ஊமை விழிகளை பொசுக்கியவளுக்கு
வீர வணக்கம்
யார் சொன்னது தமிழினம் முடம் என்று
எள்ளி எள்ளி நாகையாடிய கூட்டமே
எம் இன வேட்க்கையின் சாட்சியே செங்கொடி!
எவன் சொன்னது எம்மினம் தீவிரவாதம் என்று
நீதி கேட்டு தன்னை எரித்தவளுக்கு
நீதி தாரா உங்களை எரிக்க எத்தனை நொடிகள்.
கோழை தமிழனத்தை நெருப்பாள் உமிழ்ந்து இருக்கிறாள்
சகோதரி செங்கொடி
21 வருட பழியை சுமக்கிறோம் செய்யா தவறுக்கு
துரோகத்தையும் வஞ்சகத்தையும் சுமக்கிறோம்
சதிகார பார்ப்பனியத்தின் பசிக்கு
தூங்கிய இனத்தை தட்டி எழுப்ப பிறந்தவன் தான்
அண்ணன் முத்துக்குமார்
தட்டி எழுப்பி எழுந்த இனத்தை புரட்சிக்கான விடியலாய்
சுட்டெரித்தவாள் தான் சகோதரி செங்கொடி
யார் சொன்னது தமிழினம் முடம் என்று
மானமுள்ள தமிழினமே பொசுங்கியது
அவள் உடல் மட்டுமல்ல
ஓட்டு மொத்த தமிழினத்தின் மனசாட்சியும் தான்
உறக்கமில்லை இனி ! போதும் இழந்தது !
நரிகூட்டமே உன்னை சாம்பலாக்க
ஓராயிரம் முத்து குமரர்கள் இல்லை
உதித்து விட்டார்கள் பல ஆயிரம், செங்கொடிகள்
நாங்கள் தூங்கும் வரைதான்
துரோகிகளே உங்கள் கொட்டம்
உறங்கிய தமிழன் ஒவ்வொருவனும் எழுந்து அடிக்க ஆரம்பித்தால்
காலனிக்கும் பஞ்சம்தான் தமிழ் வீதிகளில்
ஒரு உயிற்பலிக்கு ஈடாக கொடுத்து விட்டோம்
எம் தொப்புள் கொடி உறவுகளை
இனியும் ரத்த பலி கேட்டால் நாங்கள்
ஒன்றும் உன் விருந்துக்கு வந்த கோழிகள் இல்லை
உண்மைகளை உலகுக்கு உணர்த்த வந்த புலிகள்
செங்கொடி தீபமாய் எரிகிறாள்
இனி அந்த தீபம் அனையாது!
அந்த அனல் திமிழின துரோகி
ஒவ்வொருவனையும் எரிக்கும் வரை.
அனைக்கவும் முடியாது
எம்மின ஒற்றுமையின் விடியல் செங்கொடி.
இனி தமிழ் நாட்டின் ஒவ்வொரு வீதியும் சொல்லும்
எம்மினத்தின் விடியலுக்கான எழுச்சியை
எழுச்சியையும் புரட்சியையும் விதைத்திருக்கிறாள்
தமிழினத்தின் மனசாட்சியை எரித்திருக்கிறாள்
மரண தண்டனையின் விலங்கை உடைத்திருக்கிறாள்
இனியும் நாம் என்ன செய்ய போகிறோம்
இனியும் நாம் என்ன செய்ய போகிறோம்
ஒற்றுமையின் நெருப்பை பற்றுவோம்!
கொட்ட கொட்ட குனிந்தது போதும்
இனியும் இழந்தது போதும்
மூன்று தமிழர்களின் மரண தண்டனை தான்
இம்மினத்தின் சாபக்கேடு என்றால்
துரோகிகளுக்கு தூக்கை கயிற்றை பரிசளிப்போம்
அதுவரை எனக்கான நாடு கிடைக்கும் வரை நான் அகதியே!
வீரமங்கைக்கு வீரவணக்கம்
ஒன்றுபடு தமிழா ...ஓங்கி உயர்ந்திடு ...
மரணதண்டனையை ஒழித்திடு .
மரணதண்டனையை ஒழித்திடு .
நன்றி
பகலவன் குவைத்