தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அதிமுக கூட்டணியில் இணைகிறது மனித நேய மக்கள் கட்சி

அதிமுக கூட்டணியில் இணைகிறது மனித நேய மக்கள் கட்சி

மனித நேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணையவுள்ளது. நேற்று இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சட்டசபைத் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது. முதல் கட்டமாக கூட்டணியை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா [^] இறங்கியுள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் புதிய தமிழகம் [^] கட்சி அதிமுககூட்டணிக்கு வந்து சேர்ந்தது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார். அப்போது எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாஹ் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு [^] முஸ்லீ்ம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயாலளர் ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொருளாளர் ரஹமதுல்லாஹ், மனித நேயக் கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்துப் பேசினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியில் இணைவது குறித்தும், எத்தனை இடங்கள் தரப்படும் என்பது குறித்தும் அதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி பேசியுள்ளதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது போக சில குட்டிக் கட்சிகளும் உள்ளன. இவற்றின் வரிசையில் புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெறவுள்ளன.

இரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம்

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்கா [^]வின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் [^] லக்தர் பிராஹிமி, தென்னாப்பிரிக்க ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

குழுவின் தலைவராக டெஸ்மான்ட் டுடு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு இலங்கை அரசின் இனவெறியைக் கடுமையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து பிபிசிக்கு டுடு அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் சரமாரியாக கொல்லப்பட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகின்றனர். அரசுக்கு எதிர்ப்பானவர்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் பயங்கரமாக உள்ளது என்றார்.

இலங்கையைக் கண்டித்து உலகப் பெருந்தலைவர்கள் குழு ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது கவலை தருகிறது. போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை உருப்படியான நடவடிக்கை [^] எதையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.

இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் செவிடுகள் போல இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நல்லாட்சி அங்கு இல்லை, நம்பிக்கை இல்லை, நம்பகத்தன்மை என எதுவுமே இல்லை இலங்கையில். இதைப் பார்த்து பிற நாடுகளும் கெட்டுப் போகும் அவலமே மேலோங்கியுள்ளது .

பின்லாந்து நாட்டின முன்னாள் அதிபரான மர்ட்டி அதிசாரி கூறுகையில், அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. எந்தவித முன்னேற்றத்தையும் அது காட்டவில்லை. மீடியாக்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. அவற்றின் கண்களை மூடி வைத்துள்ளது. மீடியாக்களை சுதந்திரமாக செயல்பட விட்டால்தான் உண்மை தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகள் பலவும் இலங்கை அரசின் இனப்படுகொலை மற்றும் இனவெறிப் போக்கைக் கண்டித்து வரும் நிலையில் உலகப் பெரும் தலைவர்கள் அடங்கிய குழு ஒரேகுரலில் இலங்கை அரசின் இனவெறியைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுபோன்று வரும் கருத்துக்களை இலங்கை அரசு காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. ஒரு காதை இந்தியாவை வைத்தும், இன்னொரு காதை சீனாவை வைத்தும் அது மூடிக் கொண்டுள்ளது. எனவே உலகப் பெருந்தலைவர்கள் குழுவின் விமர்சனமும் அதன் காதுகளையும், மனதையும் தொடாது என்பது உறுதி.

இளங்கோவன் பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாது-கருணாநிதி

தமிழகத்தில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்', மாநில அரசின் திட்டம் தான் என்று முதல்வர் கருணாநிதி [^] கூறியுள்ளார்.

இந்திரா வீட்டு வசதி திட்டத்திற்கும், தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் வீட்டு வசதி திட்டத்திற்கும் இடையே உள்ள வி்த்தியாசம் கூடத் தெரியாமல், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் [^] இவ்வாறு தவறான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

கலைஞர் வீட்டு வசதி திட்டம் தொடர்பாக இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, காங்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு மத்திய அரசு [^] வழங்கும் நிதி ரூ.45 ஆயிரம், மாநில அரசு வழங்குவது ரூ.15 ஆயிரம் தான். ஆனால் இத்திட்டத்துக்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டியுள்ளனர். இது என்ன நியாயம் என்று கேட்டிருக்கிறாரே?

பதில்: அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், மத்திய அரசின் அமைச்சராகவும் இருந்தவர். அவர் சொல்லுகின்ற திட்டம் வேறு, தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம் வேறு. இரண்டையும் புரியாமல் குழப்பிக் கொண்டிருக்கிறார். காங்கிரீட் வீடுகட்டித் தரும் திட்டம் என்று அவர் கூறுவது ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இருந்த இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டமாகும். இத்திட்டம் 1997-98ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும், வீடில்லாத ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஆதிதிராவிடர்கள் அல்லாத ஊரக ஏழை மக்கள் ஆகியோருக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.

இத்திட்டத்திற்கு 75:25 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டம் இந்திராகாந்தி அம்மையாரின் பெயரால் உள்ளத்திட்டம். இதற்கும் இப்போது இந்த ஆண்டு தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.

தற்போது இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் பற்றி ஆளுநர் உரையிலே கூறும்போது, இந்திரா வீடு வசதித் திட்டத்தின் கீழ் மட்டும் குடிசைகளை நமது மாநில அளவில் நிரந்தர இல்லங்களாக மாற்ற வேண்டும் என்றால், அதற்கும் இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்.

இந்த நிலையை நெஞ்சில் நிறுத்தி, முதல் கட்டமாக ஊரகப்பகுதிகளில் 21 லட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் கூரை கொண்ட நிரந்தர இல்லங்களாக தமிழக அரசின் நிதியைக் கொண்டே மாற்றி அமைத்து, அவற்றை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது.

2010-2011ம் ஆண்டு தொடங்கி, இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டு காலத்தில் மண்சுவர்களால் ஆன 21 லட்சம் கூரை வீடுகளுக்குப் பதிலாக, நிரந்தர வீடுகள் இந்த அரசால் கட்டித் தரப்படும்.

இத்திட்டத்தின் முதல் ஆண்டான வரும் நிதி ஆண்டில், 3 லட்சம் நிரந்தர வீடுகள் ரூபாய் 1,800 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். கிராமப் பகுதிகளில் கூரை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்கும் இந்த உன்னதத் திட்டம் கலைஞர் வீட்டு வசதித்திட்டம் என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு அது அறிவிப்போடு இல்லாமல் நிதிநிலை அறிக்கையிலும் கூறப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல், மத்திய அரசின் நிதி உதவியோடு செய்யப்படும் திட்டத்திற்கு கலைஞர் பெயரா? அது என்ன நியாயம்? என்றெல்லாம் இளங்கோவன் கேட்பது, கூட்டணியை வலுப்படுத்துகின்ற செயல் அல்ல, வலிப்படுத்துகின்ற காரியமாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கலைஞர் வீட்டு வசதி திட்டம்: 'இது என்ன நியாயம்?'- இளங்கோவன் சாடல்

குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 45 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு [^] வழங்குகிறது. தமிழக அரசு, வெறும் 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என பெயர் வைத்துள்ளனர். இது என்ன நியாயம்? இதை கேட்டால் பொல்லாப்பும், கோபமும் வருகிறது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் [^].

ஈரோட்டில், மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் இளங்கோவன் பேசுகையில்,

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், சில திட்டங்களில் மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் பங்களிக்கிறது.

குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 45 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு, வெறும் 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்'' என பெயர் வைத்துள்ளனர். இது என்ன நியாயம்? இதை கேட்டால் பொல்லாப்பும், கோபமும் வருகிறது.

அதே போன்று, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கூலியாக 100 ரூபாய் வழங்குவதற்கு பதில், ரூ 70 முதல் ரூ 80 மட்டும் தான் வழங்குகின்றனர். அரசுக்கு வேண்டியவர்கள் தான் இதை தைரியமாக செய்து வருகின்றனர்.

திமுகவுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பிக்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்கிரஸ் கட்சி தான் தியாகி.

எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். எங்களுக்கு கோவிலில் தர்மகர்த்தா வேலை கூட கிடைப்பதில்லை. அதிகாரிக்காக, காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ வீட்டை இடித்து சீல் வைக்கின்றனர். இதை தட்டிக் கேட்க ஆளில்லை.

தமிழக முதல்வர் கருணாநிதி [^]யை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டேன். ஆனால், அவர் நேரம் ஒதுக்கவில்லை. குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது?.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய, 40 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எங்களால் காத்திருக்க முடியும். உங்களால் பதவி இல்லாமல் இருக்க முடியுமா?.

தமிழகத்தில் மைனாரிட்டி எனப்படும் சிறுபான்மை அரசுதான் நடைபெறுகிறது. அதுவும் காங்கிரஸின் தயவில்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை திமுக மறந்துவிடக்கூடாது என்றார்


ஊழலில் தொடர்புடையோர் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை

ஊழலில் தொடர்புடையோர் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை: ஜெ

போலி மதிப்பெண் சான்றிதழ் ஊழலில் தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பலர், ஜூலை 14ம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.

பொதுவாக ஒருமுறை ஒருவர் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுவிட்டால், அவருடைய பெயரை எப்படி மறுபடியும் வேலை வாய்ப்பு அலுவலகம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பரிந்துரை செய்ய முடியும்? ஒருவரை எப்படி இருமுறை தேர்வு செய்ய முடியும்?. ஒருவருக்கு எப்படி இரண்டு வேலை அளிக்க முடியும்?.

முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறாத பலர் முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக ஒரு இடத்திற்கு ஐந்து பேர் என்ற வீதத்தில், 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர் தான் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இதே போன்று, கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 196 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள பத்து பணியிடங்களில் யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இதுபோன்ற கேள்விகள் எல்லாம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கனவே எழுப்பப்பட்டு விட்டன. பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கிறது.

இது மட்டுமல்லாமல், போலிகளின் வரிசையில், போலி மதிப்பெண் சான்றிதழ் வேறு சேர்ந்துவிட்டது. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் [^] சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இதன் விளைவாக கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவரை பார்வையாளர்கள் என்ற போர்வையில் சில மர்ம நபர்கள் சந்தித்து உண்மையைச் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் [^] வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள் யார் என்ற விவரத்தை காவல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மட்டும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஜெ. பாதுகாப்பு [^]க்கு 23,400 பேர்:

இந் நிலையில் திருச்சி [^]யில் வரும் 14ம் தேதி நடக்கும் அதிமுக ஆர்பாட்டத்தில் பங்கேற்க வரும் ஜெயலலிதாவுக்கு தலைமையில் 23,400 ஜெயலலிதா பேரவை உறுப்பினர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனராம்.

இதற்காக அவர்களுக்கு கருப்பு, சிவப்பு, வெள்ளையில் சீருடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் சேர்ப்பது தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் ஜெ.பேரவை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் மனோகர், ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த பேரவை நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா இடங்களிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கழக பாடல்களை ஒலிக்க விடுங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அம்மா தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் அதை உறுதி செய்யும் அதனால்தான் சிலர் இப்போதே தொகுதி மாற யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், அம்மாவின் பாதுகாப்புக்கு 234 சட்டமன்ற தொகுதிக்கு 100 ஜெ. பேரவை நிர்வாகிகள் வீதம் 23,400 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

அமெரிக்காவின் ஒரு நீர்மூழ்கியில் 150 அணு ஆயுதங்கள்!


ஒரு பக்கம் பனிப் போர் காலத்தில் தயாரித்து குவித்து வைத்த அணு ஆயுதங்களை அமெரிக்காவும் ரஷ்யாவும் அழித்து வந்தாலும், இன்னொரு பக்கம் இரு நாடுகளுமே போட்டி போட்டிக் கொண்டு நவீன ரக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

'Global nuclear weapons inventories, 1945-2010' என்ற ஆய்வறிக்கையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

ராபர்ட் நோரிஸ், ஹேன்ஸ் கிரிஸ்டென்சன் ஆகிய சர்வதே அணு ஆயுத நிபுணர்கள் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில்,

இந்தியா மற்றும் பாகி்ஸ்தானிடம் தலா 150 அணு ஆயுதங்கள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், அமெரிக்காவின் ஒரு டிரைடன்ட் ரக நீ்ர்மூழ்கியிலேயே 150 அணு ஆயுதங்களுடன் கூடிய ஏவுகணைகள் உள்ளன.

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேல், வட கொரியா போன்ற நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை.

இன்றைய நிலையில் உலகின் 9 அணு ஆயுத நாடுகளிடம் சுமார் 22,400 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. இதில் 95 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தான் உள்ளன.

இதில் அமெரிக்காவிடம் 9,400 அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் 5,100 அணு ஆயுதங்கள் பென்டகன் வசமும் மற்றவை அமெரிக்க அணு சக்தித் துறையிடமும் உள்ளன.

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பிரான்சிடம் தான் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன. பிரான்சிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளன.

அடுத்த நிலையில் சீனா உள்ளது. அந்த நாட்டிடம் சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் மேலும் 100 அணு ஆயுதங்களைத் தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில் பிரிட்டனும் பிரான்சும் தங்களது அணு ஆயுதங்களை பெருமளவு குறைத்துவிட்டன. பிரிட்டனிடம் 225 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், தனது ஏவுகணைகளின் எண்ணிக்கையை பிரிட்டன் வெறும் 50 ஆக சுருக்கிவிட்டது. இவற்றால் மொத்தமே 150 அணு ஆயுதங்களையே ஏந்திச் செல்ல முடியும். மேலும் தன்னிடம் உள்ள 3 அணு ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கிகளில் ஒன்றை மட்டுமே பிரிட்டன் இயக்கி வருகிறது.

பிரான்ஸ் தனது அணு ஆயுத எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்து வருகிறது. 1964ம் ஆண்டில் 1,260 அணு ஆயுதங்கள் வைத்திருந்த பிரான்ஸ் அதை 1992ல் 540 ஆகக் குறைத்தது. இப்போது 300 ஆக்கிவிட்டது. தொடர்ந்து இவை குறைக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் சர்கோசி கூறியுள்ளார்.

இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவுகள் மதிப்பிட்டுள்ளன.

1945ம் ஆண்டு முதல் உலகில் சுமார் 1.28 லட்சம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. இதில் 55 சதவீத ஆயுதங்கள் அமெரிக்காவிலும் 43 சதவீத ஆயுதங்கள் சோவியத் யூனியன்/ரஷ்யாவிலும் தயாரிக்கப்பட்டன. 1986ம் ஆண்டில் தான் உலகில் மிக மிக அணு ஆயுதங்கள் இருந்தன.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு அமெரிக்காவும் ரஷ்யாவும் 'Strategic Arms Reduction Treaty (New START)' ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த ஆயுத ஸ்டாக்குகளை குறைத்து வருகின்றன. அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்ய ரஷ்யாவுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்கள் நிதியுதவியும் அளித்து வருகிறது. இதன்படி ஆண்டுக்கு சுமார் 1,000 அணு ஆயுதங்களை ரஷ்யா அழித்து வருகிறது.

