன்ட் பிக்சன் தெரிவித்துள்ளார்.

 

கொழும்புக்கு வெளியே 100 அறைகளை உடைய விடுதி ஒன்றை கட்டுவதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

சிறீலங்காவுக்கான உதவிகளை வழங்குவதில் சீனாவும் குறைந்தது அல்ல, அது அபிவிருத்தி திட்டங்களுக்கு 500 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

 

எனினும் மேற்குலகம் தனது அழுத்தங்களை தொடர்ந்து வருகின்றது, கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தியுள்ளது. ஆனால் அதே தினத்தில் 350 மில்லியன் டொலர் செலவில் சீனா நிர்மானித்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஒரு பகுதியை மகிந்தா திறந்து வைத்திருந்தார்.

 

மேற்குலகத்தின் அழுத்தங்கள் அதிகரித்த போது அதனை ஆசியாவின் இரு பெரும் சக்திகளின் துணையுடன் சிறீலங்கா முறியடித்திருந்தது. அனைத்துலகத்தின் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வல்லமையை அவை கொண்டுள்ளன.

 

ஆனால் இந்தியாவையும், சீனாவையும் சிறீலங்கா எவ்வாறு கையாளப்போகின்றது என்ற கேள்விக்கு, இந்தியாவை மகிழ்ச்சியாக வைத்திருந்தவாறு, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்த சிறீலங்கா முயன்று வருவதாக முன்னாள் சிறீலங்கா இராஜதந்திரி கொடகே தெரிவித்தள்ளார்.

 

எனினும் சீனாவின் ஆளுமையை முறியடிக்க அமெரிக்கா முயன்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை போகும் தாமிரபரணியின் வளம் மற்றும் கேள்விக்குறியாகும் தென் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் ?

இன்றைய தலையங்க கட்டுரையாக இதை பதிகிறோம் .

 

மணல் கொள்ளை அனைத்து கட்சி "சின்டிகட்"  உறுப்பினர்களின் கூட்டு கொள்ளையில்  நடைபெறுகிறது.

 

ஆளும் கட்சி , திமுக ,சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி, அதிமுக,  சட்டமன்ற மன்ற உறுப்பினர்கள் மற்றும் யார் எதிர்ப்பார்கள் என்று தெரிகிறதோ அந்த அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளும் இதற்க்கு இந்த கொள்ளையில் பங்கு கொண்டவர்கள். அவர்களே அவர்களின் வாகனம் மூலம் நேரடியாக மணலை எடுத்து கொள்ளலாம் அல்லது  நேரடியாக கொள்ளை அடிக்க விருப்பம் இல்லையென்றால் அதற்கான "கமிசன்" தொகையை பெற்று கொள்ளலாம் இதுதான்  இந்த கூட்டு கூலியின் ஒப்பந்தம்.

 

 

ஆட்சி அதிகாரத்திற்கு வரக்கூடிய  சாத்தியகூருள்ள  இரண்டு பிரதான கட்சிகள் திமுக மற்றும் அதிமுக இந்த கூட்டு கொள்ளையில் மாநிலம் முழுதும் கைகோர்த்துள்ளது.

 

எப்படி காப்பாற்றப்படும் தாமிரபரணி ?


கீழே உள்ள கட்டுரை அல்லது செய்தி தின மலரின் இன்றைய ஆதங்கம்.

 

வற்றாத ஜீவ நதி தாமிரபரணிதான் தமிழக நதிகளில் மாநில எல்லை பிரச்னைகளில் சிக்காத நதியாகும்.  தாமிரபரணியினால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏறக்குறைய 90 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இருபோக நெல் சாகுபடி நடந்தது.  இப்போதும் சாத்தூர், விருதுநகர் வரையிலும் ஏறக்குறைய 450 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்குகிறது. ஆனால் தாமிரபரணி முன் எப்போதும் இல்லாதபடி நடக்கும் மணல் கொள்ளையால் அழிவை நோக்கி செல்கிறது. அ.தி.மு.க., தி.மு.க.,என இரு ஆட்சிகளிலும் தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு மட்டும் நிற்காமல் இரவும் பகலும் நடக்கிறது.

 

நெல்லையில் அரியநாயகிபுரம், ரெங்கசமுத்திரம், பழவூர், சீவலப்பேரி, தோணித்துறை, திருமலைக்கொழுந்துபுரம் எனவும் தூத்துக்குடி மாவட்டத்தில் தோழப்பன்பண்ணை, மங்களாகுறிச்சி,முக்காணி என குறைந்தது 10 கி.மீ.,இடைவெளி விட்டு மணல்கொள்ளை நடந்திருக்கிறது. 2006ல் தி.மு.க.,ஆட்சிக்கு வந்த புதிதில் வீரவநல்லூரில் இந்திய கம்யூ.,கட்சியை சேர்ந்த சுடலைமுத்து என்ற தலித் இளைஞர் மணல் குவாரியை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார் என்பதற்காக கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்திய கம்யூ., தலைவர்கள் தா.பாண்டியன், நல்லக்கண்ணு வெகுண்டெழுந்தார்கள். "தேவைப்பட்டால் நாங்களும் ஆயுதம் ஏந்துவோம்' என்றார் தா.பாண்டியன். பாவம் எதுவும் நடக்கவில்லை. மணல் கொள்ளை மட்டும் தொடர்கிறது.  அதே பகுதியில் பொக்லைன்  இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளியதால் ஏற்பட்ட ஆழம் தெரியாமல் எப்போதும் போல குளிக்க வந்தவர்கள், ஆற்றை கடந்தவர்கள் என சிறுவர்,சிறுமியர் முதல் பெரியவர் வரை 10க்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி இறந்தார்கள்..!

