இன்று நம்மினம் என்றும் இல்லாத வேதனையிலும், சோதனையிலும் தள்ளப்பட்டிருக்கின்றது. நம்மினத்துக்கு இன்று தான் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகின்றது. சிங்கள இனவாத அரசு 250,000 தமிழீழ மக்களை வதைமுகாம்களிற் பணையக் கைதிகளாக்கி நாடகமாடுகின்றது. இதைச் சர்வதேசம் கண்டும் காணாமல் தெரிந்தும் தெரியாமல் வியாபார நோக்கோடு அணுகின்றது.
இந்த கேவலத்தை என்ன என்று சொல்வது...மேம்போக்காக பார்த்தால், இதற்கு யார் காரணம்...?
ஜாதி ,மதம்
தமிழ் நாட்டில் யாரும் ஜாதி, மதம் பெயரை சொந்த பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில்லை என்று பெருமையாக மற்ற மாநில நண்பர்களிடம் சொல்வதுண்டு..
பெயரில் இல்லை ... ஆனால் வோட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளால்
ஜாதி ,மதம் தமிழனின் குருதியில் கலந்து விட்டது.வேறு எந்த மாநிலத்தையும் விட நம்மிடம் தான் ஜாதி,மத வெறி அதிகம்...
அரசியல் புச்சாண்டிகளின் கேடியம் இந்த இளிச்சவாய தமிழ்ர்கள் ,.ஜாதி என்பது ஒரு மனிதனின் சுயமரியாதையாக இருக்க கூடாது,அனைவரும் சகோதரர்களே என்று சொல்லிய தலைவர்களின் சிலையை வைத்து சண்டைப் போட்டுக் கொண்டு உள்ளோம் .
ஜாதிக்கு ஒரு அரசியல் கட்சி தேவையா ?
தமிழ்நாட்டின் எல்லா முடுக்குகளிலும் ஜாதி அமைப்புகள் தேவையா?
ஜாதி வாரியாக பார்த்து ஓட்டுப்போடுவது தேவையா?
இன்றைய சமூகத்திற்க்கு இந்த சாபக்கேடு எங்கிருந்து வந்தது ?
1.ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..
2.ஆள் பலம் காட்ட ஊர்வலம், பேரணி நடத்துவது தடுக்க பட வேண்டும்..
3.ஜாதி,மத கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் ...
4. வெகு ஜன ஊடகங்களில் ஜாதி சார்பு முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்...
5 . அவர் பிறந்த நாள், இவர் இறந்த நாள் என்று கூட்டம் சேர்த்து விஷ விதை விதைப்பது, "ஆண்ட சமுகமே அடங்கி கிடப்பது ஏன் " ... "அடங்க மறு " என்று எவனும் உளர இடம் கொடுக்க கூடாது..
6 . கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) ஒரே இடத்தில் ( exhibition) பாதுகாப்புடன் வைக்க வேண்டும் ...
இன்றைய தலைமுறையில் எத்தனை பேருக்கு பெரியாரும் காமராசரும் தெரியும்,இவர்களின் சிர்திருத்தம் என்னாயிற்று . ஏன் நாம்தான் ரஜினியையும் நமிதாவையும் தூக்கி வைத்து கொண்டாடுகிறோமே!
இதற்க்கு மேலும் நாம் பொருத்து இருந்தால் நாளைய சன்னதி நம் முகத்தில் எச்சில் துப்பும் .
அனைவரும் தமிழராக ஒன்றுபட வேண்டும்,
காவிரி என்றால் தரமுடியாது என்கிறான் .பாலாறு என்றால் இல்லை என்கிறான் .முல்லை பெரியார் என்றால் ஏறி மிதிக்கிறான் .ஏன் இந்த அவல நிலமை.நாம் என்ன தரம் கெட்டவர்களா? இப்படி மதத்தாலும் ஜாதியாலும் கட்சியாலும் பிரிந்து எதை சாதித்தோம் ? நமது ஒற்றுமையை முப்பது ஆண்டுகள் முன்பே காட்டி இருந்தால் ஈழ்ம் மலர்ந்து இருக்கும்.
அம்மாவாசைக்கும் (ஜெயலலிதா) அறைமுட்டைகும் (கருணாநிதி) மாற்றி மாற்றி ஓட்டு போட்டு பழாய் போனோம் ,இனிமேல் எவனாவது ஓட்டுகேட்டு வந்தால் ஒரு ஓட்டுக்கு ஒரு தமிழனை காப்பாற்ற சொல்லுங்கள்.ஏழு கோடி மக்கள் கொண்ட நாம் முன்று லட்சம் மதிப்புள்ள நம் தாய் தமிழ் உறவுகளை காப்பாற்ற முடியவில்லை என்றால் அதை விட நமெக்கென்ன கேவலம் இருக்க போகிறது .நாளைய உலகம் நம்மை எட்டப்பன் பரம்பரை என்று சொல்ல வேண்டுமா இல்லை வீரமிக்க பிரபாகரன் பரம்பரை சொல்ல வேண்டுமா ! தமிழா நம் மொழிப்பற்றை காட்ட மறுத்து போதும்.
நம்மால் செய்ய முடியும் ,இந்த கருத்தை மற்றவர் நாலு பேரிடம் சொன்னாலே போதும்.
இளைய சமுதாயம் ஒன்றுபட வேண்டிய தருணம் இது.
பொருத்தது போதும் தமிழா ,எழுந்து வா தமிழா நெருப்பாய்,இருந்தது போதும் செருப்பாய்.நாளைய தமிழிழம் நமக்கே .........
சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்
அன்புடன் தோழன்
....மதன்.....