தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தப்பி ஓட வழி தெரியாத ராஜபக்ச தப்பிக்க வைக்க விழி பிதுங்கிய காவல்த்துறை!

ஓக்ஸ்போர்ட்டில் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிரித்தானிய அரசில் உயர் மட்டங்களுடன் எப்படியாவது ஒரு புகைப்படமாவது எடுத்து தன்னுடைய கௌரவத்தை சிங்கள மக்கள் மத்தியில் காப்பற்றும் யோசனையில் இருந்த ராஜபக்சவுக்கு இடியென இறங்கியது தமிழ் மக்களின் போராட்டம் அவர் தங்கியிருந்த விடுதி அருகே நடைபெற இருக்கிறதெனும் செய்தி அதை அடுத்து இலங்கை தூதுவராலயத்துக்குள் தஞ்சம் புகுந்தார்.

அதனை அறிந்த இளையோர்கள் முதலாவதாக தூதுவராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் முடக்கினார்கள். இலங்கை தூதுவராலயத்துக்கு உள்ளே சென்றவர்களையும் வெளியேறியவர்களையும் காவல்த்துறையினரின் பலத்த பாதுகாப்புடனேயே அழைத்துச்சென்றனர்.

அனைத்துப்பகுதிகளும் தமிழ் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டதால் விழி பிதுங்கிய காவல்த்துறையினர் தமிழர்களிடம் வந்து வணக்கம் நீங்கள் அனைவரும் சுகமா இங்கு நீங்கள் பிரச்சனை எதுவும் ஏற்படுத்த மாட்டீர்கள் என நம்புகின்றோம் என கூறினார்கள்.

அதன்பின்பு சிங்கள மக்கள் யாருக்கம் நாம் எவ்விதத்திலும் தடங்கள் ஏற்படுத்த மாட்டோம் எமது நோக்கம் மகிந்தவை முடக்குவதே எனவும் சிங்களவர்களை போக நாம் அனுமதிப்போம் என உறுதியளித்த பின்னர் சிங்களவர்கள் காவல்த்துறையின் பாதுகாப்போடு தூதுவராலயத்தில் இருந்து வெளியேறினார்கள்.

அனைத்து சிங்களவர்களும் வெயியேறிய பின்னர் மிகவும் பலத்த பாதுகாப்போடு மூடி வைக்கப்பட்டிருந்த தொருவொன்றில் இருந்து மகிந்தவும் அவரது சகாக்களும் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.

அதற்கிடையில் இன்று காலையில் பிரித்தனியாவில் உள்ள சிங்களவர்கள் என்ன செய்கின்றார்கள் என மகிந்த கடிந்துகொண்டமைக்கு அமைய தமிழ் மக்கள் போராட்டம் நடாத்துவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக 15 முதல் 25 வரையான சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிரான போராட்டம் ஒன்றை நடத்தினார்கள் தமிழர்கள் வரத்தொடங்க இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனார்கள் சிங்களவர்கள்.

எதையாவது எப்படியாவது சாதிப்பேன் என பிரித்தானியா வந்திறங்கிய மகிந்தவுக்கு அவமானம் மேல் அவமானமே மிச்சமானது இனி மகிந்தவுக்கு பிரித்தானியா சீ சீ இந்தப் பழம் புளிக்குமே!.