 

பொக்லைன் இயந்திரங்களின் பக்கெட்கள் எனப்படும் கோர கைகள் ஆற்றில் இறங்கினால் குறைந்தது10 அடி ஆழத்தில் இருந்து மணலை அள்ளிவரும். பொதுப்பணித்துறை விதிகளின்படி ஆற்றில் 3 அடிக்கு மேல் தோண்டக்கூடாது.  இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது. ஆற்றின் குறுக்கே பாதை அமைக்க கூடாது, இரவில் குவாரி நடத்தக்கூடாது, ஒரு லாரியில் குறிப்பிட்ட யூனிட்களுக்கு மேல் ஏற்றக்கூடாது என விதிமுறைகள். ஆனால் கலெக்டர் முன்பாகவே விதிமுறைகள் மீறப்படுகின்றன.  பாதிக்கப்பட்ட தோணித்துறை மக்கள் புகார் கூறியதால் ஆற்றில் பொக்லைன்மணல் அள்ளுவதை படம் எடுக்கச்சென்ற பத்திரிகையாளர்கள் தி.மு.க.,பிரமுகரின் மகன்களால் தாக்கப்பட்டனர்.

 

பொதுப்பணித்துறையினர் நடத்தும் அரசு குவாரியில் ஆளுங்கட்சி பிரமுகரின் மகன்களுக்கு என்னவேலை? அ.தி.மு.க.,ஆட்சியில் இயற்கை செல்வம் கொள்ளை போகிறதே நம்பியாற்றில் மணல் அள்ளுவதை தடை செய்யவேண்டும் என கூறி பத்திரிகையாளர்களை ஊர் ஊராக அழைத்துச்சென்று போராட்டம் நடத்திய ராதாபுரம் அப்பாவு எம்.எல்.ஏ., திருச்செந்தூர் ராதிகாசெல்வி எம்.பி.,போன்றவர்கள் தி.மு.க.,ஆட்சியிலும் மணல் அள்ளப்படுவதை பார்த்து எதுவும் செய்யமுடியவில்லை. அ.தி.மு.க.,ஆட்சியிலாவது மணல் கொள்ளையை கண்டித்து தி.மு.க.,வினர் மணல் குவாரிகளுக்கே சென்று போராட்டங்கள் நடத்தினர். ஆனால் தி.மு.க.,ஆட்சியிலோ அ.தி.மு.க.,வினர் "போராட்டம் என்றால் என்ன விலை' என கேட்கிறார்கள்.

 

தென்மாவட்டங்களில் தாமிர பரணி, வைப்பாறு என மணல் அள்ளப்படும் இடங்களில் அந்தந்த குறுநில மன்னர்களைப்போல ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு வருமானம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.  தாமிரபரணிஆற்றில் பொதுப்பணித்துறையினர் ஒரு யூனிட் மணலை 650 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்துள்ளனர். ஒரு லாரி அதிகபட்சம் 3 யூனிட் கொள்ளும் என்றால் ஒரு லாரி மணல் விலை 2 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டால் ஒரு யூனிட் மணல் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஒரு லாரி மணல் 7 ஆயிரம் ரூபாய். இதே  மணல் கேரளாவுக்கு செல்லும்போது அங்கு லாரிக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தாமிரபரணியில் அள்ளப்படும் மணல் உள்ளூர் மக்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ கேரளாவுக்கு அதிக அளவில் செல்கிறது. கேரளாவில் இருந்து மணல் இன்னமும் சுத்தப்படுத்தப்பட்டு அரபு நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

பலரை பலி வாங்கும் மணல்: தமிழக பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக இருந்து ஓய்வுபெற்றவர் சி.எஸ்.குப்புராஜ். மணல் கொள்ளைக்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு கட்டுரை எழுதியவர். தள்ளாத வயதிலும் தற்போது ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தலைவராக உள்ளார். ­
*மணல் அள்ளினால் நடவடிக்கை என முதல்வர் உத்தரவு போட்டாலோ, கோர்ட் பரிந்துரைத்தாலோ போலீஸ் கைக்கு அகப்படுவது மாட்டுவண்டியில் மணல் அள்ளும் கூலித்தொழிலாளர்கள். அண்மையில் ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் சிக்கி போலீஸ் ஸ்டேஷன்களில் தவம் கிடந்தன.
பொக்லைன் இயந்திரங்களில் ஒன்றே ஒன்று மட்டும் சிக்கியது.

