தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இதோ நாங்களும் இந்த கோமணம் கட்டிய காந்தி தேசத்துக்கு கொடுக்கிறோம் சுதந்திரம்.

         இல்லாத இறையாண்மைக்கு என்ன புடலங்காய் சுதந்திரம்.என் மீனவ சகோதரன் சிங்களவனால் வஞ்சிக்கபடும் போது வராத சுதந்திரம், என் தொப்புள் கொடி உறவு அழிக்கப்பட்ட போது வராத சுதந்திரம், என் தமிழ்நாடு வளம் பெறவதை தடுக்க சேது சமுத்திரத்தை குழி தோண்டி புதைக்கபட்ட போது வராத சுதந்திரம், என் தொப்புள் கொடியை அறுத்தெறிந்தவனுக்கு நீ கொடுத்த ஆயுதமும் நீ கொடுத்து கொண்டிருக்கிற கரண்ட்டையும் தடுக்க வராத சுதந்திரம், என் தமிழ் ஈழ தேசத்தை அழித்த சிங்களவனுக்கு நீ கொடுத்த வரவேற்பு ராஜமரியாதையை தடுக்க வராத சுதந்திரம், காவிரியில் வஞ்சிக்கபட்ட என் உழவன் எலி கறி சாப்பிடும் போது தடுக்க வராத சுதந்திரம், முல்லை பெரியாற்றில் எமக்கான உரிமையை பெற்று தர வராத சுதந்திரம் என் நாயினும் கீழான சுதந்திரத்துக்கு இன்றைக்கு பிறந்த நாளாம். தூ இன்னும் என்னடா சுதந்திரம் மண்ணாங்கட்டி சுதந்திரம், இதோ நாங்களும் இந்த கோமணம் கட்டிய காந்தி தேசத்துக்கு கொடுக்கிறோம் சுதந்திரம். தமிழ்நாடு இனி தனி நாடு.


எனக்கான நாடு கிடைக்கும் வரை நான் அகதியே!

பகலவன்