தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வீரத்தமிழனே இருந்தது போதும் மடத்தமிழனாய்!


மூத்த இனமாம் தமிழ் இனம்,
விழி பிதுங்கி நிற்கிறதே இவ்வினம்

தமிழ் இனத்தின் குரல் வலையை
சிங்களவன் அறுக்க
மனித சங்கலி நடத்தினார்கள்
இங்கே திராவிடம் பேசியவர்கள்,

சிங்களவனின் அமில குண்டுகளில்
மாவீரர்கள் விதையாகி போக
மறத்தமிழனை ஊனமாக்கினர்கள்
இல்லாத இறையாண்மையை பேசி,

நீங்கள் கொடுத்த இலவசத்தில்
மயங்கித்தான் போனான் தமிழன்,
உங்கள் இறையாண்மையில்
கருகித்தான் போனான் மீனவ தமிழன் ,

ஆரியனும் திரவிடனும்
சூசகமாக ஆயுதம் கொடுக்க
புத்தன் சமாதானமாக போதித்தான்
தமிழ் இன படுகொலையை ,

தமிழன் வீழ்ந்து தான் போனான்
உங்கள் திராவிட அரசியலில்,
தமிழன் மாய்ந்துதான் போனான்
உங்கள் அரசியல் சதுரங்கத்தில்

தன்மான தமிழன் கோமன
தமிழனாகி போனான்
துரோகங்கள் தமிழ் இனத்தின்
கூடாரமாகி போனது,

தமிழன் மண்டியிட்டுதான் போனான்
இன உணர்வு இல்லாமல்
தமிழன் மானமற்று தான் போனான்
மொழி பற்று இல்லாமல்
தமிழன் நாதியற்று தான் போனான்
தமிழன் தன்னை இன்னும் தமிழனாய் உணராததால்

கேடு கெட்ட இனமாகி போனோம்
நரிகளின் சூழ்ச்சியில்
கோமாளி இனமாகி போனோம்
கயவர்கள் விரித்த வலையில்

ஆரியத்தை தோலுரிக்க திரவிடனாய்
நிறம் மாறினோம்
திராவிட அரசியலும் தமிழ் இனத்தை அழிக்கும் எனில்
எப்பொழுது தமிழனாக நிறம் மாற போகிறோம்,

வீரத்தமிழனே இருந்தது போதும் மடத்தமிழனாய்!
எழுந்து வா நீ தமிழனாய்!
இனி புறப்படுவோம் நாம் தமிழராய்

நேற்றைய தமிழனம் மடமையாகி போனது
இன்றைய தமிழனம் வீரமாகி போனால்
நாளைய தமிழனம் சரித்தரமாகி போகுமடா

ஒன்றிணைவோம் நாம் தமிழராய்
வென்றெடுப்போம் வீரத்தமிழனத்தை
அறுத்தெடுப்போம் துரோகிகளின் தலைகளை!

 

....பகலவன்....