தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஆழிப்பேரலை

ஏ.... கடலே

உனக்கு இரக்கமே இல்லையா?

லெமூரியா கண்டத்தை விழுங்கினாய் - பிறகு

கபாடபுரம் உன் வயிற்றுக்குள்

அடுத்து

தனுஷ்கோடி, பூம்புகார்

இன்று


எத்தனை உயிர்களை

பலி கொண்டாய்

உன் கோர தாண்டவத்தால்

பெரிய ரணகலமே ஏற்பட்டு

இருக்கிறதே

தாயற்ற பிள்ளைகள்

தந்தையற்ற குடும்பங்கள்

பிள்ளைகளைப் பறிக்கொடுத்த

பெற்றோர்கள்


அப்பப்பா....

உன் பிரளயத்தால்

கப்பல்கள் மிதந்த கடலில்

பிணங்கள் மிதந்தன

கருவாடுகள் காய்ந்த கடற்கரையில்

மனிதர்களின் எலும்புகூடுகள்


ஏ....கடலே

நீ ஆடி முடித்து விட்டாய்

ஆழிப் பேரலையை

வீசி அழித்துவிட்டாய்

அடங்கியதா உன் பசி


ஏ.... கடலே

நீ

சரித்திரத்தை மாற்றக்

கற்றுக்கொண்டது எப்போது?

இவ்வளவு நாட்களாய்

மனிதர்களுக்கு

மீன்களை உணவாக்கினாய் - இன்று

மீன்களுக்கு

மனிதர்களை உணவாக்கினாய்

தரையை கடலாக்கினாய்

கடலை தரையாக்கினாய்


ஏ.... கடலே

நீ தொடுத்த போரில்

உன்னை எதிர்த்தவர்கள் யார்?

எங்கள் அணு ஆயுதமும்

அறிவியல் தொழில் நுட்பமும்

உனக்கு முன்னாள் வெறும் புஸ்வானம்


ஏ.... கடலே

நாங்கள் தோற்றதாக

நீ நினைத்துவிடாதே !

உன்னை எதிர்ப்பதற்கு

யுத்திகள் உருவாகிவிட்டன !


மனிதன்

சந்திரனை தொட்டான்

செவ்வாய்க்கு செயற்கைக் கோள்

அனுப்பினான்

ஆகாயத்தில்

ஆய்வுக்களங்கள் அமைத்தான்

கடலே....

நீ கையை நீட்டாதே !

உன் கையை ஓடிப்பதற்கு

காத்திருக்கிறோம்

காலம் வரும்............


- தமிழ் மதி