தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஆண்ட இனமே மண்டியிட்டு சாக துணிந்து விடாதே!

ஆண்ட இனமே
மண்டியிட்டு சாக துணிந்து விடாதே!

இமயத்தை தொட்டவனும் நீ தான்
சூழ்ச்சிகளை தோற்கடித்தவனும் நீ தான்!

நீ பிறந்த தஞ்சையில் சாயாத கோபுரம்,
அங்கே உன் இனத்தின் கோபுரமே சாய்ந்து விட்டதடா !

பிச்சை பாத்திரத்தை தூக்கும் முன் துணிந்தெழு
துணிந்தவனுக்கு பிச்சை பாத்திரமும் ஆயுதம் தான்!

எத்தனை எத்தனை அரசியல் நாடகங்கள்
தமிழா நீ ரசிக்க அல்ல
உன் தமிழச்சிகளின் கற்பை சூறையாட!

அரசியல் தர்மத்தில் அநாகரிகமே மேலோங்க
என் பிறப்பின் தர்மத்தில் நாகரிகத்தை தேடுகிறேன்!

அழியாத நினைவுகளை விட
அழிக்கப்பட்ட நம் இனம் சொல்லும்
விடுதலையின் வேட்க்கையை !

வாழ்வே வழி இல்லாத நம் இனம்,இனி
சோற்றில் கை வைக்க முடியாது ,என
நினைத்து விட்டான் போலும்,புரிந்துகொள்
புலி பசித்தாலும் புல்லை திண்ணாது!

நிற்காத நதிகளும் இல்லை,
உருகாத பனி மலைகளும் இல்லை,
வா தோழா எழுவோம் இயற்கைக்கு முரண்பட்டு!

கம்பனாய் இருந்தால் கவி பாடி இருப்போம் ,
வள்ளுவனாய் இருந்தால் திருக்குறள் இயற்றி இருப்போம்,
எங்களை மாற்றி விட்டிர்கள் புயலாக!
இதோ புறப்பட்டு விட்டோம் இனி புலியாக!

கம்பன் காவியத்தில் வாலி வதையடா,
நீங்கள் செய்வதோ எம் இனத்தின் வாலிப வதை!

எம் தலைவன் இறந்து விட்டான்???,சந்தோஷப்படாதே
பல ஆயிரம் தலைவன் பிறந்து விட்டானடா!

ஈழத் தாயே கண் கலங்காதே,
இதோ புறப்பட்டு விட்டோம் ,
உனக்கும் என் தமிழ் தாய்க்கும்,
உள்ள உறவை வெளிகாட்ட!
தாயே நீங்கள் சுடர் விட தாயராகுங்கள்,
நாங்கள் சுட்டு தள்ள தயாராகி விட்டோம்!

பிணம் திண்ண பக்சேக்களே,
தமிழனின் எச்சிலில் ஒளிந்த கருநாகமே,
இறையாண்மையை சொல்லி என் இனத்தை
இரையாக்கிய இத்தாலி அரசியே,
உலகுக்கெல்லாம் காலம் பதில் அளிக்கும்,
உங்களுக்கு நாங்கள் பதில் அளிப்போம்!
உங்களின் அத்தனை நாடகங்களுக்கும்
முடிவுரை எழுதப்போவது நாங்கள்தான்!

சினம் கொண்ட பாம்பு பதுங்கியதில்லை,
மூட்டிய தீ அனைவதுமில்லை,
பதில் சொல்ல காத்திருங்கள் இரண்டிற்க்கும்!

ஐயோ பதறுகிறது என் நெஞ்சு ,என் தமிழச்சி
ஒரு மார்பில் குழந்தைக்கு பால் கொடுக்க ,மறு மார்பில்
இறந்த தன மற்றொரு குழந்தையை வாரி அணைக்கிறாள்!
இதுவன்றோ தமிழனின் பரிதாபம்!
கலங்காதே தமிழச்சியே!


பசி என்று வந்தவனுக்கு
விருந்தளித்த நம் இனம்,
இன்று
நம் பசிக்கு அடுத்தவனிடம்
பிச்சை எடுக்க வைத்தது யாரோ !


மாசு படிந்த வேசி கூட்டங்களுக்கு
தலை சாய்க்க மாட்டோம் !
என் இனத்தின் பிணத்தை திண்ண வேசிகளின்
தலையை எடுக்காமல் விட மாட்டோம்!
விழ்ந்தாலும் மாய்ந்தாலும்
நம் தாய் மண்ணை இழ்க்க மாட்டோம் !

ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு! நீ ஒன்றுபட்டால்

உன்னை மிஞ்ச ஆளில்லை !
உன்னை வெல்ல உலகமில்லை!


தோழமையுடனும் உயிர் பறிக்கும் வேதனையுடனும்,

....மதன் ( பகலவன் ) ....