தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

முத்துக்குமார் தீவிரவாதிதான் !!!

முத்துக்குமாருக்கு சிலை திறப்பாம்
கொளுத்திக்கொண்டவனுக்கு எவ்வளவு திமிர்
காதல் தோல்வியால் தற்கொலை
வேலை கிடைக்காதவிரக்தியில் தற்கொலை
சம்பளம் பத்தாமல் தற்கொலை
சொல்லியிருப்போம் ஆயிரம் கதை

நாசமாப்போனவன்
கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு
கொளுத்திக்கொண்டான் திமிர் பிடித்தவன்
கடிதம் எழுதிய பொறம்போக்கு
பாப்பாத்தியை பற்றி மட்டும்
எழுதிவிட்டுப்போக வேண்டியது தானே
ஐம்பது ஆண்டுகாலம் கட்டியெழுப்பிய
தமிழ் இனத்தலைவனையும்
காட்டிக்கொடுத்துவிட்டானே

உடலை கைப்பற்றி
உணர்ச்சியை ஊட்டி
ஊரெங்கும் தம் பிணம் சுமந்து
புரட்சி செய்ய சொன்னானே
இவன் தீவிரவாதி இல்லையா?
இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?

உதயக்குமாரை உண்டு ஏப்பம்
விட்டவர்களுக்கு
முத்துக்குமாரை முழுங்க
தெரியாதாடா முட்டாப்பயலே

கோர்ட்டு தீர்ப்புக்கும்
கருத்துக்கணிப்புக்கும்
அடுத்தவன் உயிரை
இழக்கவைக்கும் ஊரில்
இனத்துக்காக தன் உயிரை
இழக்கிறானாம்
இவன் தீவிரவாதி இல்லையா?
இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?

டாஸ்மாக்கில் பாஸ்மார்க்கு
வாங்கிக்கொண்டிருக்கும்
எம் இனத்திற்க்கு
மானாட மயிலாடவில்
மயிங்கிக்கொண்டிருக்கும்
எம் இனத்திற்க்கு
பிரியாணி குஞ்சுகள் போதும்
எங்களுக்கு வேண்டாம்
முத்துக்குமார் போன்ற தீவிரவாதிகள்.


-குழலி