தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அட்டைக் கத்தியின் போர்க்குணம் !


               சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக எல்லை மீறப்படும்போது, நாம் நமது போர்க்குணத்தைக் காட்ட நேரிடும் என முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்  

ஐயோ இது என்ன கனவா இல்லை நினைவா ? நம்ம உப்பு சப்பு இல்லாத முதல்வரா இப்படி தெரிவித்து உள்ளார்.

    இதே பொதுக்கூட்டத்தில் ஒரு துரோக நாடகம் அரங்கேறியிருக்கிறது. அது முல்லைப்பெரியார் வழக்கில் அணைஉறுதி பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்படும் ஐந்து பேர்கொண்ட குழுவுக்கு தமிழகத்தின் சார்பில் யாரையும் அனுப்ப தேவையில்லை என்று கூறி உள்ளார்.ஏற்க்கனவே அணையின் உறுதி உறுதி செய்யப்பட்டது எனவே மீண்டும் ஒரு ஆய்வு தேவையில்லை என்று கோர்ட்டில் வாதிடாமல் அங்கே ஆய்வுக்குழு அமைக்க ஒப்புக்கொண்டுவிட்டு அந்த குழுவுக்கு நாங்கள் யாரையும் அனுப்பமாட்டோம் நீங்களாகவே ஏதாவது செய்துகொள்ளுங்கள் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் இந்த கேடுகெட்ட உத்தமர்.

தலைவா உனக்கு போர்க்குணம் என்றால் என்னவென்று தெரியுமா? தமிழனின் இன அழிப்பிற்கு காரணமாக இருந்த ஒரு இத்தாலி சூனியக்காரியிடம் உம் பிள்ளைக்காக அமைச்சர் பதவி கேட்டு கையேந்தி நின்றீரே! அப்பொழுது எங்கே சென்றது உங்கள் போர்க்குணம்.

தமிழனின் உண்மையான போர்க்குணத்தால் விளைந்த தமிழிழ நாட்டினையும் அந்த போர்க்குணத்துடன் பாதுகாக்கப்பட்ட தமிழன மக்களையும் இன அழிப்பால் கொன்று குவிக்க துணை நின்றீர்களே,இதுதான் உங்கள் போர்க்குணமா?

எதை போராட்ட குணம் என்கிறீர்கள்? மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து சாதனை நிகழ்த்தியதையா? மனித சங்கிலி போராட்டம் நடத்தி தமிழன் காதில் பூ சுற்றியதையா? ஏன் காவேரி, கச்சத்தீவு, பெரியாறு, மீனவர் பிரச்சனைகளில் பார்த்தோமே உங்கள் போராட்ட குணத்தை! வயதானாலும் உங்கள் நகைச்சுவை உணர்வு மட்டும் மாறவில்லை!








இந்த போர் குணத்தை ஈழ தமிழர்கள் வதை படும்போது காண்பித்து இருந்தால் மொத்த தமிழர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்! ஆனால், தற்போது உசுப்புவது என்ன காரணம்? காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி  அமைக்குமோ என்ற கலக்கமா? இல்லை நீங்கள் எதிர்த்து நின்றால் காங்கிரஸ்காரன்  சொத்துக்கணக்கு கேட்பானே என்ற பயமா?

உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மதிக்காமல் அதற்க்கு நேர் மாறாக கேரள அரசு செயல்படும் பொழுது அதற்கு கண்டனம் கூட தெருவிக்காமல் உங்களுக்கு நீங்களே  விழா எடுத்து கொண்டிருந்தரே!அப்பொழுது எங்கே சென்றது உங்கள் போர்க்குணம்.

சென்ற மத்திய அரசு ஆட்சியில் பெரும்பான்மை பெறாத காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை தந்துவிட்டு உங்கள் போர் குணத்தால் இந்த தமிழகத்துக்கு பெற்றது என்னவென்று சொல்ல முடியுமா ? 60000 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ராம் ஊழல் செய்ததை திவிர வேறொன்றும் இல்லை.அப்பாவி தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொண்டிருக்க  உங்களுக்கு நீங்களே தொடர்ந்து நடத்தும் பாராட்டு விழாக்களும் பட்டங்களும்,தமிழக மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்காத நீங்கள் தமிழனும் இல்லை.நீங்கள் தமிழின காவலனும் இல்லை.

