தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கண்ணீரில் கலந்து

கண்ணீரில் கலந்து

 

 

பிறக்க ஒரு ஊர்

பிழைக்க ஒரு ஊர்

பராசக்தி வசனமாகி விட்டது

ஈழத்தமிழனின் வாழ்க்கை ..!

 

பிறந்த ஊரின் வாசமும்மில்லை

பிழைக்கும் ஊரின் நேசமும்மில்லை

தேசம் கேட்டு நிக்கின்றோம்

வெளிவேசம் போடும் தேசங்களிடம் ..!

 

என்ன பிழை செய்துவிட்டோம்

தாய் வயிற்றில் பிறந்து

தாய் மண்ணில் தவழும்

தன்மான உரிமையை தானே கேட்டோம் !

 

கைகள் கூப்பிக் கேட்டோம்

கைகளை அறுத்து நின்றாய் ..!

உண்ண மறுத்து கேட்டோம்

உணவை மறைத்து நின்றாய் ..!

 

ஆயுதம் ஏந்தியும் கேட்டோம்

அதையும் சிதைத்து நின்றாய்

சிதைதுவிட்டோம் என்றுன்னிவிடாதே

மாறாக விதைத்து விட்டாய்

 

நீ சிதைத்தால் சிதைவதற்கு

நாங்கள் ஒன்றும் நத்தைகள் அல்ல

மாறாக படர்ந்து வளரும் பற்றைகள்

எரிப்பினும் தணலாய் சுடுவோம்

 

ஜனநாயகம் ஜனநாயகம் என்று

மார்தட்டிக்கோலும் தேசங்களே

உங்கள் பாசையில் ஜனநாயகம் என்றால்

ஜனங்களை நசுக்குவது தானா.....?

 

நீங்கள் போராடினால்

அது போராட்டம் !

நாங்கள் போராடினால்

அது வெறும் வாதட்டமா ..?

 

நீங்கள் கேட்டல் உரிமை

அதுவே நாங்கள் கேட்டால்.....?

நீங்கள் போட்டால் சட்டம்

அதை நாங்கள் போட்டோம் ... என்ன குற்றம்மா...?

 

ஈழம் என்ற தேசத்தின்

கண்ணீரில் விழுந்து சொல்ல்கிறேன்

ஈழத்தின் கண்ணீர் உங்களை

அடித்து செல்லும் அலையாக..

 

எமக்காய் வித்தானவர்கள் !

ஈழத்தின் சொத்தானவர்கள்

எழுந்து வா வித்தானவர்களின்

விதைகளில் நீர் ஊற்ற ..!

 

உலகம் வியக்க எழுதுவோம்

புது பரணி உலகில் ...!

தனி ஈழம் அமைத்து காட்டுவோம்

தன்மான விதை நாட்டுவோம் !

 

 

கண்ணீரில் கலந்து

ஈழம் கே ஆர்