தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ராஜபக்ச மோசமானவர் இல்லை! மிருகங்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கவே முள்வேலி முகாம் அமைக்கப்பட்டது!: அப்துல் காதர் எம்.பி.

ராஜபக்ச மோசமானவர் இல்லை! மிருகங்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கவே
முள்வேலி முகாம் அமைக்கப்பட்டது!: அப்துல் காதர் எம்.பி.


தமிழக மக்கள் நினைப்பது போல இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மோசமானவர்
இல்லை. அவர் இலங்கைத் தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
இவ்வாறு இலங்கையின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான
ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் கண்டி தொகுதி பாராளுமன்ற
எம்.பி.யான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர்,

நான் இலங்கையின், ஐக்கிய தேசிய கட்சியில் 50 வருடம் இருந்திருக்கிறேன்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் ராஜபக்சேவின் சுதந்திர
கட்சியில் இணைந்தேன்.

இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று
வருகிறது. இன்னும் 1 வருடத்திற்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின்
பகுதிகள் சரிசெய்யப்பட்டு தமிழர்கள் அந்த பகுதியில்
குடியமர்த்தப்படுவார்கள்.

இதற்காக இந்திய அரசு பெருமளவில் உதவி செய்து வருகிறது. குறிப்பாக
தமிழர்களை மீள்குடியமர்த்துவதில் தமிழக அரசு பெரும் உதவிகளை செய்து
வருகிறது. இந்தியாவில் இருந்து எந்த மந்திரியாக இருந்தாலும், எம்.பி.யாக
இருந்தாலும் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமையை பார்வையிட வரலாம்.
அவர்களை தகுந்த பாதுகாப்புடன் நான் இலவசமாக அழைத்துச் செல்கிறேன்.

தமிழகத்தில் உள்ள மக்கள் முள்வேலி முகாம் என்றால் கொடுமையான இடம் என்று
நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், முகாம் இருக்கும் இடத்தில்
காட்டு விலங்குகளினால் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக
அமைக்கப்பட்டது தான் இந்த முள்வேலி.


இலங்கையை சேர்ந்த அனேகமான சிங்களவர்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டால் அதை
சரிசெய்வதற்கு தமிழ்நாட்டிற்கு குறிப்பாக சென்னைக்கு தான் வருகிறார்கள்.
அவர்கள் தமிழர்களை உறவினர்களாக தான் நினைக்கிறார்கள்.

தமிழக மக்கள் நினைப்பது போல இலங்கை அதிபர் ராஜபக்ச மோசமானவர் இல்லை. அவர்
இலங்கை தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார் என்று கூறினார்.