தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

srilanka killing fields

Re: {பகலவன் குழுமம்} - கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் பின்னணி அம்பலம்: கருணாநிதி தவறை சுட்டிக்காட்டினார் ஜெயலலிதா

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் பின்னணி அம்பலம்: கருணாநிதி தவறை சுட்டிக்காட்டினார் ஜெயலலிதா

சென்னை: ""உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், கச்சத்தீவை கொடுப்பதற்கு, இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன், சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி, மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். திரை மறைவில் கச்சத்தீவை காவு கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கண் துடைப்பு நாடகமாக தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.


கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து, 2008ல், அ.தி.மு.க., பொதுச் செயலர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும், தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையை சேர்க்க வலியுறுத்தி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது, விவாதம் நடந்து முடிந்ததும், முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது: டெல்ப் தீவுக்கு தெற்கே, 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இனவாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராகக் கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க சர்ச் இந்தத் தீவில் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த சர்ச்சை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்ள, இந்தத் தீவுக்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும், ஜமீன் ஒழிப்புக்கு முன், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும், இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள் தொன்று தொட்டு, கச்சத்தீவின் அருகில் மீன் பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974ல், கருணாநிதி, தமிழக முதல்வராக பதவி வகித்தபோது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்ததந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன், சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். சட்டசபை தீர்மானத்தில் கூட, மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் வருத்தம் அளிக்கிறது என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, எதிர்க்கிறோம் என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திரை மறைவில் கச்சத்தீவை காவு கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கண் துடைப்பு நாடகமாக தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி. தான் செய்த துரோகத்திற்கு பரிகாரம் காணும் வகையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, தமிழக மீனவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்தினால், கடும் விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என, மத்திய அரசின் மூலம் இலங்கை அரசை எச்சரிக்கை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை.

தமிழ் வாழ்ந்தால் தான் தமிழர் வாழ முடியும்; தமிழர் வாழ்ந்தால் தான் தமிழ் சமுதாயம் வாழ முடியும் என்று கூறியவர் அண்ணாதுரை. தமிழன் அழிந்தாலும் பரவாயில்லை; தன் சமுதாயம் வாழ்ந்தால் போதும் என்பதை நிகழ்த்திக் காட்டியவர், அண்ணாதுரையின் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி என்பதை சுட்டிக்காட்டி, கச்சத்தீவு குறித்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். இதன் பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மொக்கை.



சிவா காயத்ரியை உயிருக்கு உயிராக நேசித்தான்

அவளும் அப்படிதான். ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக உருவானது.
அவர்கள் காதல் நாளுக்கு நாள் வலுவாக, ஆழமாக, சுவாசமாக வளர்ந்துகொண்டே போனது..
சிவாவின் குடும்ப நிலை.. காயத்ரியின் படிப்பு..
இது தான் அவர்களுக்கு தடையாக இருந்தது.
எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தயாராக இருந்தனர்,
மாறாத காதலுடன்.
திடீரென்று அவளுடைய அப்பாவுக்கு அவர்கள் காதல் தெரிய வந்தது. வழக்கமான அப்பா தான். அடி உதை மிரட்டல்..
வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். அவர்களால் சந்திக்கவே முடியவில்லை. சிவா வேறு வழியில்லாமல் அவள் அப்பாவிடம் அவளை பெண் கேட்டு வீட்டிற்கே போனான்.
சொந்த பந்தங்கள் சேர்ந்து அவனை விரட்டி விட்டது..
அன்று இரவு தொலைபேசியில் இருவரும் அழுதனர்.
மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
யாருக்கும் தெரியாமல் சிவா ரயில் நிலையம் வந்து அவளுக்காக காத்திருந்தான். நேரம் கடந்தது.. காயத்ரி வரவில்லை.
காத்திருந்தான்.. வரவே இல்லை.
குழம்பிய அவன் அவளுடைய வீட்டிற்கு சென்று பார்க்க முடிவு செய்து புறபட்டான். வழியில் அவன் நண்பர்கள் வழிமறுத்து அவள் கிளம்பும்போது தந்தை பார்த்துவிட்டதாகவும் அவளை அடித்ததாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்.
அவன் அவனாக இல்லை.. ஓடினான். அவளது முகம் பார்க்க. அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.
காயத்ரியை புதைத்து விட்டார்கள்.
அழுதான்.. அழுதான்.. அவனால் அதை மட்டும் தான் செய்ய முடிந்தது..
பல நேர தேற்றளுக்குப் பிறகு வீடு வந்தான்..
சில நாட்களுக்குப் பின்
மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான் சிவா. காயத்ரியின் நினைவில் இருந்து அவனால் மீள முடியவில்லை..
"ஏன் என்னை தனிய விட்டு போன காயத்ரி? நான் என்ன தப்பு பணினேன்?" என்று அழுதான்.
அப்போது திடீரென்று தொலைபேசி சிணுங்கியது.. எடுத்து பார்த்தான். காயத்ரி என்று வந்தது.. சிவாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒருவேளை அவள் வீட்டிலிருந்து வேறு யாரவது அழைக்கலாம் என்று காதில் வைத்தான்.
"ஹலோ" என்றான்.
"சிவா, நான் காயத்ரி பேசுறேன்" என்று குரல் கேட்டது.
அவன் ஒரு நிமிடம் நடுங்கித்தான் போனான்.. உடல் சட்டென வியர்த்தது..
"அதே குரல். இது என் காயத்ரி குரல் தான்.. ஆனால்.. ஆனால்.. எப்படி?" பதறினான்.. பயந்தான்..
அழைப்பை துண்டித்து விட்டான்..
தனக்கு ஏற்பட்டது கனவாக பிரமையாக கூட இருக்கலாம் என்று சமதானப்படுத்திகொண்டான். ஆனாலும் அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது... ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான்.
சிவா: "காயத்ரி.."
காயத்ரி: "சிவா, எப்படி இருக்கீங்க? உங்கள பாக்காம தவிசு போய்டேன் பா.."
சிவா: "நீ........ நீ இறந்துட்டனு சொன்னங்க.. ஆனா ...." குரலில் பயம் தெரிந்தது.. "புதைச்ச இடத்துக்கு கூட நான் வந்து பாத்தேனே... பின்ன எப்படி..."
காயத்ரி: "புதைச்சா என்ன நான் எங்க இருந்தாலும் உங்க காயத்ரி தான். என்னால உங்க கூட பேசாம இருக்கவே முடியாது.. செத்தாலும் கூட.."
சிவா: "?????"
திடீரென ஒரு குரல் கேட்கிறது...
ஏர்டெல்..
எங்களுடைய டவர் எங்கும் இருக்கும்...
டின் டி டி டின் டின்….
முறைக்காதிங்க...
ஏதோ என்னால முடிஞ்ச மொக்கை.


இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுப்போம்: சீமான்


இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுப்போம்: சீமான்


இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுப்போம்: சீமான்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததது மட்டுமின்றி, இன்றுவரை ஈழத் தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இலங்கை அரசை வழக்குக் கொண்டுவர அதற்கு எதிராக பொருளாதாரத் தடையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியத் தீர்மானத்தை தமிழக மக்கள் அனைவரும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானம், இந்திய அரசு மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இன்று வரை இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு போக்கைத்தான் இந்திய மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. ஈழத் தமிழருக்கு எதிரான இனப் படுகொலைப் போரில் எல்லா விதத்திலும் ராஜபக்ச அரசுக்கு துணைபோன மத்திய அரசு, போருக்குப் பின்னும் தமிழருக்கு எதிரான அதே நழுவல் போக்கைத்தான் கடைபிடித்து வருகிறது. அதனால்தான் போருக்கு பின்னால் வன்னி முகாம்களில் இருந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழர்களில் 50 விழுக்காட்டினர் அவர்கள் வாழ்ந்து இடங்களில் குடியேற்றப்படாததையும், அவர்களின் வாழ்விற்கு ஆதாரமாக இருந்த காணிகள் பறிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு அளிக்கப்பட்டதையும், தமிழரின் பூர்வீக மண்ணில் சிங்களர்கள் குடியேற்றப்படுவதையும், தமிழினப் பெண்களை கற்பழிப்பதை ஒரு கொள்கையாகவே ராஜபக்ச இராணுவம் கடைபிடித்து வரும் நிலையிலும் எதையும் தட்டிக்கேட்காத இந்திய மத்திய அரசு, அந்நாட்டுடன் தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதில் குறியாக இருக்கிறது. அதாவது தமிழர் பிரச்சனையை பகடையாக்கி தனது உள்திட்டங்களை நிறைவேற்றத் துடிக்கிறது. அதுதான் இலங்கை அயலுறவு அமைச்சர் ஜி.எல். பெய்ரீஸ் கடந்த மாதம் டெல்லிக்கு வந்தபோது இரு நாடுகளும் இணைந்து அளித்த கூட்டறிக்கையில் கூட பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது.