இத்தனை வருட ஆட்சியில் நீங்கள் சாதித்தது என்ன? பாவம் யா இந்த தமிழன் ! அம்மாவாசைக்கும் அர மண்டைக்கும் மாற்றி மாற்றி ஒட்டு போட்ட இந்த தமிழனுக்கு எதிர் கேள்வி கூட கேட்க தெரியாமல் வாழ ஆரம்பித்து விட்டான்.

தமிழக அரசு தரக்கூடிய ஒரு ரூபாய் அரிசியை உங்கள் ஆட்களே கேரளாவுக்கு கொண்டுபோய் கொடுப்பது உங்களுக்கு தெரியாதா? கேரளவுக்கு செல்லும் தமிழக பொருட்கள் மொத்தத்தையும் நிறுத்த உமக்கு ஏன் இன்னும் போர்க்குணம் வரவில்லை.ஒ இதற்கு பெயர்தான் உண்ட வீட்டுக்கு குந்தகம் விளைவிப்பதா?நீங்கள் மட்டும் அதை செய்யவில்லை,உங்கள் வாரிசுகளுக்கும் பரம்பரை பாரம்பரியமாக அதை செய்ய கற்று கொடுத்து விட்டீர் போலும்.கோமாளிகளுக்கு என்றுமே போர்க்குணம் வந்தது கிடையாது.உமக்கு மட்டும் எதற்கு.
பத்திரிக்கைகாரன் ஏடாகூடமாக கேள்விகேட்டு பதில் சொல்ல தெரியாமல் முழிப்பதைவிட உங்களுக்கு ஏதுவான கேள்விகளை  நீங்களே கேள்வி கேட்டு பதில் கூறுவது உங்களுக்கே உரித்தான கைவந்த கலை? இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே தன்னுடைய கேள்விக்கு தானே பதில் சொல்லும் ஒரே புத்திசாலி நீங்கள் மட்டும் தான் முதல்வரே .

இதை எல்லாம் புரிந்துக்கொள்ளகூடிய அளவுக்கு மக்கள் புத்திசாலிகள் இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். மலையாளி தண்ணீரை நிறுத்திய பிறகு இரண்டு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து பிறகு தண்ணீர் வந்துவிட்டது என்று நீங்கள் சொன்னால் கூட நாங்க நம்பிடுவோம் ! நாங்க என்ன போய் பார்க்கவா போறோம்!

முல்லை பெரியாறு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கிடையே ஆன கவுரவப் பிரச்சனை ஆகிவிட்டது வருந்ததக்கது. இதில் விவசாயிகளின் நலனே முக்கியம் என்பதை நீதி மன்றம் உட்பட அனைவரும் உணர வேண்டும். காலம் தாழ்த்தப்பட்ட நீதி என்பது நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்.எப்படியும் இந்த தமிழனுக்கு விடிவு இல்லை.

தமிழ்நாட்டு தமிழனின் போர்க்குணத்தை ஒடுக்கி விட்டதாக நினைக்க வேண்டாம். அவனின் போர்க்குணம் வெளிப்படும் போது நீங்களும் உங்கள் குடும்ப அரசியலும் காணமல் போய்விடும்.ஆகையால் தலைவரே நீங்கள் நீக்கு போக்காக மட்டுமே பேசி வரப்போகும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மிரட்டலில் இருந்து தப்பிக்க முயலுங்கள். உங்களுக்கு கடிதமும் தந்தியும் மட்டும் தான் என்றைக்கும் சிறந்த போர்க்கருவிகள்.ஆகையால் துரோகத்தின் மறு உருவமான உங்கள் நாவில் இருந்து போர்க்குணம் என்ற வார்த்தை எல்லாம் வரலாமா முதல்வரே!