தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அவசியம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்

money வயிற்றை கட்டி, வாயை கட்டி ஒரு தம்மாத்தூண்டு வீட்டை வாங்கி விட வேண்டும் என்று வாழ்நாள் கனவை நிறைவேற்ற துடியாய் துடித்து, வங்கிப் படியேறினால், மாத சம்பளம் வாங்கும் அந்த மகாஜனத்தின் நம்பிக்கை எல்லாம் ஒரே நொடியில் பொய்த்துப் போய், அந்த சிறிய குடும்பத்தின் தலைவனின் குட்டிக் கோட்டை நொறுங்கியும் விடுகிறது.


காரணம், சொந்த வீடு வாங்கும் அளவுக்கு அவனுக்கு எந்த கதியும் இல்லை என்பதை, ஒரு வங்கி அதிகாரி நிர்ணயித்து விடுகிறார். அவர்கள் வைத்தது தான் சட்டம். வீடு வாங்குவதாகட்டும், கல்விக்கடன் தருவதாகட்டும், ஏன், அவசர தேவைக்காக பத்தாயிரம் ரூபாய் பர்சனல் லோனாகட்டும், நடுத்தர வர்க்கத்துக்கு வங்கி அதிகாரிகளிடம் இருந்து வரும் பதில் என்ன தெரியுமா? 'உங்களுக்கு நிரந்தர வேலை இல்லையே... வங்கியில் போடப்படும் சம்பளம் போதுமானதாக இல்லையே... என்பது தான்.


வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி, அதில் மாதாமாதம் சம்பளப்பணத்தில் குறிப்பிட்ட சதவீதம் சேமித்து, பத்தாம் தேதிக்குள், வாடகை, கரன்ட் பில், மளிகை பில், பேப்பர் பில், கடன் இருந்தால் அதன் தவணைத் தொகை என்றெல்லாம் கணக்கிட்டு, போதாக்குறைக்கு பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு என பிக்சட் டெபாசிட்டிலும் சொற்ப பணத்தை முதலீடு செய்து விட்டு, பத்தாம் தேததிக்கு பின் 'அப்பாடா... என்று திருப்தி அடைவது தான் மாத சம்பளம் வாங்கும், நடுத் தர வர்க்கத்தினரின் வாழ்க்கை.


ஆனால், இவர்களுக்கு கடனுதவி திட்டங்களை அரசு போட்டாலும், அதிகாரிகள் அதில் மண்ணைப் போட்டு விடுவது தான் இதுவரை நடந்து வருகிறது. அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த வங்கி அதிகாரிகள் இன்னொரு பக்கம், 'வலுத்தவர்களுக்கு வாரியிறைக்கும் பணியையும் செய்கின்றனர். சாலையில் லாரியை கைகாட்டி, ஐந்து ரூபாய் வாங்கும் டிராபிக் போலீசை தான் உங்களுக்கு தெரியும். கோட் சூட் போட்டுக்கொண்டு ஏசி அறைக்குள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவது பற்றி இதுவரை யாரும் வெளிக்கொண்டு வரவும் இல்லை; வெளியே தெரியவும் இல்லை.


அரசு வீட்டுக்கடன் அமைப்பின் உயர் அதிகாரி சிக்கியது தான் பலருக்கும் பெரும் அதிர்ச்சி. அதோடு, அரிச்சந்திர வங்கி அதிகாரிகளின் தோலும் உரிக்கப்பட்டு விட்டது சி.பி.ஐ.யால். இவர்கள் செய்தது தான் என்ன என்று இன்னமும் கூட இந்த மகாஜனங்களுக்கு புரியவில்லை. அந்த அளவுக்கு  கேடித்தனத்தையும் கோட்டு சூட்டால் மூடி செய்துள்ளனர் இந்த 'ஹானஸ்ட் பிரபுக்கள்.


குறிப்பிட்ட நிதி ஆலோசனை நிறுவனத்தின் மூலம், நிதி நிறுவனங்களுக்கும், பில்டர்களுக்கும் மறைமுகமாக பல கோடிகளை கடனாக அள்ளித் தந்துள்ளனர். இதற்கு இவர்கள் பெற்றுக் கொண்டது, இந்த நிறுவனங்கள் போட்ட  பல லட்சம் லஞ்சப்பிச்சையும், கேளிக்கை சமாச்சாரங்களும்.


1. அர்ஷத் மேத்தா & 4,000 கோடி ரூபாய்
2. கேத்தன் பரேக் & 2,000 கோடி ரூபாய்
3. ஐபிஎல் மோசடி & 1,200 கோடி ரூபாய்
4. ஹவாலா மோசடி& 500 கோடி ரூபாய்
5. லாலு கால்நடை தீவன ஊழல் & 900 கோடி ரூபாய்
6. சத்யம் ஊழல் & 14,000 கோடி ரூபாய்
7. டெல்ஜி முத்திரைத்தாள் மோசடி & 20,000 கோடி ரூபாய்
8. காமன்வெல்த் போட்டி ஊழல் & 70,000 கோடி ரூபாய்


இந்த ஊழல்கள் தான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இதில், இப்போது வீட்டுவசதி லஞ்ச ஊழலும் சேர்ந்து விட்டது.


மணி மேட்டர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் என்ற நிதி ஆலோசனை நிறுவனம் மும்பையில் செயல்படுகிறது. இந்த நிறுவனம், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் பிற அரசுடமை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு லட்சக் கணக்கில் லஞ்சம் கொடுத்து பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கடன் வாங்கிக் கொடுக்கும் Ôஇடைத்தரகர் சேவைÕ செய்து வந்தது. கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப இதற்கு கமிஷன் தொகையை வாரி வழங்கும். கடன் பெற தகுதி இல்லாத பெரிய நிறுவனங்கள்கூட வங்கிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளது என்றால் வங்கி அதிகாரிகளை அந்த அளவுக்கு கவனித்துள்ளது.


வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த ஆவணங்களின் அடிப்படையில் பெரும் தொகையை கட்டுமான நிறுவனங்களுக்கு பெற்றுத் தரும். கடன் வாங்கிக் கொடுத்ததற்கு பெரும் தொகையை கமிஷன் பெற்றுக் கொள்ளும். இந்த முறையில்தான் லஞ்சம், ஊழல் நடந்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.


மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் இடைத்தரகர் செயல்பாட்டின் மூலம் ணீ1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்து இருக்கலாம் என்று சிபிஐ கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: எல்.ஐ.சி. செயலாளர் (முதலீடு) நரேஷ் கே.சோப்ரா, எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் நாயர், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் இயக்குனர் மணிந்தர்சிங் ஜோகர், பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் ஆர்.என். தயாள், மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் சர்மா, இதே நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சுரேஷ் கட்டானி, சஞ்சய் சர்மா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை பொது மேலாளர் வெங்கோப குஜ்ஜால் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


கட்டுமான நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கடன் தர பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பாங்க், எல்.ஐ.சி. மற்றும் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் உட்பட பல அரசு வங்களின் உயர் அதிகாரிகள் இடைத்தரகராக செயல்பட்ட மணி மேட்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து லட்சக் கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர்.
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக சென்னை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஜலந்தர், டெல்லி மற்றும் மும்பையில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக 5 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.


ஹவுசிங் கடன் முறைகேடு தொடர்பாக வங்கி, எல்.ஐ.சி. உயர் அதிகாரிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடன் முறைகேடு விவகாரம் நிதி மோசடி அல்ல. இது லஞ்சம், ஊழல் தொடர்பானது என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. பூர்வாங்க விசாரணையில் இது லஞ்சம், ஊழல் சம்பந்தப்பட்டதுதான் என்று சிபிஐயின் சிறப்பு இயக்குனர் பல்விந்தர் சிங் தெரிவித்தார்.


எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட செய்தி, கடந்த 24ம் தேதி பங்கு சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்கு சந்தையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் பங்கு மதிப்பு 18.32 சதவீதம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு மதிப்பு 8.02 சதவீதம், மணி மேட்டர்ஸ் பங்கு மதிப்பு 19.99 சதவீதம் குறைந்தது. மணி மேட்டர்ஸ் பங்குகளை பெரிய அளவில் முதலீட்டாளர்கள் விற்றனர்.


சிபிஐ பிடியில் சிக்கிய எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் நாயர் குர்கான், புறநகர் பகுதியில் பிளாட் ஒன்று வாங்கியுள்ளார். பிளாட் விலையில் குறிப்பிட்ட தொகையை தள்ளுபடி செய்வதற்கும், தேவையான பணத்தையும் மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் சர்மாவிடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் ணீ45 லட்சம் லஞ்சமாக நாயர் பெற்றுள்ளார்.


இதற்காக, டி.பி. ரியாலிட்டி, பாஷ்மினா லிமிடெட், மந்திரி ரியாலிட்டி, சிங்ருன் லிமிடெட், என்டர்டெய்ன்மென்ட் வேர்ல்டு, இந்தூர் சிட்டி டெசரர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கடன் பெற உதவியுள்ளார். சிபிஐயின் இந்த குற்றச்சாட்டை நாயரின் வக்கீல் மறுத்துள்ளார். நாயர் நிறுவனத்தின் தலைவர் தான், கடன் தொகையை அவர் நேரடியாக அனுமதிப்பது இல்லை. ஒரு கமிட்டிதான் கடன் தொகையை அனுமதிக்கிறது என்று கூறியுள்ளார்.


மும்பையில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவின் பொதுமேலாளர் பி.என்.தயாள் ணீ25 லட்சத்தை ராஜேஷிடம் இருந்து லஞ்சமாக பெற்றுள்ளார். இதற்காக அஷாபுரா மினிசெம் நிறுவனம் பெரும் தொகையை கடன் பெற உதவியுள்ளார். பிஜிஆரின் 200 கோடி மின் திட்டத்துக்கும் ஓபிஜி குழுமத்தின் ணீ300 கோடி திட்டத்துக்கும் உதவி செய்வதாக ராஜேஷிடம் தயாள் வாக்குறுதி அளித்திருந்தார் என்றும் சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது.


இதேபோல், எல்.ஐ.சி.யின் செயலாளர் (முதலீடு) கே.சோப்ரா ணீ16 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார். அடானி, ஜே.பி. ஹைட்ரோ, ஜே.எஸ்.டபிள்யு. பவர், ராலிங்கர், பான்டலூன், அடலைட், எம்டெக் ஆகிய நிறுவனங்களுடன் எல்.ஐ.சி.யின் தொடர்பு, செயல்பாடுகள் குறித்த தகவல்களை மணி மேட்டர்ஸ் நிறுவனத்துக்கு சோப்ரா தந்துள்ளார்.


லாவாசா நிறுவனம் கடன் பெற சாதகமாக செயல்பட மும்பை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் இயக்குனர் மணிந்தர்சிங் ஜோகர் (சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்) 30 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதேபோல், புதுடெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் பாங்க்கின் துணை பொது மேலாளர் வெங்கோபா குஜ்ஜால் 20 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ராஜேஷின் வாடிக்கையாளர் ஒருவருக்கு ணீ50 கோடி கடன் பெற உதவி செய்துள்ளார். இவ்வாறு மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐயின் வக்கீல் இஜாஸ் கான் தெரிவித்துள்ளார்.