புறப்படு உன் தமிழ் தாயை வாழ வைக்க!
தமிழா விடியலை தேடும் முன்
உன் பாட்டனின் தமிழை கண்டுபிடி !
வந்தாரை எல்லாம் வாழ வைத்தாய்
இன்றோ வந்தவனெல்லாம் ஏறி மிதித்தான்!
ஐயோ நெஞ்சு பொறுக்கவில்லையடி தமிழ் தாயே!
உந்தன் தமையன் பாரதி கண்ட தமிழகம் இதுவோ!
இந்த தமிழனிடம் மொழிப்பற்று இல்லை ! ஏனோ
என்றோ அவன் ஜாதிப்பற்றில் கலந்து விட்டான்,
அனல் அடிக்கும் அரசியல் குழப்பத்தில்
இவன் கதிர் வீச்சாக இல்லையே !
என் மானமுள்ள தமிழ் தாயே !
நீ வேண்டாம் நாளைய சன்னதிக்கு!இந்த
கேடுகட்ட வேசிகளிடம் நீ அடிபட வேண்டுமா!
ஏனோ உன்னை விற்க தயாராகி விட்டான்!
மொழிப்பற்றே இல்லாத இனத்திற்கு நீ என் தாயே?
எரிகிறது மணம்! புலம்புகிறது நாக்கு!
கூசுகிறது செவி! வெதும்புகிறது கண்கள்!
ஐயோ இதுவன்றோ என் இனத்தின் கேவலம்!
மானமிக்க என் தமிழ் சாதியே கேள்,
காவிரியும் பாலாறும் முல்லைபெரியரும் யார்?
உன் விருந்துக்கு வந்த சம்மந்திகள் போலும்!இல்லையடா
உன் தாய் தமிழ் உறவுகள்,உன் உறவுகளை
தொலைத்து நீ இன்னும் எதை தேடுகிறாய் !
விழுதுகளின் வீரியம் உனக்கில்லை !
ஏனோ நீ ஈரம் இல்லாதவன்!
பாரதியின் புலமை உன்னிடம் இல்லை !
ஏனோ நீதான் அன்னியபட்டுவிட்டயே!
உன்னிடம் இன ஒற்றுமை இல்லை!
ஏனோ நீதான் வேற்றுமை சாதியாயிற்றே!
வள்ளுவனையும் பாரதியையும் மறந்து விட்டோம் !
ஏனோ உனக்கு கேடு கெட்டவன் தலைவன்!
தொன் மொழியை மறந்து விட்டாய் !
ஏனோ உன் தாய் மொழி அன்னியப்பட்டு போனது!
தமிழா அங்கிலம் பேசுவது குற்றமல்ல!ஆனால்
உன் தாய் தமிழுக்கு அங்கிலம் இணையல்ல!
அசினுக்கு முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!
அசினின் இடையோ இடைத்தமிழ்!
அசினின் நடனமோ நாடகத்தமிழ்!
இதுவன்றோ என் இனத்தின் கேவலம் !
உன் பாட்டன் தமிழை வளர்த்தான் கடை சங்கம் வைத்து !
ஆனால் நீ வளர்க்கிறாய் அசினின் இடையை வைத்து !
என் தாயின் கர்பத்தில் களங்கம் ஏனோ !
தமிழா போதும் உன் சூத்திரம் !
இனிமேலும் உனக்கு இல்லையெனில் ஆத்திரம் !
நீயோ நாய் மூத்திரம்!
வானளவு உயர வேண்டிய இனம்
இன்று சுடுகாடு நோக்கி!
விண்ணளவு உயர வேண்டிய மொழி
இன்று செவிடன் காதில் ஊதிய சங்காக!
தீபம் கூட மேல் நோக்கி எரிகிறது!
உனது எண்ணங்கள் மேலோங்க மறுப்பது ஏன்?
உன் தாயை நேசிக்கும் நீ !உன்
தாய் தமிழை நேசிக்க மறுப்பது ஏனோ !
நமது அடையாளம் தமிழ் மட்டுமே!
அதையும் நீ தொலைத்தால் நாளை நடை பிணமே !
விழ்ந்தாலும் மாய்ந்தாலும்!
அடங்காது நம் தமிழ் பேச்சு !
வெந்தாலும் வெதும்பினாலும்
சாகாது நம் தமிழ் முச்சு !
பொருத்தது போதும் தமிழா!
புறப்படு உன் தமிழ் தாயை வாழ வைக்க!
சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்
அன்புடன் தோழன்
....மதன் (பகலவன்) ....
தொகுப்பு
பகலவன் கவிதை,
ஜாதி