ஜி.எல்.பெய்ரீஸூடன் ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையைப் பற்றி விவாதித்துள்ள மத்திய அரசு, அது குறித்து ஒரு வார்த்தை கூட கூட்டறிக்கையில் குறிப்பிடாதது அதன் நேர்மையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அது மட்டுமல்ல, தனது டெல்லிப் பயணம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்து அமைச்சர் பெய்ரீஸ் கூறிய ஒரு விடயம் நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அது என்னவெனில், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கைக்கு எதிரான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை (International Criminal Tribunal on Sri Lanka) அமைக்க வேண்டும் என்று சில நாடுகள் முயன்றபோது அதற்கு இந்திய அரசு ஆதரவு தரவில்லை என்று பெய்ரீஸ் கூறியுள்ளார். போஸ்னிய இனப் படுகொலையை விசாரித்துவரும் யுகோஸ்லாவிற்கு எதிரான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தைப் போன்றதொரு தீர்பாயத்தை – பன்னாட்டு மனிதாபிமான பிரகடனங்களின் கீழ் அமைக்கும் முயற்சியை இந்திய அரசு தட்டிக்கழித்துள்ளது என்றால் இதை விட தமிழினத் துரோகம், மானுட துரோகம் என்று ஏதாவது இருக்க முடியுமா என்பதை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக சட்டப் பேரவை இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத் தமிழினத்தின் நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் இத்தீர்மானம் ஒரு பெரும் திருப்புமுனையாகும். இதனை இந்திய அரசு நிறைவேற்றும் என்று நாம் காத்திருந்தால் இலவு காத்த கிளி கதையாக முடிந்துவிடும்.

எனவே, இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை தமிழர்களையாகிய நாம் உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம்.

1. இங்கு விற்பனைக்கு வந்திருக்கும் இலங்கை நாட்டின் பொருட்கள் எதுவாயினும் அவைகளைப் புறக்கணிப்போம்.

2. இலங்கைக்கு இங்கிருந்து அனுப்பப்படும் பொருட்களை நிறுத்துமாறு தமிழ்நாட்டு வணிகர்களை வலியுறுத்துவோம்.

3. இலங்கையில் கடந்த 2010ஆம் ஆண்டில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டபோது, அதில் இந்தியக் கலைஞர்கள் எவரும் கலந்துகொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுத்தோம். அந்த விழா தோல்வியில் முடிந்தது. அதேபோன்று, இப்போதும் இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் இலங்கையை முழுமையாகப் புறக்கணித்து தங்களுடைய மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்துமாறு கோருவோம்.

4. 'கலை, இலக்கியம் யாவும் மக்களுக்காகவே' என்கிற முழுக்கத்துடன் எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்பட்டுவருபவர்கள் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள். இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை முன்னெடுக்கும் மானுடத்தின் தூதுவர்களாக அவர்களை முன்னுறுத்தி செயல்படுவோம். அவர்கள் இந்தியா முழுவதும் சென்று, கலைஞர்களையும், படைப்பாளிகளையும் சந்தித்து இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்வோம்.

5. இதேபோல், இனவெறியை கடைபிடித்த தென் ஆப்ரிக்காவை எப்படி சர்வதேச சமூகம் தனிமைபடுத்தியதோ அதேபோல், தமிழினப் படுகொலை செய்த இலங்கையையும் பன்னாட்டுச் சமூகம் தனிமைபடுத்திட வேண்டும் என்ற முழக்கத்தை உலகளாவிய அளவில் நாம் முன்னெடுப்போம். குறிப்பாக இலங்கையின் கிரிக்கெட் அணி இதற்கு மேல் இந்தியாவில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று போராடுவோம். தமிழ்நாட்டு மண்ணில் அந்த அணிக்கு இடமில்லை என்பதை ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் காட்டுவோம்.

6. இலங்கை அரசின் விமான போக்குவரத்தை மனிதாபிமானமுள்ள யாரும் பயன்படுத்தாதீர்கள் என்று விரிவான அளவில் அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி பரப்புரை செய்வோம்.

7. இலங்கை இனப் படுகொலை செய்த குற்றவாளி என்பதை இந்தியா முழுவதும் கொண்டு செல்வோம்.

8. இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை கொண்டுவருமாறு நாடாளுமன்றத்தில் தங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு மத்திய அரசை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்வோம்.

9. தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கையிலுள்ள சிங்களக் கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்க்கின்றன. தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை தாங்கள் கண்டு கொள்ளப் போவதில்லை என்றும், தங்களைப் பொறுத்தவரை இந்திய அரசுடன் மட்டுமே உறவு கொண்டுள்ளதாகவும் திமிருடன் கூறியுள்ளார் இலங்கை அமைச்சக பேச்சாளர் கேகலிய ரம்புக்வாலா. இநதியா வேறு, தமிழ்நாடு வேறு என்று இலங்கை அமைச்சன் பேசுகிறான். நாம் புரியவைப்போம். தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தீர்மானத்திற்கு எந்த அளவிற்கு வலிமை உள்ளதென்பதை தமிழக மக்களாகிய நாம் உணர்த்துவோம்.