அமெரிக்கா இதுவரை 60,000 அணு ஆயுதங்களை அழித்துவிட்டது. ஆனால், இதிலிருந்த 14,000 புளுட்டோனியம் கருக்களை அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. இதைக் கொண்டு எந்த நேரமும் புதிய அணு ஆயுதங்களைத் தயாரித்து விடலாம். இந்த புளுட்டோனியம் பேன்டெக்ஸ் பிளாண்ட் மற்றும் டென்னசி மாகாணத்தி்ல் ஒரு ரகசிய இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டனிடம் 1970ம் ஆண்டில் தான் மிக அதிகபட்சமாக 350 அணு ஆயுதங்கள் இருந்தன. இதில் மூன்றில் ஒரு பகுதி ஆயுதங்களை அந்த நாடு அழித்துவிட்டது.

ஆனால் அதே நேரத்தில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆயுதத் தயாரிப்பை தீவிரமாக்கியுள்ளன. அதே போல அமெரிக்காவும் ரஷ்யாவும் ரகசியமாக நவீன ரக அணு ஆயுதத் தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும் அமெரிக்காவின் அணு ஆயுதங்களில் 500 ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடம் சுமார் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்றும் மேலும் 105 அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான புளுட்டோனியமும் இருக்கலாம் என்று தெரிகிறது.

பாகிஸ்தானிடம் 90 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 90 ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான அணு கதிர்வீச்சு பொருட்கள் பாகிஸ்தான் வசம் உள்ளன.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா-65வது ஆண்டு நினைவு தினம்:

இந் நிலையில் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதில் பங்கேற்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஜப்பான் சென்றுள்ளார். நாகசாகி நகரில் நினைவு அருங்காட்சியகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தாக்குதலில் உயிர் தப்பியவர்களை மூன் சந்தித்துப் பேசினார்.

பத்தாம் வகுப்பு மட்டும் படித்தவருக்கு ஐ.ஏ.எஸ். பதவி!



தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த மூத்த அதிகாரிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

18 வயதில் இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்த அவருக்கு இன்னும் 5 ஆண்டு பதவிக் காலம் உள்ளது.

தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாவது ஒரு வகை. பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாவது இன்னொரு வகை.

அந்த வகையில் இப்போது தமிழகத்தில் 19 பேருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை [^] மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமியும் ஒருவர். இவரது கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே.

1973ம் ஆண்டு குரூப் 4 தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர்ந்த இவர் பள்ளிப்பட்டு தாலுகாவில் இளநிலை உதவியாளராக பணியைத் தொடங்கியவர். பின்னர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பதவியுயர்வுகள் பெற்றார்.

அரசுத்துறையில் பல்வேறு பணிகளில் 37 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். இந்த நீண்ட அனுபவமும் பணியில் சிறப்பாக செயல்பட்டதுமே அவருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை அளித்துள்ளது.

ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி நேரடியாக அதிகாரிகளாகும் நபர்களைவிட பெரும்பாலான நேரங்களில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளே சிறப்பான முடிவுகளை எடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் முனுசாமியின் அனுபவத்துக்கு இந்த ஐ.ஏ.எஸ் அந்தஸ்து பொறுத்தமானதே என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.

பிரணாபுக்கே வீட்டு லோன்-தேவையில்லாத தொலைபேசி அழைப்புகளை தடை செய்ய ராஜா உத்தரவு


மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி [^] முக்கிய கூட்டத்தில் இருந்தபோது வீட்டுக் கடன் வேண்டுமா என்று கேட்டு வந்த தொலைபேசி அழைப்பால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து தேவையில்லாத தொலைபேசி அழைப்புகளுக்குத் தடை விதிக்க தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் [^] ராஜா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் அமளியை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு வந்த செல்போன் அழைப்பில் வீட்டுக் கடன் தேவையா என்று கேட்டதால் டென்ஷனாகி விட்டார் பிரணாப்.

இந்த பிரச்சினை நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அப்போது பேசிய அமைச்சர் அம்பிகாசோனி, இதுபோன்ற அழைப்புகளைத் தடுக்க வசதி உள்ளது. அதை நான் செய்துள்ளேன். ஆனால் அதையும் மீறி வருகிறது. இதைத் தடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார்.

பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், ஒரு நாளைக்கு 40 அழைப்புகள் வரை எனக்கு வருகிறது. இப்போது நிதியமைச்சருக்கே வந்து விட்டது. இதைத் தடுத்தாக வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ரஷீத் கூறுகையில், மிகவும் முக்கியமான நேரங்களில்இதுபோன்ற தேவையற்ற அழைப்புகள் வருவது பெரும் தொல்லையாக உள்ளது என்றார்.

பல்வேறு எம்.பிக்களும், இந்த தேவையற்ற அழைப்புகளால் ஏற்படும் அவஸ்தையை ஒரே குரலில் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தனர். இதையடுத்து மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா, தேவையற்ற அழைப்புகளை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை [^] எடுக்குமாறு தொலைத் தொடர்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை செயலாளர் பி.ஜே. தாமஸுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இனிமேல் செல்போன்களுக்கு தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் வருவது முழுமையாக தடை செய்யப்படும் எனத் தெரிகிறது.

"கேள்வி எண்.161க்கான பதில் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,' - நாடாளுமன்றத்தில் அழகிரியின் முதல் வார்த்தைகள்.

"கேள்வி எண்.161க்கான பதில் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,' - நாடாளுமன்றத்தில் அழகிரியின் முதல் வார்த்தைகள்.

மத்திய உரத்துறை அமைச்சராக பதவியேற்ற மு.க.அழகிரிக்கு, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் கேள்விக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதில் அளிப்பது சிரமமாக இருந்ததால், கேள்வி நேரத்தின் போது சபைக்கு வருவதை தவிர்த்தார். தன் துறை தொடர்பாக எம்.பி.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழில் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை பரிசீலித்த சபாநாயகர் மீரா குமார், "பிரதான கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தரப்படும் பதிலை சபையில் அமைச்சர் அழகிரி வாசிக்கலாம். துணை கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதில் அளிப்பார்' என கூறினார்.

 


இந்நிலையில், லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது சபையில் இருந்த அமைச்சர் அழகிரியை, பிரதான கேள்விக்கு பதில் அளிக்கும்படி சபாநாயகர் அழைத்தார். உடன் எழுந்த அமைச்சர் அழகிரி, ""கேள்வி எண்.161க்கான பதில் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார். எம்.பி.,க்கள் எழுப்பிய துணை கேள்விகளுக்கு ரசாயனத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதில் அளித்தார்.

இதைவிட நாலு பேருக்கு ...... பிழைக்கலாம் ! - ஈனப்பயல் முரளிதரன்.


தின இதழின் தலையங்கம் :



இதன் மூலம் தெளிவாய் தெரிகிறது எப்படிப்பட்ட தமிழர்கள் ராஜபக்சேவின் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று.முதலில் டக்லஸ் , பின்னர் கருண...ா- பிள்ளையான் , பின்னர் கே பி , அதற்க்கு பின்னர் இன்னும் சந்தேகத்தில் ராம் போன்றோர், கலை துறையில் அசின் வைகையறாக்கள், அரசியலில் கருணாநிதி மற்றும் சோனியா வகையறாக்கள், இப்போது விளையாட்டு துறையில் முரளிதரன் வகையறாக்கள்.

 

அநியாயமாய் செத்தவன் ஒரு லக்ஷம் பேர் தமிழன்தான் என்பதை சவுகரியமாய் தமது வசதி வாய்ப்புகளிர்காக மறந்த நாயை விட கேவலமான விபசாரியை விட அசிங்கமான ஈனபிறவிகள் இவர்கள். - இதுதான் வரலாறு.


முரளிதரனுக்கு :



இப்படி இன துரோகத்தனம் செய்து பிழைப்பதை விட ,முன்னாள் அமெரிக்க சனாதிபதி கிளிண்டனுக்கு "அவசர சேவை" செய்து பிளைத்தார்களே ! பின்னர் அது பெரும் சர்ச்சையானதே அந்த மாதிரி நான்கு பேருக்கு செய்து வாழ்க்கையை ஓட்டலாம்.


இன்று வந்துள்ள செய்தி :



இலங்கையர் என்று சொல்லிக் கொள்வதில் அதிகம் பெருமை அடைவதாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தினால் நடத்தப்பட்ட விசேட கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது முரளீதரன் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் ஓய்வு பெற்றதன் பின்னர் முத்தையா முரளீதரன் முதல் தடவையாக தொலைக்காட்சி ஊடகமொன்றில் தோன்றி ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார்.


30 ஆண்டு காலமாக நாட்டில் நீடித்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு தமது விசேட நன்றியை தெரிவிப்பதாக முரளீதரன் தெரிவித்துள்ளார்.



தமிழர், முஸ்லிம் மற்றும் சிங்களவர் என பிரிவினை பாராட்ட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

18 ஆண்டுகள் இலங்கை அணிக்காக கிரிக்கட் விளையாடிய தமக்கு எந்த நேரத்திலும் தமிழர் என்பதனால் எவ்வித தடையும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


சில குறுகிய லாபங்களை அடைய எத்தனிக்கும் ஒரு சக்திகள் தமிழர், சிங்களவர் அல்லது முஸ்லிம் என்பதனை வெளிப்படுத்த முனைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பேதங்களை மறந்து இலங்கையர் என வாழ்வது மிகவும் பயனுடையதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரி விடுதியில் தங்கி படித்த தமக்கு தமிழர், சிங்களவர் அல்லது முஸ்லிம் என பேதம் பாராட்டத் தெரியாதென அவர் தெரிவித்துள்ளார்.


முரளீதரனின் இந்த நேரடி செவ்வியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நேரடியாக தொலைபேசி மூலம் இணைந்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


கிரிக்கட் விளையாட்டின் மூலம் தாம் அதிக நண்பர்களை ஈட்டிக் கொண்டதாக முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.


முத்தையா முரளீதரனினால் கிரிக்கட் துறைக்கு ஆற்றப்பட்ட சேவையை கௌரவிக்கும் நோக்கில் பல்லேகலே சர்வதேச விளiயாட்டு அரங்கு நேற்று முதல் முத்தையா முரளீதரன் சர்வதேச கிரிக்கட் மைதானமாக அழைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.



கருத்து சுதந்திரத்தை மறுக்காதே! போர் குற்றத்தை மறைக்காதே! - மக்கள் எழுச்சிப் பொதுக்கூட்டம் - கருத்துரிமைக் களம்.

சென்னையில் வரும் வெள்ளி(06-08-10) மாலை 5.30 மணிக்கு மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது. தமிழர்களின் கருத்து சுதந்திரத்தை மறுப்பதற்கும் இலங்கை இனவெறி அரசால் நடத்தபெற்ற போர் குற்றங்களை மறைக்கவும் முழுவீச்சாக இறங்கியிருக்கும் அரசை கண்டிக்கும் மக்கள் அனைவரும் இணைகிறார்கள். கருத்துரிமை களம் என்ற அமைப்பு நடத்தும் இந்த நிகழ்வில் தமிழ் உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

 




சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள். காரணம், அதற்கான தகுதி இங்கே யாருக்கும் இல்லை!''

இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர் அமீர்.

ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா.

அவரது இந்தப் பேச்சு ஈழ ஆதரவு இயக்குநர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்பு சீமான், அமீர் இருவரும் கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால், இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட திரைத் துறை தயாராக இல்லை. இப்படியொரு நிலையில் சீமானுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பாரதிராஜா பேசி இருப்பது, திரைத் துறைக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே சீமானோடு கைதானவரும், இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளருமான இயக்குநர் அமீர் இதுகுறித்து 'ஜூனியர் விகடனுக்கு' அளித்துள்ள பேட்டி:

ஈழப் போர் நடந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் என பெரிய அளவில் போராடிய திரைத் துறை, இப்போது ஈழ விவகாரத்தையே அடியோடு மறந்துவிட்டதே?

''போர் நிறுத்தப்பட வேண்டும். ஈழ மக்களும் போராளித் தலைவர் பிரபாகரனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுப் போராட்டமாக இருந்தது. எத்தனையோ விதமான போராட்டங்களை நடத்தியும்,
முத்துக்குமார் போன்ற வாழைக் குருத்துகளை வாரிக் கொடுத்தும், நம்மால் போரைத் தடுக்க முடியவில்லை. உலகமே வேடிக்கை பார்க்க... ஈழமே இழவுக் காடாகிவிட்டது.

புலிகள் இயக்கம் இதுவரை காணாத வீழ்ச்சியை அடைந்துவிட்டது. புலித் தலைவரின் முகத்தைப் போன்ற பிரேதத்தைக் காட்டி, எழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் மனதை சிங்களச் சதி வீழ்த்திவிட்டது.

திரைத் துறையினரும் மக்களின் ஓர் அங்கம்தான். ஈழத்தின் வீழ்ச்சிதான் திரையுலகினரை அடியோடு முடக்கிப் போட்டதே தவிர, ஈழ உணர்வு இற்றுப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது.

சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ் மக்களை சோற்றுக்காகப் போராடவைத்து, இனி தனி ஈழ எண்ணமே அவர்களுக்கு எழாதபடி சிங்கள அரசு செய்துவிட்டது.

முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு விடிவு பிறக்கச் செய்ய இங்கே பெரிதான போராட்டங்கள் இல்லை. ஒருமித்த கைகோர்ப்பும் இல்லை. 'இனி ஈழ விடிவுக்கு வழியே இல்லை' என மக்களுக்குள் உண்டாகி இருக்கும் இயலாமையும் சோகமும் அவர்களை அமைதியாக்கிவிட்டது. அவர்களை மீண்டும் உசுப்ப... இங்கே யாரும் இல்லை!''

ஆரம்பத்தில் ஈழ விவகாரத்துக்காக சீமானோடு ஜெயிலுக்குப் போனவர் நீங்கள். 'நாம் தமிழர்' இயக்கத்தை தொடங்கி சீமான் இன்று வரை போராடிவரும் நிலையில், உங்களைப் போன்றவர்கள் அப்படியே அமைதியாகிவிட்டீர்களே? அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களை அந்த அளவுக்குப் பயமுறுத்தி இருக்கிறதா?

''ஈழ விவகாரத்துக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ராமேஸ்வரம் பேரணியில் கலந்துகொண்டு நான் பேசினேன். அதேபோல் முதல்வர், துணை முதல்வர் நடத்திய மனிதச் சங்கிலி ஊர்வலத்திலும் முதல் ஆளாகக் கலந்து கொண்டேன். போராட்டங்களை என் தலைமையில் நடத்துகிற அளவுக்கோ, பெரும் கூட்டத்தைத் திரட்டுகிற அளவுக்கோ எனக்கு சக்தி இல்லை. ஈழத்துக்காக தனி இயக்கம் தொடங்கி நடத்துவதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சுய பரிசோதனை இல்லாமல் 'நானும் களத்தில்' எனச் சொல்லி என்னால் நாடகமாட முடியாது.

