www.pagalavan.org
                                                         
 
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
         செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில்  போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை  மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது  சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.  "எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம  போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர,  நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது  தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் ... Continue Reading  
  தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம் ஜெயலலிதாவுக்கு தலைவர்கள் பாராட்டு
        சென்னை : ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க  வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து தமிழக சட்டப்பேரவையில்  தீர்மானம் கொண்டு வந்ததற்கு முதல்வர் ஜெயலலிதாவக்கு பல்வேறு தலைவர்கள்  நன்றி தெரிவித்துள்ளனர். வைகோ(மதிமுக): சாவின் வாசலில் நின்ற வேளையில்,  தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு ஜனாதிபதிக்கு  வேண்டுகோள் விடுத்து, தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய  முதல்வர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.  எந்த ஒரு ... Continue Reading  
  போர்க் குற்றங்களுக்கு இலங்கையை விட அதிகமாக அஞ்சும் இந்தியா
        இலங்கை மீண்டும் தனது விளையாட்டை காட்டத் துவங்கியுள்ளதால் இந்தியா  கலக்கமடைந்துள்ளது. எல்டிடிஈயை தோற்கடித்ததும், வடக்கு இலங்கையில்  தமிழர்களை அடிமைபோல அடக்கி வைத்திருக்க ராணுவத்தை குவித்து வைத்த பின்னரும்  இன்றைய தேதி வரை சிவசங்கர் மேனன், ராஜபக்சேயுடன் தமிழர் விரோத வசனங்களையே  பேசி வருகிறார். தனது இனப்படுகொலை இந்த அளவிற்கு வெற்றிபெறும் என்று இலங்கை  ஒருபோதும் நினைத்துப் பார்த்தது இல்லை. மாறாக ஐநாவில் உள்ள சர்வதேச  நபர்களின் தொடர்பு மூலமாக இனப்படுகொலையில் ... Continue Reading  
  செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி
        காஞ்சிபுரம்: தூக்கு மேடையில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன்,  முருகன், சாந்தன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த  இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் மொத்தமாக திரண்டு வந்து கண்ணீர்  அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது.  காஞ்சிபுரம் இதுவரை கண்டிராத அளவில் செங்கொடி அஞ்சலி நிகழ்ச்சி  அமைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஞ்சலி செலுத்த  பல ஆயிரம் பேர் திரண்டு வந்ததால் உடல் தகன நிகழ்ச்சியை நாளை ... Continue Reading  
  வேலூர் சிறைச்சாலை முன்பு கொண்டாட்டம்
        முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனை 8 வாரங்களுக்கு  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்  வேலூர் சிறைக்கு சென்று பேரறிவாளனை சந்தித்தார்.  பின்னர் வெளியே வந்த அவர், மதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த மகிழ்ச்சி  கொண்டாட்டத்தில் பங்கேற்றார். சிறைக்கு வெளியே இனிப்புகள் வழங்கினார்.  மதிமுகவின பட்டாசு வெடித்து கொண்டாடினர்.  பேரறிவாளனின் வழக்கறிஞர், அரசியல் சிறைக்கைதிகள் விடுதலைக்கான அமைப்பின்  செயல்தலைவருமான எஸ்.கே.ஆர்.கிலானி உட்பட பலர் இந்த மகிழ்ச்சி  கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.           ... Continue Reading  
  ஜெயலலிதாவுக்கு கொளத்தூர் மணி வேண்டுகோள்
        சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி மற்றும் அரசியல் சிறை வாசிகள் விடுதலைக்கான  குழு இணைந்து வேலூரில் முருகன்,சாந்தன், பேரறிவாளனை காப்பாற்றக்கோரி  பொதுக்கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பெரியார் திராவிட கழக கொளத்தூர் மணி  பங்கேற்று பேசினார்.   அவர்,   ''110 விதியின் கீழ் இவர்களை காப்பாற்ற எனக்கு அதிகாரம் இல்லை என  பேசிய முதல்வரின் மனதை நம் தமிழர்களின் போராட்டங்களும்,  தோழர்  செங்கொடியின் தீக்குளிப்பால் எழுந்த எழுச்சியும் மாற்றியதால், இன்று  சட்டமன்றத்தில் மூவரை தண்டனையை ஆயுள்தண்டனையாக ... Continue Reading  
  தெனாவட்டாகக்கூறும் காங்கிரஸ்காரனின் திமிர் இன்னும் அடங்கவில்லை : பெ. மணியரசன் பேச்சு
         சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி மற்றும் அரசியல் சிறை வாசிகள் விடுதலைக்கான  குழு இணைந்து வேலூரில் முருகன்,சாந்தன், பேரறிவாளனை காப்பாற்றக்கோரி  பொதுக்கூட்டம் நடத்தினர்.  இக்கூட்டத்தில் தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன்  பேசும்போது,  ''கடந்த 19 நாட்களாக முருகன், சாந்தன், பேரறிவாளனைப்போல  நாமும் மன சித்திரவதைகளை அனுபவித்து வந்தோம்.   அதற்கு இன்று ஒரு சிறு  தீர்வு கிடைத்துள்ளது.            இது நமது ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.   இந்த வெற்றி  பெரிய அரசியல் ... Continue Reading  
  அகில இந்திய டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் அமல்ராஜ் சாம்பியன்
        பர்ன்பூர் (மேற்கு வங்கம்), ஆக.30: மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூரில்  நடைபெற்ற 41-வது அகில இந்திய நிறுவனங்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ்  போட்டில் தமிழக வீரர் அந்தோனி அமல்ராஜ் சாம்பியன் பட்டம்  வென்றார்.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அந்தோனி அமல்ராஜ்  10-12, 14-12, 11-5, 4-11, 4-11, 11-6, 11-7 என்ற கணக்கில் மற்றொரு தமிழக  வீரர் சரத் கமலை வீழ்த்தினார்.அகில இந்திய அளவில் டேபிள் டென்னிஸ் தர  வரிசையில் ... Continue Reading  
  செப் 2 முதல் அரசு கேபிள்: ரூ 70க்கு 90 சேனல்கள் – ஜெயலலிதா அறிவிப்பு
        சென்னை: வரும் செப்டம் 2-ம் தேதி முதல் அரசு கேபிள் கார்ப்பரேஷன் செயல்படத்  தொடங்கும் என்றும், இதன் மூலம் மக்களுக்கு 90 சேனல்கள் ரூ 70-க்கே  கிடைக்கும் என்றும் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று  110-வது பிரிவின் கீழ் ஒரு அறிக்கை  வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:  கேபிள் டி.வி. இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில்  ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் பொதுமக்களிடமிருந்து அதிக அளவில்  கட்டணம் ... Continue Reading  
  

     
      
 
