தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஊடகவியலாளர் இசைப்பிரியா கொல்லப்படும் காட்சி: இலங்கை அரசின் வெளிவராத கோரமுகம்





ஊடகவியலாளராகவும், நடனக் கலைஞராகவும் செயற்பட்ட இசைப்பிரியா இராணுவத்திடம் சிக்கி, கேணல் ரவிப்பிரியவின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இசைப்பிரியா கைது செய்யப்பட்டது முதல் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது வரை நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் உதவிபுரிந்தது கேணல் ரவிப்பிரிய தலைமையில் வழிநடாத்தப்பட்ட படையணியொன்றின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இசைப்பிரியாவின் சித்திரவதையின் போது அவர் கதறிய ஓலங்களை அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் சிலரும் செவியுற்றதாக கூறப்படுகின்றது. அதன் பின்பே அவர் வாயில் துணி கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இசைப்பிரியாவைப் சித்திரவதை செய்து படுகொலை செய்யும் வரைக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்படக் காட்சிகளாகப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் கற்பழிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் கூட கேணல் ரவிப்பிரியாவின் டயலொக் இலக்க தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கண் கண்ட சாட்சிகள் மூலம் தெரிய வருகின்றது.

அத்துடன் அன்றைய கட்டத்தில் இறுதிப் போரில் பங்கு கொண்டிருந்த படையணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் மாதக்கணக்கில் விடுமுறை கிடைத்திருக்காத நிலையில் தங்களது உணர்ச்சிகளை தம்மிடம் சிக்கிய புலிகளின் மகளிர் அணியின் மீதே தீர்த்துக் கொண்டதாக களமுனையில் செயற்பட்ட சிலரின் தகவல்கள் உறுதி செய்கின்றன.

இலங்கையின் படைத்துறை உயர் அதிகாரிகளின் மொபைல் தொலைபேசிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில் போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் எமது தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இதில் வருபவரே இசைப்பிரியா



இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த உடனேயே
“ இறுதிக்கட்டப் போரின் போது சிறீலங்கா இராணுவத்தின் ஸ்னைபர் வீரனொருவன் இசைப்பிரியாவினால் கொல்லப்பட்டுள்ளான். அதற்குப் பழிவாங்கும் முகமாகவே கொல்லப்பட்ட சிறீலங்கா படைவீரனின் சகாக்களால் அவர் சிதைக்கப்பட்டதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
தம்மிடம் சரணடைந்திருந்த பெண்ணொருவரை மிரட்டி காயம் பட்ட நிலையில் தவிப்பது போன்று நடிக்க வைத்து, முன்னரங்க காவல் நிலையில் கடமையில் இருந்த இசைப்பிரியாவை தந்திரமாக தமது எல்லைக்குள் படைத்தரப்பு வரவழைத்துள்ளது. அதன் பின் சற்றும் எதிர்பார்த்திராத முறையில் அவர் படையினரின் கையில் சிக்கிக் கொண்டுள்ளார்”
என்ற விடயம் அடங்கிய செய்தி உடனடியாக ஊடகங்களுக்கு பரப்பப்பட்டது.

இச்செய்தி நிராயுதபாணியாக நின்ற ஊடகவியலாளரும் கலைஞருமான இசைப்பிரியாவின் படுகொலையையும் அதனால் ஏற்படும் விளைவுகளின் வீரியத்தையும் குறைக்க அவரை ஒரு ஆயுததாரியாக்க எதிரியால் திட்டமிடப்பட்ட பரப்புரை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவரை கொலை செய்த போது எடுக்கப்பட்ட கோரமான காணொளியை முழுமையாக அவதானித்தால் அவர் ஒரு நிராயுதபாணி என்பதை உறுதிப்படுத்த முடியும்.

அதனாலேயே இந்தச்செய்தியில் திருத்தத்தைக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனைய ஊடகங்களையும் எதிரியின் திட்டமிட்ட சதித்திட்டத்தை கவனத்தில் கொண்டு வெளிவிடப்படும் ஒவ்வொரு செய்திகளையும் முழுமையான செய்திப்பகுப்பாய்வு செய்து கொள்ளுமாறு ஏனைய இணையத்தளங்களுக்கும் அறியத்தருகின்றோம்.