தனி இயக்கம் தொடங்கி நடத்துகிற வல்லமையும் ஆற்றலும் தனக்கு இருப்பதாக சீமான் நினைக்கிறார். அதற்காகப் போராடுகிறார். ஆனால், என்னால் முடிந்தது ஆக்கபூர்வப் போராட்டங்களுக்கு தனிப்பட்ட எனது பங்களிப்பைச் செய்வது மட்டுமே. நாளைக்கே முள்வேலி மக்களுக்காக ஒரு போராட்டத்தை யாராவது நடத்தட்டும். அதில் அழையாத ஆளாக நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். மற்றபடி, அரசுத் தரப்பில் இருந்து எனக்கு எவ்வித மிரட்டலும் இல்லை. எத்தகைய மிரட்டலுக்கும் நான் அஞ்சுகிற ஆளும் இல்லை!''

சீமானின் போராட்டம் அரசியல் சார்ந்தது. அவருடைய கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரதிராஜா சொல்லி இருக்கிறாரே?

''ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு தலைவர் உருவெடுப்பார். இதுதான் வரலாறு. அதில் தவிர்க்க முடியாத சக்தியாக ஈழ எழுச்சிக்கு என இப்போது சிலர் உருவெடுக்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் ரத்த உறவுகள் தத்தளிக்கும் நிலையை எண்ணி எல்லோருடைய ஈரக் குலையும் துடிக்கத்தான் செய்கிறது.

ஆனால், எல்லோராலும் வீதிக்கு வர முடியவில்லை. செவிகளைக் கிழிக்கும் அளவுக்கு முழங்கி, தார்க் குச்சி போட்டு தமிழர்களைத் தயார்படுத்துகிற வேகம் சீமானிடம் தெரிகிறது. அதற்குக் கைகொடுக்காவிட்டாலும், அவரைக் காயப்படுத்தாமல் இருப்பதுதான் இப்போது அவசியமானது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழங்கியதால்தானே சீமான் சிறைக்குப் போனார்! இதே முழக்கத்தைத்தானே கடிதம் வாயிலாக தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு உரைக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இதற்காகத்தானே இலங்கை தூதரகத்தையே பூட்டுவோம் என்கிறார். அப்பாவி மீனவர்கள் கொல்லப்படக் கூடாது என்கிற ஒரே நோக்கம்தான் எல்லோருக்கும். அதன் வார்த்தை வடிவங்கள்தான் வேறு. இதில் சீமானுக்கு மட்டும் எங்கே இருந்து அரசியல் வந்தது? அப்படியே அரசியலாக இருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது பாரதிராஜாதானே! அவரைப் பார்த்தும், அவருடைய ஆதங்கப் பேச்சைக் கேட்டும்தானே ஈழ உணர்வு எங்களுக்குள் வந்தது.

ஈழப் போர் தடுக்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தைத் தூக்கி வீசி தமிழனின் கோபம் எப்படிப்பட்டது என்பதை நிரூபித்த பாரதிராஜா, சீமான் கைது குறித்து இப்படிச் சொல்லலாமா?

பத்மஸ்ரீ பட்டத்தை வீசியதைக் காட்டிலும், மீனவர்களுக்காகக் குரல் கொடுத்தது ஆவேச மிகுதியா? கோபத்தையும் கொந்தளிப்பையும் கற்றுக்கொடுத்த பாரதிராஜா, இன்று எதற்காக இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார்? சீமான் கைது குறித்து அவர் உதிர்த்த வார்த்தைகளால் இணைய தளங்களில் 'பாரதிராஜாவா பசில் ராஜாவா?' என விவாதமே நடத்துகிறார்கள். உங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களான நாங்கள் அதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடிய சூழலில் இருக்கிறோம்!''

உங்களின் 'யோகி' பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில், 'இனி ஒரு வருடத்துக்கு எந்த விழா விலும் பேச மாட்டேன். ஈழத் துக்கத்துக்காகமௌனம் காக்கப்போகிறேன்' எனச் சொன்ன பாரதிராஜா முதல்வர் கலந்துகொண்ட விழாவில் அவரை வானளாவப்புகழ்ந்தாரே?

''இதே கேள்வியை பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மாபெரும் கலைஞராக, தமிழ் மண்ணை உரித்துக் காட்டிய படைப்பாளராக பாரதிராஜாவை மனதுக்குள் பூஜிக்கிறவர்கள்தான் நாங்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 'திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு' அமைத்து விவாதித்தபோது, அங்கே இருந்தவர் பாரதிராஜா! அங்கே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக திரைத் துறையினர் பிரசாரம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே நான் எழுந்து, 'நாம் கட்சி நடத்தவில்லை. ஓட்டு கேட்பது நம் வேலையும் இல்லை' எனச் சொன்னேன். அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களையும் தவிர்த்தேன். அன்றைக்கு அ.தி.மு.க. வெற்றிக்கு வித்திடும்விதமாக திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு போராடியதை பாரதிராஜா தடுத்திருக்கலாமே? ஏன் அதை பாரதிராஜா செய்யவில்லை?

'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என அன்று கோஷம் எழுப்பிய சீமானுக்கு ஈழ அரசியல் குறித்து பாரதிராஜா எடுத்துச் சொல்லி இருக்கலாமே? அன்று பாரதிராஜா ஏன் அதைச் செய்யவில்லை? அப்படிப்பட்ட அவர் இப்போது மனம்மாறி வேறு விதமாகப் பேசுகிறார்.

அப்போது 'இலை'க்காக சீமான் பேசியது அரசியல் சார்பற்ற ஒரு நடவடிக்கை என்றால், இப்போது 'ஈழம்' பற்றி பேசிவிட்டு சிறைக்குப் போயிருப்பது எப்படி அவருடைய கட்சி சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும்? 'இலை'க்காக வலம்வந்த சீமானின் நடவடிக் கைகளில் அப்போதே எங்களுக்கு உடன்பாடு இல்லை!

மற்றபடி வசதிக்கேற்ப தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.

அசின் இலங்கைக்குப்போய் ஈழ மக்களை சந்தித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?

''ஐ.நா சபை பிரதிநிதிகளையே விரட்டி அடிக்கும் ராஜபக்ஷே அரசு, அசினுக்கு மட்டும் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறது? அசின் என்ன ஐ.நா-வையே மிஞ்சியதேவலோக தூதரா? நம்முடைய கைகளாலேயே நம் கண்ணைக் குத்தும் வேலையை அசின் மூலமாக கனகச்சிதமாக அரங்கேற்றுகிறது சிங்கள அரசு.

அசின் விவகாரத்தில் ஆயிரம் அரசியல் இருக்கிறது. சூர்யா உள்ளிட்ட நடிகர்களையும் ஈழ மக்கள் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, ஆள் பிடிக்கும் வேலையையும் அசின் செய்யத் தொடங்கி இருக்கிறார். அவரை அழகுப் பதுமையாக ஆராதிக்கும் தமிழக மக்கள் இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளவேண்டும்!''

சீமானை மீட்கும் முயற்சிகளில் உங்களைப்போன்ற திரை உலகத்தினர் ஈடுபடுவார்களா?

''யாரும் செய்ய மாட்டார்கள். இது சீமானுக்கும் தெரியும். சீமானின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்க இங்கே இருக்கும் உணர்வாளர்கள் தயாராக இல்லை. சீமானுடன் சிறையில் இருந்து அவருடைய மனவோட்டத்தை அறிந்தவனாகச் சொல்கிறேன்... சிறை ஒருபோதும் அவருடைய உணர்வைச் சிதைக்காது!''

லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள் முடக்கப் பட்டு இருக்கும் நிலையில், அவர்களின் மீட்சிக்காக சினிமா துறையினர் இனி எத்தகைய முயற்சிகளையும் எடுக்க மாட்டார்களா?

''பாக்கு தொடங்கி கோக் விளம்பரம் வரைக்கும் சினிமா தாண்டியும் நட்சத்திரங்கள் பிஸியாக இருப்பதற்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. இருப்பினும், அவர்கள் போராட வந்துபோதுகூட, 'த்ரிஷாவோட டிரஸ்ஸை பார்த்தியா? விஜய்யோட ஷ¨வை பார்த்தியா?' என அப்போதும் நடிகர் களாகவே வேடிக்கை பார்த்தவர்கள்தானே நாம்? காவிரி பிரச்னை தொடங்கி,ஈழப் பிரச்னை வரைக்கும் ரஜினியையும் கமலையும் தொங்கித் தொங்கியே நாம் தோற்றுப்போனது போதும்! ஒவ்வொரு தமிழனும் உண்மையான உணர்வோடு வீதிக்கு வந்தால், நம் பின்னால் ரஜினியும் கமலும் கண்டிப்பாக நிற்பார்கள். தவிர்க்க முடியாத அந்தக் கட்டாயமே அவர்களை நம் பின்னால் அணி வகுக்கச் செய்யும்.

இந்த நேரத்தில் என் ஒரே கோரிக்கை... தயவு செய்து சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள். காரணம், அதற்கான தகுதி இங்கே யாருக்கும் இல்லை!''




கே பி நல்லவரா ? கெட்டவரா ? துரோகியா ?

தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும், அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது  பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை.


கடந்த சனிக்கிழமை, கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந்தேகத்தைப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. கே.பி. தனது திட்டத்தை மேற்கொள்ளும் குழுவிற்கு 'பாரிசில் வாழும் விடுதலைப் புலிகளின் முன்னாள் அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் திரு. வேலும்மயிலும் மனோகரன் அவர்கள் தலைமை தாங்குவதாக அறிவித்துள்ளார். திரு. வே. மனோகரன் அவர்களே பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசின் அத்தனை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தி வருகின்றார். தான் விரும்பியவர்கள் தெரிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தால், பிரான்சில் நடைபெற்ற இரு மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்ததுடன், இன்றுவரை அது குறித்த எந்த முடிவுக்கும் வரவிடாமல் திரு. ருத்ரகுமாரனையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.

திரு. கே.பி. நல்லவரா? கெட்டவரா? தியாகியா? துரோகியா? என்பதற்கும் அப்பால், கேபி. தற்போது சிங்கள அரசின் பிடியில் உள்ளார். அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவரால் ஈழத் தமிழர்களுக்கோ, தமிழீழ மண்ணுக்கோ எந்த நல்லதும் நிகழப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனாலும், புலம்பெயர் தேசத்தில் உள்ள குழப்பவாதிகள் கே.பி.யை மையப்படுத்திப் புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பங்களை உருவாக்குவதில் குறியாக உள்ளனர். இது, தங்கள் மீதான நம்பிக்கையை இழந்த காரணத்தால் அவர்களால் எடுக்கப்பட்ட முடிவா? அல்லது திட்டமிட்ட சி-ங்கள நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட செயற்பாடா? என்பது புரிந்து கொள்ள வேண்டிய விடயம்.


எது எவ்வாறு இருந்தாலும், கே.பி. மூலமான சிங்கள தேசத்துடனான சமரசம் என்ற இந்தக் குழப்பவாதிகளால் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைக்கான ஜனநாயக வழிப் போராட்ட வடிவம் சிதைக்கப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. சிங்கள தேசத்தின் ஜனநாயக மறுப்பும், இன வன்முறைத் தொடர்ச்சியும் ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாசைகள் பக்கம் மேற்குலகை நகர்த்தி வரும் இந்த வேளையில், அது சார்ந்த பேரெழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டியவர்கள் கே.பி. சார் நிலையை எடுப்பது வேடிக்கையானதாகவே உள்ளது.


அடித்து நொருக்கித் துவைத்துப் போடப்பட்ட தமிழீழ மக்களது வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சுய மரியாதையுடன் வாழ வகை செய்ய வேண்டும், சிறைப்படுத்தப்பட்டுள்ள மக்களும் போராளிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கள நிலையைப் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், தமிழீழ மக்களது சுதந்திர வாழ்வுக்கும், உயிர் உடமைப் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமற்ற நிலையில் தமிழீழ மண்ணில் எந்த விதமான பாரிய அபிவிருத்தித் திட்டங்களையோ, மீள் கட்டுமானங்களையோ மேற்கொள்ள முடியாது என்ற யதார்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமது சொந்த ஊர்களில், தமது சொந்த வீடுகளில் நிம்மதியாக வாழ முடியாத, வாழ்வுரிமை ஜனநாயகம் மறுக்கப்பட்ட இன்றைய சூழ்நிலையில் அந்த மக்களுக்கான அபிவிருத்தி என்பது சிங்கள அரசை ஏதோ ஒரு வகையில் காப்பாற்ற முற்படும் செயலாகவே நோக்கப்பட வேண்டும்.


கே.பி. அவர்களை வைத்து சிங்கள தேசம் நடாத்தும் நாடகத்தில் பங்கேற்கும் நடிகர்களாக புலம்பெயர் தேசங்களிலும் பலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்து வருகின்றார்கள். கே.பி. கைது செய்யப்பட்டார்... சிங்கள அரசால் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்... அவர்மீது மிக மோசமான வன்முறைக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றது... எனப் பல்வேறு செய்திகள் மூலம் புலம்பெயர் தமிழர்களது நாடித் துடிப்பை அறிந்து கொள்ள முற்பட்டுத் தோற்றுப்போன இவர்கள், தற்போது கே.பி. மூலமான மீட்பு, கே.பி. மூலமான அபிவிருத்தி, கே.பி. மூலமான விடுதலை என்ற புதிய வார்த்தைப் பிரயோகங்களுடன் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மீண்டும் ஒரு பிளவு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.


2009 மே 18 இற்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆயுத போர்க் களம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் குழப்ப நிலைக்குள் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளார்கள். அதுவே சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் வசதியானதாக உள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் உருவான மக்கள் பேரவைகளும், நாடு கடந்த தமிழீழ அரசும் ஜனநாயக ரீதியாகப் புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக இருந்தாலும் இன்று வரை அந்த அமைப்புக்களின் சாதனைகள் என்று குறிப்பிடும்படியாக எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம், இந்த இரு அமைப்புக்களுக்கும் இடையே நட்புறவோ, இணக்கப்பாடோ இருப்தாகக் கூட உணர முடியவில்லை.


'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற புதிய கருத்தை முன்மொழிந்த கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது சிறிலங்கா அரசின் விருந்தாளியாக உள்ளார். கே.பி. கைதியாகவே உள்ளார் என்று வைத்துக்கொண்டாலும், அவரால் தற்போது அவரது எஜமானர்களை மீறி எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்திவிட முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால், தற்போது சிங்கள தேசத்தால் உருவாக்கிவிடப்படும் கே.பி. குறித்த பரபரப்பு செய்திகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் குழப்பமடைவதற்கு எதுவுமே இல்லை. அந்தச் செய்திகளைப் புறம் தள்ளிவிட்டு, மேற்குலகின் மனமாற்றங்களை வலுப்படுத்தி, அதனைத் தமிழீழ விடுதலைக்கான போர்க்களமாகத் தொடர்ந்து பயணிப்பதே எமது மக்களையும், மண்ணையும் விடுவிப்பதற்கான ஒருவழிப் பாதையாக உள்ளது.


இந்தக் குழப்பமான சூழ்நிலைகளை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டிய பாரிய கடமை நாடு கடந்த தமிழீழ அரசுக்கும், மக்கள் பேரவைகளுக்கும் உண்டு. குறிப்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால நிர்வாகப் பணிப்பாளர் திரு. ருத்ரகுமாரனுக்கு உள்ளது. 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற புதிய கருத்தியலை முன்மொழிந்தவர் திரு. கே.பி. அவர்கள் என்பதாலும், அதனை உருவாக்கும் பணியை மேற்கொள்பவர் திரு. ருத்ரகுமாரன் என்பதாலும், நாடு கடந்த தமிழீழம் சார்ந்து திரு. கே.பி. அவர்கள் குறித்த தமது நிலையை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.


முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடூரங்களையும் அரங்கேற்றி முடித்த சிங்கள அரசுக்கு இப்போது தோற்கடிக்கப்பட வேண்டிய ஒரே போர்க் களமாக புலம்பெயர் தமிழர் பலமே எஞ்சியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்கும், அவர்களது போர்க் களத்தை முறியடிப்பதற்கும் சிங்கள அரசு தனது அனைத்து வளங்களையும், பலங்களையும் திசை திருப்பி விட்டுள்ளது. மேற்குலகின் பல துதரகங்களுக்குத் தனது படைத் தளபதிகளையே துதுவர்களாக நியமித்து வருகின்றது. அத்துடன், தமிழ் மக்கள் மத்தியில் ஏராளமான புலனாய்வாளர்களையும், கொடூரமான ஒட்டுக் குழுவினரையும் ஊடுருவ விட்டுள்ளது. அவர்களுக்கு வேண்டிய அத்தனை வசதிகளும் சிறிலங்கா துதராலயங்களால் வழங்கப்பட்டு வருகின்றது.


தமிழீழ விடுதலைத் தளத்தில் முன்நின்று போராடும் அமைப்புக்களுக்கிடையே பிளவுகளை உருவாக்கி, அவர்களிடையே மோதல்களைத் தோற்றுவித்து, இடை நுழைந்து சிலரை இல்லாமல் ஆக்கும் திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாகச் சில செய்திகள் சிங்கள ஊடகவியலாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில், சிங்கள அரச வன்முறை புலம்பெயர் தேசங்களிலும் குழு மோதல் என்ற போர்வையில் அரங்கேற்றப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு வசதியாகவே, புலம்பெயர் தேசங்களில் கள நிலமை மாற்றம் பெற்று வருகின்றது. இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவைகளும் அவதானமாகச் செயற்பட வேண்டும்.


மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படும் குழப்பங்களுக்கும், பிளவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவைகளும் திறந்த பேச்சுக்களை நடாத்திப் பொது இணக்கத்திற்கு வரவேண்டும். அந்த இணக்கப்பாட்டுடன் மக்கள் மத்தியில் தமது விடுதலைப் பயணம் குறித்த நிலையைத் தெளிவு படுத்த வேண்டும். எல்லாக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே. அதைப் படிக்கல்லாக மாற்றும் வித்தை தற்போது யாருக்கும் இல்லை என்பதை, சிங்கள தேசத்தைப் புரிந்து கொண்ட அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.


        நன்றி
பகலவன் குழுமம்

அடைமொழி அரசியல் வாதிகள் - அசிங்கமான அரசியல் .

தினமணியின் இன்றைய தலையங்கத்தை பார்த்தேன்  அதில் உள்ள ஒவ்வொரு வரியும் ஏற்புடையது. அதை அப்படியே இங்கு பதிகிறேன் .
கோவையில் ஜெயலலிதா பேசியது எவ்வளவு  தாக்கத்தை  கருணாநிதிக்கு ஏற்படுத்தி உள்ளது எனபது தெளிவாகிறது.



ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தை இறக்கி ஒரு கூட்டத்தை ஆளும் திமுக அரசு கோவையில் கூட்ட ஆரம்பித்த பொழுதே இவர்கள் ஒப்புகொண்டார்கள் திமுக அரசு இப்போது பலவீனப்பட்டுவிட்டதென்று.


இனி தலையங்கத்தை பார்ப்போம் :

திங்கள்கிழமை கோவையில், முதல்வர் கலந்துகொண்ட மாபெரும் திமுக பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. விலைவாசி உயர்வுக்கு எதிராகச் சில நாள்கள் முன்பு அதே கோவையில், அதே வ.உ.சி. திடலில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கண்டனக் கூட்டத்தின் வெற்றி, முதல்வரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை முதல்வரின் பேச்சு தெளிவுபடுத்தி இருக்கிறது.


முதல்வரின் கோவை வ.உ.சி. திடல் உரையில் காணப்படும் ஆத்திரமும், ஆதங்கமும் தேவைதானா என்று கேட்கத் தோன்றுகிறது. தனக்கு முன்னால் பேசிய அமைச்சர்களை வழியொற்றி, எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிடுவதை இவரும் குறிப்பிட்டு மாய்ந்து போனது வியப்பைத் தருகிறது.""நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரிகம் கற்றவன். அதனால் கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லட்டும்.


கருணாநிதி என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல. கருணை மிகுந்த நிதி. அப்படி எடுத்துக் கொள்கிறேன். எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்'', என்றெல்லாம் இவர் மனக்குறையைக் கொட்டித் தீர்ப்பானேன். ஜெயலலிதா, கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைப்பது இவரைப் பாதிக்கவில்லை என்றால், அதை இவர் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?""நீ, நான் என்று ஒருமையில் பேசிக் கொள்வதாகக் கருதிக் கொள்ளாதே. ஏன் என்றால் உன் வயது என்ன? என் வயது என்ன? சிறு வயதிலிருந்தே உன்னைத் தெரியும் என்ற காரணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக் கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரைப் பார்த்து, நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம், உன்னைப்போல பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். அந்த வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? நான் மரியாதையைத் தேடி அலைகிறேன் என்று யாராவது தயவுசெய்து எண்ணிக் கொள்ளாதீர்கள்'' - இதுவும் கோவையில் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கும் பேச்சுதான்.


ஜெயலலிதா, முதல்வரைக் கருணாநிதி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?  கட்சிக்காரர்கள் அவரைக் "கலைஞர்' என்று அழைப்பது அவர்கள் இஷ்டம். ஆனால், மற்றவர்களும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டும் என்று  முதல்வர் ஏன் ஆசைப்படுகிறார் என்பது தெரியவில்லை. முதல்வரின் உறவினர்கள் நடத்தும் தொலைக்காட்சி சேனலிலும், பத்திரிகைகளிலும்கூடக் கருணாநிதி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அப்படி இருக்க எதிர்க்கட்சித் தலைவி மட்டும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன?முதலில் தமிழக அரசியலில் உள்ள அடைமொழிக் கலாசாரமே வயிற்றைக் குமட்டுகிறது.



வெளிமாநிலத்தவர் நம்மிடம் இதைப்பற்றி கிண்டலும் கேலியுமாகக் கேள்வி கேட்கும்போது, தமிழகத்துக்கு ஏற்படும் தலைக்குனிவு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? இந்த அடைமொழிகள் அர்த்தமில்லாதவை என்பதை யார் இவர்களுக்கு எடுத்துரைப்பது?ஜவாஹர்லால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும், சர்வதேச அளவில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள் எண்ணிலடங்காது. அவர்கள் யாரும் தங்களது பெயருக்கு முன்னால் "டாக்டர்' பட்டம் போட்டுத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது நாகரிகமில்லை என்பதுகூட நமது தமிழக அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை.

இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று யாருமே விதிவிலக்கல்ல.பொதுவாழ்க்கையில் வந்தபிறகு அவர்கள் வகிக்கும் பதவிக்கும், அவர்களது தொண்டிற்கும்தான் மக்கள் மன்றம் தலைவணங்குமே தவிர, அவரவர் வைத்துக் கொள்ளும் அல்லது கட்சிக்காரர்களால் தரப்படும் அடைமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.உயிருடன் வாழும்வரை, காமராஜை பெருந்தலைவர் என்றோ, அண்ணாதுரையை "அறிஞர்' என்றோ யாரும் அழைக்கவில்லை. அவர்களும் அழைக்க வேண்டும் என்று விரும்பவுமில்லை. காமராஜ் என்று அழைத்தவர்களும், அண்ணாதுரை என்று அழைத்தவர்களும், அவர்கள் மறைந்த பின்னர் பெருந்தலைவர் என்றும் அறிஞர் என்றும் அழைக்க முற்பட்டனர் என்றால், அது அந்த மாமனிதர்களின் சமுதாயப் பங்களிப்புக்கு மக்கள் மன்றம் அளிக்கும் மரியாதை.


"கலைஞர்' என்று கருணாநிதியையும், "அம்மா' என்று ஜெயலலிதாவையும் அழைக்கும் அருவருப்பான அடைமொழிக் கலாசாரம், தமிழகத்திலுள்ள ஏனைய மாநிலக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அரசியல் கலாசாரத்தை, மாற்றிக் காட்டுகிறோம் என்று கூறி கட்சி தொடங்கியவர்கள் டாக்டர் ராமதாஸம், விஜயகாந்தும்.""நானோ எனது உறவினர்களோ பதவி எதுவும் பெற மாட்டோம். அப்படி பதவி பெற்றால் என்னை நாற்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்'' என்று சவால்விட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றதெல்லாம் போகட்டும். தன்னை "மருத்துவர் அய்யா' என்றும் தனது மகனை "சின்ன அய்யா' என்றும் கட்சிக்காரர்கள் அழைப்பதைக் காதுகுளிரக் கேட்டு மகிழ்வதுதான் இவர் செய்து காட்டியிருக்கும் கலாசார மாற்றம்.


விஜயகாந்தும் இதேபாணியில், கட்சி சின்னம் பொறித்த மோதிரத்தை அணிந்து கொள்வது, கரை வேட்டி கட்டிக் கொள்வது என்று இயங்குவதுடன் நின்றுவிட்டால்கூடப் பரவாயில்லை. தன்னை "கேப்டன்' என்று அழைக்கச் சொல்கிறாரே, அதுதான் வேடிக்கை.விஜயகாந்த் ராணுவத்தில் எந்தப் பிரிவில் கேப்டனாக இருந்தார்? இல்லை, இவர் மதுரையில் ஏதாவது கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுவின் கேப்டனாக இருந்தாரா? அவர் நடித்த நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் ஒன்றான கேப்டன் பிரபாகரன் படத்தில்  நடித்தவர் என்பதால் "கேப்டன்' அடைமொழியா? என்ன கேலிக்கூத்து இது.கேட்டால் கட்சித் தொண்டர்கள் மரியாதைக்காக எங்களை இப்படி அழைக்கிறார்கள் என்று கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராமதாஸம், விஜயகாந்தும் அதற்கு விளக்கம் கூறுவார்கள்.

அப்படி அழைக்கக் கூடாது என்று சொன்னால் தொண்டர்கள் அழைக்கப் போகிறார்களா? இவர்கள் விரும்புகிறார்கள்  அவர்கள் அழைக்கிறார்கள். அதுதானே நிஜம்?பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் மக்கள் மனதில் இடம்பெற அவர்களது செயல்பாடுகள்தான் உதவுமே தவிர, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் அடைமொழிகள் உதவாது.

பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாசார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவு வாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு வயதைக் காரணம் காட்டி மரியாதை தேடிக் கொள்வதோ, பெயரைக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவு என்று கருதுவதோ ஏற்புடையதல்ல.

இது முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, அடைமொழிகளால் புளகாங்கிதப்படும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் பொருந்தும்.ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இதில் எத்தனை பெயர்களைச் சரித்திரம் நினைவில் நிறுத்தப் போகிறது என்பதே சந்தேகம். பிறகல்லவா இந்த அடைமொழிகள்!

வருகிறது 'சோலார் சுனாமி'!

சூரியனில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு காரணமாக பூமி உள்ளி்ட்ட கிரகங்களை மின் காந்த கதிர்வீச்சுக்கள் தாக்கவுள்ளன.

'சோலார் சுனாமி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கதிர்வீச்சால் சில பாதிப்புகள் ஏற்படலாம்.

சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது.

இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். இந்த அணு இணைப்புகளின்போது வெளிப்படும் சக்தி தான் வெப்பமாக வெளிப்படுகிறது.

அப்போது உருவாகும் மிக அதிக சக்தி கொண்ட காமா கதிர்கள் தான் போட்டான்களாக மாறி நமக்கு சூரிய வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றன. இந்த போட்டான் கதிர்கள் சூரியனின் மையப் பகுதியில் இருந்து அதன் வெளிப்பகுதிக்கு வரவே 10,000 முதல் 1.7 லட்சம் ஆண்டுகள் வரை ஆகும்.

(போட்டானுடன் கூடவே வெளியேறும் இன்னொரு சூரிய துகள் நியூட்ரினோ. இதைப் பற்றி பின்னர் பார்ப்போம். இப்போது விஷயத்துக்கு வருவோம்.)

சூரியனில் நடக்கும் இந்த அணு உலை இணைப்பின்போது உருவாகும் கூடுதலான சக்தியும் வெப்பமும் சூரிய வெடிப்புகளாக அவ்வப்போது வெளியேறுகிறது. அப்போது சூரியனிலிருந்து அதிக வெப்பத்திலான வாயுக்கள் பிளாஸ்மாவாக பீய்ச்சிடிக்கப்படும். (super heated gases தான் பிளாஸ்மா).

இந்த பிளாஸ்மா தன்னுடன் சுமந்து வரும் பயங்கரமான மின் காந்த கதிர்கள் பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்குகின்றன. பூமியி்ல் உள்ள வளிமண்டலமும் அதிலுள்ள வாயுக்களும் நம்மை இந்த மின்காந்த கதிர்வீச்சுக்களில் இருந்து பாதுகாத்து விடுகின்றன.

இல்லாவிட்டால் சூரியனின் பிளாஸ்மா அலைகள் தாக்குதலில் பூமி என்றைக்கோ பஸ்மாகியிருக்கும்.

இந் நிலையில் சூரியனின் வட பகுதியில் இன்னொரு மகா வெடிப்பு நடந்திருக்கிறது. சூரியனில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் அகலமே நமது பூமியின் அளவைவிட பெரியது என்கிறார்கள்.

பூமியை நோக்கிய திசையில் இந்த சூரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதை பல தொலைநோக்கிகளும் பல செயற்கைக்கோள்களும் கடந்த ஜூலை 31ம் தேதி பதிவு செய்துள்ளன.

இதனால் கிளம்பிய கதிர்வீ்ச்சுக்களும் மின் காந்த அலைகளும் சூரியனில் இருந்து 93 மில்லியன் மைல்கள் வரை பரவியுள்ளன.

இதற்கு சோலார் சுனாமி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
நமது காற்று மண்டலத்தின் உபயத்தால் இதனால் பூமிக்கு பெரிய அளவில் பாதி்ப்பு ஏதும் இருக்காது என்றாலும் சில செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

அதே நேரத்தில் இன்று இரவு இந்த மின்காந்த கதி்ர்வீச்சுக்கள் பூமியை அடையும்போது அதன் துருவப் பகுதிகளில் (ஆர்க்டிக், அண்டார்டிகா பகுதிகள்) Auroa Borealis எனப்படும் மாபெரும் பல நிற வெளிச்சம் உருவாகும். வானில் பல ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு நீளும் இந்த வெளிச்சம், பூமியை மின் காந்த அலைகள் தாக்குவதின் எதிரொலி தான்.