 


*மணல் அள்ளியதால் ஆழம் தெரியாமல் ஆற்றில் மூழ்கி 10க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். கீழப்பாட்டத்தில் மணல் குவாரியால் கிடைக்கும் வருமானம் யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதலில் மூவர் கொலை செய்யப்பட்டனர். தாமிரபரணி நதிக்கரை நகரங்களில் பல வெட்டுக்குத்துகளும்  இருதரப்பு மோதல்களும் அரங்கேறியுள்ளன.

 


*நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மணல் லாரிகள் ஏற்படுத்திய விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும்.

முதல்வரின் தேவை இல்லாத ஆதங்கம் .

முதல்வர் கருணாநிதியின் தேவை இல்லாத ஆதங்கம்தான் இந்த அவரது அறிக்கையில் வெளிபடுகிறது.

அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று நீதிமன்றம் சொல்லியதை கேலி செய்வது போல் உள்ளது இவரது இந்த அறிக்கை.

இதை வைத்து பா ஜ க தமிழகத்தில் வந்து எங்கே கர்நாடகா போல அதிகாரத்திற்கு வந்து விடுவார்களோ என்ற எச்சரிக்கை அல்லது அதற்கான முன் தடுப்பு அவரது இந்த அறிக்கையின் வாயிலாக தெரிகிறது.

ஹிந்துக்களை அல்லது அவர்களின் நம்பிக்கைகளை  சிறுபான்மையினரின் வாக்குகளை பெரும் பொருட்டு கேலி செய்வது முதல்வருக்கு வாடிக்கைதானே ?

அந்த அறிக்கையை பதிகிறேன்:

நாகர்கோவிலில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் நான் பேசும்போது, திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிட்டு காட்டினேன். அதைப் போலவே, தமிழரின் கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பேசும்போது, ராஜராஜ சோழன் காலத்திய நிர்வாக முறை பற்றி தெரிவித்தேன்.இவை அனைத்திற்கும் ஆதாரமாக ராஜராஜன் எழுப்பியிருக்கும் தஞ்சை பெரிய கோவிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளும் நீடித்து நிலைக்கும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன. அயோத்தி சம்பந்தமான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு இந்து அமைப்புகளுக்கும், ஒன்று முஸ்லிம் அமைப்பிற்கும் சமமாக வழங்க வேண்டுமென்று தீர்ப்பு சொல்லப்பட்டது.நீதிபதி சர்மா தனது தீர்ப்பில், "சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. எந்த ஆண்டு என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டில் டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன.சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாகக் கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை புனிதத் தலமாகக் கருதி, ஆன்மிகப் பயணம் சென்று வருகின்றனர்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டது. இப்படி கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என அறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது.

 


ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது.திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல், மொழியியல் வல்லுனர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

 


இந்த அடிப்படையில், நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை தெளிவாக உலகம் அறிந்து கொள்ள முடியும்.ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம், அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் போதும்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.




பகலவன் திரட்டி | வெளியானவை


பகலவன் திரட்டி | வெளியானவை


அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம்

Posted: 28 Sep 2010 08:24 PM PDT

அம்பர் (amber) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக் குறைய கல்போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும்.


4 Vote(s)

அன்பே கடவுள்: என் இதயம் பேசுகிறது.2

Posted: 28 Sep 2010 07:53 PM PDT

என் இதயம் பேசுகிறது தொடர்ச்சி .2... நான் புறப்படுகிறேன், இன்னும் புறப்படவில்லையா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது, அதற்கு முன்னாள்

4 Vote(s)

அன்பே கடவுள்: என் இதயம் பேசுகிறது

Posted: 28 Sep 2010 11:10 AM PDT

நான் எங்கோ செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கோபமாக செல்கிறேன் எங்கே என்று என் தாய் கேட்க எனக்கு சொல்ல தெரியவில்லை ,தெரிந்தால் தானே

4 Vote(s)

Kalvithagaval: இன்றையச் செய்திகள்..! (28.09.10)

Posted: 28 Sep 2010 09:01 AM PDT


தேசியத்தை வலியுறுத்திய தெய்வக்கவி பாரதியார்: சுகி. சிவம்

Sep 27, 2010
காரைக்குடி, செப். 27: தேசியத்தை வலியுறுத்திய தெய்வக்கவி பாரதியார் என்று இலக்கியச் சொற்பொழிவாளர் சுகி.சிவம் கூறினார்.சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் பாரதி தமிழ்ச் சங்க தமிழ்நாடு கலை இலக்கிய...
Continue >>

வளர்ச்சிப் பாதையிலா இந்திய கல்வி?

Sep 27, 2010
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்

4 Vote(s)

நல்லவரா ? கெட்டவரா ?

Posted: 28 Sep 2010 07:45 AM PDT

நல்லவரா ? கெட்டவரா ?

4 Vote(s)

வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்

Posted: 27 Sep 2010 11:50 PM PDT

கறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும் இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை அதற்குரியத்தொல்லுயிர் எச்சம் மற்றும் அம்பர்உறுதிசெய்கின்றன


4 Vote(s)
You are subscribed to email updates from பகலவன் திரட்டி | வெளியானவை
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610