தமிழினத்தின் ஒன்றிணைந்த செயல்பாட்டிலேயே தமிழினத்தின் மீட்சி உள்ளது என்பதனை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.


நீ என்னுள் விதைத்த உளவாளி

என்னை உன்னிடம் காட்டிக் கொடுக்கும்
உளவாளியாய் போ

வவுனியாவில் இருந்து..(ஒரு அவசரத் தகவல்)

வவுனியாவில் இருந்து..(ஒரு அவசரத் தகவல்)

வவுனியாவில் இருந்து..(ஒரு அவசரத் தகவல்)

 

நடந்து முடிந்த ஈழத்திற்கான நீண்ட போரில் சில உலகநாடுகளின் உதவியுடனும் பல கொடுமையான சர்வதேச போர்க்குற்ற நடவடிக்கைகளுடனும் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த சிறிலங்கா ராணுவம் போருக்கு பின்னரும் பல மனிதஉரிமை மீறல்களையும் வன் கொடுமைகளையும் நடத்திவருகிறது. முள்வேலிகளுக்குள் அடக்கப்பட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் காணாமல்போவதும் நூற்றுக்கணக்கில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாவதுமே இதற்கு சாட்சி.

 

கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் இவர்களிடம் எந்தவிதமான நீதிமன்ற விசாரணைகளோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை. இவ்வாறான பல சித்திரவதைகளால் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர் இன்னும் மீதம் இருப்பது 150 படித்த பட்டதாரி தமிழ இளைஞர்களே

போர் நடைபெற்ற காலத்திலேயும் போருக்கு முந்தைய காலகட்டத்திலும் எந்தவித ஆயுதங்களையும் கையில் எடுக்காமல் வன்முறைக்கு உட்படாத புலிகளின் அரசியல் பிரிவுகளிலும், அரசியல் தொடர்பான செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவந்த படித்த பட்டதாரி தமிழ் இளைஞர்களை போர்க்காலத்தில் சிங்கள ராணுவம் கைதுசெய்தது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 'புலிகளின் அரசியல்' பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே வவுனியாவில் உள்ள தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இவர்கள் அந்தச் சிறையில் ஏற்கனவேயுள்ள சிங்களக் குற்றவாளிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். உணவு, உடை போன்ற அத்தியாவசியங்கள் மறுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இது மட்டுமின்றி இவர்களை உளவியல் ரீதியான கொடுஞ் செயல்களுக்கு உட்படுத்தி மனநிலை பாதிக்கச் செய்கின்றனர்.

 

 கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் இவர்களிடம் எந்தவிதமான நீதிமன்ற விசாரணைகளோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை. இவ்வாறான பல சித்திரவதைகளால் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர். இன்னும் மீதம் இருப்பது 150படித்த பட்டதாரி தமிழ இளைஞர்களே. எந்தவித வன்செயல்களிலும் ஈடுபடாத இந்த 150பேரையும் ஒட்டுமொத்தமாக கொலை செய்வதற்கான உள் வேலைகளை சிங்கள ராணுவம் செய்துவருகிறது. எந்தவிதக் காரணமும், விசாரணையுமின்றி அப்பாவித் தமிழர்கள் 150பேர் ஒரே கூரையின் கீழ் கொல்லப்படப் போகிறார்கள்.

 

சிறிலங்கா அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகளும், விசாரணைகளும் நடந்துவரும் நிலையில் எந்தவித காரணமுமின்றி கொல்லப்படப் போகும் இவர்களைக் காப்பாற்ற அனைத்து ஊடகங்களும் முன்வரவேண்டும். இந்தச் செய்தியினை உலகிற்கு தெரிவித்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றி சிறிலங்கா ராணுவத்தின் மீதான போர்க்குற்ற விசாரணை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

வவுனியாவில் இருந்து  உறுதிப்படுத்திய தகவல்.

 

  • (இந்தச் செய்தியினை தங்களால் முடிந்தவரை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், முடிந்தால் ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து உலகம் முழுவதும் இந்த அவசரத் தகவலைக் கொண்டு சேர்க்கவும். நடக்கவிருக்கும் உயிர்ப் பலியைத் தடுக்க நம்மால் மட்டுமே முடியம். நமது ஆதரவுக் கரங்களுக்காக மரணத்தின் விளிம்பில் நிற்கும் அந்த 150 தமிழ் இளைஞர்களை நினைத்துப்பாருங்கள் அவர்களைக் காப்பாற்ற நீங்கள் உதவுவீர்கள் என்று நம்பிக்காத்திருக்கும் - தமிழன்)