தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஊழலை கூட எதிர்க்க துணிவில்லாத அரசு,


            மணிப்பூரில் ராணுவ பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் பெண்மணியும், கவிஞருமான ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரத போராட்டம் துவங்கி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. மணிப்பூரில் அமுலில் இருக்கும் சிறப்பு ஆயுதப்படை வாபஸ் பெறக்கோரி ஷர்மிளா உண்ணாவிரத போராட்டத்தை நடத்திவருகிறார். மண்ணின் மைந்தர்களான பழங்குடியினர், வடகிழக்கின் வாழ்வுரிமை போராளிகள்,தமிழகத்தில் இனத்தை காக்க வேண்டி உயிர் நீத்த முத்து குமாரர்கள் ஆகியோரை விட இந்தியாவின் கார்ப்பரேட் மீடியாக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தும் மேட்டுக்குடியினர் தாம் கண்ணுக்கு தெரியும் வீரதீர போராளிகள் போலும்!


         கையாலாகாத பிரதமரின் அறிக்கை ஆணித்தரமாக இல்லை. நாட்டின் பிரதமர் ஒரு சக்தி வாய்ந்த தலைவராக செயல் பட வேண்டும். பிரதமரின் அறிக்கை ஒரு அரசு அதிகாரியின் அறிக்கை போல உள்ளது. இன்று அவர் பாராளமன்றத்தில் ஆற்றிய உரை யாரோ எழுதி கொடுத்ததை பிழை இல்லாமல் படித்தது போல இருந்தது என்பதே துணிவும் தெளிவும் தைரியமும் இல்லாத அரசின் எடுத்துக்காட்டு.

        

        காலம் நெருங்கிவிட்டது இந்த காட்டு நரிகளின் கதை முடிய. மன்மோகன்!! உனக்கு காங்கிரஸின் ஊழல் கூட்டங்களை காப்பாற்றுவதை விட வேறு ஒன்றும் தெரியாது. எதை கேட்டாலும் என்னிடம் மந்திரம் ஒன்றும் இல்லை என்ற தந்திர சொல்லால் காலம் கடத்தி செல். விரைவில் துரோகமும் வஞ்சகமும் கொண்ட காங்கிரசுக்கு பாடம் கற்பிக்கப்படும்.

 

 நன்றி

பகலவன்