தோளில் சாதி தேடிய ஆசிரியரும், மை நேம் இஸ் பில்லாவும்

பெரியார் பேருந்து நிலையம் வழியாகச் செல்ல வடக்குமாசி வீதியைக் கடக்கும் போதெல்லாம் கண்ணில் படுகிறது சேதுபதி மேல்நிலைப்பள்ளி. இந்தப்பள்ளியில் தான் மகாகவி பாரதி சில நாட்கள் பணியாற்றினார். இப் பள்ளியில் நானும் படித்தேன் என்ற பெருமையும், பூரிப்பும் எனக்குண்டு.

இப்பள்ளியில் அவ்வப்போது இந்துமதம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. சில நேரங்களில் காக்கி டவுசர்களும் தென்படும். திருச்சி கல்யாணராமன் என்பவர் இப்பள்ளியில் அடிக்கடி சொற்பொழிவை நடத்தி வருகிறார் என்பது தினமலர் நாளிதழைப் பார்க்கும் போது தெரியவரும். மகாபாரதம் என்ன சொல்கிறது ராமாயணம் என்ன சொல்கிறது என இவர் சொல்வதை கேட்கவும் ஆட்கள் இருக்கிறார்கள் என நினைக்கும் போது சிரிப்பு, சிரிப்பாய் வருகிறது. “கோபம் வந்தால் நான் சொல்வதை நானே கேட்க மாட்டேன்“ என்ற பில்டப் வசனங்களுக்கு கைதட்டி விசிலடிக்கும் கூட்டம் இருக்கும் ஊரில் கல்யாண ராமன் சொல்வதையும் கேட்கிறார்களே என்ற பரிதாபமும் ஏற்படுகிறது.

sethupathi_1சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பின் நான் வெகுநாட்கள் பள்ளியின் பக்கம் போகவேயில்லை. ஏனெனில், டை அடித்து தலை முழுவதும் பல வண்ணம் தோன்றும் தலையோடு காட்சி தரும் தலைமை ஆசிரியரை, “ஆட்டுத்தலையா“ என யாரோ கழிப்பறையில் எழுதியிருந்ததை நான் தான் எழுதினேன் என நினைத்து பின்னி எடுத்து விட்டார்கள். மார்க் சீட் வாங்கும் போது கூட அப்பாவோடு தான் போனேன். அப்போதும் தலைமை ஆசிரியர் என்மீது கோபத்தில் தான் இருந்தார் என்பது அவரது முகத்தைப் பார்த்த போதே தெரிந்து போனது.

இந்தப்பள்ளியில் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் என்றால் மாந்தோப்பு தான். ஒரு காலத்தில் மாமரங்கள் நிறைந்திருந்ததால் இப்பெயர் வைக்கப்பட்டதாம்! மாமரங்கள் தற்போது இல்லையென்றாலும் இன்னமும் அப்பெயரே அப்பகுதிக்கு நிலைத்து விட்டது. அந்தப்பகுதியில் வளர்ந்து நிற்கும் வேப்பமரங்களில் இருந்து வீசும் வேப்பங்காத்து பள்ளியறைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு தூக்கத்தை உண்டு செய்யும். நிழல் நிறைந்த இப்பகுதியில் விளையாடுவது அனைவருக்கும் பிடிக்கும்.

சோளத்தட்டையை பந்தாக்கி எறியும் போது, அவ்வழியாக கடந்து செல்லும் சில ஆசிரியர்கள் மீதும் அடிபட்டு விடுவதுண்டு. அன்றைய தினம் விளையாடிய அனைவரையும் பிடித்து வெயிலாய் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் முட்டி போடச்சொல்லி விடுவார்கள். இரண்டு வகுப்புகள் நடைபெறும் நேரம் முட்டி போட்டிருக்க வேண்டும். இதனால், ஆசிரியர்களின் அடியில் இருந்து தப்பிப்பதற்காகவே மதிய உணவு இடைவேளையின் போது இந்த விளையாட்டு நடைபெறும்.

இந்தப்பள்ளியில் மிக அழகான பகுதி ராமண்ணா ஹால். மொசைக் கல்லால் பளபளப்புடன் நிறைய புகைப்படங்களுடன் காட்சி தரும். என்னுடைய தந்தை மொசைக் தொழிலில் பணிபுரிந்ததால் இந்த அறையைக் கடந்து போகும் போது பளபளக்கும் தரையைக் கண்டு மெய்மறந்து நிற்பேன். மதுரை மாவட்டத்தில் டைப்ரைட்டிங் தேர்வு நடைபெறும் மையமாக பல ஆண்டுகளாக இந்த ஹால் திகழ்ந்ததுண்டு.

மகாகவி பாரதி 1904-ம் ஆண்டு இந்தப் பள்ளியில் பணியாற்றினார். அவர் பணியாற்றியதற்கான ஆவணங்கள், இன்றும் பள்ளிக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பாரதியார் பணியாற்றியதை நினைவுகூறும் வகையில் கடந்த 1966-ஆம் ஆண்டு சேதுபதி பள்ளி வளாகத்தில் அவரது மார்பளவு சிலை அமைக்கப்பட்டது. அச்சிலையை, அன்றைய தமிழக முதல்வர் எம். பக்தவத்சலம் திறந்துவைத்தார். பாரதியார் பணியாற்றிய பெருமைமிகு சேதுபதி பள்ளி, அதன் பின் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பாரதியார் பணியாற்றியதை நினைவுகூறும் வகையில், இந்திய தபால் துறையும் சேதுபதி மேல்நிலைப் பள்ளி படம் பொறித்த அஞ்சல் உறையை பாரதியார் படத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு வெளியிட்டது.

மதுரையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியும், மகாத்மா காந்தி மதுரை வந்தபோது தங்கிய இடமான மேலமாசி வீதி வீட்டையும் (தற்போதைய காதி பவன்) சிறப்பு நிதி மூலம் மேம்படுத்த மத்திய அரசு தயாராக இருந்தும் அதற்கான திட்ட கருத்துருவை தமிழக அரசு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளியில் படித்து முடித்து அந்தப்பக்கம் போகாமல் இருந்த நான், பாரதியின் பிறந்தநாள் விழாக்களுக்கு தோழர்களுடன் போக ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஆண்டும் பாரதியின் பிறந்த நாள் அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து கவிதை மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை தமுஎகச மூலம் செய்து வருகிறோம்.

இந்த பள்ளியில் பாரதிக்காக நான் தண்டிக்கப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது. அவர் சில நாட்கள் பணியாற்றிய வகுப்பறையை பழைய பொருட்கள் அதாவது, உடைந்து போன சேர், டேபிள் ஆகியவற்றைப் போட்டு வைக்கும் அறையாக வைத்திருந்தார்கள்.

“பாரதி பணியாற்றிய பெருமையுடைத்து“ என்று பள்ளியின் முகப்பில் உள்ள பெயர் பலகையில் பெருமை கொண்டு விட்டு, நடைமுறையில் பள்ளி நிர்வாகம் இப்படி நடந்து கொண்டது எனக்கு கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் பணியாற்றிய வகுப்பை சுத்தமாக வைத்திருக்கத் தெரியாதவர்கள் அவர் பணியாற்றியதை மட்டும் பெயர் பலகையில் வைத்து விளம்பரம் தேடலாமா என்ற இயல்பான கோபத்தை நண்பர்களிடம் சொன்னேன். பெரியார், சக்கரவர்த்தி உள்ளிட்ட சில மாணவர்களுடன் சேர்ந்து பெயர்பலகையில் இருந்த பாரதி பணியாற்றிய பெருமையுடைத்து என்ற பகுதியில் இருந்த “யுடைத்து“ பகுதியை அகற்றி விட்டோம். இதனால் நான் உள்ளிட்ட 13 பேர் சில நாட்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டோம். அதன் பின் பெற்றோர்கள் தலையிட்டதால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டோம்.

பாரதி கவிதை மீது நான் கொண்ட காதல் என் மகளுக்கும் அவரது பெயரையை வைக்கத்தூண்டியது. நரிமேட்டில் உள்ள பள்ளியில் படித்து வரும் என் மகள், ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பாட்டுப்படிக்கப் போகிறேன் என்றாள். அதற்காக பாட்டுப்புத்தகம் வேண்டும் என்றாள்.

சின்ன வயதில் எனக்கு எம்ஜிஆர் மீது இருந்த மோகத்தால் அவருடைய படப்பாடல்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்து விடுவேன். வீடு நிறைய பாட்டுப்புத்தகங்களாக கிடக்கும். அத்துடன் என் வீட்டில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் வானொலி எனக்கு பல பாடல்களை ஒப்புவிக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறது. பாட்டுச்சத்தம் என்பது எனது வீட்டில் வானொலியில் இருந்து மட்டுமின்றி எங்களிடமிருந்தும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

புதூரில் உள்ள ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் படிக்கும் போது அன்றாடம் பிரேயர் நேரத்தில் ஒலிபெருக்கி முன் நின்று நாளிதழில் உள்ள முக்கிய செய்திகளை வாசிக்கச்சொல்வார்கள். வீட்டில் காலையில் எழுந்தவுடன் பேப்பரை எடுத்து உரக்கப்படி என அப்பா கொடுத்த பயிற்சி, பள்ளியிலும் கிடைத்தது. இதனால், அப்பணி எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

பேசுவதோடு மட்டுமின்றி பள்ளியில் நடைபெறும் பாட்டுப்போட்டி, நாடகப்போட்டி அனைத்திலும் கலந்து கொள்வேன். தற்போது நூறாண்டு கண்டுள்ள புதூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் உள்ள மேடையில் பல முறை ஏறி நடித்துள்ளேன். பாடியுள்ளேன்.

பள்ளி நேரத்தை விட்டால், ஆத்திக்குளத்தில் இருந்த வீரலெட்சுமி திரையரங்கு தான் என் இருப்பு. எம்ஜிஆர் நடித்த படம் என்றால் அத்தனை நாளும் ஆஜராகி விடுவேன். எனது பெரியப்பா அந்த தியேட்டரில் பணியாற்றியதால் எப்போதும் எனக்கு டிக்கெட் கிடையாது என்ற சலுகை தினமும் படம்பார்க்க வைத்தது. முதல் முதலாக ஆற்று மணலை தரிசித்தது அந்த காலங்களில் தான். மதுரையில் வைகை இருந்தாலும், சித்திரைத் திருவிழாவிற்கு வீட்டினர் அழைத்துச் செல்லும் போது கால் நினைக்கும் தண்ணீரில் நின்று கொண்டு அழகரைக் கண்ட நான், ஆற்று மணலை வைகையில் கண்டதில்லை.

வீரலெட்சுமி தியேட்டரில் மணலில் அமர்ந்து கொண்டு படம் பார்ப்பது சுகமான அனுபவம். பின்னால் இருப்பவர் சுரண்ட, சுரண்ட உயரம் குறைய, மீண்டும் மணலைக் குவித்து படம் பார்க்கும் அனுபவம் எத்தனை பேருக்கு கிடைத்தது? கிடைக்கும் என்ற எண்ணங்கள் எனக்கு இப்போதும் தோன்றும். தற்போது கார்பரேட் வணிகமயமாகி விட்ட திரையரங்குகளில் கையில் கொண்டு வந்துள்ள பொருட்களை விட்டு விட்டுப் போகச் சொல்கிறார்கள். இன்னும் சில நாட்களில் குழந்தைகளையும் விட்டு விட்டுப் போகச்சொன்னாலும் சொல்வார்கள்!

அப்போதெல்லாம் திரையங்கு முன்பு பாட்டுப்புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். எந்தப்படம் வெளியாகிறதோ அந்தப்படத்தின் பாட்டுப்புத்தகம் அன்றைய தினங்களில் கூடுதலாக விற்கும். அதன் பின் சில ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் டிக்கெட்டுடன் சேர்த்து பாட்டுப்புத்தகங்களை தர ஆரம்பித்தார்கள். அதில் படத்தின் கதைச்சுருக்கம் போடப்பட்டிருக்கும். தற்போது பாட்டுப்புத்தகங்கள் கிடைக்கும் கடைகளைத் தேடியலைய வேண்டியதுள்ளது.

புதூரில் உள்ள ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் பாட்டுப்பாடிய தைரியத்தில், சேதுபதி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவிலும் பாட வேண்டும் என்ற ஆசை எனக்கு கிளம்பியது. பள்ளி ஆண்டு விழாவில் யார், யார் பாடுகிறார்கள் என ஆசிரியர் கேட்கவும், பல மாணவர்களுடன் நானும் சேர்ந்து கையை உயர்த்தினேன். சிவத்த தோல் உடைய மாணவர்களின் பெயர்களைக் குறித்துக் கொண்ட வகுப்பாசிரியர், என்னைப் பார்த்ததும் ஆச்சரியத்தோடு,“ நீயும் பாடுகிறாயா“ என சந்தேகமாக கேட்டார். ஆமாம் என்றேன். அருகில் வந்து அவரது இரு கைகளாலும் என் தோளைப் பிடித்துக் கொண்டு என்ன பாட்டு தெரியும் என்றார். சினிமா பாட்டு பாடுவேன் என்றேன். அவருடைய கைகள் என்னுடைய தோளை பிசைந்து கொண்டிருந்தன. எங்கே பாடு என்றார்.“ மை நேம்ஸ் பில்லா என்ற பாடலைப்பாடவும் வகுப்பு மாணவர்கள் ரசித்து கைதட்டினார்கள்.

தோளில் தனது தேடலை நிறுத்திக் கொண்ட ஆசிரியர், உன் அப்பா என்ன வேலை செய்கிறார் எனக்கேட்டார். கூலி வேலை என்றேன். உதட்டைப் பிதுக்கிக் கொண்டே,“ அடுத்த ஆண்டு நீ பாடு“ என்றார். ஆண்டுவிழாவில் பாட வேண்டும் என்ற ஆவலில் இருந்த எனக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்தது. விளையாட்டு நேரத்தின் போது விளையாட்டு ஆசிரியர் ரவி, “என்ன சோகமாக இருக்க?“ எனக்கேட்ட போது நடந்ததைக் கூறினேன். “பாட்டு பாடுவதென்றால், அய்யரா, அய்யங்காரா இருக்கணும், நீ ரெண்டும் இல்ல. அப்புறம் எப்படிடா உன்னை பாடவிடுவார்“ என அவர் கேட்டார். அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியர் ரவி தான். பிடிக்காத ஆசிரியரும் அவர் தான். கையில் உள்ள விசில் கயிறு கொண்டு மாணவர்களை விளாசுவதால் அவரைக் கண்டாலே பலருக்குப் பயம். ஆனாலும், அனைவரிடமும் பிரியமாக இருப்பார்.

வகுப்பாசிரியர் எனது தோளில் நீண்ட நேரமாக சாதியைத் தேடியது பிறகு தான் தெரிந்தது. என்னுடன் படித்த பெரியார் என்ற சக நண்பன், நீ எப்படியாவது பாட வேண்டும். வாத்தியார் மூஞ்சியில் கரியைப் பூசவேண்டும் என்றான். அவனது தந்தை, திராவிடர் கழகத்தில் இருந்தவராவார். காவல்துறையில் பணிபுரிந்தாலும், பெரியார் மீது அவருக்கு மிக ஈடுபாடு. சாதி பார்த்து பாட்டு பாடாதே என்று சொன்ன வகுப்பாசிரியரின் நோக்கத்தை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டு விழாக்குழு ஆசிரியரான கட்டப்பொம்மு என்பவரைப் பார்த்து நானும் பாடுகிறேன் அய்யா என்றேன். எங்கே பாடு என்றார். நானும் வழக்கம் போல பாடவும், நல்லாத்தான் இருக்கு. உன் பெயரையும் சேர்த்துக் கொள்கிறேன் எனக்கூறினார்.

இதையறிந்த எனது வகுப்பாசிரியருக்கு என் மீது பயங்கர கோபம். என்ன பாட்டு படிக்கப்போகிறாய் எனக்கேட்டார். சினிமா பாட்டு தான் என்றேன். கர்நாடக இசையை மையப்படுத்திய பாடலாக இருக்க வேண்டும் என அவர் கூறவும், எனக்கு பயமாய் போனது. எனக்கு தெரிந்தது கர்நாடகம் என்ற மாநிலத்தின் பெயர் தான். கர்நாடக சங்கீதப்பாடல் எது என்ற அறிவு அப்போது இல்லை. அதோடு விட்டு விடாமல், “ராகவனே ரமணா , ரகு நாதா“ என்ற பாடலைத்தான் பாட வேண்டும் என்று வகுப்பு ஆசிரியர் கட்டளை போட்டார். இதற்காக மாலை நேரத்தில் ஒரு ஆசிரியரிடம் அழைத்துச் சென்று பயிற்சி அளித்தார்கள். “இளமைக்காலங்கள்“ படத்தின் பாட்டுப்புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கி ராகவனே ரமணாவை மனப்பாடம் செய்தேன். ஆனாலும் தோளில் பூணூல் தேடிய வகுப்பு ஆசிரியரை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.

பள்ளியின் ஆண்டு விழா தேதியும் வந்தது. உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. ஆண்டுவிழாவிற்கு முதல் நாள், வகுப்பு ஆசிரியர் என்னைப் பார்த்து, “உன்னையில்லாம் பாடலைன்னு யாரு அழுதது?“ எனக்

கேட்டது உள்ளுக்குள் இருந்த உதறல்களை உதறச் செய்தது. முடிவுக்கு வந்தப்பின் பின்வாங்கக்கூடாது என்ற வைராக்கியம் மட்டும் ஆழமாய் பதிந்து போனது.

என்னுடைய பெயரைச்சொல்லி ராகவனே ரமணா என்ற பாடலைப் பாடுவார் என ஆசிரியர் கட்டப்பொம்மு வாசிக்க, மைக் முன் நின்று, “ஒன், டூ, த்ரீ“ என்றேன். புதூர் ஆர்.சி பள்ளிக்குப் பிறகு நீண்ட நாளுக்குப் பின் வேறு பள்ளியில் மைக் முன் நிற்கும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு அப்போது தான் வாய்த்தது. எங்கள் தெருவில் தேசிய விநாயகர் கோவில் திருவிழாவின் போது ரேடியோ செட் போடுபவர்களைப் பார்த்து அதே பழக்கத்தில் “ஒன், டூ, த்ரீ“ என்றேன். பாடுடா என திரைக்குப் பின் இருந்து ஆசிரியர் சத்தம் போட்டார். முன்வரிசையில் அமர்ந்திருந்த வகுப்பாசிரியர் என்னை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

“ மை நேம்ஸ் பில்லா“ என நான் உற்சாகமாகப் பாட ஆரம்பிக்கவும் மாணவர்கள் உற்சாகமாக கைதட்டி விசிலடிக்க மைதானம் முழுவதும ஆராவாரம். திரையின் பின் இருந்து சத்தம் போட்ட ஆசிரியரின் குரலைக் கணக்கில் கொள்ளாமல் முழுமையாக அந்தப் பாடலைப் பாடி முடித்தேன். விழா முடிந்த பின் கட்டப்பொம்மு காதைத் திருகி சத்தம் போட, அதற்காகவே காத்திருந்தது போல் இருந்த வகுப்பு ஆசிரியர், ஸ்கேலால் பின்னி எடுத்து விட்டார். இரண்டு கைகளும் பழுக்கும் அளவிற்கு அடி விழுந்தது. வீட்டில் இருந்து பெற்றோரை அழைத்து வரவேண்டும் என ஆசிரியர் சொன்னார். இதனால் இரண்டு நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பாட்டுப்புக்த்தகம் வாங்கி வரச்சொன்னா என்னத்த யோசிக்கிறீங்க என என் நினைவுக்குளத்திற்குள் கல்லை எறிந்தாள் மகள் பாரதி. ஆண்டு விழாவில் என்ன பாட்டு படிக்கப் போகிற என ஆவலுடன் கேட்டேன். “ராகவனே, ரமணா, ரகுநாதா” என்றாள்.

- ப.கவிதா குமார் ( kavithamukil@rediffmail.com)

சேகுவாராவின் இறுதி நிமிடங்கள்



என்றும் அழியாத போராளியின் இறுதிக்கணங்கள்



காலை 10.00



சே குவராவை உயிருடன் வைத்து விசாரணைகள் நடத்தினால் அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத்தன்மையும் உருவாக்கி விடும் என்பதால் அவரை உடனடியாக தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ விடம் இருந்து தகவ...ல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500,600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் சே குவரா 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00 மணி

சே குவராவை சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. "மரியோ ஜேமி" என்ற பொலீவிய இராணுவ சார்ஜன் அக்காரியத்திற்காக பணியமர்த்தப்படுகிறார்.



ஆதனியிடத்திற்கு மரியோ அழைத்துச் செல்கிறார். "முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்" என்பார் சேகுவரா. ஆனால் மரியோ அவரை ஒரு கோழையைப்போல் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு சேகுவரா கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.



கோழையே சுடு! நீ சுடுவது சே குவராவை அல்ல: ஒரு சாதாரண மனிதனைத்தான்!



இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வசனம் இதுதான்!



1967, அக்ரோபர், 9 மணி நண்பகல் 1.10



மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி,தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

சே குவரா இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது. அக்ரோபர் 18... கியூபா.. ஹவானாவில் வரலாறு காணாத கூட்டம் சே குவராவின் அஞ்சலிக்காக காஸ்ரோவின் தலைமையில் கூடியிருந்த்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ரோ. "வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்று விட்ட சே குவரா நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூப மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாக கொண்டு செயற்பட வேண்டும். என வேண்டுகோள் விடுக்கிறார்.



இறந்தபோது சே குவராவிற்கு வயது 40. உலகம் முழுக்க சேகுவராவின் புகழ் இன்னும் அதிகமாக பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் சே குவரா குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்டோவியா பாஸ், ஹூலியா கொத்சார் போன்றவர்கள் சே குவரா குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், பூமியில் வந்து போன முழுமையான மாமனிதர் சே குவரா என மகுடம் சூட்டினார்.



நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவோராயிசம் எனும் கொள்கை கொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தில் ஏசுவைப் போன்ற சே குவராவின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்திருந்தனர்.



கியூப அரசாங்கம் சே குவராவின் நினைவை தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளாகவும், பல்வேறு உருவ வேலைப்பாடுகளாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத்தியது. சான்டோ கிளாரா எனும் நகரில் சேகுவராவின் மியூசியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூசியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவிற்கு செல்கின்றனர். கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைக்கு செல்ல முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த வாசகம் என்ன தெரியுமா?



"ஆம் எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். நாங்கள் சே குவராவைப் போல இருப்போம்!"

உமா சங்கர் - சிறு அறிமுகம்

உமா சங்கர் - சிறு அறிமுகம்

நேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி அவர் மீது ஏவப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதால் ஆத்திரம் தலைக்கேறிப் போய், தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச்சான்றிதழ் கொடுத்து பதவிக்கு வந்துவிட்டாரெனக்கூறி அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.

 

1995 இல் (ஜெ ஆட்சியில்) மதுரை மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொண்டு வந்தபோதுதான் உமாசங்கர் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜெயலலிதா ஆட்சியின் ஊழலைச் சொல்லி, 1996 இல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, ஊழல் கண்காணிப்புத் துறையின் கூடுதல் ஆணையராக உமாசங்கரை நியமித்தார். ஜெ, அவரது அமைச்சர்கள்  மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல்களை உமாசங்கர் வெளிக்கொணர்ந்த போதிலும், செல்வாக்குள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தது கருணாநிதி அரசு. வெறுப்புற்ற உமாசங்கர், தன்னை இப்பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரியவுடனே, அவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

 

மே 2006 இல் எல்காட் என்ற அரசு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதும், அதுவரை மைக்ரோசாப்ட் மென்பொருட்களைச் சார்ந்திருந்த அரசுத்துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பில்கேட்ஸை வெளியேற்றி விட்டு, 2007 ஆம் ஆண்டு முதல் 'லினக்ஸ்' என்ற ஓபன் சோர்ஸ் (இலவச) மென்பொருளை அறிமுகப் படுத்தினார் உமாசங்கர்.

 

"மைக்ரோசாப்ட் ஆத்திரம் கொண்டால் நம் நாட்டின்  மென்பொருள் துறையே தேங்கிவிடும் என்று கருதுவது அபத்தமானது…  மைக்ரோசாப்ட் இல்லாமல் இந்தியா வாழ முடியும். முன்னேறவும் முடியும். இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை இழப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குத்தான் பேரிழப்பு. மைக்ரோசாப்டிலிருந்து வெளியேறியதன் விளைவாக  தமிழ்நாடு ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி வரை மிச்சமாக்க முடியும்" என டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகைக்கு அப்போது அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் உமாசங்கர். மைக்ரோசாப்டின் உயர் அதிகாரி ஒருவர் தமது மென்பொருள் தொகுப்பை 7000 ரூபாய்க்குத் தருவதாக பேரம் பேசினாரென்றும், ஓபன் சோர்ஸில் செலவே இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய மென்பொருளுக்கு நாங்கள் எதற்காக 7000 ரூபாய் செலவழிக்கவேண்டும் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியதாகவும் அப்பேட்டியில் கூறுகிறார் உமாசங்கர்.

 

எல்காட்டின் பொறுப்புக்கு உமாசங்கர் வருவதற்கு சில ஆண்டுகள் முன்னர், தியாகராச -செட்டியார் என்பவருக்குச் சொந்தமான 'நியூ எரா டெக்னாலஜீஸ்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எல்காட் நிறுவனம், 'எல்நெட்' என்றொரு கூட்டுப்பங்கு நிறுவனத்தை உருவாக்கியிருந்தது. 24% பங்குகள் தியாகராச செட்டியாரிடமும், 26% பங்குகள் எல்காட்டிடமும், மீதமுள்ள 50% பங்குகள் பொதுமக்களிடமும் இருந்த இந்நிறுவனம், 2004 ஆம் ஆண்டில், 'இ.டி.எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்' என்ற கட்டுமான நிறுவனத்தைத் தனது துணை நிறுவனமாக உருவாக்கியிருந்தது. சென்னையில் 18 இலட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.700 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (கட்டிடம்) ஒன்றை இந்நிறுவனம் உருவாக்கியிருந்தது. தமிழக அரசின் 26% பங்குகளையும் பொதுமக்களின் 50% பங்குகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனமும், அதன் 700 கோடி சொத்தும், 24% பங்குளை மட்டுமே வைத்திருந்த தியாகராச செட்டியாருக்கு மர்மமான முறையில் கைமாறியிருப்பதை உமாசங்கர் கண்டுபிடித்தார். "2008, ஜூலை 8 ஆம் தேதியன்று தரமணியில் உள்ள எல்நெட் நிறுவனத்தில் இவை தொடர்பான ஆவணங்களை நானே நேரடியாகத் தேடிக்கொண்டிருந்த போது, என்னுடைய பதவி பறிக்கப்பட்ட தகவல் வந்து சேர்ந்தது" என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் உமாசங்கர்.

 

அடுத்து, சன் டிவி – கருணாநிதி மோதலின் தொடர்ச்சியாக, அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனின் நிர்வாக இயக்குநர் பதவியில் அக்டோபர் 2008 இல் நியமிக்கப்பட்டார் உமாசங்கர். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை மிரட்டியதுடன், ரவுடிகளை வைத்து வயர்களையும் அறுத்தெறிந்தனர் மாறன் சகோதரர்கள். இவர்களுக்குத் துணை நின்றவர் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. இது குறித்து பல புகார்கள் கொடுத்தும் போலீசு நடவடிக்கை எடுக்காததால், இவர்களைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கவேண்டும் என்றும், சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றும் உமாசங்கர் அரசுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். உடனே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏவப்படுகிறது. அந்த ஒழுங்கு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இடைக்காலத்தடை விதித்ததனால், 2009, சனவரி 23 ஆம் தேதியன்று சிறுசேமிப்புத்துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டார் உமாசங்கர். இவற்றின் தொடர்ச்சியாக இப்போது வந்திருப்பதுதான் ஊழல் வழக்கும் தற்காலிகப் பணிநீக்கமும்.

 

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் விதிமுறைகள்
குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் ஊழல் தடுப்புச் சட்டத்துக்கும் விரோதமாக, திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டிருப்பதை அம்பலமாக்கியிருக்கிறார் உமாசங்கர்.

 

"ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போன்றோர் மீது ஊழல் குற்றத்துக்காக யாரேனும் வழக்கு தொடரவேண்டுமானால், அதற்கு அரசின் முன் அனுமதி தேவை" என்று கூறும் இவ்விதிமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே கேள்விக்குள்ளாக்குவதோடு, ஊழல் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் பயன்படுகிறது என்கிறார் உமாசங்கர். அனுமதி அளிக்கும் அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவிடம் இருப்பதால், நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும், ஊழல் அதிகாரிகளைத் தப்பவைப்பதற்கும் இது பயன்படுத்தப் படுகிறது என்பதையும் ஆதாரங்களுடன் திரைகிழித்திருக்கிறார் உமாசங்கர்.

 

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூடுதல் இயக்குநராக 1996 முதல் தான் பணியாற்றிய காலத்தில், கல் குவாரி ஊழல் (1000 கோடி ரூபாய்), சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேசன் தனியார்மயமாக்கல் ஊழல் (200 கோடி ரூபாய்), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழல் (சென்னையின் மையப்பகுதியில் அமைந்த 300 வீடுகள்) போன்ற பல ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் மீது வழக்கே தொடர முடியாததற்குக் காரணம் முதல்வர் தலைமையிலான குழுவின் அனுமதி கிடைக்காததுதான். அதுமட்டுமல்ல, பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, மேற்படி முதல்வர் குழுவின் அனுமதி கிடைக்காததால் தண்டனையிலிருந்து தப்பிவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாலதி என்பவர்தான் தற்போது ஊழல் தடுப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்" என்ற கேலிக்கூத்தையும் போட்டுடைத்திருக்கிறார் உமாசங்கர்.

 

அவருடைய அனுபவத்தைப் படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதிலும் எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சும் இந்தக் காலத்தில், அதிகாரவர்க்கக் கோட்டையையும் ஆட்டமுடியும் என்று காட்டியிருக்கிறார் உமாசங்கர். அவ்வகையில் அவரது அனுபவம் ஒரு நேர்மறை எடுத்துக்காட்டு. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் புரிந்து கொள்வதற்கு, உமாசங்கரின் அனுபவம் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு.

படித்த இடம் : வினவு

கடல் கன்னியை இங்கே பாருங்கள் - அறிய புகைப்படம்

கடல் கன்னியை இங்கே பாருங்கள் - அறிய புகைப்படம்



அபுதாபியில் ஒரு கடற்கரையில் இறந்த நிலையில் இந்த கடல் கன்னி இருந்தாதாக செய்திகள் சொல்லுகின்றன. கடல் கன்னியை பற்றி கேள்விப்பட்ட நாம் இப்போது அதன் புகைப்படத்தை  காண்கிறோம்.

இறந்த நிலையில் இருந்த கடல் கன்னியை கண்டு அனைவரும் அச்சமுற்று அந்த தீவில் இருந்து வெளி எறிவருவதாயும் தகவல்கள் சொல்லுகின்றன.





புதுமைபித்தன் - தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த முன்னோடி எழுத்தாளர்

தமிழ் சமூகத்தின் அரசியல், சமூகம், இலக்கியம் என எல்லா நிலைகளிலும் பார்ப்பனர்கள் தங்கள் பார்ப்பனீய குயக்கு புத்தியை பயன்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டிலே வைத்திருந்தனர்.. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக பல தலைவர்கள் பல காலகட்டங்களில் போராடி தமிழையும், தமிழனையும் மீட்டு உள்ளனர். இதில் இலக்கியத்துறையில் மிக முக்கியமானவர் புதுமைபித்தன் அவர்கள். தமிழ் சமூகத்தின் இலக்கியத்துறையில் தன்னாலான முயற்சிகளை எள்ளல் சுவை கலந்த நடையில் எழுதுவது புதுமைபித்தன் அவர்களின் தனிச்சிறப்பு.. அவரின் கதைகளை தமிழ் சமூகம் கட்டாயம் படித்து பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காவே இந்த பதிவு ..

அவரின் ''ஒரு கொலை அனுபவம்'' என்ற கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

ஒரு கொலை அனுபவம்

இருள். எங்கு பார்த்தாலும் கரியவிருள். ரோட்டில் வெளிச்சம் மங்கியது. ஒற்றை விளக்கு.

அந்த இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டு போகிறான். உள்ளூர ஒரு பாட்டு. குடிப் பேர்வழி. அந்த இருட்டிலும் பாடிக்கொண்டு போகிறானே. ஆசாமி தைரியசாலியாகத்தான் இருக்க வேண்டும். நான் என்றால் பேசவே மாட்டேன்.

இதென்ன வேடிக்கை? அவனுக்கென்ன பைத்தியமா? விளக்கைப் பிடித்துத் தொத்திக்கொண்டு ஏன் ஏற வேண்டும்? விளக்கு ஏற்றி இருக்கும்பொழுது இவன் என்ன அங்கு போய் சாதிக்கப் போகிறான்? இதுவும் ஒரு வேடிக்கைதான்.

ஏறி இரும்புக் கம்பத்தின் குறுக்கில் உட்கார்ந்துகொண்டு "ராஜாதி ராஜன் நானே" என்று பாடுகிறானே. அவனும் ராஜன் தான்! இவனுக்கும் ஹிட்லருக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது.

அடடா! முகத்தைப் பார்த்தால் என்போல் இருக்கிறதே! நான் தான் அவன். இதென்ன வேடிக்கை? முகத்தைப் பார்த்தால் எனக்கு இரட்டைச் சகோதரன் மாதிரி இருக்கிறான். எங்கே வந்து சொத்தில் உரிமை கேட்கப் போகிறானோ?

விளக்கெல்லாம் அணைந்துவிட்டதே! இதென்ன அதிசயம்? ஏன் விளக்கு அணைய வேண்டும்? இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு குடி முழுகிவிடும்போல் இருக்கிறது.

அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது. ஏன் இப்படி நடக்கவேண்டும்? ஆசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி. கிட்ட நெருங்கட்டும். அதைத்தான் பார்ப்போம். இதென்ன அதிசயம்? அவனும் நான் தான். முதல் வந்த ஆசாமிதானா அவன்? தலைதான் கம்பத்தின் மேல் தெரிகிறதே. எனக்குப் பைத்தியமா? அல்லது பிரம்மாவிற்குத்தான் பைத்தியம் பிடித்துவிட்டதா? அல்லது பிரம்மாவிற்கு நான் சொத்து சுகம் வைத்துக்கொண்டிருப்பதில் பொறாமையா?

அந்த 'எனக்கு' ஏன் பயம் போட்டு ஆட்ட வேண்டும்? இரண்டு பிரதிபிம்பங்கள். இயற்கையின் கூத்தா? அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா?

இரவில் இன்னொரு உருவம் அதற்குப் பின் ஒளிந்துகொண்டு வருகிறது. அவனாவது வேறு மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டாவது ஆசாமியை நெருங்குகிறானே.

முகம் தெரிகிறது. நல்ல காலம். அவனுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது. நானல்ல! என்ன? நன்றாகப் பார். அவனும் நான் தான். எனக்கு தாடியும் மீசையுமா முளைத்திருக்கிறது? எனது முகத்தில் ஒன்றையும் காணோமே! முகத்தையும் கண்ணையும் பார்த்தால் என்ன பயமாக இருக்கிறது. மூன்று பேரும் நான் தானா அல்லது 'எல்லாம் நானே' என்ற முக்தியை அடைந்துவிட்டேனா?

தாடியுடைய 'என்' கையில் என்ன மின்னுகிறது?

கத்தி.

முன் செல்லும் 'எனக்குப்' பின் வந்த இரண்டாவது 'நான்' ஏன் பதுங்கிப் பதுங்கிச் செல்ல வேண்டும்? முதல் 'நான்' எங்கே?

ஆமாம்! அவன் குஷியாக கம்பத்தின் மீது பாட்டுப் பாடுகிறான்.

நெருங்கிவிட்டான்!

'அய்யோ கொல்கிறானே!'

மூன்றும் என் குரல். எல்லாம் இருள். ஒன்றையும் காணோம்!

விழித்தேன். பக்கத்தில் எனது நண்பன். 'பகலில் என்ன தூக்கம்?' என்று முதுகைத் தட்டிக்கொண்டிருந்தான். எதிரே எழுதுகோல், காகிதம், இத்யாதி. துப்பறியும் நாவல் எழுதுவது என்றால் லேசா? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல வேண்டும். பிறகு துப்பறிவோனாகக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பப்பா? அந்தத் தொழில் நமக்கு வேண்டாம். மானுடன் ஓடிக் கொண்டு நாயுடன் துரத்த என்னால் முடியாது.

ஊழியன், 22-02-1935

மேலும் படிப்பதற்கு : http://www.keetru.com/literature/puthumaipithan_index.php, http://www.chennailibrary.com/ppn/ppn.html

பாரதம் தாயல்ல, பேய்! - தோழர் தியாகு

தமிழ்நாட்டிலே அடக்குமுறைகளுக்குப் பஞ்சமில்லை. எத்தனையோ அடக்குமுறைகளை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு அரங்கம் தேடுவது கூட எவ்வளவு பெரும்பாடாக இருந்தது என்பதைச் சொன்னால் அது தனிக் கதையாக விரியும்.

கருத்துரிமை என்பது அரசமைப்பு உறுதி செய்கிற அடிப்படை உரிமை என்பதைக் காட்டிலும் அவ்வப்போதைய முதலமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் பார்த்து வழங்குகிற பிச்சை என்கிற பரிதாப நிலைதான் இந்தத் தமிழ்நாட்டிலே உள்ளது.

இன்றைக்கும் தமிழ்நாட்டினுடைய சிறைகளிலே அரசியல் காரணங்களுக்காக அடை பட்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லா வற்றிலும் குறிப்பாகச் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தண்டனை கழிந்த பிறகும் சிறையிலே இருப்பவர்கள், விசாரணை இலலாமல் சிறையிலே இருப்பவர்கள் என 39 பேர் இன்றும் அங்கே அடைபட்டுக் கிடக்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் பட்டினிப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். எதற்கும் அவர்களின் விடுதலை கிடைத்தபாடில்லை.

தமிழ்நாட்டுச் சிறைகளிலே இசுலாமியக் கைதிகள் அவர்கள் இசுலாமியர்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவே விடுதலை மறுக்கப்பட்டு அடைபட்டிருக்கிறார்கள். மேலும் பல வழக்குகள், தமிழ்த் தேசியம் சார்ந்து தமிழீழ ஆதரவு என்ற நிலைப்பாட்டிற்காகப் பலர் சிறைகளிலே அடை பட்டிருக்கிறார்கள். இந்த அடக்குமுறைகளை யெல்லாம் நாம் எதிர்க்கிறோம். அடக்குமுறைக்கு எது காரணமாயினும் அதை நாம் எதிர்க்கிறோம்.

ஜெர்மானியக் கவிதை ஒன்று நமக்குத் தெரியும். நமது சூழலுக்கு ஏற்ப அதை மாற்றிச் சொல்லலாம். என்னைக் காவல்துறை தேடி வந்தது நான் தமிழ்த்தேசியன் என்பதால் மற்றவர்கள் துணைக்கு வரவில்லை. வேலுச்சாமியைக் காவல்துறை தேடி வந்தது. அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்பதால் யாரும் தட்டிக் கேட்கவில்லை. ரஜினிகாந்த்தைக் காவல்துறை தேடி வந்தது. அவர் சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சார்ந்தவர் என்பதால் சாதிக்காரர்கள் ஏன் என்று கேட்கவில்லை. முடிவிலே இங்கே நம்மைக் காவல்துறை தேடி வருகிற போது தட்டிக்கேட்பதற்கு யாருமே மிச்சமில்லை எனலாம். அடக்குமுறை என்பது எக்காரணத்தோடு வந்தாலும் சட்டப்படி வந்தாலும், சட்ட விரோதமாக வந்தாலும், எந்த முனை யிலே இருந்து வந்தாலும், எந்த நியாயத்தோடு வந்தாலும் அந்த அடக்கு முறையை எதிர்ப்பது என்ற முறை யிலே அந்தக் குறைந் தபட்ச வேலைத் திட்டத் தின் அடிப்படை யிலே நாம் இந்தக் கூட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம். கூட்டமைப்பை உருவாக்குதவற்கானத் தூண்டுதல் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு தொடுத்திருக்கிற பச்சை வேட்டை.

அடக்குமுறையின் புதியதொரு வடிவம் இது. அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வருகிற அடக்குமுறை அல்ல. தனிப்பட்டப் போராளிகளுக்கு எதிராக மோதல் கொலைகள் நடத்துகிறார்களே அப்படிப்பட்டச் சட்டவிரோதக் கொலைகார அடக்குமுறையும் அல்ல. இது நேரடியாகப் போர் என்ற முறையிலே வந்திருக்கிற அடக்குமுறை.

இது நமக்கு ஓரளவுக்கு ஈழத்திலே இருந்து தெரிந்த செய்தி. மக்கள் மீது பேரினவாத அரசு, கொடுங்கோலன் இராசபட்சேவின் அரசு ஒரு போரைத் தொடுத்தது. இந்தப் போருக்கு அது உலகளவிலே சொன்ன நியாயம் - அது பயங்கரவாதத்துக்கு எதிராக விடுதலைப் புலிகளு க்கு எதிராக நடத் தப்படுகிறபோர் என்ப துதான். ஒர் அடிப் படை உண் மையை நாம் நினைவிலே வைத் துக் கொள்வோம். விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளை மவு னித்ததாக அறி வித்த பிறகு வந்த மே 16,17,18 நாட்களி லேதான் போரிடுவதற்கு யாரு மில்லாத போது தான் போரிலிருந்து ஒதுங்கி அரசால் பாதுகாப்பு வளையம் என்றும் போர் நிறுத்த வளையம் என்றும் அறிவிக்கப்பட்ட பகுதிகளிலே இருந்த 40,000 மக்கள் மூன்றே நாட்களில் படுகொலை செய்யப்பட்டார்கள். பெரும் கனரக ஆயுதங்களைக் கொண்டும் வான் குண்டு வீச்சு கொண்டும் அவர்கள் அழிக்கப் பட்டார்கள். போர் என்ற வடிவிலான அடக்கு முறையைத் தமிழினம் ஈழத்திலே சந்தித்தது. அதையே வழிகாட்டுதலாகக் கொண்டுதான் இந்திய அரசு பழங்குடி மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது.

இங்கே அமித் பாதுரி அவர்கள் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் - இந்தப் போர் எதற்காகத் தொடுக்கப்பட்டிருக்கிறது என்று. ஒன்றை நாம் நினைவில் கொள்வோம்: இந்தப் போராட்டத்தில் அல்லது இந்தப் போராட்டத்தினுடைய ஒரு பகுதிக்கு மாவோயிஸ்டுகள் தலைமை வகிக்கிறார்கள். வசந்தத்தின் இடிமுழக்கமாய் எழுந்த நக்சல்பாரி இயக்கத்தினுடைய அந்தப் புதிய வடிவம் அந்தப் போரை வழிநடத்துகிறது. ஆனால் அவர்கள் மட்டும் இல்லை. காந்தியவாதிகள் இந்தப் போராட்டத்திலே இருக்கிறார்கள். வன்முறையை ஏற்காதவர்கள் இந்தப் போராட்டத்திலே இருக்கிறார்கள். இன்னும் பல்வேறு பிரிவினர் இருக்கிறார்கள். பலரும் சேர்ந்து அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அணிவகுத் திருக்கிறார்கள்.

இந்தவகை அடக்குமுறை குறித்து இந்தியத் துணைக்கண்டத்திலே மட்டுமல்ல, உலகெங்கிலும் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். பழங்குடி மக்க ளிடமிருந்து இயற்கையை, நிலத்தை, வளத்தைப் பிடுங்குவதற்காக நடத்தப் படுகிற போர்.

அமெரிக்கக் கண்டத்தில் செவ் விந்தியர் கள் என அறியப்பட்ட அந்தப் பழங்குடி மக்கள் மீது பழைய உலகம் என்று சொல்லிக்கொண்டு நாகரிகத்தைக் கற்றுத்தருவதற் குப் புறப்பட்ட அய்ரோப்பிய வெள் ளையர்கள் நடத் திய கொடுமைகள் கொஞ்சமா நஞ்ச மா! ஆஸ்திரேலி யாவிலும் நிய+சிலாந்திலும் தொல்குடி மக்கள் மீது வெள்ளையர்கள் நடத்திய போர்கள் ஏராளம். கூட்டம் கூட்டமாக அந்த மக்கள் அழிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் யாரும் எதிர்ப்பின்றி அழிந்து போகவில்லை. ஒரு புழுவை நசுக்க முற்படுகிற போது அது நெளிந்து தன் எதிர்ப்பைக் காட்டுவது போல, ஒரு பூனையைக் கூட விரட்டி விரட்டி மூலைக்குத் துரத்துகிற போது புலியாக மாறி எதிர்த்துப் பாய்வதைப் போல அந்தப் பழங்குடி மக்கள் ஆயுத, ஆள் வலிமைகளில் மிகக் குறைவாக இருந்தும் கூட ஆதிக்கர்களை எதிர்த்துப் போராடினார்கள் என்பது புகழ்மிக்க வரலாறு. போராடினார்கள் என்பது மட்டுமல்ல, இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் படையெடுத்துச் சென்ற போது பிரித்தானிய வெள்ளையர்களின் பீரங்கிப் படையை எதிர்த்து இசாந்திலவானா போர்க்களத்தில் சூலுப் பழங்குடி இன மக்கள் வெறும் வில்லும் வேலும் தாங்கி எதிர்த்து நடத்திய போர். அந்தப் போரிலே அவர்கள் தோற்கவில்லை. பீரங்கிகளையும் சுடுகருவிகளையும் வெடிமருந்துகளையும் வைத்திருந்த வெள்ளை இராணுவத்தை, மலையின் அடிவாரத்திலிருந்து புறப்பட்டவர்களை மலையின் மேட்டிலிருந்து ஓடிவந்து தாக்கி வரிசை வரிசையாக வீரர்கள் வீழ்ந்தபோதும் கடைசிவரை நெருங்கிவந்து பீரங்கிகள் மீது ஏறி நின்று தங்கள் நிலத்தை, தங்கள் பண்பாட்டை, இயற்கையை, நீரூற்றுகளை, மலைக் குன்றுகளை, தங்கள் மண்ணிலே உறங்கிக் கிடந்த செல்வங்களைப் பறிக்க வந்த வெள்ளையர்களை நெஞ்சிலே வேல் பாய்ச்சிய அந்த வீரத்தை அய்ரோப்பாவிலிருந்து படித்துவிட்டு ஏங்கெல்ஸ் போற்றி எழுதினார். கேள்விப்பட்டவுடன் ஏங்கெல்ஸ் இசாந்திலானாவில் கிடைத்த வெற்றி என்று எழுதினார். அந்த இசாந்திலானாவின் தொடர்ச்சியைத்தான் நான் தந்தேவாடாவில் பார்க்கிறேன். (கைதட்டல்)

அதனுடைய தொடர்ச்சிதான் நிலத்தை, நீரை வளத்தைப் பறிப்பதற்கு படையெடுத்து வந்தவர்களுக்கு எதிரான போர். - அது சிறப்புக் காவல்படையாக இருந்தால் என்ன! அவர்களே என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள் - நாம் யாராவது கோபத்திலே போலீஸ் நாய் என்று சொன்னால் வருத்தப்படுவார்கள் அல்லவா! ஆனால் அங்கே ஒரு படைக்குப் பெயரே வேட்டை நாய்கள்தான். ஹவுஸ் என்று பெயர் வைத்துக் கொண்டு ஒரு படை. தேள் என்றொரு படை. பாம்பு என்றொரு படை. இவையெல்லாம் இந்திய அரசின் படைகள். பாம்பு அவர்களைக் கொத்தப் பார்க்கிறது. தேள் அவர்களைக் கொட்டப் பார்க்கிறது. நாய்கள் அவர்களை விரட்டிக் கடிக்கின்றன. மனிதர்கள் எதிர்க்காமல் இருந்தால் மனிதத் தன்மை இருக்க முடியுமா! (கைதட்டல்) அவர்கள் எதிர்க்கிறார்கள், எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்கள் மட்டும் போராடவில்லை. பலதரப்பட்டவர்கள் பல வடிவங்களில் போராடுகிறார்கள்.

உலகமயத்தையும் தாராளமயத்தையும் தனியார்மயத்தையும் இந்திய நாட்டின் தேசிய இனங்கள் மீதும் பழங்குடிகள் மீதும் சுமத்துவதற்கு மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் படையெடுத்து வருகிற போது எதிர்க்காமல் விட்டால் அவர்கள் மனிதர்கள் இல்லை. எதிர்ப்பது மனிதக் குணம். அதைத்தான் அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அடக்குமுறை எதிர்ப்பு என்பது அந்த மக்களுக்கு ஆதரவான ஒரு குரல்! ஒரு போர் அவர்கள் மீது சுமத்தப்படுகிற போது அந்தப் போரிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக அவர்கள் நடத்துகிற போராட்டத்திற்கு ஆதரவாக எழுப்பப்படுகிற குரல். இதை மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் எனக் காட்ட முற்படுகிறார்கள்.

அருந்ததி ராய் அழகாக எழுதினார் : 99 சதவீதப் பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் அல்ல. ஆனால் 99 சதவீத மாவோயிஸ்டுகள் பழங்குடிகளே! (கைதட்டல்). வேறு யார் அவர்களுக்காகப் பரிந்து பேசுவார்கள். புத்ததேவ் பட்டாச்சார்யா பேசுவாரா? சிங்கூரையும் நந்திகிராமத்தையும் டாடாவிற்கும் பன்னாட்டுக் குழுமத்திற்கும் விற்றுவிட்டு அவர் எப்படி வந்து பேசுவார்? பழங்குடி மக்கள் மீது வான்படையைப் பயன்படுத்த வேண்டும் என்று யோசனை சொல்கிற சீதாராம் எச்சூரிக்கு மக்களைப் பற்றி, சனநாயகத்தைப் பற்றி, புரட்சியைப் பற்றி பேசுவதற்கு இனி அருகதை உண்டா? (கைதட்டல்)

டாடாவை சிங்கூரிலிருந்து விரட்டியடித் தார்கள் வங்காள மக்கள். புத்ததேவ் பட்டாச்சார்யாவின் புளுகு நடவடிக்கைகள் தோற்றன. அவர் எங்கே போய் அடைக்கலம் தேடுகிறார் என்று பாருங்கள் - செங்கொடி ஆட்சி தனக்கு செய்த உதவியைப் பெற முடியாமல் மக்கள் முறியடித்த போது அவர் காவி ஆளுகிற குசராத்திலே போய் அடைக்கலம் தேடுகிறார். டாடாவுக்கு நிலத்தை இலவசமாக வழங்குவதில்... உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை வைத்திருந்த இயக்கமும் இந்துத்துவம் பேசுகிற இசுலாமியர் களைப் படுகொலை செய்த பயங்கரவாதி நரேந்திரமோடியின் அரசாங்கமும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் தேரிக்காட்டை டாடாவுக்கு வாரிக்கொடுக்கத் துடித்த கருணாநிதி அரசாங்கமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. (கைதட்டல்) நமக்கெல்லாம் மழை நீர் சேகரிப்பைப் போதித்துவிட்டு தாமிரபரணித் தண்ணீரைக் கோக்குக்கும் பெப்சிக்கும் விற்ற செயலலிதாவும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார். (கைதட்டல்) இதில் எங்கே வேறுபாடு பார்ப்பது? எனவேதான் பதவி வேட்டை அரசியல் நடத்துகிற இந்தக் கட்சிகள், நிலவுகிற அமைப்பைப் பாதுகாக்கத் துடிக்கிறவர்கள், நாட்டைப் பாத்தி கட்டிப் பன்னாட்டுக் குழுமங்களுக்கு விற்கத் துடிக்கிறவர்கள். கோதாவரித் தீரத்திலே கிடைக்கிற எண்ணெய் எனக்கா உனக்கா என இரண்டு அண்ணன் தம்பிகள் சண்டை போடுகிறார்கள். பஞ்சாயத்துப் பண்ணுகிறது உச்சநீதிமன்றம். இந்த மண்ணை, நிலத்தை, வளத்தை யாரை நம்பிக் காப்பது. நாம் யாரையும் நம்ப வேண்டாம் - நாம் நம்மை நம்புவோம். நம் கைகளை நம்புவோம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

அந்த மக்கள் மீது தொடுக்கப்படுகிற அடக்குமுறை நேற்று ஈழத்தில் போராக மாறியது. இன்று இந்தியாவின் நடுப்பகுதியிலே போராக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் இதை எதிர்க்கத் தவறுவோமானால் இதே நிலை நாளை நமக்கும் வரும். சில நண்பர்கள் நினைக்கிறார்கள,; நாம் ஏதோ அவர்கள் மீது அனுதாபப்பட்டோ பரிவு காட்டி அவர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று. இல்லை நண்பர்களே… நாம் நமக்காகப் போராடுகிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். இன்று அவர்கள்; நாளை நாம் என்ற உணர்வோடு போராடுவோம்.

ஒரு காலத்தில் லெனின் சொன்னார்: அய்ரோப்பியப் புரட்சிக்கும் உலகப் புரட்சிக்கும் பெரும் தடையாகப் பிற்போக்கின் அரணாக இருப்பது எது என்றால் அது ஜார் ஆட்சி. ஜார் ஆட்சி ஒழிய வேண்டும் என்பது ருஷ்ய மக்களின் விருப்பம் மட்டுமல்ல் அது உலக மக்களின் விருப்பம்; குறிப்பாக அய்ரோப்பிய உழைக்கும் மக்களின் விருப்பம் என்று சொன்னார்.

இன்று அதே நிலையிலேதான் இந்தியக் கட்டமைப்பு, அரசமைப்பு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கட்டமைப்பை, அரசமைப்பை உடைத்து நொறுக்காமல் அடக்குமுறை எந்திரத்தின் கால்களை வெட்டி எறியாமல் இந்தியாவில் மட்டுமல்ல, தென் ஆசியத் துணைக் கண்டத்திலேயே எந்தத் தேசிய இனத்திற்கும் விடுதலை இல்லை; எந்தப் பழங்குடி மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. (கைதட்டல்)

மேலெழுந்த வாரியாகப் புரிந்து கொள்கிற நண்பர்கள்; தவறாகப் புரிந்து கொள்கிற தேசபக்தியின் அடிப்படையில் பாரதத் தாய் என்பார்கள்; தாய் அல்ல, பேய் என்பதை ஈழ மக்கள் தெரிந்து கொண்டார்கள். (கைதட்டல்) தாய் என்றா உன்னைச் சொன்னார்கள் - பிள்ளை அழுதால் பால் கொடுக்கிறவள்; தாய்; பிள்ளைக்குப் பசித்தால் தன் வயிறு பசிக்கிறதே என்று துடிக்கிறவள் தாய்; நீ தாயல்ல பேய்; எம் மக்களைக் காலால் மிதித்தழித்த பேய்! ஓ பேயே! உன்னை அழிப்பதற்கு இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்தின் நான்கு திசைகளிலும் புறப்பட்டு வருகிறார்கள் எங்களுடைய மக்கள். (கைதட்டல்)

பாரதப் பேயின் தலையைக் காசுமீரிகள் துண்டாடுவார்கள்; பாரதப் பேயினுடைய கரங்களை நாகாலாந்து, மணிப்பூர் பழங்குடி மக்கள் வெட்டி எறிவார்கள்; எம் ஈழத்து மக்களை முள்ளிவாய்க் காலில் அழுத்தி அழுத்தி உயிரோடு புதைத்த உன் கால்களை இந்தத் தமிழகம் வெட்டி வீழ்த்தும்.(கைதட்டல்) எம் தண்ட காரண்யப் பழங் குடி மக்கள் ஆறு தேசிய இனங் களுக்கு நடுவிலே தொடர்ச்சியாகப் பரந்துகிடக்கிற மக்கள் நிலத் திற்காகவும் இயற்கை வளத் திற்காகவும் மட்டு மல்ல் தமக்கான ஆட்சி உரிமைக் காகப் போராடுகிற அந்த மக்கள உன்னுடைய குடலை உறுவுவார்கள். இதயத்திலே வேல் பாய்ச்சுவார்கள் எங்கள் தண்டகாரண்ய மக்கள். (கை தட்டல்)

இந்தப் பேயை அழித்து இந்தத் துணைக் கண்டம் புதிய தேசங்களின் இருப்பிடமாக, விடுதலை பெற்ற தேசிய இனங் களின் புதிய ஆட்சிப்புலமாக மலருகிற போது மலைகளிலே இருக்கிற கனி வளத்தை யார் எடுத்துக் கொள் வது, எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிப்போம். எந்தச் சட்ட உரிமையின் அடிப்படையிலே தண்டகாரண்யத்துக் காடுகளிலும் மலைகளிலும் இருக்கிற இயற்கை வளங்களுக்கு, இந்தியாவே நீ உரிமம் கொண்டாடுகிறாய். இந்திய அரசமைப்பின் அடிப்படையிலா? இந்த அரசமைப்பை அந்த மக்களைக் கேட்டுக் கொண்டு வகுத்தாயா? எப்போது அந்த மக்கள் இந்த அரசமைப்பை ஏற்றுக் கொண்டார்கள். நாகாலாந்து மக்கள் சொல்கிறார்கள,; 47 ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை பெற்ற நாள்! நாங்கள் 47 ஆகஸ்ட் 14ஆம் நாள் விடுதலை பெற்றோம். முன்கூட்டி விடுதலை பெற்ற எங்களை அடிமைப்படுத்த நீ யார் என்று இந்திய அரசைப் பார்த்துக் கேட்கிறார்கள்.

இந்தக் கேள்வியை மறைப்பதற்கான பட்டுத்திரைகளே தேர்தல், சனநாயகம், அரசமைப்பு, நீதிமன்றம் - இந்தத் திரைகள் ஒவ்வொன்றாகக் கிழிந்து தொங்குவதைத்தான் அருந்ததிராய் தண்டகாரண்ய மக்களை நேரில் பார்த்து நமக்குச் சொன்னார்கள். உளப்பூர்வமான ஒரு படப்பிடிப்பு: walking with comrades படித்தீர்களா இல்லையா? தமிழில் போட்டி ருக்கிறோம். எங்கே அருந்ததிராயைத் தங்க வைக்கலாம் - ஐந்து நட்சத்திர விடுதியிலா மூன்று நட்சத்திர விடுதியிலா கவலையே பட வேண்டாம். நீங்களும் நானும் ஒருபோதும் அனுபவித்திராத ஆயி ரம் நட்சத்திர விடுதியி லே தண்டகாரண்ய மக்களோடு வாழ்ந்து விட்டு வந்திருக்கிறார் (கை தட்டல்) A Thousand Star Hotel கற்பனையிலே நினைத்துப் பாருங்கள்.

மக்களின் வாழ்க்கையை நமக்குப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். எனவே நண்பர்களே! இந்த அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பினை நாம் வலுப்படுத்துவோம். என்ன அரசியல், பொருளியல், பண்பாடு வேண்டும் என்பதை உறுதி செய்கிற உரிமை எம் மக்களுக்கே உண்டு எந்த அரசுக்கும் கிடையாது. எம் மக்களிடம் அந்தத் தீர்ப்பை நாம் விடுவோம். ஆனால் அதற்கான சனநாயக உரிமை வெளியை நாம் பாதுகாப்போம். அடக்குமுறை வென்றதாக வரலாறு இல்லை உரிமைப் போர் தோற்றதாக வரலாறு இல்லை; வெல்க உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு!

வணக்கம்!

தொகுப்பு : அரிகரன்

(சென்னையில் 2010 சூன் 4ஆம் நாள் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு நடத்திய அரங்கக் கூட்டத்தில் தோழர் தியாகு ஆற்றிய உரை)